என் மலர்
நீங்கள் தேடியது "tag 150339"
தாரமங்கலம்:
தாரமங்கலம் சந்தை பேட்டை பகுதியில் சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு பொதுமக்கள் தாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சுசீலாவிற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சடலத்தை பார்வையிட்ட கிராம நிர்வாக அலுவலர் சுசீலா தாரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார் .எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மீட்கப்பட்ட சிறுமிகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு
- சிறுமிகள் எதற்காக வீட்டை விட்டு சென்றார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை
கன்னியாகுமரி:
தக்கலை போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீசாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று அவர் வழக்கம் போல் பணிக்கு சென்று இருந்தார். வீட்டில் அவரது 11 வயது மகள் வீட்டில் இருந்தார்.பக்கத்து வீட்டில் 14 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்தார்.அவரது பெற்றோரும் வெளியே சென்று இருந்தனர்.
இதையடுத்து இரு சிறுமிகளும் வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக தனது பாட்டியிடம் கூறிவிட்டு சென்றனர். நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பாட்டி பல்வேறு இடங்களில் தேடினார்.
எங்கு தேடியும் சிறுமிகள் கிடைக்கவில்லை.இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்களும் அங்கு வந்து தேடிப் பார்த்தனர். ஆனால் இரு சிறுமிகள் பற்றியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து தக்கலை போலீசில் புகார் செய்யப்ப ட்டது. போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மாணவிகள் மாயமானது குறித்த தகவல் அவர்களது புகை ப்படங்களுடன் சமூக வலை தளங்களில் பரவியது. இது மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படு த்தியது.
மாயமான மாணவிகளை தேடும்படியில் போலீசாரும் அவரது உறவினர்களும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் இரவு நாகர்கோவிலில் இருந்து மேல் மிடாலத்திற்கு சென்ற பஸ்ஸில் இரு சிறுமிகளும் பயணம் செய்தனர்.இதை பார்த்த பஸ் கண்டக்டர் சிறுமிகளிடம் விசாரித்தார்.அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்தனர்.அப்போது கண்டக்டர் அவரது வாட்ஸ்ஆப்க்கு வந்த பதிவை பார்த்தார்.
அதில் மாணவிகள் வீட்டிலிருந்து மாயமான தகவல் தெரியவந்தது. உடனே பஸ் கண்டக்டர் அந்த இரு சிறுமிகளும் பஸ்ஸில் இருக்கும் தகவலை கட்டுப்பாட்டு அறை போலீசுக்கு தெரிவித்தார்.
கட்டுப்பாட்டு அறை போலீசார் உடனடியாக தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தக்கலை போலீசார் மேல்மிடாலம் பகுதிக்கு சென்று பஸ்ஸில் இருந்த 2 சிறுமிகளையும் மீட்டனர். மீட்கப்பட்ட இரு சிறுமிகளும் தக்கலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
பின்னர் அவர்களை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுமிகள் எதற்காக வீட்டை விட்டு சென்றார்கள் என்பது குறித்த தகவலை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
- பல இடங்களில் தேடிஎங்கும் கிடைக்காததால் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர்.
- புதுப்பேட்டைபோலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிவு செய்து தீவிரமாக தேடி வந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அங்குசெட்டிபாளையம் கிராமத்தைசேர்ந்தவர் ராஜா. இவரதுமனைவிகாயத்ரி, இவர்களுக்கு 2மகள்கள் கோபிகா,தேஜா உள்ளனர். காயத்ரி தனது 2 மகளுடன் கடந்த29 -ந் தேதி திடீரென்றுகாணாமல் போனார் . பல இடங்களில் தேடிஎங்கும் கிடைக்காததால் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர்.
இதுபற்றி புதுப்பேட்டைபோலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிவு செய்து தீவிரமாக தேடி வந்தார். பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். போலீசாரின்தீவிர முயற்சியினால் 2மகளுடன் காயத்ரியை மீட்டனர். அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார் இதனால் அவரது குடும்பத்தினர் மகழ்ச்சி தெரிவித்தனர்.
- கொள்ளையடித்த பணத்தை ஜாலியாக செலவு செய்தேன் என கைதான வாலிபர் வாக்குமூலம்
- நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது.
இதை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரு கிறது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ தலைமையிலான போலீசார் மணவாளக்குறிச்சி பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப் பின் முர ணான தகவல்களை தெரி வித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மணவா ளக்குறிச்சி போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் பிடிபட்ட வாலிபர் எஸ்.டி.மங்காடு பகுதியைச் சேர்ந்த எட்வின் ஜோஸ் (வயது 30) என்பது தெரிய வந்தது.
இவர்குமரி மாவட்டம் மட்டு மின்றி கேரளாவில் பல்வேறு இடங்களில் கை வரிசை காட்டி இருப்ப தும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் எட்வின் ஜோசை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து 25¾ பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட எட்வின் ஜோஸ் மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, கருங்கல், மார்த்தாண்டம், நித்திர விளை போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதி களில் கடந்த 6 மாதத் தில் 20 இடங்களில் கைவரிசை காட்டி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூறியதாவது:-
நான் கேரளாவில் உள்ள சட்டக் கல்லூரி ஒன்றில் சேர்ந்தேன். படிப்பு செலவுக்காக ஓய்வு நேரத்தில் கட்டுமான வேலைக்கு சென்று வந்தேன். எனக்கு செலவுக்கு அதிக பணம் தேவைப்பட்டது. இதை யடுத்து கொள்ளையடிக்க முடிவு செய்தேன். மோட்டார் சைக்கிளில் ஒவ்வொரு பகுதியாக சென்று நகைகளை திருடினேன். போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஒவ்வொரு முறை ஒவ்வொரு பகுதிக்கு சென்று கைவரிசை காட்டுவேன்.குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவிலும் கைவரிசை காட்டி உள்ளேன்.
கைவரிசை காட்டிய நகைகளை அடகு வைத்து வரும் பணத்தை ஜாலியாக செலவு செய்தேன். பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலாவும் சென்று உல்லாசமாக வாழ்க்கையை நடத்தி வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட எட்வின் ஜோசை போலீசார் இரணி யல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட எட்வின் ஜோஸ் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
- கள்ளக்குறிச்சி அடுத்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 16 வயது மாணவர். இவர் சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- நேற்று காலை பள்ளிக்கு சென்றுவிட்டு பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் செல்லாமல் அங்கிருந்து பஸ்சில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு இரவு 8 மணி அளவில் வந்துள்ளார்.
சேலம்:
கள்ளக்குறிச்சி அடுத்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 16 வயது மாணவர். இவர் சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் அந்த பகுதியில் உள்ள டியூசன் சென்டரில் டியூசன் படித்து வந்துள்ளார். டியூசன் சென்டரில் செல்போன் மாயமானது குறித்து நேற்று முன்தினம் மாணவனிடம் அந்த டியூசன் ஆசிரியர் விசாரித்துள்ளார். மேலும் அவரது தந்தைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து வீட்டில் மாணவனை கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த அவர், நேற்று காலை பள்ளிக்கு சென்றுவிட்டு பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் செல்லாமல் அங்கிருந்து பஸ்சில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு இரவு 8 மணி அளவில் வந்துள்ளார்.
பள்ளி சீருடையில் பஸ் நிலையத்தில் சுற்றித் திரிந்த மாணவனை கண்ட பள்ளப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோர் அவரிடம் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் மாணவனுக்கு இரவு உணவு வாங்கி கொடுத்து உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனிடையே மாணவன் வீடு திரும்பாததால் அவரது தந்தை கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்திருந்தார். இதையடுத்து கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி புகழேந்தி கணேசன் மற்றும் மாணவனின் பெற்றோர் நேற்று நள்ளிரவு சேலம் வந்து மாணவனை அழைத்துச் சென்றனர்.
- 4 கொத்தடிமைகள் மீட்கப்பட்டனர்.
- இடைத்தரகர்கள் மூலம் வேலைக்கு வந்துள்ளனர்.
கரூர்:
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, தெத்து பட்டியில் தனியார் எலக்ட்ரிக்கல் நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இங்கு, சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த நான்கு பேர், கடந்த 15 நாட்களுக்கு முன், இடைத்தரகர்கள் மூலம் வேலைக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், நிறுவனத்தினர் சம்பளம் வழங்காமல், தங்களை கொத்தடிமைகளாக வேலைக்கு வைத்திருப்பதாக அந்த இளைஞர்கள் தங்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்களது, பெற்றோர், அங்குள்ள மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் கரூர் ஆர்.டி.ஓ., ரூபினா தலைமையில் ஆய்வு செய்தனர். அங்கு, கொத்தடிமைகளாக வேலை செய்த, 4 இளைஞர்களை மீட்டனர். பின், சட்டீஸ்கர் மாநிலத்திலிருந்து வந்த குழுவினரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
- ஜேடர்பாளையம் பரிசல் துறை காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது பாலாஜி காவிரியாற்றில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததாக தெரிகிறது.
- இதனால் அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்த அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்.
பரமத்திவேலூர்:
ஈரோடு மாவட்டம், கொல்லம்பாளையத்தை சேர்ந்த வெங்கட்ராமன் மகன் பாலாஜி (வயது 30). இவர் ஈரோடு தொழிலாளர் துறை அலுவலகத்தில் தற்காலிக டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 5-ந்தேதி இவரும் இவரது நண்பர்களான திவாகர், அருண் மற்றும் செண்பகராஜ் ஆகிய 4 பேரும் பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையத்தில் உள்ள சுற்றுலா மையமான அண்ணா பூங்கா மற்றும் படுகை அணை ஆகியவற்றை சுற்றி பார்த்தனர். பின்னர் ஜேடர்பாளையம் பரிசல் துறை காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது பாலாஜி காவிரியாற்றில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததாக தெரிகிறது. இதனால் அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்த அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்.
எனினும் அவரை காப்பாற்ற முடியாததால் அருகில் இருந்த மீனவர்கள் மற்றும் திருச்செங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் கடந்த 2 நாட்களாக காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாலாஜியை தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பாலாஜி நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் கரூர் மாவட்டம் கோம்புப்பாளையம் பகுதி காவேரி ஆற்று ஓரத்தில் பிணமாக மிதந்து கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து பாலாஜியின் தாய் தமயந்தி ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது பிரேதத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீஸ் உதவியுடன் அறநிலைய துறை அதிகாரிகள் நடவடிக்கை
- மீட்கப்பட்ட இடத்தில் அதற்கான அறிவிப்பு பலகையையும் அதிகாரிகள் வைத்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான நிலங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. இதில் பல நிலங்களை தனியார் ஆக்கிர மித்து வைத்துள்ளனர். அந்த நிலங்களை அறநிலை யத்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர்.
கரியமாணிக்கப்புரத்தில் உள்ள முப்பிடாரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் நாகர்கோவிலை அடுத்த வேதநகர் பகுதியில் ஹவாய் நகர் 9-வது தெருவில் உள்ளது.
இதனை புத்தளம் பகுதியை சேர்ந்த அன்னக்கிளி என்பவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்தார். மொத்தம் 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்த அன்னக்கிளி எந்த விவசாயம் செய்யாமல் அப்படியே போட்டு இருந்தார்.
இந்நிலையில் அறநிலை துறைக்கு அன்னக்கிளி குத்தகை பாக்கி ரூ.17 லட்சம் வைத்து இருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் தங்கம் தலைமையில் சிறப்பு தாசில்தார் சஜித், முப்பிடாரி அம்மன் கோவில் செயல் அலுவலர் ரகு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் இன்று அந்த நிலத்தை மீட்டனர்.
அந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.25 கோடி இருக்கும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த நிலத்தை வேறு நபருக்கு குத்தகை விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட இடத்தில் அதற்கான அறிவிப்பு பலகையையும் அதிகாரிகள் வைத்தனர்.
- கிணற்றில் விழுந்த எருமை மாடு உயிருடன் மீட்கப்பட்டது.
- தீயணைப்பு வீரர்கள் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்
கரூர்
கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் (வயது 63). இவர் தனது வீட்டுக்கு அருகில் இருந்த வெற்று இடத்தில் முளைத்திருந்த புற்களில் எருமை மாட்டை மேய விட்டிருந்தார். அந்த வெற்றிடத்தில் தரை மட்டத்திற்கு வட்டை கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் வட்டை கிணறு அருகே மேய்ந்து கொண்டிருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான எருமை மாடு திடீரென தவறி கிணற்றுக்குள் விழுந்தது. இதை பார்த்த மதியழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினரை அழைத்து கிணற்றுக்குள் விழுந்த எருமை மாட்டை மீட்க முயற்சி செய்தனர். இருப்பினும் முடியவில்லை. பின்னர் இதுகுறித்து மதியழகன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து எருமை மாட்டை கயிற்றைக் கட்டி லாபகரமாக மேலே தூக்கி உயிருடன் மீட்டு மதியழகனிடம் ஒப்படைத்தனர்."
- ரெயிலில் தூங்கிக் கொண்டு இருந்ததால் ரெயில் கிளம்பும்போது தூக்க கலக்கத்தில் ரெயிலில் இருந்து இறங்க முயன்றார்.
- ரெயில்வே ஊழியர்கள் பிளாட்பாரத்தை சம்மட்டியால் அடித்து உடைத்து ரவிகுமாரை மீட்டனர்.
ஆந்திர மாநிலம், நந்தியாலில் இருந்து நேற்று இரவு விஜயவாடாவுக்கு பயணிகள் ரெயில் சென்று கொண்டு இருந்தது. ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். ரெயிலில் ரவிக்குமார் 30) என்ற வாலிபர் பயணம் செய்தார். அங்குள்ள ரெயில் நிலையத்தில் ரவிக்குமார் இறங்க வேண்டும்.
ஆனால் அவர் ரெயிலில் தூங்கிக் கொண்டு இருந்ததால் ரெயில் கிளம்பும்போது தூக்க கலக்கத்தில் ரெயிலில் இருந்து இறங்க முயன்றார்.
அப்போது நிலை தடுமாறிய ரவிக்குமார் ரெயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கினார்.
வலியால் அவர் அலறி துடித்தார். இதனைக் கண்ட பயணிகள் உடனடியாக ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் பிளாட்பாரத்தை சம்மட்டியால் அடித்து உடைத்து ரவிகுமாரை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக 2 நாட்கள் கூட்டாய்வு நடந்தது.
- 14 வயது முதல் 18 வயது வரை உள்ள 4 வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டனர்.
திருப்பூர் :
சென்னை தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் குமரன், கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி அறிவுறுத்தலின்படி, திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக 2 நாட்கள் கூட்டாய்வு நடந்தது.
இந்த ஆய்வில் குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் தடுப்பு படையினர், வருவாய்த்துறை அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டுலைன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர். பல்லடம் பகுதியில் உள்ள தனியார் மில் மற்றும் கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வந்த, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்களாக 2 சிறுவர்கள், 14 வயது முதல் 18 வயது வரை உள்ள 4 வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டையும் சேர்த்து விதிக்கப்படும்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் அமர்த்தக்கூடாது. 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தக்கூடாது. வளரிளம் பருவத்தினரை அபாயகரமில்லாத தொழிலில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கு மொத்த வேலை நேரம் 6 மணி நேரமாகும். 3 மணி நேரம் கழித்து 1 மணி நேரம் ஓய்வு இடைவேளை விட வேண்டும். வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும். இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை பணியில் ஈடுபடுத்தக்கூடாது.
எந்தவொரு நிறுவனமும் மற்றும் தொழிற்சாலைகளிலும் வளரிளம் பருவத்தினரை இரவு நேரங்களில் பணியமர்த்தக்கூடாது. வளரிளம் பருவத்தினரை பணிகளில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள் தொடர்புடைய தொழிலாளர் துறை, தொழிற்சாலை துறைக்கு அறிவிப்புபடிவம் அளிக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் சட்டப்பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.
இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்க்கொடி தெரிவித்துள்ளார்.
- கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டது.
- கோர்ட்டு உத்தரவுபடி
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் விளந்தை பகுதியில் உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி ஆண்டிமடம் விளந்தை மேலஅகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் நேற்று கோயில் சொத்துக்களை கையகப்படுத்த இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் ஆண்டிமடம் விலந்தை பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போதுஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்ட 26 பேரில் 24 பேர் நீதிமன்ற மூலம் பெற்ற தடை உத்தரவை காண்பித்துள்ளனர்.
தடை உத்தரவு வாங்காத இரண்டு நபர்களான ராதாகிருஷ்ணனின் அன்னதான கூடமும், செல்வகுமாரின் வால்பட்டரை இடம் மீட்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் செந்தமிழ்செல்வி மற்றும் வருவாய் துறையினர், காவல்துறையினர் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் வால்பட்டறை மற்றும் அன்னதான கூடம் ஆகியவற்றுக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.