என் மலர்
நீங்கள் தேடியது "விபத்து"
- சட்டென சாலையை குறுக்கிட்ட நாயால் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் நூலிழையில் உயிர் தப்பினர்.
- விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் கலைஞர் நகரில் சட்டென சாலையை குறுக்கிட்ட நாயால் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் நூலிழையில் உயிர் தப்பினர்.
சாலையின் குறுக்கே நாய்கள் ஓடியதால் பைக், கார், லாரி என அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் பின்னல் அமர்ந்து வந்த பெண் நிலைதடுமாறி கீழ விழுந்தார். இதை கவனித்த கார் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தினார். அதற்கு பின்னல் வேகமாக லாரி கார்மீது மொத, கார் பைக் மீது மோதியது. இதனால் பைக்கை ஓட்டி வந்த நபர் தடுமாறி கீழே விழுந்தார்.
நல்வாய்ப்பாக பைக்கில் வந்த இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது தொடர்பான சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குலைநடுங்கவிடும் விபத்து.. 2 எமன்களிடம் தப்பிய உயிர்கள் - "உசுரு தப்புனதே கடவுள் செயல் தான்"#Tirupathur | #Accident pic.twitter.com/UBZfMWtDlY
— Thanthi TV (@ThanthiTV) February 17, 2025
- ஜங்கான் சந்திப்பில் அருகே சாலையோரம் பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்தது.
- கட்டுப்பாட்டை இழந்த கார், இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.
தெலுங்கானாவின் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த எட்டு பைக்குகள் மீது வேகமாக வந்த கார் மோதிய சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜங்கான் சந்திப்பில் அருகே சாலையோரம் பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்தது. அவ்வழியே வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில், காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தை அடுத்து மதுபோதையில் கார் ஓட்டி வந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
A speeding car lost control and rammed into 8 bikes on #Suryapet Road in #Jangaon. Causing a woman suffered grievous injuries, while 2 others escaped with minor injuries. The terrifying moment was captured on #CCTV.The #CarAccident raised serious #RoadSafety concerns. Suspects… pic.twitter.com/hnQ21KfymI
— Surya Reddy (@jsuryareddy) February 17, 2025
- நந்தூர்கோணம் பகுதியில் அவர்கள் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
- மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பந்தலகோட்டையை சேர்ந்தவர் திலீப் (வயது 40). கென்யா நாட்டில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்க்கும் இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அவர் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
திருவனந்தபுரம் போத்தன்காடு அருகே உள்ள நந்தூர்கோணம் பகுதியில் அவர்கள் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட திலீப் மற்றும் நீது பரிதாபமாக இறந்தனர்.
மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அமல் (22), சச்சு (22) ஆகியோர் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
- தீ விபத்தில் முதல் தளத்தில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காலணிகள், ஷூக்கள் முற்றிலுமாக எரிந்து சேதமானது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மெயின் சாலையில் ஏழாயிரம் பண்ணையை சேர்ந்த ஆபிரகாம் என்பவரின் குடும்பத்தினர் செருப்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். தரைத்தளம் மற்றும் மாடியில் 2 தளங்கள் என கடை செயல்பட்டு வருகிறது.
தரைத்தளத்தில் உள்ள கடையை ஆபிரகாம் மற்றும் அவரின் மகன் ஜோயல் இருவரும் பார்த்து வருகின்றனர். மாடியில் உள்ள முதல் தளத்தில் உள்ள கடையை ஆபிரகாம் மற்றொரு மகன் பிரபு பார்த்து வருகிறார். மேலும் மாடியில் உள்ள 2-வது தளத்தை குடோனாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு மாடியில் உள்ள முதல் தளத்தில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று 2 தீயணைப்பு வண்டிகள் மூலமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இருந்த போதிலும் இந்த தீ விபத்தில் முதல் தளத்தில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காலணிகள், ஷூக்கள் முற்றிலுமாக எரிந்து சேதமானது.
தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
- பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் சென்று கொண்டிருந்தது.
- மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நடந்து வருகிறது.
இதில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 10 பேர் ஒரு காரில் கும்பமேளாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த பஸ் கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கார் முழுவதும் நொறுங்கியது.
அதிலிருந்து பக்தர்கள் 10 பேர் பலியானார்கள். மேலும் பஸ்சில் இருந்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
நள்ளிரவில் நடந்த இந்த விபத்து காரணமாக பிரயாக்ராஜ்-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியானவர்கள் உடல்களை ஸ்வரூப் ராணி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
பலியானவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
- பேருந்து ஓட்டுநர் மற்றும் ஒரு பயணியின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
- 41 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பெரு நாட்டில் பாலம் இடிந்து விழுந்ததில் டபுள் டெக்கர் பேருந்து ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
மீட்புப் பணியில் 50க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளும் 100 தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பேருந்து ஓட்டுநர் மற்றும் ஒரு பயணியின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. மேலும் 41 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பெரு நாட்டில் பேருந்து விபத்துக்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. பெரு நாட்டில் 2023 ஆம் ஆண்டு சாலை விபத்துக்களில் 3,138 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சரக்கு ரெயில் வண்டி கார்த்திக் செல்வம் மீது மோதியதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செல்லக்குளம் பள்ளிக் கூடத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக் செல்வம் (வயது 26). தையல் வேலை செய்து கொண்டு ஆடுகள் வளர்த்து வந்தார். இவருக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி திருமணம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் 4 மணிக்கு வாடிப்பட்டி-சோழவந்தான் ரெயில் நிலையங்களுக்கு இடையில் கீழ்நாச்சிகுளம் பகுதியில் ரெயில்வே தண்டவாள பகுதிக்கு கார்த்திக் செல்வம் சென்றுள்ளார். அப்போது கூடல் நகரில் இருந்து திண்டுக்கல் சென்ற சரக்கு ரெயில் வண்டி கார்த்திக் செல்வம் மீது மோதியதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த மதுரை ரெயில்வே சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கார்த்திக் செல்வம் ரெயில் மோதி விபத்தில் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பேருந்து மீது எதிரே சபரிமலையில் இருந்து வந்த கர்நாடக பதிவெண் கொண்ட வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
- 15க்கும் மேற்பட்டோர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேனி அருகே மதுராபுரி பகுதியில் உள்ள திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில், சேலம் மாவட்டத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்டோருடன் சபரிமலை கோவிலுக்கு சென்ற தனியார் பேருந்து மீது எதிரே சபரிமலையில் இருந்து வந்த கர்நாடக பதிவெண் கொண்ட வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் 10 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேருந்து ஓட்டுநர் நெல்சன் டேவிட்டுக்கு கால் முறிவு ஏற்பட்டது.
- பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் ஒரு தனியார் பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
தொழிலாளர்கள் தினமும் கம்பெனி பேருந்தில் வந்து பணிபுரிகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் பிஸ்கட் கம்பெனிக்கு சொந்தமான அந்த பேருந்து அம்மாபேட்டை, பவானி, லட்சுமி நகர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த சுமார் 30 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டூரில் இருந்து பெருந்துறை சிப்காட் நோக்கி சென்று கொண்டிருந்தது.
பேருந்தை மேட்டூரை சேர்ந்த நெல்சன் டேவிட் (வயது 34) என்பவர் ஓட்டினார். பேருந்து பெருந்துறை அருகே காஞ்சிகோவில் பிரிவு சாலையைக் கடந்து சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அங்கு சாலையின் வலது ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்து பணியாளர்கள் சிமெண்ட் லோடு இறக்கி கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பிஸ்கட் கம்பெனியின் பேருந்து, எதிர்பாராத விதமாக லாரியின் பின் பக்கம் மோதியது. இதில் பேருந்தில் இருந்த 19 பேர் லேசான காயம் அடைந்தனர்.
பேருந்து ஓட்டுநர் நெல்சன் டேவிட்டுக்கு கால் முறிவு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பெரும்பாலானவர்களுக்கு லேசான காயமே ஏற்பட்டதால் அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து உடனடியாக வீடு திரும்பினர்.
பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மகராஷ்டிரா மாநிலம் கோலக்பூரில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், படுகாயமடைந்த ஓட்டுநர் உள்பட இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.