search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதார்"

    • டெல்லியில், வேளாண் தொழில்நுட்ப உச்சி மாநாடு நடந்தது.
    • விவசாயிகள் பெயர்களை பதிவு செய்வதற்கானவழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

    புதுடெல்லி:

    மத்திய அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பயிர்க்காப்பீடு திட்டம், கடன் திட்டங்கள், விவசாய பொருட்கள், உரம், மருந்துகள் உள்ளிட்ட இடுபொருட்கள் வாங்க மானியங்கள் உள்பட பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

    இதன் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் வேளாண்மை திட்டங்களில் டிஜிட்டல் முறையை புகுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    டெல்லியில், வேளாண் தொழில்நுட்ப உச்சி மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட மத்திய வேளாண் துறை செயலாளர் தேவேஷ் சதுர்வேதி ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:-

    கடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் விவசாயிகள் நலனுக்காக ரூ.2 ஆயிரத்து 817 கோடி ஒதுக்கீட்டில் டிஜிட்டல் வேளாண்மை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. வேளாண்துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் விவசாயிகளை பதிவு செய்யும் பணியை தொடங்க உள்ளோம்.

    விவசாயிகள் ஏதேனும் வேளாண் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும்போது ஒவ்வொரு தடவையும் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இதில் செலவு ஆவதுடன், சில தொல்லைகளும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண விவசாயிகள் பதிவேடு ஒன்றை உருவாக்க போகிறோம்.

    தற்போது, மாநில அரசுகள் அளித்த விவசாய நிலங்கள், பயிர் சாகுபடி குறித்த தரவுகள் மட்டுமே மத்திய அரசிடம் உள்ளன. விவசாயிகளை பற்றி தனிப்பட்ட தரவுகள் இல்லை. அந்த குறையை இத்திட்டம் போக்கும்.

    விவசாயிகள் பெயர்களை பதிவு செய்வதற்கானவழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். அக்டோபர் மாதம், பதிவு செய்யும் பணி தொடங்குகிறது. இதற்காக முகாம்கள் நடத்தப்படும். மார்ச் மாதத்துக்குள் 5 கோடி விவசாயிகளின் பெயர்களை பதிவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

    அதன்பிறகு, ஆதார் போல், அந்த விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்கப்படும். அதன்மூலம் அவர்கள் பல்வேறு வேளாண் திட்டங்களை பெற முடியும்.

    விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் அட்டை உள்ளிட்ட திட்டங்களை சிக்கலின்றி பெற முடியும். மேலும், அரசின் கொள்கை திட்டமிடலுக்கும் இந்த தரவுகள் பயன்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அக்டோபர் 1 முதல் இந்த புதிய செயல்முறை தொடங்கும்.
    • சட்டவிரோத வெளிநாட்டினரின் ஊடுருவலை தடுப்பதற்காக இந்த புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அசாம் அரசு தெரிவித்துள்ளது.

    அசாம் மாநிலத்தில் புதிதாக ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC ) விண்ணப்ப ரசீது எண்ணை (ARN) சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

    அக்டோபர் 1 முதல் இந்த புதிய செயல்முறை தொடங்கும் என்றும் சட்டவிரோத வெளிநாட்டினரின் ஊடுருவலை தடுப்பதற்காக இந்த புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    2019 ஆம் ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேடு நடத்தப்பட்ட போது தவறுதலாக பயோமெட்ரிக்ஸ் லாக் செய்யப்பட்ட 9.55 லட்சம் மக்களுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தாது என்றும் அவர்கள் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அசாம் மாநிலத்தின் 4 மாவட்டங்களில் உள்ள மக்கள்தொகை எண்ணிக்கையை விட அதிக அளவிலான ஆதார் கார்டு விண்ணப்பங்கள் வந்தது என்றும் ஆதலால் சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பதற்காக இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளது.

    • அரசு ஆவணங்களையும் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போக்குவரத்து வழியை கம்பிவேலி போட்டு அடைக்க முற்படுகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 54 வது வார்டு வஞ்சி நகர் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. வஞ்சி நகர் பகுதிக்கு செல்ல அடுக்குமாடி குடியிருப்பு வழியாக 40 அடி வழித்தடம் விட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அதை குடிசைமாற்று வாரியம் அடைத்து கம்பிவேலி போடுவதால் பல கிலோ மீட்டர் சுற்றி வஞ்சிநகர் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    எனவே பொதுமக்கள் செல்ல ஒதுக்கப்பட்ட சாலையை ஆக்கிரமிக்கும் வீட்டுவசதி வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் போக்குவரத்து வழியை கம்பிவேலி போட்டு அடைக்க முற்படுகின்றனர்.

    இதனை கண்டித்து வஞ்சிநகர் பகுதி பொது மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களையும் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆதார் கார்டுக்கு பதிய போட்டோ எடுக்கும்போது ஒரு சிறுமி அழகழகாக போஸ் கொடுக்கும் வீடியோ இணையத்தையே கலக்கி வருகிறது.
    • மற்ற நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பிறகு போட்டோ எடுக்க அந்த சிறுமியை கேமரா முன்னர் நிற்க வைத்துள்ளனர்.

    இந்தியர்களின் அத்தியாவசிய அடையாள அட்டையாக மாறிப்போன ஆதார் கார்டு போட்டோ நன்றாக இல்லை என்ற கவலை பலருக்கு உண்டு. இருட்டடித்த போட்டோக்களும், நேரில் இருக்கும் மனிதர்க்கு சுத்தமாக சம்பந்தமாக இல்லாத வகையில் ஆதார் கார்டில் அவரது போட்டோ உள்ளது என்ற அபிப்பிராயங்கள் பரவலாக உள்ளன.

    இந்நிலையில் ஆதார் கார்டுக்கு பதிய போட்டோ எடுக்கும்போது ஒரு சிறுமி அழகழகாக போஸ் கொடுக்கும் வீடியோ இணையத்தையே கலக்கி வருகிறது. முதல் முதலாக அந்த சிறுமிக்கு ஆதார் கார்டு பதிய ஆதார் சேவை மையத்துக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

    அங்கு மற்ற நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பிறகு ஆதார் கார்டுக்கு போட்டோ எடுக்க அந்த சிறுமியை கேமரா முன்னர் நிற்க வைத்துள்ளனர். அப்போது தனது கன்னத்தில் கை வைத்தும் பல வழிகளில் அந்த சிறுமி உற்சாகமாக போஸ் கொடுத்த்து அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார். இந்த வீடியோ இஸ்டாகிராமில் 18  மில்லயன் பார்வைகளைத் தாண்டி கலக்கி  வருகிறது.

    • பொதுமக்களின் அத்யாவசிய தேவைக்களுக்கான அட்டைகளில் ஆதாரை இணைப்பது அவசியமாக்கப்பட்டு உள்ளது.
    • வாகனங்களில் இருந்து தவறி விழுந்ததா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    லால்குடி:

    ஆதார் கார்டு என்பது தற்போது இந்திய குடிமக்களின் மிக முக்கிய ஆவணமாக மாறி உள்ளது. வங்கி கணக்கு, பேன் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட பொதுமக்களின் அத்யாவசிய தேவைக்களுக்கான அட்டைகளில் ஆதாரை இணைப்பது அவசியமாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு இணைக்கவில்லை என்றால் மேற்கண்ட சேவைகள் கிடைக்காது என்ற நிலை உள்ளது.

    மேலும் தற்போது தமிழக அரசால் பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு வங்கி கணக்கு அவசியம். அவ்வாறு வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றால் ஆதார் கார்டு அவசியம். அவ்வாறு ஆதார் கார்டு இருந்தாலும் அது புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் காரணமாக பலர் ஆதார் கார்டு விண்ணப்பித்திருந்தனர். மேலும் ஆதார் கார்டு புதுப்பிக்கவும் செய்தனர். இவர்களுக்கு ஆதார் கார்டு தபால் மூலம் நேரடியாக வீட்டிற்கே அனுப்பப்படும்.

    அவ்வாறு அனுப்பப்பட்ட ஆதார் கார்டுகள் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூர் கிராமத்தில் ரோட்டில் வீசப்பட்டு கிடந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 500க்கும் மேற்பட்ட ஆதார் கார்டுகள் பூவாளூரில் உள்ள நிர்மலா என்பவரின் வீட்டின் முன்பாக கொட்டிக்கிடந்தது. ஆதார் கார்டுகளில் உள்ள அனைத்து முகவரியும் பூவாளுரை சேர்ந்ததாக உள்ளது. இந்த செய்தி அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் ஏற்கனவே ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்திருந்த பொதுமக்கள் அங்கு வந்து தங்கள் முகவரி உள்ளதா என தேடி பார்த்து எடுத்து சென்றனர். இது குறித்து வருவாய் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

    பொதுமக்களுக்கு தபால் மூலம் வந்த ஆதார் கார்டுகளை சரியாக வீடுகளுக்கு சென்று டெலிவரி செய்யாமல் தபால் ஊழியர் யாரேனும் வீசி சென்றனரா? அல்லது வாகனங்களில் இருந்து தவறி விழுந்ததா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • முகாமில் குழந்தைகளுக்கு புதிய ஆதார் எடுத்தல், பெயர் திருத்தம் உள்ளிட்ட ஆதார் சேவைகள் செய்து கொடுக்கப்படும்.
    • செல்வமகள் சேமிப்பு திட்டம், பொன்மகன் சேமிப்புத் திட்டம் கணக்குகள் முகாமிலே ஆரம்பித்து கொடுக்கப்படும்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண்தான விழிப்புணர் குழு இணைந்து பாவூர்சத்திரம் அஞ்சல் துறையுடன் ஆதார் திருத்தச் சிறப்பு முகாம் நடத்தியது.

    பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடத்தில் கடந்த 24-ந் தேதி தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை,ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து 6 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் குழந்தை களுக்கு புதிய ஆதார் எடுத்தல், பெயர் திருத்தம், 5 வயது முடிந்த குழந்தை களுக்கு ஆதார் புதுப்பித்தல், 15 வயது முடிந்த குழந்தை களுக்கு ஆதார் புதுப்பித்தல், ஆதார் எடுத்து 10 வருடம் முடிந்தவர்களுக்கு ஆதார் புதுப்பித்தல், முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம் முதலிய ஆதார் சேவைகள் செய்து கொடுக்கப்படும்.

    பாவூர்சத்திரம் சுற்று வட்டார மக்கள் இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம், பொன்மகன் சேமிப்புத் திட்டம் கணக்கு கள் தொடங்க வேண்டி இருந்தால் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் சென்றால் முகாமிலே சேமிப்பு கணக்கு ஆரம்பித்து கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    இந்நிகழ்ச்சிக்கு பாவூர் சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தலைவர் லட்சுமி சேகர் தலைமை தாங்கினார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க செயலாளர் சசி ஞானசேகரன் மற்றும் நிர்வாகி அருணாச்சலம் , ரஜினி, ஆனந்த், மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாவூர்சத்திரம் அஞ்சல் துறை அதிகாரி ஜோதி வரவேற்று பேசினார். கல்லூ ரணி பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் நிகழ்ச்சி யை தொடங்கி வைத்தார். வட்டார தலைவரும், கண்தானம் விழிப்புணர் குழு நிறுவனரும் ஆகியகே.ஆர்.பி. இளங்கோ, அஞ்சலக ஆய்வாளர் ராம சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் சினேகா பாரதி நன்றி கூறினார்.

    • கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்
    • கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்

    நாகர்கோவில் :

    சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, குமரி மாவட்ட பாரத ஸ்டேட் வங்கி நாகர்கோவில் மண்டல அலுவலகம் சார்பில் வங்கி சேமிப்பு, கடன் மற்றும் காப்பீடு திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு முகாம், நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது. மாநகர மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    கலெக்டர் ஸ்ரீதர் பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவி கள் வழங்கி பேசியதாவது:-

    பொதுத்துறை வங்கி களின் வாயிலாக பல்வேறு தரப்பட்ட கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பாரத ஸ்டேட் வங்கியானது அதிக வாடிக்கையாளர்களை கொண்ட வங்கியாக திகழ்ந்து வருகிறது. குமரி மாவட்டத்திற்குட்பட்ட வங்கிகளின் மூலமாக மகளிர் சுய உதவி குழுவினருக்கு பல்வேறு கடனு தவிகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் வாயிலாக ஒன்றிய, மாநில அரசால் வழஙங்கப்படும் கடனுதவிகளை முறையாக பயன்படுத்த வேண்டும்.

    பொதுமக்கள், சுயஉதவிக் குழுக்கள், சிறு குறு வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு வங்கி களின் வாயிலாக என்னென்ன கடனுதவிகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். செப்டம்பர் முதல் கலை ஞரின் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல் பாட்டு வருகிறது. இதற்கான உதவி தொகை வங்கிகளில் நேரடியாக வழங்கப்படும். தற்போது விண்ணப்ப வினியோகம் வீடு, வீடாக நடக்கிறது. விண்ணப்ப பதிவு முகாம் 24-ந் தேதி தொடங்குகிறது.

    அந்தந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரம், இடம் நாள் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்ப பதிவு நடக்கும். இந்த விண்ணப்ப பதிவுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் ஆதார் இணைத்த வங்கி கணக்கு புத்தகத்தை கொண்டுவர வேண்டும். அவ்வாறு கொண்டு வந்தால் பதிவு எளிதாக இருக்கும். வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு முகாம் நடைபெறும் இடத்திலேயே வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. வங்கிகள் மக்கள் சேவையில் சிறந்து விளங்கு கின்றன. கடன் உதவிகளை முறையாக திரும்ப செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு சுமார் ரூ.2.08 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப் பட்டது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகள், கல்லூரிகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கியின் துணை பொது மேலாளர் (சென்னை) சந்தீப்தா குமார் நாயக், நாகர்கோவில் மண்டல அலுவலர் பழனி சாமி, மாவட்ட தொழில் மைய அலுவலர் பெர்பெட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தபால் நிலையங்களில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் சித்ரா விடுத்துள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்ப தாவது:- 

    மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய இரு தலைமை தபால் அலுவலகங்கள் மற்றும் கமுதி, ராஜசிங்கமங்களம், கீழக்கரை, முதுகுளத்தூா், ராமேசுவரம் உள்ளிட்ட 29 துணை தபால் நிலையங்க ளிலும் வருகிற 30- ந்தேதி வரையில் ஆதாா் சோ்க்கை மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    முகாமில் புதிதாக ஆதாா் அட்டை எடுக்க விரும்புவோா், இலவசமாகவும், ஆதாா் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள விரும்புவோா் ரூ.50 கட்டணம் செலுத்தியும் பயனடையலாம். 

    சிறப்பு முகாம்களில் அனைத்து வகையான சேமிப்பு கணக்குகளும், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு கணக்கு மற்றும் ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்பு கணக்குகளையும் தொடங்கலாம்.

    முகாமில் பங்கேற்க விரும்புவோா் இரு புகைப்படங்கள், ஆதாா் அட்டை நகல்களை்  கொடுத்து சேமிப்புத் திட்டத்தில் சேரலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  
    ×