என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்"

    • சபரிமலை சீசனுக்காக இயக்கப்படும் தாம்பரம்-எர்ணாகுளம் ரெயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் தை மாதம் நடைபெறும் மகரஜோதி வரை நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்த நேரத்தில் அய்யப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருவார்கள்.

    பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை தாம்பரம் முதல் கேரளா மாநிலம் எர்ணாகுளம் இடையே நவம்பர் 28-ந் தேதி முதல் ஜனவரி 3-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

    இந்த ரெயில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, புனலூர் வழியாக எர்ணாகுளம் வரை இயக்கப்படுகிறது.

    அய்யப்பன் கோவில் சீசனுக்காக இயக்கப்படும் இந்த சிறப்பு ரெயிலுக்கு தமிழகத்தின் முக்கிய ஆன்மீக நகரங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுத்தம் இல்லாதது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    ஏற்கனவே எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி மக்கள் தொடர்ந்து ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சபரி மலை சிறப்பு ரெயிலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிற்காதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆகிய கோவில்களில் தரிசிக்கவும், சதுரகிரி மலையில் சித்தர்கள் வாழும் மலையாக செல்லும் நிலையில் ஆன்மீக விழாவுக்காக இயக்கப்படும் சபரிமலை சிறப்பு ரெயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களும், பயணிகளும் தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

    • ராமேசுவரத்தில் இருந்து மதுரை, பழனி வழியாக பாலக்காடுக்கு ெரயில் விட வேண்டும்.
    • ராமேசுவரத்துக்கு வருகை தரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ராமேசுவரம்

    உலகப் புகழ்பெற்ற ராமேசுவரத்தில் 12 ஜோதி லிங்கத்தில் ஒரு ஜோதிலிங்கம் ராமநாதசுவாமி கோவிலில் அமைந்திருப்பது ராமேசுவரத்துக்கு பெருமையாகும்.

    இதனால் உலகம் நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்தும் சிவஸ்தலமான ராமேசுவரம் ராமநா தசுவாமி கோவிலில் வழிபாடு செய்வதற்கு தினமும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    பெரும்பாலான தமிழகப் பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் ராமேசுவரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு ஆன்மீகப் பயணமாக மற்ற தலங்களான பழனி, திருச்செந்தூர், பொள்ளாச்சி மாசாணி யம்மன் கோவில், பாலக்காடு பகவதி அம்மன் கோவில்களுக்கு செல்கின்றனர்.

    ஆனால் ராமேசுவரம் வந்து மீண்டும் இந்த புனித தலங்களுக்கு செல்வதற்கு நேரடியாக ரெயில் போக்குவரத்து இல்லை. பஸ்களில் செல்ல வேண்டும் இதற்கு அதிக கட்டணம், அதிக பயண நேரம் ஆவதால் அதைத்தவிர்த்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பிச் செல்கின்றனர்.

    எனவே ராமேசுவரத்தை மையப்படுத்தி மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருந்தபோது ராமேசுவரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு பாலக்காடு, திருச்சியை இணைக்கும் வகையில் பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் மானாமதுரையில் இருந்து திருச்சிக்கும், மதுரை, பழனி, பொள்ளாச்சி வழியாக பாலக்காடுக்கும் பிரிந்து சென்றது.

    இந்த ரெயில் தினமும் இயக்கப்பட்டு வந்தது. இதனால் பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் வசதியாக இருந்தது. இந்த ரெயில்கள் இயக்கப்பட்டபோது ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டம் ஆகிய பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் எந்தவித சிரமமின்றி பழனிக்கு சென்று வந்தனர்.

    தற்போது அகல ரெயில் பாதையாக மாற்றிய பிறகு இந்த ரெயில் போக்குவரத்து நிறுத்தப்ப ட்டது. இதனால் பயணிகள் பழனி, பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில், பாலக்காடு பகவதி அம்மன் கோவில்களுக்கு செல்வதை குறைத்துக் கொண்டனர்.

    பயணிகள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி ரெயில்வே நிர்வாகம் மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது இயக்கப்பட்ட பாலக்காடு,திருச்சி பயணிகள் ரெயிலை முன் பதிவு வசதியுடன் இயக்கு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமேசுவரத்துக்கு வருகை தரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • குமரி மாவட்டத்தில் கன்னி பூ, கும்பப் பூ, என இரு போக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது.
    • தற்பொழுது கும்ப பூ சாகு படி பணியில் விவசாயி கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கன்னி பூ, கும்பப் பூ, என இரு போக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது கும்ப பூ சாகு படி பணியில் விவசாயி கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் 6500 ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் விவசா யத்திற்கு தேவையான உரம் தட்டுப்பாடு நீடித்து வந்தது.

    இதனை கவனத்தில் கொண்டு தங்கு தடை இன்றி விவசாயத்திற்கு உரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கொச்சி யில் இருந்து சரக்கு ரெயில் மூலம் கன்னியா குமரி மாவட்ட விவசாய பணிகளுக்காக 635 டன் பாக்டம்பாஸ் உரம் இன்று நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தது. அந்த உரம் லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு நாகர்கோவில் ஒழுகின சேரியில் உள்ள மத்திய உர நிறுவன கிட்டங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    கன்னியாகுமரி மாவட்ட விவசாயத்திற்கு இந்த உரம் பயன்படுத்தப்பட இருக்கிறது. தனியார் ஏஜென்சிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு இந்த உரம் இங்கிருந்து விநியோகம் செய்யப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தஞ்சை தொம்பன்குடிசை அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • ரெயில் விஜய் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மானோஜிப்பட்டி வனதுர்க்கா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் விஜய் (வயது 25 ). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் தஞ்சை தொம்பன்குடிசை அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தனது செல்போனில் ஹெட்போனை இணைத்து கொண்டு பேசியப்படியே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது வந்த ரெயில் விஜய் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இது குறித்து தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவ வடிவேல் உத்தரவுப்படி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, தனிப்பிரிவு சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் சுரேஷ், தலைமை காவலர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 134.3 கி.மீ. தூரம் உள்ள சென்னை - கூடூர் பிரிவு தங்க நாற்கர 'ஏ' பிரிவு பாதையாகும்.
    • கடந்த அக்டோபர் 5 முதல் ரெயில்கள் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது.

    சென்னை :

    தமிழ்நாட்டில் முக்கிய தடங்களில் பயணிகள் ரெயில்களை அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தில் இயக்க தெற்கு ரெயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ரெயில் பாதைகளை பலப்படுத்துதல், நவீன மின்மயம், ரெயில் இயக்க சைகை விளக்குகள் மற்றும் கம்பங்களை மேம்படுத்துதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் ரெயில்களின் வேகத்தை ரெயில்வே வழிகாட்டு கையேடுகளில் குறிப்பிட்டுள்ளபடி முறையே மணிக்கு 160 கி.மீ. மற்றும் 130 கி.மீ. என அதிகரிக்க முடியும்.

    134.78 கி.மீ. தூரமுள்ள தங்க நாற்கர பாதையான சென்னை - ரேணிகுண்டா பிரிவில் ரெயில்களின் வேகம் ஏற்கனவே மணிக்கு 110 கி.மீ. லிருந்து 130 கி.மீ. என அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதிக்கு பிறகு இந்த பிரிவில் நடப்பு ஆண்டில் ரெயில்களின் வேகத்தை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மற்ற 'பி' பிரிவு ரெயில் பாதைகளான அரக்கோணம் - ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை - போத்தனூர் மற்றும் சென்னை - திண்டுக்கல் ஆகிய பிரிவுகளில் ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பிரிவுகளில் தற்போதைய வேகமான மணிக்கு 110 கி.மீட்டரில் இருந்து அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகமான மணிக்கு 130 கி.மீ. என அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக வந்தே பாரத், சதாப்தி ரெயில்கள் இயக்கப்படும் 144.54 கி.மீ. தூரம் உள்ள அரக்கோணம் - ஜோலார்பேட்டை பிரிவில் 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேம்பாட்டு பணிகளை முடித்து ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த 2022 - 23-ம் நிதியாண்டில் இதுவரை விருத்தாச்சலம் - சேலம், தஞ்சாவூர் - பொன்மலை, விழுப்புரம் - காட்பாடி, நாகர்கோவில் - திருநெல்வேலி, விழுப்புரம் - புதுச்சேரி, தஞ்சாவூர் - காரைக்கால், கோயம்புத்தூர் வடக்கு - மேட்டுப்பாளையம் ஆகிய பிரிவுகளில் தற்போதைய வேகமான முறையே மணிக்கு 80, 100, 50-80, 100, 100, 50-90, 90 கி.மீ.-ல் இருந்து 110 கி.மீ.-க்கு அதிகரிக்க ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் இந்த நிதியாண்டில் அரக்கோணம் - செங்கல்பட்டு, திருநெல்வேலி - திருச்செந்தூர், தாம்பரம் - செங்கல்பட்டு, திருநெல்வேலி - தென்காசி, சேலம் - கரூர் - நாமக்கல், கடலூர் துறைமுகம் - விருத்தாச்சலம், திண்டுக்கல் - பொள்ளாச்சி, மதுரை - வாஞ்சி மணியாச்சி ஆகிய பிரிவுகளில் தற்போதைய வேகமான முறையே மணிக்கு 75/90, 70, 100, 70, 100, 60/75, 100, 100 கி.மீ.-ல் இருந்து 110 கி.மீ.-க்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    134.3 கி.மீ. தூரம் உள்ள சென்னை - கூடூர் பிரிவு தங்க நாற்கர 'ஏ' பிரிவு பாதையாகும். இந்த பிரிவில் கடந்த அக்டோபர் 5 முதல் ரெயில்கள் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. தெற்கு ரெயில்வேயில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்க அனைத்து தகுதிகளும் உள்ள முதல் ரெயில் பாதை பிரிவு சென்னை - கூடுர் ஆகும். இந்த பிரிவில் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கும் முன்பு ரெயில் பாதைகளின் பலம், மின்மய அமைப்புகள், சைகை விளக்குகள், ரெயில் பெட்டிகள் ஆகியவற்றின் திறனை சோதிக்க ரெயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிர்ணய அமைப்புடன் இணைந்து தெற்கு ரெயில்வே பல்வேறு ரெயில் சோதனை ஓட்டங்கள் நடத்தியது. அனைத்து சோதனைகளிலும் வெற்றி கிடைத்தவுடன் தற்போது இந்த பிரிவில் ரெயில்கள் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன.

    சென்னை -பெங்களூர் ரெயில் வழித்தடத்தில் ரெயில்களை மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்க விரிவான திட்ட அறிக்கையை தெற்கு ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பி உள்ளது. அதேபோல சென்னை - கூடூர், சென்னை - ரேணிகுண்டா ஆகிய பிரிவுகளில் ரெயில்களின் வேகத்தை மணிக்கு 160 கி.மீ.-க்கு அதிகரிக்க சம்பந்தப்பட்ட ரெயில்வேக்களும் விரிவான திட்ட அறிக்கைகளை சமர்ப்பித்து உள்ளன.

    இந்திய ரெயில்வேயில் 8 வழித்தடங்களில் ரெயில்களின் வேகத்தை மணிக்கு 160 கி.மீ.-க்கு அதிகரிக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த தகவல்கள், தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.

    • பெட்டியிலும் டிஸ்க்பிரேக் சிஸ்டம் இணைக்கப்படுவதால் வேகமாக பயணித்தாலும் சரியான இடத்தில் நிறுத்த முடியும்.
    • சாதாரண ரெயில் பெட்டிகளை விட இப்பெட்டிகளில் கூடுதலாக பயணிகளை அழைத்துச் செல்ல முடியும்.

    திருப்பூர் :

    ரெயில் பயணிகள் வசதிக்காக நிஜாமுதீன், பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் வரும் அதிவிரைவு ரெயில்களில் எல்.எச்.பி., பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

    டெல்லி நிஜாமுதீனில் இருந்து எர்ணாகுளத்துக்கு இயக்கப்படும் நிஜாமுதீன் சூப்பர்பாஸ்ட் (22656), பீஹார் மாநிலம் பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் பாட்னா சூப்பர்பாஸ்ட் (22670), மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் (16331) உள்ளிட்ட 12ரெயில்களின் பெட்டிகள் எல்.எச்.பி., எனப்படும் நவீனப்பெட்டிகளாக மாற்றப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    நிஜாமுதீன், பாட்னா ரெயில்களில் இந்தப்பெட்டிகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் இரண்டாவது வாரத்தில் திருவனந்தபுரம் ரெயிலிலும் இணைக்கப்படுகிறது.ஜெர்மனி தொழில்நுட்பத்துடன் சென்னை ஐ.சி.எப்.,பில் தயாராகி வரும் எல்.எச்.பி., எனப்படும் அதிநவீன ரெயில் பெட்டிகள் நீண்ட தூர, அதிவிரைவு ரெயில்களுக்கு பொருத்தப்படுகிறது. சாதாரண ரெயில் பெட்டிகளை விட இப்பெட்டிகளில் கூடுதலாக பயணிகளை அழைத்துச் செல்ல முடியும்.

    பிற ரெயில் பெட்டிகளை விட எடை குறைந்தவை என்பதால் அதிவேகமாக இயக்க சவுகரியமாக இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் டிஸ்க்பிரேக் சிஸ்டம் இணைக்கப்படுவதால் வேகமாக பயணித்தாலும் சரியான இடத்தில் நிறுத்த முடியும். விபத்தின்போது ஒரு பெட்டி மற்றொரு பெட்டியுடன் மோதி சேதமடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மதுரை-மணியாச்சி, சென்னை-திண்டுக்கல் ரெயில் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
    • 110 கி.மீ. லிருந்து 130 கி.மீ.ராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழ்நாட்டில் முக்கிய வழித்தடங்களில் பயணிகள் ரெயிலை அதிகபட்ச வேகத்தில் இயக்குவது என்று தென்னகரெயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக அந்தப் பகுதிகளில்ரெயில் பாதையை பலப்படுத்துதல், மின்மயமாக்கல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    ரெயில் பாதைகளை பலப்படுத்துதல், நவீன மின்மயம், ரெயில் இயக்க சைகை விளக்குகள் மற்றும் கம்பங்களை மேம்படுத்துதல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம்ரெயில்களின் வேகத்தை ரெயில்வே வழிகாட்டு கையேடுகளில் குறிப்பிட்டுள்ளபடி முறையே மணிக்கு 160 கி.மீ. மற்றும் 130 கி.மீ. என அதிகரிக்க முடியும்.

    134.78 கி.மீ. தூரமுள்ள தங்க நாற்கர பாதையான சென்னை - ரேணிகுண்டா பிரிவில்ரெயில்களின் வேகம் மணிக்கு 110 கி.மீ. லிருந்து 130 கி.மீ.ராக அதிகரிக்கப்பட்டுள்ளது.ரெயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதிக்கு பிறகு இந்த பிரிவில் நடப்பு ஆண்டில் ரெயில்களின் வேகத்தை மேலும் அதிக ரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை - திண்டுக்கல் பிரிவில் ரெயில் வேகத்தை அதிகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் தற்போதைய வேகமான மணிக்கு 110 கி.மீ.-ல் இருந்து 130 கி.மீ. என்று அதிகரிக்கப்பட உள்ளது. மதுரை-வாஞ்சி மணியாச்சி பிரிவில் 100 கி.மீ.-ல் இருந்து 110 கி.மீ. வேகத்துக்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்திய ரெயில்வேயில் 8 வழித்தடங்களில்ரெயில் வேகத்தை மணிக்கு 160 கி.மீ. -க்கு அதிகரிக்கரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. ரெயில்வே மண்டலங்கள் பல்வேறு பிரிவுகளுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரித்து வருகின்றன.

    • தண்டவாளத்தை பலப்படுத்துவது, ஜல்லிக்கற்கள் கொட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்யப்பட உள்ளது.
    • ரெயில்களின் வேகம் மணிக்கு குறைந்தது 60 முதல் அதிகபட்சம் 80கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகிறது.

    உடுமலை:

    கேரளா, தமிழகத்தை இணைக்கும் முக்கிய ரெயில் வழித்தடமாக பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடம் உள்ளது.இந்த வழித்தடத்தில் மீட்டர்கேஜ் காலத்தில், பாலக்காட்டில் இருந்து மதுரை வரை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது. திண்டுக்கல் - மதுரை அகல ரெயில்பாதையாக மாற்றப்பட்ட பின், இந்த ரெயில் பாலக்காடு - திண்டுக்கல் ரெயிலாக மாற்றப்பட்டது. தொடர்ந்து பாலக்காடு - திண்டுக்கல் அகல ரெயில்பாதை பணி, 2008ல் துவங்கிய போது இந்த ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர், ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இந்த ெரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் கொரோனாவுக்கு முன் கோவை - பொள்ளாச்சி இடையே அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் இயக்கப்பட்ட பயணிகள் ரெயிலை இயக்கவும், பாலக்காடு ரெயில்வே கோட்ட நிர்வாகம் ெரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது குறித்து ரெயில்வே ஆர்வலர்கள் கூறியதாவது:-

    பாலக்காடு - திண்டுக்கல் ரெயில், பழநி, உடுமலை, பொள்ளாச்சி மற்றும் கோவை மாவட்ட மக்கள், தென் மாவட்டங்களுக்கு எளிதில் சென்று வர ஏதுவாக இருந்தது. இந்த ரெயில் நிறுத்தப்பட்டதால், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களுக்கு வணிக ரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, இந்த ரெயிலை இயக்க பரிந்துரை செய்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரெயிலை திருச்சி வரை நீட்டிக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    வேகம் அதிகரிப்பு

    மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பழனியில் இருந்து 65 கி.மீ., தொலைவில் பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி அமைந்துள்ளது.

    இந்த வழித்தடம் தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கேரள மாநிலம் மற்றும் கோவை உள்ளிட்ட தமிழக மேற்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இந்த வழித்தடத்தில் திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா விரைவு ரெயில், கோவை -மதுரை, சென்னை -பாலக்காடு, பாலக்காடு -திருச்செந்தூர் ஆகிய ெரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல்வரையிலான வழித்தடத்தில் ரெயில்களின் வேகம் மணிக்கு குறைந்தது 60 முதல் அதிகபட்சம் 80கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகிறது.

    இதை 110 கி.மீ., ஆக அதிகரிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.இதற்காக தண்டவாளத்தை பலப்படுத்துவது, ஜல்லிக்கற்கள் கொட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்யப்பட உள்ளது.அதன்பின் ரெயில்களின் நேர அட்டவணையை மாற்றி ரெயில்களின் வேகத்தை படிப்படியாக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தெற்கு ெரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பொள்ளாச்சி- திண்டுக்கல் வழித்தடத்தில் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டால் 2மார்க்கங்களிலும் பயண நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட சேலம்-கோவை மெமு ெரயில் இயக்கம், இரண்டரை ஆண்டுகளுக்கு பின் கடந்த ஜூலை 11ந் தேதி தொடங்கப்பட்டது. இரண்டு நாள் ரெயில் இயங்கிய நிலையில் காவேரி-ஆனங்கூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 14 முதல் 24-ந்தேதி வரை, 10 நாட்களுக்கு ரெயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது.

    ஆகஸ்டு-செப்டம்பர் மாதம் ரெயில் இயங்கியது. அக்டோபர் 13 முதல் 30-ந்தேதி வரை இரண்டாவது முறையாக ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. நவம்பர் முதல் மீண்டும் ரெயில் இயங்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காவேரி-ஈரோடு இடையே பொறியியல் பணியால் அக்டோபர் 31 முதல் நவம்பர் 29-ந்தேதி வரை 30 நாட்களுக்கு 3-வது முறையாக இந்த ரெயில் ரத்து செய்யப்பட்டது.

    டிசம்பர் முதலாவது ரெயில் இயங்குமென சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட பயணிகள் காத்திருந்தனர். ஆனால் சேலம் யார்டில் பணிகள் நடப்பதாக கூறி டிசம்பர் 1, 2 மற்றும், 3-ந் தேதிகளில் என 4-வது முறையாக கோவை-சேலம் மெமு ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    • மதுரை-விழுப்புரம் ரெயில் நாளை வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுளளது.
    • மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மதுரை-விழுப்புரம் விரைவு ரெயில் டிசம்பர் மாதத்தில் 10 நாட்கள் திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும், மதுரை-கச்சக்குடா வாராந்திர ரெயில் வருகிற 7-ந் தேதி மதுரையில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்ருடிந்தது. வாடிப்பட்டியில் தற்போது பராமரிப்பு பணிகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    எனவே ‌ மதுரை-விழுப்புரம் விரைவு ரெயில் நாளை (5-ந் தேதி) முதல் வருகிற 9-ம் தேதி வரை வழக்கம்போல் மதுரையில் இருந்து இயக்கப்படும். அதேபோல மதுரை-கச்சக்குடா விரைவு ரெயில் வருகிற 7-ந் தேதி மதுரையில் இருந்து வழக்கம் போல காலை 5.30 மணிக்கு புறப்படும் என்று மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • செல்போனை வைத்து நல்லவற்றுக்கு பயன்படுத்தினால் சரிதான்.
    • கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தினமும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    கோவை :

    விரல் நுனியில் உலகம்... இதுதான் இப்போதைய இளைஞர்களின் நிலை. நினைத்த நேரத்தில் தொடர்பு, கருத்து பரிமாற்றம் உள்பட அனைத்துக்கும் அவர்களுக்கு உதவும் முக்கிய பொருளாக செல்போன் ஆகிவிட்டது. அந்த செல்போனை வைத்து நல்லவற்றுக்கு பயன்படுத்தினால் சரிதான். ஆனால் அவர்களுக்கும், பிறருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விபரீத விளைவுகளுக்கும் திடீரென ஆளாகிவிடுகின்றனர்.

    குறிப்பாக ஓடும் ரெயில் அருகே, ஓடும் பஸ்சின் படிக்கட்டில், வெள்ளம் ஓடும் நீர்நிலைகளின் அருகில், வனவிலங்குகளின் அருகில் நின்று செல்பி எடுப்பது போன்ற அபாயகரமான செயலில் ஈடுபடுபவர்கள் தற்போது அதிகரித்துள்ளனர். இது அவர்களுக்கு சாகசமாக தெரிகிறது. ஆனால் பிரச்சினை ஏற்படும் போதுதான் அவர்களின் குடும்பமே அதிர்ச்சிக்குள்ளாகிறது.

    இளைஞர்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் இளம்பெண்களும் ஓடும் பஸ், ரெயிலில் படிக்கட்டில் நின்றபடி செல்பி எடுத்து அவற்றை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய தொடங்கி விட்டனர். இந்த நிலையில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தினமும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் மேட்டுப்பாளையம் , காரமடை, மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கோவையில் உள்ள கல்லூரிகளுக்கு அதிகளவில் வந்து செல்கிறார்கள். அதுபோன்று தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் பலரும் இந்த ரெயிலை பயன்படுத்தி வருகிறார்கள்.

    நேற்று மதியம் 1.45 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவையை நோக்கி ரெயில் சென்றது. அந்த ரெயில் கோவை -அவினாசி ரோட்டில் உள்ள மேம்பாலத்தை தாண்டி சென்றபோது, அந்த ரெயிலில் உள்ள ஒரு பெட்டியில் அமர்ந்திருந்த 3 கல்லூரி மாணவிகள், திடீரென படிக்கட்டு பகுதிக்கு வந்தனர்.பின்னர் அவர்கள் ஒற்றை கையில் அங்கிருந்த கம்பியை பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் செல்போன் மூலம் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். செல்பி எடுத்தது மட்டுமல்லாமல், ஒரு மாணவி தனது செல்போன் மூலம் மற்ற 2 மாணவிகளை புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தார்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    கோவை -அவினாசி ரோடு மேம்பாலம் அருகே உள்ள தண்டவாள பகுதியில் ரெயில் மெதுவாகதான் செல்லும். இருந்தபோதிலும் ஒற்றை கையில் கம்பியை பிடித்துக்கொண்டு செல்பி என்ற பெயரில் சாகசம் செய்யும்போது, கை நழுவினால் என்ன ஆவது?. கரணம் தப்பினால் மரணம் என்பதை இதுபோன்ற சாகசத்தில் ஈடுபடுபவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்.மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டிய கல்லூரி மாணவிகளே இதுபோன்ற செயலில் ஈடுபடலாமா?. எனவே அவர்கள் இனியாவது இதை உணர்ந்து பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு அபராதமும் விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • மதுரை-விழுப்புரம் ெரயில் வழக்கம் போல இயங்கும்.
    • இந்த தகவலை மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை-விழுப்புரம் ெரயில் இன்று (10-ந் தேதி) முதல் வருகிற 15-ந் தேதி வரை திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் அங்கு பராமரிப்பு பணிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனவே மதுரை-விழுப்புரம் ெரயில் வழக்கம் போல் இயங்கும் என்று மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • திருநெல்வேலி-திருச்செந்தூர் பாதையில் 110 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
    • இந்தப் பகுதிகளில் 30 கி.மீ. வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரை இணைக்கும் வகையில் திருநெல்வேலியில் இருந்து 61 கி.மீ. தூர ரெயில் பாதை அமைந்துள்ளது. சென்னை, பாலக்காடு, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு 7 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மறு மார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து இந்த 7 ரெயில்கள் பல்வேறு பகுதிக்கு செல்கின்றன. தற்போது இந்த பகுதியில் ரெயில்கள் 70 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க ரெயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடந்தன. ரெயில் வேக சோதனை ஓட்டமும் நடைபெற்றது. இதையடுத்து திருநெல்வேலி-திருச்செந்தூர் ரெயில்வே பிரிவில் ரெயில்களை 110 கி.மீ. வேகத்தில் இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த பகுதியில் ரெயில்கள் 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்.

    மேலும் செங்கோட்டை-கொல்லம், திண்டுக்கல்-பழனி-பொள்ளாச்சி, மதுரை-விருதுநகர் ஆகிய பிரிவுகளில் உள்ள ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நேரடி ரெயில் பாதையில் இருந்து அருகில் உள்ள ரெயில் பாதையில் பயணிக்கும் போது இதுவரை 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. இதுவும் தற்போது இந்தப் பகுதிகளில் 30 கி.மீ. வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெயில்களை வேகமாக இயக்குவதால் பயணிகளின் பயண நேரம் குறைய வாய்ப்புள்ளது.

    ×