என் மலர்
நீங்கள் தேடியது "tag 181030"
- குருமூர்த்திக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
- தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள காமராஜர்நகரை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 32). கூலிதொழிலாளி. காதல் திருமணம் செய்த இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
குருமூர்த்திக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இரவு மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனை அவரது மனைவி கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அவர் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு தாளமுத்துநகர் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றதால் வாழைப்பழத்தில் விஷ மாத்திரை வைத்து தின்று கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
கோபி அடுத்துள்ள குருமந்தூர், பூசாரியூரை சேர்ந்தவர் குமார் (42). இவரது மனைவி சித்ரா. மனைவி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பதை கணவர் குமார் கண்டித்து வந்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்றும் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த மனைவியை குமார் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.
தனியாக இருந்த கணவர் குமார் மனமுடைந்து வாழைப்பழத்தில் விஷமாத்திரையை வைத்து சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
பின்னர் குமாரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமார் இறந்தார். இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் தொழிலாளி கொலையில் தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டி, அவரது மகன் அஜித்குமாரை கைது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி முத்து.இவர்களது மகன் அஜித்குமார்.
விருதுநகர் தெப்பம் பகுதியில் முனியாண்டி மனைவி முத்து ஜூஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளத்தை சேர்ந்த சவுந்தரராஜன் (48) என்பவருக்கு தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் முத்து ரூ. 3லட்சம் கடன் வாங்கி கொடுத்தார். கடந்த சில மாதங்களாக சவுந்தர்ராஜன் வட்டி பணத்தை கொடுக்கவில்லை.
இது தொடர்பாக பேச, சவுந்தர்ராஜன் நேற்று முத்து வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கிருந்த முனியாண்டி, மகன் அஜித்குமார் ஆகியோர் கடன் தொடர்பாக வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த தந்தை-மகன் 2 பேரும் சவுந்தர்ராஜனை சரமாரியாக அடித்து தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சவுந்தர்ராஜன் இறந்த விட்டதாக தெரிவித்தனர்.
இந்த கொலை தொடர்பாக சின்னமூப்பம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சமயன் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டி, அவரது மகன் அஜித்குமாரை கைது செய்தனர்.
- கல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
- தக்கலை அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.
கன்னியாகுமரி:
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி சர்வோதயா தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52).
இவர் தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு கல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்ட முருகன் தக்கலை அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று மாலை ஊருக்கு செல்வதாக கூறி மருத்துவ மனையில் இருந்து வீட்டிற்கு புறப்பட்ட அவர் தக்கலை பஸ் நிலையம் வந்தபோது மயங்கி விழுந்தார்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் தக்கலை போலீசார் விரைந்து சென்று முருகனை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக தக்கலை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாகராஜ் ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.
- சோமசுந்தரம் நாகராஜிடம் அரிவாளை காட்டி மிரட்டி, ரூ. 300 ஐ எடுத்துக் கொண்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர், மெயின்ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 57). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வடக்கு கள்ளிகுளத்தை சேர்ந்த அப்பாவு மகன் மாடசாமி என்ற சோமசுந்தரம் (37) நாகராஜிடம் செலவுக்கு ரூ. 500 கேட்டுள்ளார். அதற்கு நாகராஜ் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சோமசுந்தரம் அரிவாளை காட்டி மிரட்டி, அவரது சட்டை பையில் வைத்திருந்த ரூ. 300 ஐ எடுத்துக் கொண்டார். மேலும் இதுபற்றி போலீசில் புகார் செய்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதுபற்றி நாகராஜ் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, சோமசுந்தரத்தை தேடி வருகிறார்.
- பஸ்ஸை முந்தி செல்ல முயன்றபோது எதிரே வந்த லாரியுடன் மோதல்
- இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
அழகியமண்டபம் பனங்காலவிளையைச் சேர்ந்தவர் நேசமணி இவ ரது மகன் ஜெரின் (வயது31).கட்டிட தொழிலாளி.
இவர் தனது நண்பர் பூஞ்சான்விளையைச் சேர்ந்த ஜெபிஷன் (24) என்பவருடன் நாகர்கோ விலுக்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பினர்.
தோட்டியோடு அடுத்த வில்லுக்குறியில் வந்த போது முன்னால் சென்ற பஸ்ஸை ஜெபிஷன் முந்தி செல்ல முயன்றுள்ளார்.
அப்போது எதிரே பார்சல் ஏற்றி வந்த லாரியும் பைக்கும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் இருவரும் காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஜெரினை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பலத்த காயமடைந்த ஜெபிஷன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜெரின் உறவினர் சிசில்தங்கம் (55) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மகள் சம்பவத்தன்று வேலை விஷயமாக வெளியே சென்றவர் காதலருடன் சென்று விட்டார்.
- இதனால் வெங்கடேசன் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (54). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 25 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இவர்களது மகள் சம்பவத்தன்று வேலை விஷயமாக வெளியே சென்றவர் காதலருடன் சென்று விட்டார். இதனால் வெங்கடேசன் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று பயிர்களுக்கு அடிப்பதற்காக தனது வீட்டில் வைத்திருந்த கலைக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்துள்ளார். அப்போது சித்ரா தோட்டத்திலிருந்து வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது தனது கணவர் வாந்தி எடுத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கணவரிடம் இதுகுறித்து கேட்டபோது தான் விஷம் குடித்து விட்டதாக கூறியதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.
- உடையார்விளை சந்திப்பில் சாலையை கடந்தபோது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே உள்ள உடையார்விளையை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 52) தொழிலாளி. கடந்த 3-ந் தேதி இரவு இவர் உடையார்விளை சந்திப்பில் சாலையை கடந்தார். அப்போது திங்கள்நகரில் இருந்து குளச்சல் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் படுகாயமடைந்த ஸ்டீபனை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. கடந்த 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஸ்டீபன் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி ஜெபிதா குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.