என் மலர்
நீங்கள் தேடியது "tag 196711"
- சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மோதியது
- புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே வேங்காடு வடக்கு பகுதி மொண்டிவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் அசரி. இவரது மனைவி பால்தங்கம் (வயது 52).
நேற்று மாலை இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது விழுந்தயம் பலம் பகுதி சேம்பழஞ்சி என்ற இடத்தை சேர்ந்த முருகேசன் மகன் பத்ம குமார் (20) ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் பால்தங்கம் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சிரகோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சிசைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக பால்தங்கம் மகன் அஜித் (28) என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம்:
சேலம் ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சுர்ஜா என்ற பெண் அவரது கணவருடன் சன்ஜெய்யுடன் அசாம் செல்வதற்காக ஐந்தாவது நடைமேடைக்கு வந்துள்ளார்.
ரயிலுக்காக காத்திருந்த நிலையில் ரயில் வந்தவுடன் முன்பதிவு பெட்டியில் ஏற முயன்றபோது சுர்ஜா தவறி ெரயில் பாதைக்கும் விழுந்தார். இதனை அறிந்த ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் ரயிலை நிறுத்தினர். இதையடுத்து ரயில் பாதையில் விழுந்து கிடந்த சுர்ஜாவை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
அப்போது முதுகு பகுதியில் சுர்ஜாவிற்கு படுகாயம் ஏற்பட்டிருந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- இந்த வண்டிகள் அதிக வேகத்துடன் செல்வதால் பல விபத்துகள் நடைபெறுகிறது.
- பொதுமக்கள் வந்ததும் லாரி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் இரவு நேரங்களில் அதிக பாரத்துடன் டாரஸ் லாரிகளில் கல், எம் சான்ட் போன்ற கனிம வளங்கள் பூதப்பாண்டி, திட்டுவிளை, தடிக்காரன்கோணம் சுருளோடு, பொன்மனை, குலசேகரம் வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்கிறார்கள். இந்த வண்டிகள் அதிக வேகத்துடன் செல்வதால் பல விபத்துகள் நடைபெறுகிறது.
நேற்று இரவு அருமனை பகுதியை சேர்ந்த ரெவிகுமார் (வயது 38) என்பவர் பூதப்பாண்டி பகுதியில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார். தினமும் குலசேகரம் வழியாக தனது இருசக்கர வாகனத்தில் அங்கு சென்று வருவது வழக்கம். நேற்று இரவு கடையை மூடி விட்டு சுருளோடு பகுதியில் வரும்போது நாகர்கோவிலில் இருந்து அதிக கல் பாரத்துடன் கனரக வாகனம் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டு இருந்தது. இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்த ரெவிகுமார் மீது உரசியது. இதில் அவர் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் வந்ததும் லாரி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
உடனே ரெவிகுமாரை அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ரெவிகுமார் கொடுத்த புகாரின்பேரில் குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதங்கோடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் விஜயகுமார் என்பது தெரியவந்தது. தலைமறைவான லாரி டிரைவர் விஜயகுமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- ஒற்றை யானை துரத்தி கீழே தள்ளியதில் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
- பின்னர் பர்கூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனை யில் சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினர்.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதி தட்டக்கரை வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலர்களாக சுரேஷ் (35), கணேஷ் (32) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் இருவரும் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது ஒற்றை யானை துரத்தி கீழே தள்ளியதில் சுரேசுக்கு இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
கணேசை அங்குள்ள முள் புதருக்குள் தூக்கி வீசியது. இதில் அவருக்கு சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்த ஒற்றை யானை பின்பு வனப்பகுதிக்குள் சென்றது.
இதனையடுத்து வேட்டை தடுப்பு காவலர்கள் சத்தமிட்டதை அடுத்துஅங்கு வந்த தட்டக்கரை ரேஞ்சர் பழனிசாமி மற்றும் வனக்கா வலர்கள் அவர்களை மீட்டு, முதல் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவம னையில் சேர்த்தனர்.
பின்னர் பர்கூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனை யில் சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினர்.
- குமாரபாளையம் அருகே சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா நடுவநேரி பகுதியை சேர்ந்தவர் மோட்டார்சைக்கிள் மோதி 2 பேர் படுகாயமடைந்தனர்.
- இருவரும் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா நடுவநேரி பகுதியை சேர்ந்தவர் ரித்தீஷ்(வயது 20). தனியார் நிறுவன பணியாளர். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் சேலம் கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே உள்ள பேக்கரி முன்பு வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிர் திசையில் கல்லூரி பகுதியில் இருந்து வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர் மீது வேகமாக மோடியது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- பிரிட்ஜ் பெட்டியின் கதவு சிறுவன் மீது பலமாக மோதியதாக கூறப்படுகிறது.
- படுகாயமடைந்த சிறுவனை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் கொத்தன் ஒத்தை தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 26).
இவரது உறவினர் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமார், தனது மகன் ஜெகதீஸ்வரன் (2) மற்றும் குடும்பத்தினருடன் கும்பகோணம் வந்து வினோத்குமார் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி வினோத்குமார் வீட்டில் இருந்த பிரிட்ஜ்க தவை திறந்து ள்ளார்.
அப்போது அருகே நின்று கொண்டிருந்த சிறுவன் ஜெகதீஸ்வரன் மீது பிரிட்ஜ் பெட்டியின் கதவு பலமாக மோதியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த ஜெகதீஸ்வரன் மயங்கி விழுந்தான். பின்னர் அவனை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.
ஆனால், போகும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தான்.
இதுகுறித்த புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.
- பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டு கடை முற்றிலுமாக தீப்பற்றி எரிந்தது.
- தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரவி பரிதாபமாக உயிரிழந்தார்.
கபிஸ்தலம்:
தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள சோழங்கர்நத்தம் கிராமத்தில் வசிப்பவர் சண்முகம்.
இவர் தனது வீட்டிற்கு பின்புறம் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.
இந்த பட்டாசு கடையில் இவரது உறவினர் ரவி (வயது 40) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி இந்த பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் பட்டாசு கடை தீப்பற்றி எரிந்தது. இதில், ரவி படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்த தகவலின்பேரில் கும்பகோணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
சம்பவ இடத்தில் போலீஸ் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக பட்டாசு கடை நடத்திய உரிமையாளர் பிரபாகரன் கைது செய்து செய்யப்பட்டார்.
படுகாயம் அடைந்த ரவி திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இருவரும் புதுக்குப்பத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் தருமகுளம் நோக்கி சென்றுள்ளனர்.
- படுகாயமடைந்த கணபதி மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புதுகுப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் மகன் நவீன் (வயது17), ஏழுமலை மகன் கணபதி. (24).
இருவரும் புதுக்குப்பத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் தருமகுளம் நோக்கி சென்றுள்ளனர்.
இதே போல் சாவடி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ் என்பவர் மோட்டார் சைக்கிளில் தருமகுளத்தில் இருந்து ஊர் திரும்பி உள்ளார்.
அப்போது நெய்தவாசல் சீரா வெட்டி அய்யனார் கோவில் அருகே இரண்டு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மூவரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவெண்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி சத்யராஜ் உயிரிழந்தார். மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது நவீன் உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த கணபதி மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்த பூம்புகார் போலீசார் விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்த சத்யராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- ஜெராக்ஸ் எடுத்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளை பெரியதம்பி ஓட்டியுள்ளார்.
- படுகாயமடைந்த பெரியதம்பியை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பேராவூராணி அருகே உள்ள வாட்டாத்தி கொல்லைக்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 62). இவர் தலையாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி அமிர்தவல்லி பேராவூரணி ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார்.
அருகில் உள்ள இடையாத்தி கிராமத்தை சேர்ந்தவர் பெரியதம்பி. சத்துணவு அமைப்பாளராக உள்ளார். இருவரும் உறவினர்கள். பெரியதம்பியும், கோவிந்தராஜும் நாகப்பட்டினம் செல்வதற்காக இன்று காலை மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் எதிரில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஜெராக்ஸ் எடுத்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கியை பெரிய தம்பி ஓட்டியுள்ளார்.
பின்புறம் கோவிந்தராஜ் அமர்ந்து சென்றார். இந்நிலையில் பட்டுக்கோட்டையில் இருந்து வேதாரண்யம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் இடித்ததில் கீழே விழுந்த கோவிந்தராஜ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
படுகாயம் அடைந்த பெரியதம்பியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- குமாரபாளையத்தில் தொழிலாளிக்கு கத்திகுத்து விழுந்தது.
- அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே ஜீவா நகர் பகுதியை சேர்ந்த வர் அருண்(வயது 31), கூலித்தொழிலாளி. இவரது வீட்டின் பின்னால் உள்ள சிவராஜ்(45) என்பவரின் வீட்டிற்கு அருண் சென்றார். அப்போது,அங்கு சிவராஜுடன், கல்லங்காட்டுவலசு பகுதியை சேர்ந்த தங்கவேல் தகராறில் ஈடுபட்டார்.
இதனை அருண் தட்டி கேட்க, ஆத்திரமடைந்த தங்கவேல் கட்டையால் அருண் தலையில் தாக்கியதுடன், மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் குத்தினார்.
இதனால் படுகாயமடைந்த அருணை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேலுவை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று மதியம் ஆனங்கூர் சாலை, மேட்டுக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்த தங்கவேலுவை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.
- இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தில் படுகாயம் அடைந்தவருக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை
கன்னியாகுமரி:
குளச்சல் மதனாவிளையை சேர்ந்தவர் வில்சன் (வயது 62). மண்டைக்காடு காரியாவிளையை சேர்ந்தவர் ஸ்டாலின் (51). நண்பர்களான இருவரும் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று மதியம் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திங்கள்நகர் - தோட்டியோடு ரோட்டில் கண்டன்விளை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். இரணியல் ஆமத்தன்பொத்தை வளைவில் சென்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் வில்சனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஸ்டாலினுக்கும் முகத்தில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். வில்சன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வில்சன் கொடுத்த புகாரின் பேரில் அஜாக்கிரதையாகவும் வேகமாகவும் பைக்கை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக ஸ்டாலின் மீது இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம்-கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே சாலையை கடந்தார்.
- அப்போது, கோவை பக்க மிருந்து வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியதில், இருவரும் பலத்த காயமடைந்தனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் வசிப்பவர் பரத், (வயது 22). எலக்ட்ரிசியன். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் தன் தாயார் ஜோதிமணி(56), என்பவருடன் சேலம்-கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே சாலையை கடந்தார். அப்போது, கோவை பக்க மிருந்து வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த தாய், மகன் இருவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் காரை ஓட்டி வந்த கோவையை சேர்ந்த பொன்ராஜ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.