என் மலர்
நீங்கள் தேடியது "நிகழ்ச்சி"
- இரும்புதலை ஊராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி.
- ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி ஊழியர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கினார்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், இரும்புதலை ஊராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீருடைகள் மற்றும் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் மங்கையர்கரசி, ஊராட்சி செயலாளர் ஜெகத்குரு மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஓஎச்டி ஆப்ரேட்டர்கள், மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
- சாலை விதிமுறைகள் குறித்து
அரியலூர்
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில், மாவட்ட துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன் அறிவுறுத்த–லின் படி,
உடையார்பாளையம் உட்பட்ட பகுதிகளில் அரசு அறிவித்துள்ள சாலை விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான புதிய உயர்த்தப்பட்ட அபராத தொகை மற்றும் சாலை விதிமுறைகள் குறித்து உடையார்பாளை–யம் காவல் உதவிஆய்வாளர் திருவேங்கடம் தலைமையி–லான போலீசார் மற்றும் பயிற்சி உதவி ஆய்வாளர் பெனடிக்
சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி, விழிப்பு–ணர்வு நிகழ்ச்சியை நடத்தி–னர்.
இதில் 50 க்கு மேற்பட்ட வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.
- மருத்துவம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி.
- முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மீனாட்சி மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மருத்துவமனையில் மருத்துவம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விங் கமாண்டர் ஜெயகுமார் துணை தலைவர், விமான படை வீரர்கள் சங்கம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர். பாலமுருகன், மேஜர். சரவணன், துணை இயக்குநர் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம், ஜி.பி. கேப்டன் கென்னடி அலுவலக பொறுப்பாளர் இ.சி.எச்.எஸ்.
தஞ்சாவூர் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் செய்தனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.
- வருகிற 3-ந் தேதி பெருவுடையார், பெரியநாயகிக்கு பேரபிஷேகம்.
- வருகிற 12-ந் தேதி வேலை நாளாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் செயல்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா பெரிய கோவில் வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
வருகிற 2-ந் தேதி மங்கள இசையுடன் விழா தொடங்கி கருத்தரங்கம், கவியரங்கம் நடைபெறுகிறது.
3-ந் தேதி பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் , ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு வருகிற 3ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழா வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதில் சதய விழா நாளான 3-ந் தேதி (வியாழக்கிழமை) தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அன்றைய தினத்துக்கு பதிலாக வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 27-ந் தேதி தொடங்கியது.நேற்று கந்தசஷ்டி விழாவினையொட்டி கோவிலில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, தண்டாயுதபாணி சுவாமிகளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது கோவில் முன்பு உள்ள வீதியில் சுப்பிரமணியர் சூரனை வதம் செய்தார்.
தொடர்ந்து மலைக்கோவிலில் இருந்து சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகள் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு வந்தடைந்தனர்.
அதனை தொடர்ந்து ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி கோவில் கொடி மரம் அருகே சுப்பிரமணியர், வள்ளி,தெய்வானை ஆகிய சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், பெரகம்பி, மாவலிங்கை, பொம்மனப்பாடி, சத்திரமனை, வேலூர், குரூர், நாட்டார்மங்கலம், சீதேவிமங்கலம், பாடாலூர், இரூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஹேமாவதி, தக்கார் வேல்முருகன், எழுத்தர் தண்டபாணி தேசிங்கன், கந்தசஷ்டி விழாக்குழுத் தலைவர்,செ யலாளர்,பொருளாளர், உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர். மேலும் இன்று (செவ்வாய்க்கிழமை) விடையாற்றி உற்சவத்துடன் கந்தசஷ்டி பெருவிழா நிறைவு பெற்றது.
- சி.ஐ.டி.யு. மாநில மாநாட்டையொட்டி நடந்தது
- மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் பங்கேற்பு
கன்னியாகுமரி:
சி.ஐ.டி.யூ. தமிழ் மாநில 15-வது மாநாடு கன்னியாகுமரியில்இன்றுகாலைதொடங்கியது. இந்த மாநாடு வருகிற 5-ந்தேதி வரை 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டை யொட்டி நேற்று மாலை 4 மணிக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட தியாகி களின் நினைவு சுடர்கள் சங்கமம் நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கு, கலை விழா நிகழ்ச்சி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடைபெற்றது.
இந்தநிகழ்ச்சிக்கு மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் ஜெலஸ்டின் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ஜடா ஹெலன் வரவேற்று பேசினார். குமரி மாவட்டத் தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப் பட்ட 100 தியாகிகளின் நினைவு சுடர்கள் சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சௌந்தர ராஜன் உள்பட முக்கிய மான தலைவர்களிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை யொட்டி கலை நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
வரவேற்புக்குழு கௌரவ ஆலோசகர் அமிர்தராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் நூர் முஹம்மது, மாநில செயற்குழு உறுப்பினர் க கனகராஜ், செல்ல சுவாமி, முன்னாள் எம்.பி. பெலார்மின், முன்னாள் எம். எல். ஏ. லிமாரோஸ், மற்றும் நிர்வாகிகள் அகமது உசேன், தாமஸ் பிராங்கோ, நாகராஜன், தங்க மோகன், சிங்காரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோவிலில் உள்ள முக்கிய பெரிய தீட்சிதர்கள் நடத்தினர்.
- குடந்தை, நாங்கூர் அண்ணன் கோவில், திருவிளத்தூர் முதலிய தீட்சிதர்கள் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோ பாலசாமி கோவிலில் ஆச்சார்ய அபிஷேக தீட்சை நடைபெற்றது.
சென்ட் அலங்கார குடும்பம், ஸ்ரீ ராஜா வள்ளல், செண்பகவள்ளல் குடும்பம், ராஜகோபால் வள்ளல் ஆகிய குடும்பத்தாரின் 6 பேருக்கு ஆச்சார்யா அபிஷேகம் நடைபெற்றது. கோவிலில் உள்ள முக்கிய பெரிய தீட்சிதர்கள் நடத்தினர்.
ஸ்ரீராமன்தீட்சிதர், பிரசன்னா தீட்சிதர், செல்லப்பா தீட்சிதர், பத்ரி தீட்சிதர், கல்யாணம் தீட்சிதர், ரவி தீட்சிதர், ஜெகன் தீட்சிதர், ரகு தீட்சிதர், ஸ்ரீ வித்யாசாகர் தீட்சிதர், முதலிய தீட்சிதர்களும் இதற்காக வெளியூரில் இருந்து ஆசீர்வாதம் வழங்க வந்திருந்த குடந்தை, நாங்கூர் அண்ணன் கோவில், திருவிளத்தூர் முதலிய தீட்சிதர்கள் கலந்து கொண்டனர்
அனைவருக்கும் கோயில் பிரசாதம் மாலை மரியாதைகள் செய்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் மற்றும் உள்துறை சிப்பந்திகள், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
முன்னதாக தம்பி தீட்சிதர் வரவேற்றார்.
- கிருஷ்ணகிரி மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
- சரவணகுமார், மகேஷ் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்து விலகி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் வேட்டியம்பட்டி சரவணன் தலைமையில், ஆட்டோ சங்க தலைவர் வடிவேல், நிர்வாகிகள் சரவணன், ஜெய்கிஷோர், சரண்ராஜ், சிவபாலன், பிரதாப், நிரேஷ், ராம், விஜய், மிதுன், சங்கர், கோபி, பாலாஜி, ஹரி, சத்தீஷ், தனுஷ், சரவணகுமார், மகேஷ் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்து விலகி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, மாவட்ட பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர் கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் நாகராசன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன், ராஜேந்திரன், நாகோஜனஅள்ளி பேரூர் செயலாளர் தம்பிதுரை, நிர்வாகிகள் செந்தில், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- செல்போன் அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் செல்போன் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து விழிப்பு–ணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- மாணவ- மாணவிகளுக்கு மூச்சு பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை போக்கும் பயிற்சிகள் அளித்தார்.
ராசிபுரம்:
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கூன வேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில் மாணவ- மாணவிகளுக்கு செல்போன் அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் செல்போன் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து விழிப்பு–ணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் ஜெயந்தி, மனநல ஆலோசகர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். செல்போனை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். தேவையில்லாத ஆப்களை பயன்படுத்துவது, செல்போ–னுக்கு அடிமை ஆவதை தவிர்க்க வேண்டும் என பேசினர். மனநல ஆலோசகர் ரமேஷ் மாணவ- மாணவிகளுக்கு மூச்சு பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை போக்கும் பயிற்சிகள் அளித்தார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் விஜி மற்றும் மாணவ- மாண–விகள் கலந்து கொண்டனர்.
- சேலம் மாவட்டம், வாழப்பாடியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பிரச்சார பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் புகழ் விழிப்புணர்வு பிரசார பேரணியை தொடங்கி வைத்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பள்ளியில் சேர்த்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பிரச்சார பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் திலகவதி வரவேற்றார்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் ரவிசங்கர், சத்தியக்குமாரி, ஷபிராபானு, வட்டார கல்வி அலுவலர் வித்யா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சாந்தாகுமாரி சரவணன், ராணி மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் புகழ் விழிப்புணர்வு பிரசார பேரணியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வி குறித்த வாசகங்களை சிறப்பு பயிற்றுநர் வெங்கடேசன் வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இதனையடுத்து, ஆசிரியர்கள் மீனா, ரவிசங்கர் குழுவினரின் பொம்மலாட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இவ்விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் வி.சி.பாண்டியன், கமல்ராஜா, கோபிநாத், குணாளன், கோ.முருகேசன், தில்லையம்பலம், ரமணி, சுந்தரராஜன் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் ராஜிவ்காந்தி, மனோகரி, சிறப்பு பயிற்றுநர்கள் உலகநாதன், காளியம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வாழப்பாடி அடுத்த சிங்கிபுரத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார பேரணியை, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இலியாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆசிரிய பயிற்றுநர்கள் அசோக்ராஜ், சாகிதாபானு, சிறப்பு பயிற்றுநர்கள் தேன்மொழி, ஆனந்தி ஆகியோர் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- நான் முதல்வன் நிகழ்ச்சி நடைபெற்றது
- மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
பெரம்பலூர்:
செட்டிகுளம், அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் "நான் முதல்வன்" நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திட்டத்தின்கீழ் 11 மற்றும்12 ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வேலைவாய்பு வழிகாட்டி நிகழ்ச்சி பள்ளியின் தலைமையாசிரியர் பொன்னுதுரை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடாலூர், பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயற்பியல் பாட விரிவுரையாளர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நான் முதல்வன் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீரங்கன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உயர்கல்வியின் அவசியத்தையும் , அதன்மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்பு பற்றியும் , கல்லூரிகளில் உள்ள அனைத்து பாடப்பிரி வுகளைப்பற்றியும், பொறியியல் கல்லூரி சேர்க்கை மற்றும் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை மற்றும் நுழைவத் தேர்வுகள் குறித்தும், நான் முதல்வன் வலைதளத்தின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்து, விழிப்புணர்வு தந்து ஊக்கப்படுத்தினார்.
- சிந்தனை முற்றம் நிகழ்ச்சி நடந்தது
- நூலக வாசகர் வட்டம் சார்பில்
கரூர்:
கரூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் தலைவர் சங்கர் தலைமையில் 45-வது சிந்தனை முற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகிழ்வித்து மகிழ் என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம் பேசினார். அப்போது, பள்ளி பருவத்தில் இருந்து புத்தகம் வாசிப்பு முக்கியம். அதன் மூலம் உலக விஷயங்களை கற்றுக்கொண்டு மற்றவர்கள் மத்தியில் தெளிவாக உண்மையாக பேச முடியும். அறிஞர்கள் புத்தகம் வாசிக்காத நாலே இல்லை என்று சொல்லலாம். தமிழ் சமுதாயத்தில் வழக்கத்தில் குறைந்து வரும் பழக்கவழக்கங்கள் புத்தக வடிவில் உள்ளன. அதையெல்லாம் இன்றைய தலைமுறையினர் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
பெண் குழந்தைகள் பிறப்பது வரம். அவர்களை தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும். மகள் பிறந்து விட்டால், மகாலட்சுமி பிறந்து விட்டதாக கூறிய முன்னோர்கள், மகன் பிறக்கும் போது மகாவிஷ்ணு பிறந்து விட்டதாக கூறவில்லை. பெண் குழந்தைகளின் பிறப்பு தெய்வீகமானது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட மைய நூலக அலுவலர் சரவணகுமார், மைய நூலகர் சிவக்குமார், வாசகர் வட்ட நெறியாளர் சிவக்குமார், திருக்குறள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ரமேஷ், பட்டதாரி ஆசிரியர் முரளி உள் பட பலர் பங்கேற்றனர்.