என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவன்"

    • கடந்த 2010ம் ஆண்டு, குடும்ப பிரச்சினையில் இருவரிடையே தகராறு ஏற்பட்டது.
    • வழக்கு திருப்பூர் ஜே.எம்.எண் 1 கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    மணப்பாறை, சுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(48).இவர் திருப்பூர் கோல்டன்நகரில் மனைவி சாந்தியுடன் வசித்து வந்தார்.கடந்த 2010ம் ஆண்டு, குடும்ப பிரச்சினையில் இருவரிடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி கத்தியால் சாந்தியை குத்திக் காயப்படுத்தினார்.இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.இவ்வழக்கு திருப்பூர் ஜே.எம்.எண் 1 கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஜாமினில் வெளி வந்த கிருஷ்ணமூர்த்தி, 2012ம் ஆண்டுக்குப் பின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.இந்நிலையில் அவருக்கு கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்து, போலீசார் அவரைத் தேடி வந்தனர்.

    இதையறிந்த கிருஷ்ணமூ ர்த்தி, திருப்பூர் ஜே.எம்.எண் 1 கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் அவர் திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்க ப்பட்டார்.

    • சுப்பிரமணியனின் தாயார் கடந்த 1 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார்.
    • ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன், பரமேஸ்வரியை தாக்கினார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளம் கீழத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி (38). சுப்பிரமணியனின் தாயார் கடந்த 1 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். அவரது 8 பவுன் தங்க செயினை பரமேஸ்வரி தனது அண்ணன் செந்தில் குமாரிடம் கொடுத்து வைத்துள்ளார். சுப்பிரமணியன் மது அருந்தி விட்டு வந்து, தங்க செயினை தருமாறு பரமேஸ்வரியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    சம்பவத்தன்றும் செயினை தருமாறு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன், பரமேஸ்வரியை தாக்கினார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக சுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.

    • கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
    • போலீசார் கணவன், மனைவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு டவுன் போலீசார் முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த ஒரு ஆண், ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் ஈரோடு மரப்பாலம் நடராஜா தியேட்டர் பின்புறம் உள்ள குடிசை மாற்று வாரியக்குடியிருப்பை சேர்ந்த ஆனந்த் (37), அவரது மனைவி கவுரி (35) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதற்காக ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கணவன், மனைவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான ஒன்றரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • வீட்டில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை அவர்களிடம் கொடுத்துள்ளார்.
    • கடந்த இரண்டு மாதமாக திரும்பி வரவில்லை.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பருவாய் கிராம் குழிகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி (65) விவசாயி, இந்த நிலையில் இவரது வீடு அருகே பக்கத்து வீட்டில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவா, லட்சுமி என்ற தம்பதிகள் கடந்த ஆறு மாத காலமாக குடியிருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் 16 ந்தேதி அன்று அவசரமாக கிருஷ்ணகிரி செல்ல வேண்டி இருப்பதாகவும், செலவுக்கு பணம் தேவைப்படுவதாகவும், அவர்களிடம் உள்ள ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டியை வைத்துக்கொண்டு, ரூ. 2 லட்சம் பணம் தருமாறு சின்னச்சாமியை அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் பேச்சை நம்பி அவர்கள் கொடுத்த தங்கக் கட்டியை வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு ரூ 1.40 லட்சம் பணம் மற்றும் வீட்டில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை அவர்களிடம் கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்டு, ஊருக்குச் சென்று விட்டு ஒரு வார காலத்தில் திரும்பி வருவதாக சென்ற அவர்கள், கடந்த இரண்டு மாதமாக திரும்பி வரவில்லை. இதையடுத்து, சின்னச்சாமி அவர்களது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் என்ன வந்ததாக கூறப்படுகிறது. இதை எடுத்து அவர்கள் கொடுத்த தங்கக் கட்டியை நகைக்கடைக்கு எடுத்துச் சென்று சோதனை செய்து பார்த்தபோது அது தங்க முலாம் பூசிய உலோகம் என்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன்னை ஏமாற்றியது குறித்து காமநாயக்கன் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தங்கக் கட்டி என மோசடி செய்த அந்த தம்பதிகளை வீசி தேடி வருகின்றனர்.

    • தற்போதைய காலக்கட்டத்தில் செல்போன் காதலர்களுக்கு அத்தியாவசியமான பொருளாகிவிட்டது.
    • அந்த இளம்பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    பெங்களூரு :

    'காதல்' என்ற வார்த்தையை வர்ணிக்க முடியாது என்பார்கள் கவிஞர்கள். அதுபோல் காதலை மையமாக வைத்து வந்த ஏராளமான திரைப்படங்கள் வெற்றி அடைந்துள்ளன. கவிஞர்கள் பெருமாலும் ஆணுக்கும், பெண்ணுக்கும் உண்டான காதலை மையப்படுத்தியே கவிதைகள், பாடல்கள் எழுதுவார்கள். அக்காலத்தில் காதல் ஒரு ஊரிலோ அல்லது கிராமத்திலோ தான் இருக்கும்.

    ஒருவரையொருவர் முகம் பார்த்து பேசி பழகி பின்னர் திருமணம் பந்தத்தில் இணைவார்கள். பல காதல்கள் பெற்றோர் எதிர்ப்பு, சாதி, மதம், அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரிந்ததும் உண்டு. அது இன்றளவும் நடந்து வருகிறது. ஆனால் தற்போது காதல் கடல் கடந்து கணினி, செல்போன் வாயிலாக காற்றில் பறந்து காதலர்களிடையே இணைப்பை ஏற்படுத்துகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் செல்போன் காதலர்களுக்கு அத்தியாவசியமான பொருளாகிவிட்டது.

    காதல் என்பது பைத்தியக்காரத்தனம், முட்டாள்தனம், வேலையில்லாதவர்கள் செய்யும் வேலை என்று கூறி பலர் பலவிதங்களில் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதையும் மீறி காதலர்கள் தங்களது காதலை வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுபோல் ஏராளமான காதல் ஜோடிகள் தங்கள் காதலில் மட்டுமல்லாது பல எதிர்ப்புகளை மீறி திருமணம் புரிந்து வாழ்விலும் வெற்றி அடைந்திருக்கிறார்கள். அந்த வகையில் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தனது கணவர் மீதான அதீத காதலை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வினோத செயலை செய்திருக்கிறார்.

    அதாவது அந்த இளம்பெண் தனது கணவரின் பெயரான 'சதீஷ்' என்ற பெயரை தன்னுடைய நெற்றியில் பச்சை குத்திக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டார்.

    அந்த புகப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து 2.68 லட்சத்திற்கும் மேற்பட்டோர் 'லைக்' செய்துள்ளனர். சிலர் 'இதுதான் உண்மையான காதல்' என்றும், சிலர் 'இது ஓவர் ஆக்டிங்' என்றும் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர். ஆனால் அந்த கருத்துகளுக்கு இளம்பெண் பதில் ஏதும் கூறவில்லை. தனது கணவர் மீதான அதீத அன்பையும், காதலையும் வெளிப்படுத்தவே தான் இதுபோன்று செய்ததாக அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார். தற்போது அந்த இளம்பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்
    • கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பா ளையம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி வெண்ணிலா (24). இவர்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இரண்டு குழந்தைகளும் உள்ளது.

    இந்த நிலையில் சந்தோஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து உள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் குடித்துவிட்டு வந்த சந்தோஷ் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்று அவர் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதற்கிடையே வெளியே சென்ற குழந்தைகள் வீட்டிற்கு வந்த போது வெண்ணிலா கழுத்தின் துணிகள் சுற்றிய நிலையில் பிணமாக இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் கதறி அழுதனர்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது குடிபோதையில் இருந்த சந்தோஷ் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும். தான்தான் மின்விசிறியில் இருந்து உடலை கீழே இறக்கி வைத்ததாகவும் கூறினார். போலீசார் வெண்ணிலாவின் உடலை சோதனை செய்து பார்த்தபோது தற்கொலை செய்ததற்கான எந்த அடையாளமும் இல்லை.

    எனவே சந்தோஷ் தான் கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகம் ஆடுகிறார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் 15 வேலம்பாளையம் பகுதியில் பெரும் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தன்னை தாக்கி முத்தமிட வற்புறுத்தியதால் கணவன் நாக்கை கடித்ததாக கூறி மனைவி புஷ்பாவதி போலீசில் புகார் அளித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமலை:

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் எல்லம்ம குட்டாதாண்டா கிராமத்தை சேர்ந்தவர் தாராசந்த் நாயக். இவரது மனைவி புஷ்பாவதி. இவர்கள் 2015-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் அவர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இவர்களது தகராறு நீடித்து வந்தது. இவர்களது சண்டை கிராமத்திலும் பிரபலமாக இருந்தது.

    வழக்கம்போல் நேற்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தனித்தனியாக அமைதியாக இருந்தனர்.

    சிறிது நேரம் கழித்து தாராசந்த் நாயக் அவரது மனைவியை சமாதானம் செய்ய முடிவு செய்தார்.

    குடும்பத் தகராறு குறித்து மனைவியிடம் அமைதியாக பேசினார். அப்போது மவுனமாக இருந்த மனைவி புஷ்பாவதி அருகில் சென்று உதட்டோடு முத்தம் கொடுக்க முயன்றார்.

    இதனை அவர் தடுத்தார். ஆனாலும் தாராசந்த் நாயக் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்றதால், தாராசந்த் நாயக்கின் நாக்கை புஷ்பாவதி கடித்தார்.

    இதில் வலி தாங்காமல் தாராசந்த் நாயக் அலறினார். ஆனாலும் புஷ்பாவதி விடாமல் நாக்கை கடித்தார். இதில் நாக்கு துண்டாகி தொங்கியது.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிச் சென்றனர். பலத்த காயமடைந்த தாராசந்த் நாயக், வாயில் ரத்தம் சொட்ட சொட்ட வலியால் கதறியபடி இருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக குத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக அனந்தபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் தன் விருப்பத்திற்கு மாறாக தன்னை தாக்கி முத்தமிட வற்புறுத்தியதால் கணவன் நாக்கை கடித்ததாக கூறி மனைவி புஷ்பாவதி போலீசில் புகார் அளித்தார்.

    மேலும் தாராசந்த் நாயக்கும் மனைவி மீது போலீசில் புகார் அளித்தார். அதில் தனது நாக்கை வேண்டு என்றே மனைவி கடித்தார்.

    என் மனைவி கொன்று விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
    • ஜெயவர்ஷினி அனைத்து இடங்களையும் தேடி பார்த்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள தென் சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 50) கூலி வேலை செய்து வருகிறார்.இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் ராஜேஷ் (22) பி.ஏ. பட்டதாரியான இவருக்கு திருக்கோவிலூரை சேர்ந்த ஜெய வர்ஷினி (20) என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் சின்னசேலம் அருகே உள்ள மூங்கில் பாடி கிராமத்தில் தனியாக வசித்து வருகின்றனர். பின்னர் கணவன் ராஜேஷ் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த மனைவி ஜெயவர்ஷினி வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

    இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜேஷ் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த மனைவி ஜெயவர்ஷினி அனைத்து இடங்களையும் தேடி பார்த்தார். எங்கேயும் கிடைக்காததால் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து சின்னசேலம் போலீசார் காணாமல் போன ராஜேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • மாணிக்கம்பாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் இருவரும் பரமத்தியில் உள்ள அவர்களது உறவினர் வீடு கிரகப் பிரவேசத்திற்காக வந்து கொண்டிருந்தனர்.
    • கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வளர்மதி சிகிச்சை பலனின்றி வளர்மதி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் (55). இவரது மனைவி வளர்மதி (48). இருவரும் தறிப்பட்டறையில் கூலி வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாணிக்கம்பாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் இருவரும் பரமத்தியில் உள்ள அவர்களது உறவினர் வீடு கிரகப் பிரவேசத்திற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது பரமத்தி அருகே நல்லூர் மின்வாரிய அலுவலகம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார்(34) என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்து லாரி குழந்தைவேல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் குழந்தைவேல் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தைவேலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வளர்மதி திருச்செங்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே குழந்தைவேலுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குழந்தைவேலின் மகன் கவுதம் (27) நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் லாரியை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய ரவிக்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வளர்மதி சிகிச்சை பலனின்றி வளர்மதி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் சிகிச்சையில் இருந்த மனைவியும் இறந்த சம்பவம் உறவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சோமசுந்தரம் (35). இவரது மனைவி மகேஸ்வரி (29). இவர்களுக்கு தேவதர்ஷன் (8), என்ற மகனும், நிகிதா (4) என்ற மகளும் உள்ளனர்.
    • சோமசுந்தரம், தனது மனைவி மகேஸ்வரியை நீச்சல் கற்று கொடுப்பதாக கூறி அருகில் உள்ள ஒரு கிணற்றுக்கு அழைத்து சென்றார்.

    திருச்செங்கோடு:

    ஈரோடு மாவட்டம் கருக்கம் பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (35). இவரது மனைவி மகேஸ்வரி (29). இவர்களுக்கு தேவதர்ஷன் (8), என்ற மகனும், நிகிதா (4) என்ற மகளும் உள்ளனர்.

    தொழிலாளர்கள்

    இவர்கள் தற்போது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பன்னீர் குத்திப் பாளையம் சங்கங்காடு பகுதியில் வசித்து வந்தனர். சோமசுந்தரம் அந்த பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். மகேஸ்வரி கோன் அட்டை மில்லில் ேவலைப்பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை சோமசுந்தரம், தனது மனைவி மகேஸ்வரியை நீச்சல் கற்று கொடுப்பதாக கூறி அருகில் உள்ள ஒரு கிணற்றுக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கு அவர்தனது மனைவிக்கு நீச்சல் கற்று கொடுத்து கொண்டு இருந்தார்.

    தண்ணீரில் மூழ்கினர்

    அப்போது மகேஸ்வரி மற்றும் சோமசுந்தரம் ஆகியோர் கிணற்றில் அடுத்தடுத்து மூழ்கி பலியானார்கள். இதுப்பற்றி தெரியவந்ததும் திருச்செங்கோடு ரூரல் போலீசார் மற்றும் திருச்ெசங்கோடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி பலியான சோமசுந்தரம் மற்றும்அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோரின் உடல்களை மீட்டனர். பின்னர் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    சோமசுந்தரத்துக்கு நீச்சல் தெரிந்த நிலையில் அவரும், அவரது மனைவியும் எப்படி இறந்தார்கள் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மனைவி தனது பிறந்தநாளை துபாயில் கொண்டாட வேண்டும் என கோரினார்.
    • ஆனால் மனைவி கோரிக்கையை கணவர் ஏற்கவில்லை.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வனாடி பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகா. இவரது கணவர் நிகில் கண்ணா. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது.

    இந்நிலையில், நிகில் கண்ணாவை ரேணுகா தாக்கி கொன்றதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் போலீசார் கூறியது வருமாறு:

    தனது பிறந்தநாளுக்கு துபாய் அழைத்துச் செல்ல வேண்டும், விலை உயர்ந்த பரிசுப் பொருள்களை வாங்கித்தர வேண்டும் என ரேணுகா கணவரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்காத நிகில் கண்ணா, டெல்லியில் உறவினர் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடலாம் என்றார். இதனால் அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ரேணுகா, கணவர் மூக்கின் மேல் ஓங்கி ஒரு குத்து விட்டார். இதில் அவரது சில பற்கள் உடைந்தன. நிலைதடுமாறி கீழே விழுந்த நிகில் கண்ணா சுய நினைவை இழந்து உயிரிழந்தார் என தெரிவித்தனர்.

    இதையடுத்து, டெல்லி போலீசார் ரேணுகா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனது பிறந்தநாளை துபாயில் கொண்டாட மறுத்த கணவரை கையால் அடித்துக்கொன்ற மனைவியின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மனைவி உடலுறவுக்கு மறுப்பதும் வன்கொடுமையே என்பதால் கணவருக்கு விவாகரத்து வழங்கியது ஐகோர்ட்.
    • பலரது கவனத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள மத்திய பிரதேச ஐகோர்ட்டின் இந்தத் தீர்ப்பு பேசுபொருளாகி உள்ளது.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் ஒரு தம்பதிக்கு கடந்த 2006-ல் திருமணம் நடைபெற்றது. கணவர் வெளிநாடு செல்லும் வரை மனைவி உடலுறவுக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தன.

    எனவே கணவர் கீழமை நீதிமன்றத்துக்கு போய் தனக்கு விவாகரத்து வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடத்திய கீழமை நீதிமன்றம் கணவருக்கு விவாகரத்து தர மறுத்தது. இதை எதிர்த்து மத்திய பிரதேச ஐகோர்ட்டில் கணவர் வழக்கு தொடர்ந்தார்.

    இந்நிலையில், மனைவி உடலுறவுக்கு மறுப்பதும் வன்கொடுமையே என்பதால் கணவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது மத்திய பிரதேச ஐகோர்ட்.

    இதுதொடர்பாக ஐகோர்ட் நீதிபதிகள் கூறுகையில், மகிழ்வான மற்றும் நிறைவான குடும்ப வாழ்க்கைக்கு அவசியமான பாலுறவை வேண்டுமென்றே தவிர்ப்பது குடும்ப அமைதியை குலைக்கும். கணவன் - மனைவி இருவரில் ஒருவர், வேண்டுமென்றே பாலுறவைத் தவிர்ப்பது மனரீதியிலான கொடுமைப்படுத்துவதில் சேரும் என கணவர் தரப்பில் கோரிய விவாகரத்தினை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

    பலரது கவனத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள மத்திய பிரதேச ஐகோர்ட்டின் இந்தத் தீர்ப்பு பேசுபொருளாகி உள்ளது.

    ×