என் மலர்
நீங்கள் தேடியது "கல்லூரி"
- சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் 24-ம் ஆண்டு விழா நடந்தது.
- இந்த விழாவில் 2 ஆயிரத்தும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் 24-ம் ஆண்டிற்கான முதலா மாண்டு மாணவர்கள் தொடக்க விழா மற்றும் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் தொடக்க விழா கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஆர். கல்விக்குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் தொடக்கவுரை ஆற்றினார். டீன் மாரிச்சாமி வர வேற்றார். பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் முதல்வர் பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதலாமாண்டு துறைத்தலைவர் ஸ்ரீராம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக சென்னை உளவியலாளர் ரகுநாத் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
இன்றைய மாணவர்கள் சமூக வலைதளங்களுக்கும், மொபைல் போன்களுக்கும் அடிமையாகி நேரத்தையும், ஆரோக்கியத்தையும் வீணாக்குகின்றனர். இதனால் மாணவர்களின் கவனம் சிதறி எளிதில் உணர்ச்சிவசப்பட்டு படிப்பில் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் மனமுடைந்து தவறான முடிவை எடுக்கின்றனர்.
பெற்றோர்கள் மாண வர்களை அரவணைத்து அறிவுரை வழங்கி அவர்களுக்கு அன்பான முறையில் அறிவுரையை கூற வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினரின் உணவு பழக்க வழக்கங்கள் முறையாக இருக்க வேண்டும்.
மேலும் பெண் குழந்தைகள் இந்த சமூகத்தில் தன்னம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும், வாழ சமுதாயத்தில் உயர் இடம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலாமாண்டு மாண வர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், இரு கல்லூ ரிகளின் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்த னர். பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் சயின்ஸ் அண்டு ஹிமானிட்டிஸ் துறைத்தலைவர் பேரா சிரியர் சக்திஸ்ரீ நன்றி கூறினார்.
- சரசுவதி நாராயணன் கல்லூரியில் பாதுகாப்பான பஸ் பயண கருத்தரங்கம் நடந்தது.
- மதுரையை விபத்து இல்லாத நகரமாக உருவாக்க மாணவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் பேசினார்.
மதுரை
மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் இணைந்து மாணவர்கள் "பாதுகாப்பான பேருந்து பயணம்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமையில் நடந்தது. மதுரை அரசு போக்குவரத்துக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன் வரவேற்று பேசினார். துணை மேலாளர் அறிவானந்தம், போலீஸ் உதவி கமிஷனர் செல்வின் ஆகியோர் பேசினர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை மாவட்ட அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் ஆறுமுகம் பேசுகையில் இளைஞர்கள், மாணவர்கள் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இரு சக்கர வாகனங்களை வாங்கி அதன் தொழில்நுட்பம்பற்றி தெரியாமல் இருப்பதாலும், சாலை போக்குவரத்து விதிகளை மீறுவதாலும் அதிகளவு விபத்துகள் ஏற்படுகிறது. இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசங்களில் ஈடுபடக்கூடாது.
பஸ்சில் இடம் இருந்தாலும் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை விரும்புகிறார்கள். அது ஆபத்தான பயணமாகும். கடந்த அக்டோபர் மாதம் முடிய இவ்வாண்டில் 600-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. மதுரையை விபத்து இல்லாத நகரமாக உருவாக்க மாணவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் இருளப்பன், ராமகிருஷ்ணன், விஜயகுமார் நன்றி கூறினர்.
- 2013, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
- இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.
சென்னை :
பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் அறிவிப்புக்குரிய தகுதியை பல்வேறு வகையில் பெறவில்லை எனக்கூறி, 152 பேருக்கும் அறக்கட்டளையை நிர்வகித்த ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் நோட்டீஸ் பிறப்பித்தார்.
மேலும், உதவி பேராசிரியர்கள் தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இந்த நியமனங்கள் தொடர்பாக சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் ஆர்.பிரேமலதா, எஸ்.சாந்தி உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் வக்கீல் ரவிச்சந்தர், சென்னை பல்கலைக்கழகம் சார்பில் வக்கீல் எம்.பழனிமுத்து, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் சந்திரசேகர், எதிர்மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் திலகவதி, வக்கீல்கள் எம்.ரவி, ஜி.சங்கரன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.
இதையடுத்து, 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதியை ஆராய வேண்டும். இவர்களின் கல்விச் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்று அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.
இதன்படி, கல்லூரிக் கல்வி இயக்குனர், 254 உதவிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ஆசிரியர் பணி அனுபவத்துக்காக வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்பட்டு இருந்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், ''தேர்வு நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான சென்னை, காஞ்சீபுரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த 254 உதவி பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது. உதவிப் பேராசிரியர் நியமனங்களுக்கு அகில இந்திய அளவில் விண்ணப்பங்களை வரவேற்கவில்லை. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, இந்த பதவிக்கான தேர்வும், அதை தொடர்ந்த நடந்த நியமனமும் செல்லாது" என்று கூறியுள்ளார்.
- முதற்கட்டமாக, கலெக்டர் அலுவலத்தில் இதற்காக உதவி மையம் செயல்பட ெதாடங்கி உள்ளது.
- மாணவர்கள் சேர்க்கை உயர்கல்வி துறையினரால் நவம்பர் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
கடந்த 2021-22ம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்து, இதுவரை கல்லூரியில் சேராத 777 மாணவர்கள் உயர்கல்வி தொடராதது கண்டறியப்பட்டுள்ளது.கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்ததாலும், குடும்ப நிதி நிலை காரணமாகவும், விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கவில்லை போன்ற பல்வேறு காரணங்களால் கல்லூரிகளில் சேரவில்லை.மாணவர்கள் சேர்க்கை உயர்கல்வி துறையினரால் நவம்பர் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாய்ப்பை பயன்படுத்தி உயர்கல்வி தொடராத மாணவர்களை கல்லூரியில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, கலெக்டர் அலுவலத்தில் இதற்காக உதவி மையம் செயல்பட ெதாடங்கி உள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறையினர் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் உயர்கல்வி தொடராதோர் பட்டியல் திரட்டப்பட்டதில் 47 பேர் இருந்தனர்.இவர்களில் 5 பேர் தவிர அனைவரும் தொழிற்கல்வி, மருத்துவம், பொறியியல் கல்லூரி, திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம், மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்துவிட்டனர். இவர்களில் 2பேர் தவிர மையத்தை அணுகி கல்லூரியில் சேர்ந்துவிட்டனர் என்றனர்.
- புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து மாயமான சுமங்கலாவை தேடி வருகிறார்.
- வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றவர் மாலையில் வீடு திரும்பாததால் பதற்றம்.
கன்னியாகுமரி:
மேல சங்கரன்குழி அருகே உள்ள பெருஞ் செல்வவிளையை சேர்ந்த வர் ஜெகன் தொழி லாளி.
இவரது மகள் சுமங்கலா (வயது22). இவர் திருவிதாங் கோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. முதுகலை பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை சுமங்கலா வீட்டில் இருந்து வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றார்.
ஆனால் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை.இதனால் பதட்டம் அடைந்த பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடு களில் தேடினர். ஆனால் சுமங்கலா பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அவர் எங்கு சென்றார் என்பது தெரிய வில்லை. இதுகுறித்து அவரது தந்தை ஜெகன் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து மாயமான சுமங்கலாவை தேடி வருகிறார்.
- பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் அறிமுக விழா நடந்தது.
- பி.எஸ்.ஆர். கல்விக்குழும தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கு, மாணவர்கள் அறிமுக விழா கல்லூரி கலையரங்கில் நடந்தது. பி.எஸ்.ஆர். கல்விக்குழும தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார்.
முதல்வர் செந்தில்குமார் மற்றும் டீன் மாரிச்சாமி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் டாக்டர்.தாமு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பொறியியல் கல்லூரியின் முக்கியத்துவம், அதன் பயன்பாடுகள் குறித்து பேசினார். கல்வி கற்பதில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு மற்றும் அவர்களின் நற்செயல்களை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
தற்போதைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், வாழ்க்கையில் சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும் அதனால் நேரம், காலம் எவ்வாறு வீணடிக்கப்பபடுகிறது என்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறு சிறு கதைகள் மற்றும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கமளித்தார்.
மாணவர்கள் தங்கள் உடலையும் ஆரோக்கியமாக பேணிக்காப்பதன் மூலமாக, மனதையும், சிந்தனையையும் நல்வழியில் செலுத்தி, சமுதாயத்தில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் எனக்கூறினார். உலகை வல்லரசாக்கும் திறமை, இன்றைய இளைஞர்களாக மாணவர்கள் கையில் தான் உள்ளது என கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், முதலாமாண்டு துறைத்தலைவர் பேராசிரியர் ஸ்ரீராம் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர். இயற்பியல் துறை பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
- கல்லூரியில் பயிலும் மாணவிகள் தங்குவதற்கான அரசு விடுதி சேலம் சங்கர் நகர் தமிழ் சங்கம் பகுதியில் உள்ளது. இந்த விடுதியை சேர்ந்த மாணவர்கள் தினமும் கல்லூரிக்கு செல்வதற்காக அண்ணா பூங்கா பஸ் ஸ்டாப்பிற்கு வருகின்றனர்.
- அரசு பஸ்கள் முறையாக தங்களை ஏற்றிச் செல்லாத காரணத்தால் நாள்தோறும் கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக தெரிவித்து இருந்தனர்.
சேலம்:
சேலம் கோரிமேடு பகுதியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள் தங்குவதற்கான அரசு விடுதி சேலம் சங்கர் நகர் தமிழ் சங்கம் பகுதியில் உள்ளது. இந்த விடுதியை சேர்ந்த மாணவர்கள் தினமும் கல்லூரிக்கு செல்வதற்காக அண்ணா பூங்கா பஸ் ஸ்டாப்பிற்கு வருகின்றனர்.
இந்நிலையில், சமீப காலமாக அரசு பஸ் டிரைவர்கள், அண்ணா பூங்கா பஸ் ஸ்டாப்பில், பஸ்சை நிறுத்துவதில்லை என்றும், பஸ்சில் ஏறினாலும் ஓட்டுநர்கள் கீழே இறங்க வற்புறுத்துவதாகவும் மாணவிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும் இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாணவிகள் இன்று புகார் அளித்தனர். அதில் அரசு பஸ்கள் முறையாக தங்களை ஏற்றிச் செல்லாத காரணத்தால் நாள்தோறும் கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக தெரிவித்து இருந்தனர்.
மாணவிகளின் புகார் தொடர்பாக சேலம் கோட்ட போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடியிடம் கேட்டபோது, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
- வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
- கடத்தல் பிரிவில் (இந்திய தண்டனை சட்டம் 366 ஏ) வழக்குப் பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
மணவாளக்குறிச்சி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி நாகர்கோவில் அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாமாண்டு படித்து வருகிறார்.
கடந்த 7-ந்தேதி இவர் வழக்கம்போல் கல்லூ ரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. வீட்டினர் உறவினர் மற்றும் நண்பர் கள் வீடுகளில் தேடியும் மாணவி குறித்து தகவல் கிடைக்கவில்லை. தொடர்ந்து மாணவி குடும் பத்தினர் துப்பு துலக்கியதில், அவர் தூத்துக்குடி மேற்கு கதிர்வேல் நகரை சேர்ந்த உறவினர் அருண் (24) என்பவர் கடத்தி சென்றதாக தெரிய வந்தது.
உடனே மாணவி குடும்பத்தினர் தூத்துக்குடி சென்று அருண் வீட்டில் கேட்டபோது, அவர்கள் மாணவி அங்கு இல்லை என கூறி மாணவியை மறைத்து வைத்து திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவியின் தந்தை குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் தூத்துக்குடியை சேர்ந்த அருண், அவரது தாய், தந்தை மற்றும் சகோதரர் ஆகிய 4 பேர் மீது கடத்தல் பிரிவில் (இந்திய தண்டனை சட்டம் 366 ஏ) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லைசன்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராத தொகை வசூலிப்பது மற்றும் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.
- ரூ. 6 லட்சத்து 44 ஆயிரத்து 300 வசூலிக்கப்பட்டு உள்ளது.
சேலம்:
சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனர் மாடசாமி, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விபத்தில்லா மாநகரமாக சேலத்தை உருவாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். குறிப் பாக கடந்த 5 ஆண்டுகளில் சேலம் மாநகரத்தில், அதிகளவில் விபத்துக்கள் நடந்த 75 இடங்களை தேர்ந்தெடுத்து உள்ளோம். அந்த இடங்களில் இன்னும் 2 நாட்களில் கூடுதல் போலீ சார் நியமிக்கப்பட்டு, வாகன தணிக்கை செய்யப்பட உள்ளது. லைசன்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராத தொகை வசூலிப்பது மற்றும் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆண்டு சேலம் மாநகரத்தில் நடந்த விபத்துகளில் 123 பேர் மரணம் அடைந்தனர். நடப்பு ஆண்டில், நவம்பர் வரை 183 பேர் விபத்தில் இறந்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு இதுவரை போக்குவரத்து போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ. 6 லட்சத்து 44 ஆயிரத்து 300 வசூலிக்கப்பட்டு உள்ளது. விபத்துக்களை தடுக்க போலீசாரின் அறிவுரைகளை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேட்டியின்போது தெரிவித்தார்.
- புதிய தொழில்நுட்ப பயன்பாடு பற்றி ஒரு நாள் பயிற்சி பட்டறை.
- இணைச்செயலாளர் சங்கர் கணேஷ் முன்னிலை வகித்தார்.
நாகப்பட்டினம்:
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் மத்திய அரசின் கல்வி அமைச்சகம், அமிர்த விஷ்வா வித்யாபீடம் இணைந்து விர்ச்சுவல் லேப் என்ற புதிய தொழில்நுட்ப பயன்பாட்டினை பற்றி ஒரு நாள் பயிற்சி பட்டறை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்வை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள் துவக்கி வைத்தார். அமிர்த விஷ்வா வித்யா பீடத்தை சார்ந்த அதன் வெர்ச்சுவல் லேப் ஒருங்கிணைப்பாளரான சனீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். கல்லூரி செயலர் செந்தி ல்குமார், இணைச் செயலர் சங்கர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஆலோசகர் பரமேஸ்வரன், நிர்வாக தலைவர் முனைவர் மணி கண்ட குமரன், கல்விசார் இயக்குனர்முனைவர் மோகன், முதல்வர்முனைவர் ராமபா லன், தேர்வு நெறியாளர் முனைவர் சின்னதுரை மற்றும் பேராசிரியர் முனைவர் கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இயந்திரவியல் துறை பேராசிரியர் முனைவர் கிருஷ்ணமோகன் வரவே ற்றார். பேராசிரியர் முனைவர் ராமானுஜம் நன்றி கூறினார்விழா ஏற்பாடு களை இயந்தி ரவியல் துறை ஒருங்கிணை ப்பாளர்கள் செய்தனர்.
- 24 மணி நேரமும் சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க டெக்னீசியன்கள் நியமிக்க வேண்டும்.
- மன்னார்குடியில் செவிலியர் பயிற்சி கல்லூரி தொடங்க வேண்டும்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேற்று மாலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் நேரில் ஆய்வு செய்தார்.
அவரை மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி.ராஜா, நகர்மன்ற தலைவர் சோழராஜன், திமுக நகர செயலாளர் வீரா.கணேசன், மருத்துவமனை கண்காணிப்பாளர் என்.
விஜயகுமார் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் மருத்துவமனையில் உள்ள ஐடிபிசிஆர் சோதனை மையத்தையும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும், அண்மையில் திறக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையத்தையும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவரிடம் மன்னார்குடி அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் ஒருங்கிணைப்பான நேசக்கரம் சார்பில் முன்னாள் நகர் மன்ற தலைவர் வி.எஸ்.ராஜேந்திரன், மூத்த குடிமக்கள் பேரவை தலைவர் டாக்டர் வி.பால கிருஷ்ணன், மிட்டம் ரோட்டரி சங்கத் தலைவர் ரெங்கையன், நுகர்வோர் அமைப்பு நிர்வாகி வே ல்முருகன், லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் சந்தோஷ், நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர்கள் பாரதிதாசன், சிரில் ஆகியோர் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இருதய நோய் டாக்டர் நியமிக்க வேண்டும், 24 மணி நேரமும் சிடி ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க டெக்னீசியன்கள் நியமிக்க வேண்டும். 2019 ம் ஆண்டில் இடிந்துபோன கட்டிடத்துக்கு மாற்றாக சட்டமன்றத்தில் அறிவித்தபடி புதிய கட்டிடம் கட்ட வேண்டும், எம்.ஆர். ஸ்கேன் வசதி செய்து தர வேண்டும், மன்னார்குடியில் செவிலியர் பயிற்சி கல்லூரி தொடங்க வே ண்டும்.
லேப்ராஸ்கோபி முறையிலான அறுவை சிகிச்சை செய்ய வசதி ஏற்படுத்த வேண்டும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உருவாக்க வேண்டும், பவர் லாண்டரி வசதி ஏற்படுத்த வேண்டும்,என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டன.
- தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
- இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
மூன்றாண்டுபயிலும்அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ-மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship Portal) புதுப்பித்தலுக்கு 10.11.2022 முதல் செயல்பட துவங்கும். புதுப்பித்தலுக்கான (Renewal) விண்ணப்பங்கள் 06.12.2022-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதே போல் புதிய இனங்களுக்கு (Fresh) இணையதளம் 15.12.2022 முதல் செயல்படத் துவங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.10.2023-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை (மின்னஞ்சல் முகவரி dbcwotpr@gmail.com மற்றும் தொலைபேசி 616001.0421-2999130) அணுகலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship schemes என்ற அரசு இணையதளத்திலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.