என் மலர்
நீங்கள் தேடியது "கொடியேற்றம்"
- ஐப்பசி திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
- பல்லக்கு வாகனத்தில் அலங்கரிக்கபட்டு ஆலயத் திற்கு திரும்பிய சாமி சிலைகளுக்கு வழியெங்கும் பக்தர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட் டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றானது திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில்.
இத்திருக்கோவிலில் ஆண்டுக்கு இரண்டு முறை பங்குனி, ஐப்பசி மாதங்களில் பத்து நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலை 6-ந்தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஐப்பசி திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதைதொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஐப்பசி ஆராட்டு வைபவம் நேற்று நடைபெற்றது. முன்ன தாக மேற்கு வாசல் வழியாக திருவிதாங்கூர் மன்னரின் பிரநிதி உடைவாள் ஏந்தி வர கருட வாகனத்தில் எழுந்தருளிய ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீகிருஷ்ண சுவாமி விக்ரகங்களுக்கு திருவட்டாறு காவல்துறை சார்பில் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தபட்டது.
அதை தொடர்ந்து நள்ளிரவில் தளியல் பகுதியில் அமைந்துள்ள பரளியாற்றில் ஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீகிருஷ் ணர் சாமி உற்சவமூர்த்தி களுக்கு ஆலய தந்திரி வஞ்சியூர் அத்தியறமடம் கோகுல் நாயாயணரூ தலைமையில் ஆராட்டு வைபவம் நடைபெற்றது. அதைதொடர்த்து பல்லக்கு வாகனத்தில் அலங்கரிக்கபட்டு ஆலயத் திற்கு திரும்பிய சாமி சிலைகளுக்கு வழியெங்கும் பக்தர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர். இதில் ஏராளமான பக்தர் கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- தொண்டி அருகே கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 2-ம் நிகழ்ச்சியாக சந்தாதாரர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் 99-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் நடந்தது. மஸ்தான் சாகிபு தர்காவில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் ஊர்வலமாக கொடி கொண்டு செல்லப்பட்டு ஏற்றப்பட்டது.
இதில் திரளாேனார் கலந்து கொண்டனர். 2-ம் நிகழ்ச்சியாக சந்தாதாரர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. குர்ஆன் ஓதி மகான் பெயரால் தப்ரூக் என்னும் உணவு வழங்கப்படும். மகான் பெயரால் மவுலிது ஓதி கந்தூரி விழா நிறைவுபெறும்.
- மதுரையில் கூட்டுறவு வாரவிழா ெகாடியேற்றத்துடன் தொடங்கியது.
- மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு விற்பனை மேளா தொடங்கப்பட்டது.
மதுரை
மதுரை மாவட்டத்தில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நேற்று முதல் வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
முதல் நிகழ்ச்சியாக கூட்டுறவு கொடி ஏற்று விழா மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், திருநகர் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் மற்றும் சின்ன உடப்பு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் ஆகிய இடங்களில் நடந்தது.
விழாவில் உறுதிமொழியை கூட்டுறவுத்துறையயைச் கூட்டுறவாளர்கள் எடுத்துக்கொண்டனர். இதில் இணைப்பதிவாளர்கள், துணைப்பதிவாளர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு விற்பனை மேளா தொடங்கப்பட்டது. இதை கலெக்டர் அனீஷ்சேகர் பார்வையிட்டார்.
- நாகர்கோவில் மாநகர பகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகளின் சொந்த இடங்களில் கொடியேற்ற வேண்டும்
- மாநகர மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெட்டூர்ணிமடத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் இன்று காலை நடந்தது.
கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிய பேச்சை தமிழாக்கம் செய்யப்பட்ட நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் டைசன், மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் காங்கிரஸ் கொடி ஏற்றுவது, நாகர்கோவில் மாநகர பகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகளின் சொந்த இடங்களில் கொடியேற்றுவது,
ஞாயிற்றுக்கிழமை தோறும் தெருமுனை கூட்டங்கள் நடத்துவது, மாதத்திற்கு ஒருமுறை வார்டு நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது, தியாகிகளை கவுரவிப்பது தொடர்பாக தியாகிகள் பிறந்தநாள், நினைவு நாளில் சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சிவபிரபு, கவுன்சிலர் பால அகியா, நிர்வாகிகள் சுந்தர், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கொடியேற்று நிகழ்ச்சிக்கு அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தலைமை தாங்கினார்.
- நிறைவு நாளன்று புனித சவேரியார் சொரூப கப்பல் சப்பர பவனி நடக்கிறது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி மடத்து விளை புனித சவேரியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் தொடக்கமான கொடியேற்று நிகழ்ச்சிக்கு அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தலைமை தாங்கினார்.
ஆறுமுகநேரி பங்கு தந்தை அலாசியஸ் அடிகளார், சிங்கித்துறை பங்குத்தந்தை ஷிபாகரன், பெரியதாழை துணை பங்கு தந்தை கிங்ஸ்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மடத்துவிளை ஊர் நல கமிட்டி தலைவர் செல்வம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவில் தினசரி திருப்பலி, மறையுறை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 2- வது நாளான புனித வின்சென்ட் தே பவுல் மற்றும் மரியாவின் சேனையாளர்கள் சார்பில் இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து பத்து நாள் திருவிழாவில் இளையோர் தினம், திருமணமானவர்கள் தினம், முதியோர் தினம், பக்த சபையார் அன்பியங்கள் தினம், தொழிலாளர்கள் தினம், ஒப்புரவு தினம், ஆலய அர்ச்சிப்பு தினம், பங்கு மக்கள் தினம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நிறைவு நாளன்று புனித சவேரியார் சொரூப கப்பல் சப்பர பவனி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்குத்தந்தை அலாசியஸ் அடிகளார் மற்றும் மடத்துவிளை ஊர்நல கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
- திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தாமிர கொப்பரை.
...............
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும்.
கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று காலை நடந்தது. உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு பால், சந்தனம், இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் சிம்மாசனத்தில் கோவில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை முன்னிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் சந்தனம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு தர்ப்பை புல், மாவிலை, பூ மாலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மதியம் 12.20 மணிக்கு கார்த்திகை தீப திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது.
விழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி- தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 5-ந் தேதி இரவு 8 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு வைர கிரீடம், நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 6-ந் தேதி மதியம் 11 மணிக்கு கார்த்திகை தேரோட்டம் நடைபெறும்.அன்று மாலை 6 மணிக்கு மலைமேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அதன்பிறகு இரவு 8 மணி அளவில் 16 கால் மண்டபம் அருகில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.
திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக மலைமீது மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக 3½ அடி உயரம், 2½ அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 300 லிட்டர் நெய், 100 மீட்டர் காடாதுணியால் ஆன திரியில், 5 கிலோ கற்பூரத்தில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த கொப்பரை சுத்தம் செய்யப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் வைக்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- 10-ம் நாள் திருவிழாவான 18-ந்தேதி காலை 4.30 மணிக்கு தங்கத்தேரில் திருப்பலி நடக்கிறது.
- காலை 9 மணிக்கு மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்க தேர்ப்பவனி நடக்கிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ திருத்த லங்களில் கன்னியா குமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் முதன்மை யானது ஆகும்.
இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா வெகுவிமரிசையாக நடை பெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டுக் கான திருவிழா இன்று (9-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
1-ம் திருவிழாவான இன்று காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடை பெற்றது.அதைத்தொடர்ந்து காலை 8மணிக்குநேர்ச்சை கொடிகள் பவனிதொடங்கி யது. மாலை 4 மணி வரை இந்த நேர்ச்சை கொடிகள் பவனிநடக்கிறது. மாலை 6.30 மணிக்குதிருக்கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. இதனைத் தொடர்ந்து நடைபெறும் திருப்பலிக்கு குழித்துறை மறை மாவட்ட செயலாளர் அருட்பணி ரசல் ராஜ் தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார்.
2-ம் நாள் திருவிழாவான நாளை (10-ந்தேதி) அதி காலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப் பலி நடக்கிறது. தொடர்ந்து 10-30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலியும் மாலை 6-30 மணிக்கு ஜெபமாலை மற்றும் திருப்பலியும் நடக் கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆயர் இல்ல அதிபர் அருட்பணி பஸ்காலிஸ் தலைமை தாங்குகிறார். கோட்டார் வட்டார முதல்வர் அருட்பணி ஆனந்த் மறை உரை நிகழ்த்துகிறார். இரவு 9 மணிக்கு பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 10-ம் நாள் திருவிழாவான 18-ந்தேதி காலை 4.30 மணிக்கு தங்கத்தேரில் திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து காலை 6 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி அருட்பணி சுவக்கின் தலைமையில் நடக்கிறது. அருட்பணியாளர் மில்லர் மறைவுரை ஆற்றுகிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு ஆங்கில திருப்ப லியை அருட்பணி ஆன்சல் ஆன்றனி நிகழ்த்துகிறார்.தொடர்ந்து கன்னியாகுமரி புனித ஜோசப் கலசான்ஸ் பள்ளி முதல்வர் அருட்பணி ஜீன்ஸ் மறைவுரை யாற்று கிறார்.
தொடர்ந்து காலை 9 மணிக்கு மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்க தேர்ப்பவனி நடக்கிறது.இந்ததேர்பவனியில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தைசேர்ந்த ஏராளமானஇறைமக்கள் கலந்துகொள்கின்றனர். 10.30 மணிக்கு மலையாள திருப்பலியை கலசான்ஸ் மழலையர் பள்ளி பொறுப் பாளர் அருட்பணி ஜில்லோ வர்கீஸ் நடத்துகிறார். புனித ஜோசப் கலசான் குழும அதிபர் ஆல்பர்ட் கிளீஸ்டஸ் மறை உரையாற்றுகிறார். தொடர்ந்து பகல் 12 மணிக்கு வடசேரி பங்கு தந்தை அருட்பணி புருணோ தலைமையில் திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம் மற்றும் நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
திருவிழாவுக்கான ஏற்பா டுகளை கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்றனி அல்காந்தர், இணை பங்கு தந்தையர்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியர் அருள்நாதன், பங்குப் பேரவை துணைத்தலைவர் ஜோசப், செயலாளர்சுமன், பொருளாளர் தீபக்மற்றும் பங்கு மக்கள் பங்கு பேரவை யினர் அருட் சகோதரிகள் செய்து வருகின்றனர்.
- திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் ராகுவிற்குரியஸ்தலமாக போற்றப்படுகிறது.
- தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் ராகுவிற்குரியஸ்தலமாக போற்றப்படுகிறது.
இத்தகைய பெருமைமிகு தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்ச்கியாக, 7ம் நாளான இன்றிரவு, உற்சவர் நாகநாதசுவாமி, கிரிகுஜாம்பிகை, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
முன்னதாக, சீர்வரிசைகள் சமர்பித்தலும், மாலை மாற்றும் வைபவமும் பின்னர் ஊஞ்சலில் நலுங்கு உற்சவமும் நடைபெற்றதை தொடர்ந்து, சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் ஜபிக்க, யாகம் வளர்த்து, நாதஸ்வர மேள தாளம் முழங்க, உதிரி மலர்கள் தூவி, மங்கல ஞான் பூட்டும் வைபவமும் நடைபெற்றது.
இதில் பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் நாளான 10ம் தேதி சனிக்கிழமை திரு தேரோட்டமும் தொடர்ந்து 10ம் நாளான 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மல்லாரி இசை திருவிழா அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் திருக்கோவிலின் சூரிய புஷ்கரணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் ஒருசேர எழுந்தருள கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி நடைபெறுகிறது பிறகு 11ம் நாளான 13ம் தேதி திங்கட்கிழமை விடையாற்றி உற்சவத்துடன் இவ்வாண்டிற்காண கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா நிறைவு பெறுகிறது.
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- திருவிழா நாட்களில் பழைய கோவிலில் திருப்பலி, புனித சூசையப்பா் பீடத்தில் திருப்பலி, ஜெபமாலை ஆகியவை நடைபெறுகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருத்த லங்களில் ஒன்றாகும். இந்த திருத்தலத்தில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
முதல் நாள் விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு சிறப்புத் திருப்பலியும் 8 மணி முதல் மாலை 4 மணி வரை நோ்ச்சை கொடிகள் ஊா்வலமும் மாலை 6-30 மணிக்கு திருக்கொடியேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. பங்கு தந்தை ஆன்றனி அல்கார்ந்தர் கொடியேற்றி வைத்தார். இதில் பங்கு பேரவை துணைத் தலைவர் ஜோசப், செயலாளர்சுமன், பொருளாளர் தீபக் மற்றும் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடா்ந்து நடைபெற்ற திருப்பலிக்கு குழித்துறை மறை மாவட்ட செயலா் ரசல் ராஜ் தலைமை வகித்து மறையுரையாற்றினார்.
திருவிழா நாட்களில் பழைய கோவிலில் திருப்பலி, புனித சூசையப்பா் பீடத்தில் திருப்பலி, ஜெபமாலை ஆகியவை நடைபெறுகிறது.
10-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4-30 மணிக்கு தங்கத் தேரில் திருப்பலி நடைபெறுகிறது. தொடா்ந்து காலை 6 மணிக்கு திருவிழா நிறைவுத் திருப்பலி சுவக்கின் தலைமையில் நடைபெறும். மில்லா் மறையுறையாற்றுகிறாா்.
காலை 8 மணிக்கு நடைபெறும் ஆங்கிலத் திருப்பலியை ஆன்சல் ஆன்றனி நிகழ்த்துகிறாா். தொடா்ந்து கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளி முதல்வா் ஜீன்ஸ் மறையுரையாற்றுகிறாா். காலை 9 மணிக்கு இரு தங்கத் தோ் பவனி நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு மலையாள திருப்பலியும் பகல் 12 மணிக்கு சிறப்புத் திருப்பலியும் மாலை 6 மணிக்கு திருக்கொடி யிறக்கம் மற்றும் நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது..
விழா ஏற்பாடுகளை தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குமக்கள், பங்குத்தந்தை ஆன்றனி அல்காந்தா், இணைப் பங்குத் தந்தையா்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியா் அருள்நாதன், பங்குப் பேரவை துணைத் தலைவா் ஜோசப், செயலா் சுமன், பொருளாளா் தீபக் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
- ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
- ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள ரெகுநாதபுரத்தில் புகழ்பெற்ற வல்லபை அய்யப்பன் கோவில் உள்ளது. எருமேலிக்கு அடுத்தபடியாக பேட்டை துள்ளல் விழாவும், பம்பைக்கு அடுத்தபடியாக ஆராட்டு விழாவும் ஆண்டு தோறும் இங்கு விமரிசையாக நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் வல்லபை அய்யப்பன் கோவிலில் இன்று காலை மண்டல பூஜை கொடியேற்றம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
முன்னதாக தலைமை குருக்கள் மோகன் சாமி தலைமையில் கோவிலில் கணபதி ஹோமமும், அஷ்டா பிஷேகமும் நடைபெற்றது. இதனையடுத்து சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டு அய்யப்பன் சன்னதிக்கு எதிரே உள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடி யேற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா என்று பக்திபரவசத்துடன் முழக்கமிட்டனர். வல்லபை அய்யப்பா சேவை நிலையம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.மோகன் சுவாமி கூறியதாவது:-
ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை யானது சபரிமலையில் நடைபெறுவது போன்றே ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
தினசரி காலை மற்றும் மாலை இருவேளையும் சுவாமி நகர்வலம் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்று பின்னர் பூதபலி பூஜை நடைபெறும். வரும் 26-ந்தேதி மாலை பள்ளி வேட்டை புறப்பாடு (நகர் ஊர்வலம்) நடைபெறும். அப்போது கோவில் நடைசாத்தப்பட்டு இருக்கும். 27-ந்தேதி காலை 8மணிக்கு மண்டல பூஜையன்று பேட்டை துள்ளல், ஆராட்டு விழா நடைபெறும். காலை 10 மணிக்கு சன்னிதானத்தின் முன்புறம் கொடியிறக்கம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனையும், மகா அன்னதானமும் நடைபெறும். 31-ந்தேதி காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை இருமுடி கட்டுதல் நடைபெறுகிறது.
இரவு 10 மணிக்கு அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு இரவு 12 மணிக்கு 2023-ம் ஆண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சபரிமலை யாத்திரை புறப்பாடு நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
- தினமும் மாலையில் கோவில் கலையரங்கத்தில் சமய சொற்பொழிவு, சொல்லரங்கம், பக்தி மெல்லிசை, பக்தி இன்னிசை, பரத நாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
- திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா இன்று (28-ந் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 6-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நேற்று மாலை 4.30 மணிக்கு கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரியார் சமுதாயத்தினர் கொடிப் பட்டத்தை மேளம், தாளம், வெடிமுழக்கத்துடன், முத்துக்குடை ஏந்தி ஊர்வலமாக எடுத்து வந்தனர். சுசீந்திரம் கோவில் நுழைவு வாயில் முன்பு ஊர் மக்கள் சார்பில் கொடிப்பட்டத்திற்கு வரவேற்பு கொடுக்கப்பட்டு கொடிப்பட்டம் 4 ரத வீதிகள் வழியே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்று (28-ந் தேதி) காலை 9.15 மணிக்கு தாணுமாலய சன்னதியின் எதிரே உள்ள கொடி மரத்தில் தெற்கு மண் மடம் ஸ்தானிகர் கொடியேற்றி வைத்தார். வட்டப் பள்ளிமடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்தார். தொடர்ந்து திருமுறை பெட்டக ஊர்வலம் கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்டு 4 ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
விழா நாட்களில் தினமும் மாலையில் கோவில் கலையரங்கத்தில் சமய சொற்பொழிவு, சொல்லரங்கம், பக்தி மெல்லிசை, பக்தி இன்னிசை, பரத நாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
9-ம் திருவிழாவான வருகிற 5-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சப்த வர்ண காட்சி நடக்கிறது.
திருவிழாவின் இறுதி நாளான 6-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி வீதி உலா வருதலும், இரவு 9 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
- 466-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. நாடு முழுவதுமுள்ள இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தளமாக விளங்கும் நாகூர் தர்ஹாவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடப்பது வழக்கம்.
அதன்படி 466 ஆம் ஆண்டு கந்தூரி விழா டிசம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக நாகூர் தர்காவின் மினாராக்கள் வண்ண விளக்குகளால் ஜொலிப்பதால் நாகூரே விழா கோலம் பூண்டுள்ளது.
தர்காவில் 5 மினாராக்கள், அலங்கார வாசல், ஆண்டவர் கோபுரம், மண்டபம், உப்பு கிணறு, பக்தர்கள் அமரும் கூடம் உள்ளிட்ட இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பது கண்டு பக்தர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் நாகூர் ஆண்டவர் தர்காவின் கழுகு பார்வை காட்சிகள் காண்பவர்களின் கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. வரும் 02 ஆம் தேதி நாகையிலிருந்து சந்தன கூடு ஊர்வலமும் 03ம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற உள்ளதால் நாகூர் தர்காவிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.