என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பூச்சிக்கொல்லி"
- விசாரணையின் போது மிச்செல் கூறிய காரணம் போலீஸாரை வியப்பில் ஆழ்த்தியது.
- வழக்கு பதிவு செய்து மிச்செல்லை விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள லெபனாவை சேர்ந்த 47 வயதான மிச்செல் என்பவரின் கணவர் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக மனைவி மீது போலீசில் புகாரளித்ததுள்ளார்.
மிச்செல் தனது கணவர் குடிக்க வைத்திருந்த சோடாவில் பூச்சிக்கொல்லி மருத்தை கலந்து குடிக்க வைத்துள்ளார். மிச்செல் கணவர் அந்த சோடாவை குடிக்க ஆரம்பித்தார். வித்தியாசமான சுவையை அலட்சியப்படுத்திவிட்டு சோடாவைக் குடித்துக்கொண்டே இருந்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர் தொண்டை புண், குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிசிடிவி கேமிரா பதிவுகளை சோதனை செய்த போது மிச்செல் அவர் குடிக்க வைத்திருந்த சோடாவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலப்பது போல் காட்சிகள் பதிவாகி இருந்ததை பார்த்து அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மிச்செல் கைது செய்யப்பட்டார்.
சிசிடிவி கேமிரா பதிவை சோதனை செய்த போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர்.
விசாரணையின் போது மிச்செல் கூறிய காரணம் போலீஸாரை வியப்பில் ஆழ்த்தியது.
மிச்செல் தனது கணவருக்கும் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். தான் பிறந்தநாளுக்கு பார்ட்டி கொடுத்ததை குறித்து தனது கணவர் பாராட்டவில்லை ஆகவே கொலை செய்ய முடிவு எடுத்தேன் என்று கூறியுள்ளார்.
அதையடுத்து வழக்கு பதிவு செய்து மிச்செல்லை விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேப்ப இலைகள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை.
- பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டவை.
வேப்ப இலைகள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை. பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டவை. பல்வேறு நோய்களை நெருங்க விடாமல் தடுக்கும் அசாதாரண ஆற்றல் அதற்கு உண்டு. அதனால்தான் இப்போதும் பல்வேறு வழிகளில் பயன்பாட்டில் இருக்கிறது. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வதால் பல நன்மைகளை பெறலாம். அவை குறித்து பார்ப்போம்.
1. ரத்தத்தை சுத்தப்படுத்தும்:
வேம்பு ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் உட்கொள்வது ரத்தத்தில் சேரும் நச்சுகள் மற்றும் அசுத்தங்களை அகற்றி ரத்தத்தை சுத்தப்படுத்த உதவும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்:
வேம்பில் ஆன்டி ஆக்சிடெண்டுகள், பிளாவனாய்டுகள், வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உண்பது உடலின் இயற்கையான பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்தி நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்து போராடும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
3. செரிமானத்தை தூண்டும்:
செரிமானத்திற்கு உதவவும், இரைப்பை குடல் பிரச்சினைகளை போக்கவும் பாரம்பரிய வழக்கமாக வேம்பு பயன்படுத்தப்படுகிறது. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வது செரிமான செயல்பாடுகளை தூண்டும். வயிறு வீக்கம், வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்றவற்றுக்கு வித்திடும் ஆரம்பக்கட்ட அறிகுறிகளை விரட்டியடிக்கும்.
4. நச்சுக்களை நீக்கும்:
உடலில் இருந்து நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்ற உதவும் பண்புகளை வேம்பு கொண்டுள்ளது. வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலின் நச்சுத்தன்மை நீக்க செயல்முறைகளை விரைவுபடுத்தி, ஒட்டுமொத்த நச்சுக்களை வெளியேற்ற செய்யும். உடலை சுத்தப்படுத்தும் செயல்முறையையும் ஊக்குவிக்கும்.
5. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்:
வேம்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் பண்புகளை கொண்டிருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவது மற்றும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைப்பதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.
6. வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:
வேப்ப இலையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை வாய்வழி தொற்று, பல் சொத்தை, ஈறு நோய்களை தடுக்க உதவும். வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது, வாயில் பாக்டீரியாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும். ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் வாய்வழி சுகாதாரத்தையும் பாதுகாக்கும்.
7. சரும ஆரோக்கியம் காக்கும்:
பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு உள்ளிட்ட சருமத்திற்கு நன்மை பயக்கும் பண்புகளை வேம்பு கொண்டுள்ளது. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வது முகப்பரு, தோல் அழற்சி, தோல் தடிப்பு உள்பட பல்வேறு சருமம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடவும், சரும அழகை மேம்படுத்தவும் உதவும்.
8. கூந்தலுக்கு வலு சேர்க்கும்:
உச்சந்தலை மற்றும் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கும் சத்துக்கள் வேம்பில் உள்ளன. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். உச்சந்தலையில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். வெறும் வயிற்றில் வேப்ப இலை சாப்பிடுவது, முடியின் வேர்களை வலுப்படுத்தும். பொடுகுத்தொல்லையை குறைக்கும். முன்கூட்டியே நரை முடி எட்டிப்பார்ப்பதையும் தடுக்கும்.
- விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு மன வேதனையில் இருந்து வந்தார்.
- அங்கிருந்து புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வண்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 42) இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். கடந்த மூன்று ஆண்டு களாக விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு மன வேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு விவசாய நிலத்துக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தினை குடித்து மயங்கி விழுந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிறு வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து, பின்பு அங்கிருந்து புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதித்தனர். அங்கிருந்து மேல் சிகிசசைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று இரவு இறந்துபோனார். இது குறித்து மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரசாயன பூச்சிக் கொல்லியின் பயன் பாட்டை வெகுவாக குறைக்கலாம்.
- மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கிருஷ்ணகிரி,
பயிர்களில் பூச்சிக் கொல்லி மருந்துகளை அள வோடு பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் கிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
பூச்சி தாக்குதல் கிருஷ்ண கிரி மாவட்டத்தில் நெல், சிறுதானியங்கள், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் காய்கறி பயிர்கள், மா, வாழை உள்ளிட்ட தோட்டக் கலை பயிர்களும் சாகுபடி செய்யப் படுகின்றன. பல்வேறு பூச்சி மற்றும் நோய்கள் பயிர்களை தாக்க வாய்ப்பு உள்ளது.
விவசாயிகள் பூச்சி களையும், நோய்களையும் கட்டுப் படுத்திட வேளாண்மை துறையால் பரிந்துரைக்கப்படும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளான இயற்கை ஒட்டுண்ணிகள், விளக்குப்பொறி, இனக்கவர்ச்சி பொறி, உழவியல் முறைகள், உயிரியல் காரணிகள் ஆகியவற்றை கொண்டு கட்டுப்படுத்துவதின் மூலம் ரசாயன பூச்சிக் கொல்லியின் பயன் பாட்டை வெகுவாக குறைக்கலாம். மேற் குறிப்பிட்ட ஒருங்கி ணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையை கடை பிடிக்காமல் தேவைக்கு அதிகமாக பூச்சி மற்றும் நோய் கொல்லி மருந்துகளை பயன் படுத்துவதின் மூலம் நாம் உண்ணும் உணவுகளிலும், மற்றும் கால்நடை தீவனங்களிலும் பூச்சிக் கொல்லி மருந்துகளின் அளவு நிர்ண யிக்கப்பட்ட நஞ்சு அளவை விட அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
இதன் மூலம் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பிற்காலங்களில் பூச்சி மற்றும நோய்களை கட்டுபடுத்த முடியாமல் மகசூல் இழப்பு ஏற்பட கூடிய சூழ்நிலை உருவாகும் என விஞ்ஞானிகள் தெரிவிக் கின்றனர். எனவே உரிய பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து பூச்சிக் கொல்லி மருந்துகளை அளவோடு பயன் படுத்திட வேண்டும். பூச்சி மருந்துகள் குறித்த தகவல் களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- உயிர்க்கொல்லியான எலி பேஸ்ட் விற்பனைக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டது.
- பூச்சிக்கொல்லி மருந்து தடைச்சட்டம் 1968-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக் டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-
ரேட்டால் என்ற வணிக பெயரில் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் எனும் ரசாயனம் வேளாண்மை மற்றும் இதர உபயோகங்களுக்கு பயன்படுத்த மத்திய அரசு நிரந்தர தடை விதித்துள்ளது.
பொதுவாக மக்கள் ரேட்டால் பேஸ்ட்டை எலிகளை கட்டுப்படுத்த வீடுகளில் பயன்படுத்து கின்றனர். இதை குழந்தைகள் பேஸ்ட் என கருதி உப யோகப்படுத்தும் அபாயம் ஏற்படுகிறது. இதற்கு எதிர்வினை மருந்து இல்லா ததால் மத்திய மற்றும் மாநில அரசுகள் இதன் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்படுத்துவதற்கு நிரந்தர தடை விதித்துள்ளது.
பொதுமக்கள் யாரும் மஞ்சள் பாஸ்பரஸ் என்ற ரேட்டால் பேஸ்ட்டை விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு பயன் படுத்த வேண்டாம். பூச்சி மருந்து விற்பனை நிலை யங்கள் மற்றும் இதர கடைகளில் விற்பனை செய்வது தெரிய வந்தால் மாவட்ட நிர்வாகம் அல்லது அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மைய பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வாளர்களிடம் தகவல் தெரிவிக்கலாம்.
பூச்சிமருந்து விற்பனையாளர்கள் மற்றும் இதர விற்பனையாளர்கள் மஞ்சள் பாஸ்பரஸ் எலி பேஸ்ட்டை விற்பனை செய்வது தெரிய வந்தால் பூச்சிக்கொல்லி மருந்து தடைச்சட்டம் 1968-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.
இவ்வாறு அதில் குறிப் பிடப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்