என் மலர்
நீங்கள் தேடியது "பணி"
- கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும்
- தமிழக அரசுக்கு கோரிக்கை
திருச்சி:
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் யு.ஜி.சி.தகுதியுடைய கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்திடவேண்டும் என்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, கடந்த 10 ஆண்டுகளாக அரசு கலைக்கல்லூரிகளில் நிரந்தர உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததனால் சற்றேறக்குறைய 9000 உதவிப்பேராசிரியர் பணிக்கான காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது.
தற்போது தமிழக அரசு 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நீண்ட காலமாக (ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாக) தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் கவுரவ வரிவுரையாளர்கள் 40 முதல் 50 வயதை கடந்தவர்களாகவும் மாதந்திர ஊதியமாக 20,000 பெற்று வரக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.
எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ள 4000
- முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரவுண்டானா அமைக்க முடிவு
- பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டு இருவழிப்பாதையாக மாற்றப்பட இருக்கிறது
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
கலெக்டர் அலுவலக சாலை, வடசேரி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் சாலையின் நடுவே கற்களால் ஆன தடுப்புகள் அமைத்து இருபுறமும் வாகனங்கள் செல்லும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறுகிய சாலைகள் விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரவுண்டானா அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கலெக்டர் அலுவலக சந்திப்பில் ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதே போல பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு மற்றும் செட்டிகுளம் சந்திப்பிலும் ரவுண்டானா அமைக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் மகேஷ் கூறினார்.
இந்த நிலையில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே கல்கோவில் முன் ரவுண்டானா அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. இதற்காக அந்த பகுதியை விரிவாக்கம் செய்யும் பணி இன்று நடந்தது.
முதற்கட்டமாக ரவுண் டானா அமைப்பதற்கு இடையூறாக இருந்த மரங்கள் மற்றும் செடிகள் அப்புறப்படுத்தப்பட்டன. அதன்பிறகு அங்கு அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகளால் ஆன சிறிய அளவிலான வேலி இடித்து அகற்றப்பட்டது.
ஆனால் மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு அங்குள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் மாநகராட்சி மேயர் மகேசும் அங்கு வந்து பேசினார். அப்போது, "மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தான் ரவுண்டானா அமைக்கப்படும். அதற்காக தான் நிலத்தை தயார் செய்யும் பணி நடக்கிறது. தனியாருக்கு சொந்தமான இடத்தில் ரவுண்டானா வராது" என்றார்.
பின்னர் போலீசார் முன்னிலையில் வேலி மற்றும் அங்கிருந்த கற்கள் அகற்றப்பட்டு ரவுண்டானா அமைக்கும் வகையில் அந்த பகுதியை தயார் செய்யும் பணி தொடர்ந்து நடந்தது.
ரவுண்டானா பணிகள் முடிந்ததும் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டு இருவழிப்பாதையாக மாற்றப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வடசேரி காசி விஸ்வநாதர் கோவில் அருகே கழிவு நீர் ஓடை அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்பதாக கோவில் நிர்வாகிகள் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் இன்று அப்பகுதிக்கு குமரி கிழக்கு மாவட்ட செய லாளர் மேயர் மகேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உடனே அதனை சரி செய்ய துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது மாநகராட்சி அதிகா ரிகள், மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
- கிறிஸ்துமஸ்-புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது
- பெரம்பலூர் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனத்தில்
பெரம்பலூர் :
பெரம்பலூர் கல்பாடி பிரிவு சாலையிலுள்ள அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவன தொழிற்சாலையுடன் ஸ்வீட்ஸ் அன்ட் ஸ்நாக்ஸ், பேக்கரி ஆகியவை செயல்பட்டு வருகிறது. மேலும், திருச்சி, சென்னை, துறையூர், சேலம், ஆத்தூர், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், பாண்டிச்சேரி உள்பட 26 கிளைகளுடன் பேக்கரி செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கேக் தயாரிக்கும் பணி தொடங்குவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு பண்டிகையையொட்டி கேக் தயாரிப்புக்காக செர்ரி, உலர் திராட்சை, பேரிச்சை, வெள்ளிரி விதை, ஆரஞ்சு, முந்திரி, திராட்சை, உலர் வண்ணநிற பழங்கள், ஆப்ரிகாட், டியூட்டி புரூட்டிச் ஆகிய பழங்கள், ஜாதிக்காய் பொடி, அத்திப்பழம், லவங்கப் பட்டைப் பொடி போன்றவற்றை கலந்து, சுமார் ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பாகவே ஒயினில் ஊற வைக்கப்படுகிறது. இவை நன்றாக ஊறிய பிறகு சுவையான, தரமான ரிச் பிளம் கேக் தயாரிக்கப்படுகிறது.
தற்போது தொடங்கப்பட்டுள்ள ரிச் பிளம் கேக் தயாரிப்பு பணி முடிவடைந்து, பின்னர் டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிக்கைக்காக ரிச் பிளம் கேக் மற்றும் வகை வகையான கேக்குகள் தயாரிக்கப்படவுள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக், குக்கீஸ், சாக்லெட் ஆகியவை தயாராகி வருகிறது.
தரமாகவும், சுவையாகவும், குறைந்த விலையில் இந்த கேக் வகைகள் அனைத்து கிளைகளிலும் கிடைக்கும் என அஸ்வின்ஸ் நிறுவன தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார். அப்போது அஸ்வின்ஸ் நிர்வாக இயக்குநர் அஸ்வின்ஸ், மனித வள மேம்பாட்டு அலுவலர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
- எங்களுக்கு நிரந்தர பணி அமைத்திட அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
- மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 12 ஆண்டுகளுக்கு லேபர் ஒப்பந்தம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 12 ஆண்டுகளுக்கு லேபர் ஒப்பந்தம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் மாரிமுத்து எம்.எல்.ஏ.விடம் அளித்துள்ள மனுவில்,
எங்களுக்கு நிரந்தர பணி அமைத்திட அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதில் மாநிலத் உப தலைவர் செல்வராஜ், காளிமுத்து, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயபால் ,மண்ணை கோட்ட செயலாளர் தம்பு சாமி, திட்ட அமைப்பு செயலாளர் சுப்பையன், இயேசு ராஜன் ,ஒப்பந்த தொழிலாளர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உடனிருந்தனர்.
- தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் பணிக்கு வருகிற 27-ந்தேதி எழுத்துத் தேர்வு நடக்க உள்ளது.
- காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.
சேலம்:
தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் பணிக்கு வருகிற 27-ந்தேதி எழுத்துத் தேர்வு நடக்க உள்ளது. இதையொட்டி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இலவச மாதிரி தேர்வு வருகிற 13-ந்தேதி நடத்தப்பட உள்ளது. ஏற்காடு அடிவாரத்தில் உள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரியில் அன்று காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு 9 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வர வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பித்த நகல், 2 பாஸ்போர்ட் போட்டோவை தேர்வை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரா் கணினியின் திறன்மிக்கவராகவும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
- தகவல் பகுப்பாளா் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளா் பணியிடத்துக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிவிண்ணப்பிக்கலாம்.இது குறித்து மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளா் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. ஒரு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையிலான இந்தப் பணிக்கு மாதம் ரூ.18,536 தொகுப்பூதியம் வழங்கப்படும்.
இதில் விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து புள்ளியியல், கணிதம், பொருளாதாரம், கணினி (பிசிஏ) ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் கணினியின் திறன்மிக்கவராகவும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பணியானது மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் என்பதால் இதனை அடிப்படையாக கொண்டு எந்தவிதமான அரசுப் பணியும் கோர இயலாது.
ஆகவே, இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான நபா்கள் கல்விச் சான்று நகல்கள், அனுபவச் சான்று மற்றும் புகைப்படத்துடன் கீழ்கண்ட முகவரிக்கு டிசம்பா் 10 ந்தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971198 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பங்களை திருப்பூா் மாவட்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்: 633, 6வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூா்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- வாா்டு எண் 59 அமராவதிபாளையம்-கட்டுப்பாளையம் பிரதான சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தாா் சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
- மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூா் மாநகராட்சி 2, 3 வது மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதில், வாா்டு எண் 59 அமராவதிபாளையம்-கட்டுப்பாளையம் பிரதான சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தாா் சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
இதைத்தொடா்ந்து மாநகராட்சி 2 வது மண்டலத்துக்கு உட்பட்ட வாா்டு எண் 32 ல் புது ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சாலைகளின் தரம் மற்றும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அதே போல திருப்பூா் மாநகராட்சி 3 -வது மண்டலத்துக்கு உட்பட்ட வாா்டு எண் 33ல் அம்ருத் 2 திட்டத்தின்கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மூளிக்குளத்தின் கரையை பலப்படுத்தும் பணியையும் ஆய்வு செய்தாா். அப்போது மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது மாநகராட்சி உதவி ஆணையா்கள், அலுவலா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
- மின் இணைப்பு எண்ணை, ஆதாருடன் இணைக்கும் பணி சேலம் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் வாரிய பிரிவு அலுவலகங்களிலும் நவம்பர் 28-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை நடைபெற்று வருகிறது.
- ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30மணி முதல் மாலை 5.15மணி வரை சிறப்பு முகாம்நடைபெறும்.
சேலம்:
சேலம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வீடுகள், கைத்தறி, விசைத்தறி, சூடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் தங்க ளது மின் இணைப்பு எண்ணை, ஆதாருடன் இணைக்கும் பணி சேலம் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் வாரிய பிரிவு அலுவலகங்களிலும் நவம்பர் 28-ந் தேதி முதல்
டிசம்பர் 31-ந் தேதி வரை நடைபெற்று வருகிறது. ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30மணி முதல் மாலை 5.15மணி வரை சிறப்பு முகாம்நடைபெறும். இந்த சிறப்பு
முகாமை பயன்படுத்தி பொது மக்கள் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ரூ.40 ஊதிய உயர்வு வழங்கப்படும்
- அடிப்படை ஊதியமாக பால்வடிப்பு தொழிலாளர்களுக்கு ரூ.343-ம், களப்பணி தொழிலாளர்களுக்கு ரூ.328-ம், தொழிற்கூட தொழிலாளர்களுக்கு ரூ.338.74-ம் கிடைக்கும்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கோதையாறு, சிற்றாறு, மணலோடை, கீரிப்பாறை என 4 கோட்டங்களாக ரப்பர் கழகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு சுமார் 2 ஆயிரத்து 500 பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு தினசரி ரூ.40 ஊதிய உயர்வு வழங்க 3 துறை அமைச்சர்கள் முன்னிலையில் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஓப்புக் கொள்ளப்பட்டது.
ஆனால் இதனை செயல்படுத்த ரப்பர் தோட்டக் கழகம் தாமதம் செய்ததால், பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டனர். கடந்த மாதம் 7-ந் தேதி முதல் அவர்கள் காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில், தொழிற்சங்க த்தினருடனான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடை பெற்றது. நள்ளிரவை தாண்டியும் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை நேற்று அதிகாலை 1.30 மணிக்கு முடிவுக்கு வந்தது.
அதன்படி ரூ.40 ஊதிய உயர்வு உள்பட அடிப்படை ஊதியமாக பால்வடிப்பு தொழிலாளர்களுக்கு ரூ.343-ம், களப்பணி தொழிலாளர்களுக்கு ரூ.328-ம், தொழிற்கூட தொழிலாளர்களுக்கு ரூ.338.74-ம் கிடைக்கும். மேலும் ஊதிய உயர்வு நிலுவைத் தொகை முதல் தவணையாக வருகிற 15-ந் தேதிக்கு முன்பும், 2-ம் தவணை வருகிற 23-ந் தேதிக்கு முன்பும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பணியா ளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். அவர்கள் 7-ந் தேதி (இன்று) முதல் வேலைக்குச் செல்வதாக அறிவித்தனர். அதன்படி இன்று காலை அவர்கள் பணிக்கு வந்தனர். 30 நாட்களுக்கு பிறகு அவர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு
- உயர்மட்ட அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் நடந்தது
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்றுவரும் பணி கள் குறித்து, உயர் மட்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலை மையில் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டத்தில், வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை (கட்டடம், நீர்வளம்), ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம். மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட் சிகள் ஊராட்சி கள். வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மின்சாரத்துறை, மீன்வளத்துறை, போக்குவ ரத்துத்துறை, காவல்துறை, கூட்டுறவுத்துறை உட்பட பல்வேறு துறைகள் சார் பில், நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும். முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற் ெகாள்ளப்பட்டதோடு, ஒவ்வொரு துறைக்கும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவ டிக்கைகள் குறித்து கேட்ட றியப்பட்டது.
பொதுப்பணித்துறை நீர் வள ஆதார அமைப்பு, கட்ட டம், கடலரிப்பு தடுப்புக் கோட்டம், நெடுஞ்சாலை ஆகியவற்றின் மூலம்மேற் கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணி களை விரைந்து முடித்திட துறைசார்ந்த அலுவலர் களுக்கு அறிவுறுத்தப்பட டது. வளர்ச்சி பணிகளின் செயலாக்கத்தின்போது ஏற்படும் தடைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள் ளப்பட்டு வரும் பணிகளில் ஏதேனும் தடைகள் மற்றும் இடர்பாடுகள் ஏற்படின் அது குறித்து மாவட்ட நிர் வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அறிவு றுத்தப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பி ரியா, நாகர்கோவில் மாநக ராட்சி ஆணையர் ஆனந்த மோகன் பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராம லிங்கம் உட்பட அனைத் துத்துறை சார்ந்த அலுவ லர்கள் பலர் கலந்து கொண் டனர்.
- பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க ஏற்பாடு
- கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நந்தவனத்தில் ஸ்ரீ ராமர் கோவில் உள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நந்தவனத்தில் ஸ்ரீ ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 22-வது ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாநாளை (வியாழக்கிழமை) தொடங்கு கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரைதொடர்ந்து 2 நாட்கள் நடக்கிறது. இதையொட்டிநாளை அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. 5.15 மணிக்கு ஸ்ரீ மகா கணபதி ஹோமும் 7 மணிக்கு அபிஷேகமும் நடக்கிறது. 7.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது 8 மணி முதல் மாலை 5 மணி வரை அகண்ட ராமநாம ஜெபம் நடக்கிறது. கொட்டாரம் ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பஜனை குழுவினர் இந்த ஜெபத்தை நடத்துகிறார்கள். மாலை 5மணிக்குபஜனையும் இரவு 7 மணிக்கு தீபாராதனையும் இரவு 7.15 மணிக்குஆன்மீக சொற்பொழிவும் நடக்கிறது.
2-வது நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையும், 5.15 மணிக்கு கலச பூஜையும், 8 மணிக்கு பஜனையும், 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அப்போது ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், ஆயிரக்கணக்கான லிட்டர் பால் மற்றும் தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சை பழச்சாறு, கரும்புச்சாறு, மஞ்சள் பொடி, சந்தனம், குங்குமம், விபூதி, களபம், பன்னீர், நெய், பச்சரிசி மாவு, உள்பட 16 வகையான வாசனை திரவியங்கள் அடங்கிய சோடச அபிஷேகம் நடக்கிறது. 11.15 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது பகல் 11.30 மணிக்கு மகா அன்னதானம் நடக்கிறது. பின்னர் மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனமும் 6.30 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது.
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, தட்டு வடை, குங்குமம், விபூதி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற கனி வகைகளும் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துஉள்ளது. இதற்காக 5 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணி இன்றும் தொடர்ந்து நடக்கிறது.
- பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
- மாற்றுத்திறன் கொண்ட 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி 19.12.2022 முதல் 11.01.2023 வரை நடைபெற உள்ளது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி 19.12.2022 முதல் 11.01.2023 வரை நடைபெற உள்ளது.
இப்பணியை வட்டார கல்வி அலுவலர் கவுரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுபா, அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் அனிதா குமார், ராஜா, பார்வதி, செல்வராணி மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், பிசியோதெரபிஸ்ட், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், இல்லம்
தேடி கல்வி தன்னார்வ லர்கள் மற்றும் மற்ற துறைகள் இணைந்து செய்து வருகின்றனர்.
மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ரமேஷ், பரமத்தி வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் இந்த பணிகளை பார்வை யிட்டார். அப்போது தங்கள் பகுதிகளில் பள்ளிச் செல்லா குழந்தைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் எவரேனும் கண்டறி யப்பட்டால், தங்கள் பகுதிக்கு உட்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.