என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிற்சி"

    • உள் மாவட்ட அளவிலான பயிற்சி நடைபெற்றது.
    • விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி ,

    பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பாக ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்த உள் மாவட்ட அளவிலான பயிற்சி நடைபெற்றது.

    ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட கிராமமான பையர் நத்தம் கிராமத்தில் பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை பொறியியல் துறையின் சார்பாக உதவி பொறியாளர் சாணக்கியன், வேளாண்மை துறையின் சார்பாக துணை வேளாண்மை அலுவலர் ஆறுமுகம், உதவி வேளாண்மை அலுவலர்கள் தண்டபாணி, செல்வம் மற்றும் தோட்டக்கலை துறையின் உதவி தோட்டக்கலை அலுவலர் சுரேஷ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன் உதவி தொழில்நுட்ப மேலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்தும், உழவன் செயலியை பதிவிறக்கம் செய்வது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

    இப்ப பயிற்சியில் வட்டார உழவர் ஆலோசனை குழு தலைவர் சண்முகம் உட்பட 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண்மை தொழில்நுட்பங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    • மாவட்ட அளவில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மணிபாரதி முதலிடம்.
    • 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜெகதீஸ்வரன் மூன்றாமிடம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் குறுவ ட்டம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட அளவிலான நடந்த தடகள மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ ர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பாராட்டு விழா கழக துணைத்தலைவர் தென்னரசு தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த மணிபாரதி, தட்டு எறிதலில் முதலிடம் பிடித்த விஜய், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாமிடம் பிடித்த ஜெகதீஸ்வரன் மற்றும் குறுவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அன்பழகன், ஆசிரியர் நாகராஜன்ஆகியோரையும் பாராட்டினர்.

    நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பிரகாஷ் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • தொழில் திறன் பயிற்சி கடந்த 10 ஆண்டுகளாக முடக்கம்.
    • ஜி.எஸ்.டி வரி விதிப்பை மத்திய அரசு குறைத்தால் வேலைவாய்ப்பு பெருக்கம் ஏற்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர்ர் அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர் நலத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.கணேசன் 3,928 பயனாளிகளுக்கு, 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நேற்று வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நிருபர்களுக்கு அமைச்சர் சிவி.கணேசன் பேட்டியளித்தபோது கூறுகையில்,

    கல்வி, திருமண உதவித்தொகை, விபத்து, மரணம் உள்ளிட்டவைகளில் 1 லட்சம் 7 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நிலுவை தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. திரையரங்கம், அடுக்குமாடி குடியிருப்பு, மால் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை கட்டிய கொத்தனார் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு இதுவரை சொந்த வீடு இல்லை என்று வேதனை தெரிவித்த அமைச்சர், தமிழகத்தில் முதற்கட்டமாக 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ. 400 கோடி மதிப்பில் வீடு கட்டும் திட்டம் வருகிற 15ம் தேதி முதல் அமைச்சரால் தொடங்கப்பட உள்ளதாக கூறினார்.

    தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்.குமார் கூறுகையில்; கட்டிடத் தொழிலில் தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது என்று வேதனை தெரிவித்தார். உள்நாட்டு தொழிலாளர்களின் பற்றாக்குறையை போக்க தி.மு.க ஆட்சியில் வருடத்திற்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு அளித்து வந்த தொழில் திறன் பயிற்சி கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் முடங்கி கிடந்ததாக குற்றம்சாட்டினார்.

    இந்த பயிற்சி கொடுத்தால் தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். தொழிலாளர் நலத்துறைக்கு மத்திய அரசு 28 சதவீத ஜி.எஸ்.டி வரி விதித்து இருப்பது கொடூர செயல் என்று கடுமையாக விமர்சித்த பொன்.குமார், ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு 5 சதவீதமாக குறைத்தால், கட்டுமான வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்பு பெருக்கம் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    • குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்துக்கு மின்னஞ்சல் மூலம் நவம்பா் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் தஞ்சாவூா் சுற்றுப் பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 30 நாள்கள் வேலைவாய்ப்புடன் கூடிய இலவசமாகக் கணினி கணக்கியல் பயிற்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இப்பயிற்சியில் கலந்து கொள்ள குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட தஞ்சாவூா் சுற்றுப் பகுதியைச் சோ்ந்த விருப்பமுள்ள மாற்றுத்தி றனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளை இணைத்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை ஈஸ்வரி நகா் பக்கிரிசாமி பிள்ளை தெருவிலுள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்துக்கு மின்னஞ்சல் மூலமாக நவம்பா் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காகித பூ, கப்பல், பல்வேறு வகையான பொம்மைகள் களி மண்ணால் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
    • 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

    அவிநாசி :

    அரசுப் பள்ளியில் களிமண் பொருள்கள் தயாரிப்பு பயிற்சியில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவா்கள்.

    அவிநாசி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி மாணவா்களுக்கு காகித வடிவமைப்பு, களிமண்ணால் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி ஆகியவை திங்கள்கிழமை அளிக்கப்பட்டன. அவிநாசி நல்லது நண்பா்கள் அறக்கட்டளை, சென்னை எழிலன் நண்பா்கள் மற்றும் களிமண் விரல்கள் கூட்டமைப்பு, நிலாப்பள்ளி அமைப்பு ஆகியவை சாா்பில் கலை பழகுதல் முகாம் அவிநாசியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    இதில், காகித பூ, கப்பல், பல்வேறு வகையான தொப்பிகள், மயில், கொக்கு டம்ளா் உள்ளிட்ட காகித வடிவமைப்பு, ஓவியங்கள் வரைதல், களி மண்ணால் பொம்மைகள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து நினைவாற்றல் உருவாக்கும் திறன், மனதை ஒரு நிலைப்படுத்தல் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. இப்பயிற்சியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

    • விவசாயிகளுக்கு வயல்வெளி பயிற்சி வழங்கப்பட்டது
    • நீர்பாசன வேளாண்மை நவீன மயமாக்குதல் திட்டத்தில்

    புதுக்கோட்டை:

    விராலிமலை வட்டாரத்தில், மாத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீனமயமாக்குதல் திட்டத்தின் விவசாயகளுக்கு வயல்வெளி பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் சம்பா பருவத்தில் நெற்பயிரை தாக்கும் இலை சுருட்டு புழு, குலைநோய், புகையான் தாக்குதல் போன்ற பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பற்றியும் அதற்கான ஒருங்கிணைந்த வழிமுறைகள் பற்றியும் சிறப்பாக விவசாயிகள் மத்தியில் வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி ப.தமிழ்செல்வி சிறப்பாக விளக்கம் அளித்தார்.

    ஏக்கருக்கு 5 எண்கள் இன கவர்ச்சி பொறி வைப்பதன் மூலம் ஆண்பூச்சிகள் அதிக அளவு கவரப்பட்டு பெண் பூச்சிகளின் இனபெருக்கத்தை கட்டுப்படுத்தபடுகின்றன. விளக்குப்பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து இழுப்பதன் மூலம் பயிர்களை தாக்கும் பூச்சிகளின் இன பெருக்கத்தை கட்டுப்படுத்தப்படுகிறது என்பதனை பற்றி வேளாண்மை உதவி இயக்குநர் விளக்கம் அளித்தார்

    மீன் வளத்துறையில் மாவட்ட திட்ட செயாளார் குயிலி கூறும் போது, தங்கள் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றி விரிவாக எடுத்துறைத்தார். உழவன் செயலில் பதிவிறக்கம் பற்றியும் அதனை பயன்படுத்தும் முறைகள் பற்றியும் ஷீலாராணி வேளாண்மை அலுவலர் கூறினார். இறுதியாக இப்பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் தங்கராசு துணை வேளாண்மை அலுவலர் நன்றி உரை கூறினார். 

    • இல்லம் தேடி கல்வி திட்ட பயிற்சி நடைபெற்றது
    • உதவி திட்ட அலுவலர் நேரில் ஆய்வு

    புதுக்கோட்டை:

    திருவரங்குளம் வட்டார வளமையத்தில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கான 5 ஆம் கட்ட பயிற்சியினை மாவட்ட உதவி திட்ட அலுவலர் எஸ்.தங்கமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அனைத்து குழந்தைகளும் மொழி மற்றும் கணிதப்பாடங்களில் உள்ள அடிப்படைத் திறன்களை அடைய வேண்டும் என்பதே இந்த பயிற்சியின் நோக்கம் ஆகும். இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ள தன்னார்வலர்கள். முன்னறிவுத் தேர்வு நடத்தி மாணவர்களின் கற்றல் நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.முன்னறிவுத் தேர்வின் மூலம் கற்றல் இடர்பாடுளைக் கண்டறிந்து அதில் உள்ள திறன்களை மேம்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும். முன்னறிவு தேர்விற்கான வினாக்களை கரும்பலகையிலோ அல்லது தாள்களிலோ எழுதி தேர்வினை நடத்த வேண்டும் என்றார்.

    ஆய்வின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன், இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் உழவன் செயலி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் சுள்ளிபாளையம் கிராமத்தில் நடைபெற்றது.
    • ரிவுலிஸ் சொட்டுநீர் நிறுவன உழவியல் நிபுணர் கிருஷ்ணா தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து எடுத்துக்கூறினார்.

    பரமத்திவேலூர்;

    நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் உழவன் செயலி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் சுள்ளிபாளையம் கிராமத்தில் நடைபெற்றது.

    பயிற்சியை வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தொடங்கி வைத்து வட்டார வேளாண்மை மானிய திட்டங்கள் குறித்து விவசாயி–களுக்கு விளக்கினார். வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி சொட்டுநீர் பாசன திட்டங்களின் பயன்கள், மானிய விபரங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். ரிவுலிஸ் சொட்டுநீர் நிறுவன உழவியல் நிபுணர் கிருஷ்ணா தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து எடுத்துக்கூறினார்.

    நிகழ்ச்சியின் இறுதியில் வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகரன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் கோகுல் மற்றும் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜோதிமணி ஆகியோர் சுள்ளிபாளையம் கிராம உழவர் ஆர்வலர் குழுக்களை சேர்ந்த முன்னோடி விவசாயிகளுடன் இணைந்து செய்திருந்தனர்.

    • உயிரி கட்டுப்பாட்டு முகவர்களின் செயல்திறன் விவசாயிகள் பயிற்சி முகாம் மாரப்ப நாய்க்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
    • வேளாண்மை அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் கீழ் பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் உயிரி கட்டுப்பாட்டு முகவர்களின் செயல்திறன் விவசாயிகள் பயிற்சி முகாம் மாரப்ப நாய்க்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.

    நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா, நாமக்கல் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண்மை அலுவலர் ஹரிதா, வேளாண்மை அலுவலர் ரசிகபிரியா ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார். இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் திலிப்குமார், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வெள்ளகோவில் ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • எடை குறைந்த அளவில் பிறந்த குழந்தைகள், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை எப்படி பராமரிப்பது குறித்து விளக்கி கூறினர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் ஒன்றியம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் சார்பில், வெள்ளகோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், வெள்ளகோவில் ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வித்தியா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துராமலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பிறந்த குழந்தைகள் மற்றும் எடை குறைந்த அளவில் பிறந்த குழந்தைகள், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை எப்படி பராமரிப்பது குறித்து விளக்கி கூறினர்.

    • சுய வேலை வாய்ப்பு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
    • 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் இலவசமாக கட்டிட வண்ணப்பூச்சு பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அம்மைய இயக்குநர் ஆனந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

    பெரம்பலூர் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் இலவசமாக கட்டிட வண்ணப்பூச்சு பயிற்சி வரும் 21 -ந் தேதி முதல் அளிக்கப்படவுள்ளது.

    பயிற்சியில் பெயின்டிங் பற்றிய ஒரு அறிமுகம் ,பெயின்டிங் பற்றிய அடிப்படை அறிவு மற்றும் அதன் முக்கியத்துவம்,அதன் வகைகள் ,கட்டிடம் மரம் மற்றும் உலோகம் ஆகியவற்றில் பெயிண்டிங்கிற்கு முன் செய்யப்பட வேண்டிய வேலைகள், மேற்பரப்பை தயார் செய்யும் முறைகள், ப்ரைமர், எனாமல் புட்டி மற்றும் சிமெண்ட் புட்டி ஆகியவற்றை பூசும் முறைகள், பெயின்டிங் செய்யும் பரப்பை கணக்கிட்டு அதற்கு ஆகும் செலவுகளை நிர்ணயிப்பது ஆகியன பற்றி துறை சார்ந்த வல்லுநர்களால் கற்று தரப்பட இருக்கின்றது.

    பயிற்சியின் கால அளவு 10 நாட்களாகும். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும். பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும் வறுமை கோட்டிற்குள் கீழ் உள்ள ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதன கோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் கல்வி சான்றிதழ் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல் மற்றும் 3 போஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ, வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றுடன் வரும் 18ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    • தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்கள் முறையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும்.
    • 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    திருவாரூர்:

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டம் ஒருங்கிணைந்த 108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட மேலாளர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் செயல்படுகிறது. இதில் பணிபுரிய டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் வரும் 19ஆம் தேதி (சனிக்கிழமை) திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

    ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு உண்டான தகுதிகள் பின்வருமாறு:-

    ஓட்டுநருக்கு உண்டான கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    தேர்வு அன்று விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 162.5 சென்டிமீட்டர் குறையாமல் இருக்க வேண்டும்.

    இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓர் ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

    தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 15,235 (மொத்த ஊதியம்) வழங்கப்படும். தேர்வு முறையானது எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண் பார்வை திறன் மற்றும் மருத்துவம் சம்பந்த தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு, அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாட்களுக்கு முறையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

    மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள் பி.எஸ்.சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம், டி.எம்.எல்.டி, (பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பி.எஸ்.சி‌. விலங்கியல், தாவரவியல் பயோ வேதியியல், மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி இதில் ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

    மாதம் ஊதியம் ரூ.15,435 (மொத்த ஊதியம்) நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    தேர்வு முறையானது எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை, மனிதவளத் துறையின் நேர்முகத் தேர்வு.

    இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும் பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

    மேலும் விவரங்களுக்கு 044- 28888060/75/77 அல்லது 7397701801 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×