என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல்"

    பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    மதுரை

    மதுரையில் 13 வயது சிறுமிக்கு வாலிபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் காதல் டார்ச்சர் கொடுப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் வந்தது.

    இதன் அடிப்படையில் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் தங்கதுரை மேற்பார்வையில், உதவி கமிஷனர் அக்பர்கான் ஆலோசனை பேரில், மாநகர தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். 

    மேலும் சிறுமிக்கு வந்த இன்ஸ்டாகிராம் தகவல்கள் சோதித்து பார்க்கப்பட்டது. அப்போது அந்த குறுஞ்செய்தியை அனுப்பியது, கேரளாவைச் சேர்ந்த ஒரு வாலிபர் என்பது தெரியவந்தது. எனவே போலீசார் அந்த நபரை தொடர்பு கொண்டனர். ஆனால் மறுமுனையில் போன் எடுக்கப்படவில்லை. 

    இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அதிநவீன சாதனங்களுடன் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இதில் அந்த வாலிபர் பிடிபட்டார். எனவே அவரை தனிப்படை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். 

    இதில் அவர் கொல்லம் மாவட்டம், செந்தாபூர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் லோகேஷ் (வயது 21) என்பது தெரியவந்தது. அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். 

    அப்போது அவர், “நான் சிறுமி வசிக்கும் அதே தெருவில் வசித்து வந்தேன். அப்போது அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நான் அவரை காதலிப்பதாக சொன்னேன். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். எனவே இன்ஸ்டாகிராம் மூலம் காதலிக்கும்படி நெருக்கடி கொடுத்தேன். அது இவ்வளவு பெரிய அளவில் பிரச்சனை ஆகும் என்பது எனக்கு தெரியாது” என்று தெரிவித்து உள்ளார். 

    இதனைத் தொடர்ந்து 8-ம் வகுப்பு சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் காதல் டார்ச்சர் கொடுத்ததாக, கேரள வாலிபர் லோகேசை  மாநகர தெற்கு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
    • மாணவி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி திருநெல்வேலியில் நர்சிங் படித்து வருகிறார்.

    விடுமுறை நாட்களில் அந்த மாணவி மேடைகளில் நடனமாட செல்வது வழக்கம்.இந்த நிலையில் இரணியலை சேர்ந்த ஆபினேஷ் என்ற வாலிபர் மாணவியுடன் நடன கலை நிகழ்ச்சிகளில் செண்டை வாத்தியங்கள் அடிப்பது வழக்கம்.

    அவர் மாணவியிடம் தொடர்ந்து காதல் வசனங்களை பேசி காதலிப்பதாகவும், உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். இதனை மாணவியும் நம்பி உள்ளார்.

    இதனை சாதகமான பயன்படுத்திக் கொண்ட ஆபினேஷ் குற்றாலத்தில் உள்ள ஒரு விடுதிக்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அதன்பின்னர் மாணவியுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். மாணவி அந்த வாலிபரை தேடி சென்று தன்னிடம் ஏன் பேசவில்லை என காரணம் கேட்டுள்ளார். அதற்கு உன்னை எனக்கு பிடிக்கவில்லை என அந்த ஆபினேஷ் தெரிவித்துள்ளார்.

    இதனால் மனமுடைந்து போன மாணவி மார்த்தா ண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜியோ பேபி இயக்கவுள்ள "காதல் - தி கோர்" என்ற படத்தில் மம்முட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கின்றனர்.
    • இப்படத்தின் மூலம் பல வருடங்களுக்கு பிறகு, மலையாள சினிமாவில் ஜோதிகா ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.

     

    காதல்

    காதல்

     

    தற்போது இவர் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டியுடன் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கவுள்ளார். ஜோதிகாவின் பிறந்த நாளான நேற்று முன்தினம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படத்திற்கு 'காதல் - தி கோர்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.

    ஜோதிகா

    ஜோதிகா

     

    இந்நிலையில் ஜோதிகா கடின உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "இந்த பிறந்தநாளுக்கு உடல் நலத்தையும் பலத்தையும் எனக்கு நான் பரிசாக தந்துக்கொள்கிறேன். வயது என்ன, என்னை மாற்றுவது, அந்த வயதை நான் மாற்றுகிறேன்!" என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இதுகுறித்து மார்த்தா ண்டம் போலீசில் புகார் செய்ய ப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்த அக்சயாவுக்கு, அவரது காதலன் போன் செய்து உன்னை கோவிலுக்கு அழைத்துச் செல்ல வருகிறேன். தயாராக இரு என்று கூறினாராம்.
    • ஆனால் அவர் தான் கோவிலுக்கு வர முடியாது என பதற்றத்துடன் கூறிஉள்ளார். அதன்பிறகு தான் அக்சயா தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    குழித்துறை, அக். 20-

    கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை அடுத்த மருதங்கோடு கழுவந்திட்டை காலனியை சேர்ந்தவர் ஸ்ரீ சுமா. இவரது கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார்.

    அதன் பிறகு ஸ்ரீசுமா தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது இளைய மகள் அக்சயா (வயது 16), செண்டை மேள கலைஞர்.

    இவர் திருமணம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு பேண்ட் வாத்தியம் இசைக்கும் தொழில் செய்து வந்தார். அப்போது உடன் பணி புரிந்த வாலிபர் ஒரு வருடன் காதல் ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த அக்சயா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். அவரை 108- ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அக்சயா பரிதா பமாக இறந்தார்.

    இதுகுறித்து மார்த்தா ண்டம் போலீசில் புகார் செய்ய ப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்த அக்சயாவுக்கு, அவரது காதலன் போன் செய்து உன்னை கோவிலுக்கு அழைத்துச் செல்ல வருகிறேன். தயாராக இரு என்று கூறினா

    ராம்.

    ஆனால் அவர் தான் கோவிலுக்கு வர முடியாது என பதற்றத்துடன் கூறிஉள்ளார். அதன்பிறகு தான் அக்சயா தற்கொலை முடிைவ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை ஜோதிகா.
    • இவர் தற்போது மம்முட்டியுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை ஜோதிகா. இவர் திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் மீண்டும் 36 வயதினிலே படம் மூலம் நடிக்க தொடர்கினார். தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.


    ஜோதிகா

    தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கவுள்ளார்.


    காதல் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

    இந்நிலையில் ஜோதிகாவின் பிறந்த நாளான இன்று படக்குழு டைட்டில் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு படக்குழு 'காதல்' என்று பெயர் வைத்துள்ளது. மேலும் இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.  


    • தற்கொலை வழக்கு இந்திய தண்டனை சட்டம் 306 பிரிவு (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
    • மினிபஸ் டிரைவர் சிபின் செல்போன் மூலம் சுஜிலாவிற்கு அதிக தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே காரியாவிளையை சேர்ந்த ஆனந்த் என்பவரது மனைவி சுஜிலா (வயது 28). இவர் மருந்தாளுநர் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டிற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் சுஜிலா கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சுஜிலாவுக்கு வந்த செல்போன் அழைப்புகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.

    இதில் குருந்தன்கோடை சேர்ந்த மினிபஸ் டிரைவர் சிபின் என்பவர் சுஜிலாவிற்கு அடிக்கடி செல்போனில் பேசியது தெரியவந்தது. இவர் செல்போன் மூலம் சுஜிலாவிற்கு அதிக தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து சுஜிலாவை தற்கொலைக்கு தூண்டியதாக சிபின் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுஜிலா தற்கொலை வழக்கு இந்திய தண்டனை சட்டம் 306 பிரிவு (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

    • 3 மாதங்களுக்கு முன்பு பார்த்தசாரதி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.
    • பார்த்தசாரதி தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த அரிவாளை எடுத்து சங்கீதாவை வெட்டினார்.

    கோவை

    பொள்ளாச்சி பி.நாகூரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 29).டிரைவர். இவரது மனைவி சங்கீதா (25). அவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இந்தநிலையில் பார்த்தசாரதிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு பார்த்தசாரதி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது சங்கீதா அவரை கண்டித்தார். இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. சங்கீதா கோபித்து கொண்டு எம்.ஜி.புதூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

    சம்பவத்தன்று பார்த்தசாரதி, சங்கீதாவை பார்ப்பதற்கு அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு 2 பேரும் பேசி கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த பார்த்தசாரதி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த அரிவாளை எடுத்து சங்கீதாவை வெட்டினார். பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அவர்கள் வருவதை பார்த்து பார்த்தசாரதி சங்கீதாவை மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் அங்கிருந்தவர்கள் சங்கீதாவை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து சங்கீதா வடக்கிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்தசாரதியை தேடி வருகின்றனர்.

    • போக்குவரத்து நெருக்கடியால் சந்தித்துக்கொண்ட இளம்ஜோடி காதலித்து திருமணம் வரை சென்ற ருசிகரமும் பெங்களூருவில் நடந்துள்ளது.
    • 5 ஆண்டுகளை கடந்த நிலையில் காதல் வளர்ந்து திருமணத்தில் முடிந்தது. ஆனால் மேம்பாலம் கட்டும் பணி இன்னும் முடியவில்லை.

    பெங்களூரு:

    தகவல் தொழில்நுட்ப துறையில் முக்கிய இடத்தை பிடிப்பது பெங்களூரு. இங்கு ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் உள்ளன. தினமும் அதிகாலை வேளையில் இங்குள்ள நிறுவனங்களுக்கு பணிக்கு வாகனங்களில் செல்வோர் அதிகம். இதுதவிர பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவியர், பிற பணிகளுக்கு செல்வோர் காலை வேளையில் அவசர கதியில் புறப்படுவார்கள். இதனால் பெங்களூரு நகரின் சாலைகள் எப்போதும் பரபரப்புடனே காணப்படும். அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

    இவ்வாறு போக்குவரத்து நெருக்கடியால் சந்தித்துக்கொண்ட இளம்ஜோடி காதலித்து திருமணம் வரை சென்ற ருசிகரமும் பெங்களூருவில் நடந்துள்ளது. போக்குவரத்து நெருக்கடியால் உருவான இந்த ருசிகர காதல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    ரெடிட் என்னும் ஐ.டி. பணியாளர் இதை பகிர்ந்துள்ளார். பெங்களூரு சோனி வேர்ல்ட் சிக்னல் அருகே தனது காதலியை சந்தித்துள்ளார். முதலில் நண்பர்களாக பழகிய அவர்கள் எஜிபுரா மேம்பால கட்டுமான பணியின்போது போக்குவரத்து நெருக்கடியால் நடந்தே பணிக்கு சென்றனர். அப்போது ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர். இருவரும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க மாற்று வழியில் பயணத்தை தொடர்ந்தனர். 5 ஆண்டுகளை கடந்த நிலையில் காதல் வளர்ந்து திருமணத்தில் முடிந்தது. ஆனால் மேம்பாலம் கட்டும் பணி இன்னும் முடியவில்லை என்பதை ரெடிட் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    ட்விட்டரில் இவரது பதிவை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் மற்றும் ரியாக்ட் செய்துள்ளனர். சமூக ஊடக பயனர்கள் இந்த அழகான காதல் கதையைப் பாராட்டியும், பெங்களூருவில் நெரிசலான போக்குவரத்தில் தங்கள் சொந்த மோசமான அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்கள்.

    ஏற்கனவே பெங்களூரு போக்குவரத்து நெருக்கடியை மையமாக வைத்து "சில்க் போர்டு, எ டிராஃபிக் லவ் ஸ்டோரி" என்று அழைக்கப்படும் ஒரு காதல் குறும்படம் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சண்டையில்லாத காதல் வாழ்க்கையை உருவாக்குங்கள்.
    • தன் மீது அக்கறையுள்ள ஆணைத்தான் எந்த ஒரு பெண்ணும் விரும்புவார்.

    காதல் வாழ்க்கையில் சின்ன சின்ன சண்டைகள் வருவது இயல்புதான். அத்தகைய குட்டி சண்டைகள் வராமல் இருக்க, உங்கள் காதலியை நீங்கள் நன்கு புரிந்து வைத்திருக்க வேண்டும். அத்தகைய புரிதலை உண்டாக்கும் சில விஷயங்களை உங்களுக்காக தொகுத்திருக்கிறோம். படியுங்கள். காதல் உறவுகளை நன்கு புரிந்து கொள்ளுங்கள். சண்டையில்லாத காதல் வாழ்க்கையை உருவாக்குங்கள்.

    1. குத்திக்காட்டாதீர்கள் : காதலி தப்பே செய்திருந்தாலும் எடுத்தவுடனே `எனக்குத் தெரியும் நீ இப்படித்தான் செய்வே'ன்னு என ஆரம்பிக்காதீர்கள். வேறு ஒருவர் குத்திக்காட்டுவதை விட, நீங்கள் குத்திக்காட்டுவதுதான் அவருக்கு அதிகம் வலிக்கும். உங்களைக் காதலிக்கத் தொடங்கிய பெண், இந்த உலகத்தில் வேறு யாரை விடவும் உங்களைத்தான் அதிகம் நம்புவார்.

    2. இயல்பாக இருங்கள் : உலகத்திலேயே உங்களுக்கு அதிகம் பிடித்த நபர் உங்கள் காதலியாகத்தான் இருப்பார். கல்யாணம் வரை அநியாயத்துக்கு உச்சத்துக்குப் போய் புகழ்ந்துகொண்டே இருப்பீர்கள். இப்படி இருப்பது, உங்களின் காதல் வாழ்க்கைக்கு நிச்சயமாக ஒருநாள் இடைஞ்சலை கொண்டு வரும். முடிந்தவரை இயல்பாக இருங்கள். குறிப்பாக, உங்கள் காதலியுடன் இருக்கும்போது நீங்கள் நீங்களாகவே இருங்கள். இம்ப்ரெஸ் செய்வதாக நினைத்து அளவுக்கு அதிகமாக 'ஐஸ்' வைத்தால், இதுதான் உங்கள் குணம் என நினைத்துக்கொள்வார். என்றாவது ஒருநாள் உங்களின் நிஜ முகம் தெரியவரும்போது அதிர்ச்சியடைவார். நீங்கள் நீங்களாக இருப்பதைத்தான் எந்தப் பெண்ணும் விரும்புவார்.

    3. அக்கறை : சுயமான முடிவுகளை எடுப்பதைப் பெண்கள் விரும்பினாலும், தன் மீது அக்கறையுள்ள ஆணைத்தான் எந்த ஒரு பெண்ணும் விரும்புவார். காதலி என்பவர், உங்களின் நிரந்தரத் தோழி; பிரியவே கூடாது என நீங்கள் நினைக்கும் வாழ்க்கைத்துணை. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உங்களைப் பற்றிய விஷயங்களை விட அவர் குறித்த விஷயங்களை நீங்கள் அதிகம் அறிந்து வைத்திருக்க வேண்டும். அவரின் பிறந்த நாள் தொடங்கி அனைத்து விவரங்களையும் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என விரும்புவார். அதை சரியான நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார். 'தெருவில் விற்றுக்கொண்டு போனது. உனக்குப் பிடிக்கும்னு வாங்கிட்டு வந்தேன்' என்று நீங்கள் வாங்கி கொடுப்பது உங்களுக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், அதுதான் அவருக்கு 'ஆனந்தம்'.

    4. இடைவெளி : இருவரும் எவ்வளவு அன்யோனியமாக இருந்தாலும் தனி மனித சுதந்திரம் முக்கியமானது. இருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருப்பதையும் அவர் விரும்புவார். இருவரும் இருக்கிறீர்கள். அப்போது ஒரு அழைப்பு வருகிறது. அவர் பேசி முடித்தவுடனே 'போனில் யார்?' என்று கேட்பது உங்கள் காதலிக்கு கோபம் வரவழைக்கும் கேள்வி. உங்களிடம் சொல்லவேண்டியதாக இருந்தால் அவரே சொல்வார். அந்த இடைவெளியை அவருக்கு வழங்காமல் 'யார்... என்ன?' என்பது போன்ற கேள்விகளை நீங்கள் எழுப்பினால், அதுதான் உங்கள் காதலுக்கு நீங்களே வைக்கும் 'டைம்பாம்'. உங்கள் மொபைலின் பேட்டன் லாக் முதல் மெயில் பாஸ்வேர்டு வரை காதலிக்குத் தெரிந்திருந்தாலும், அவருக்கான சுதந்திரத்தை கொடுத்தே ஆகவேண்டும்.

    • காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • திருமணமான 2-வது நாளில் புதுப்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை மீனாட்சிபுரம் அருகே உள்ள புது காலனியை சேர்ந்த 25 வயது வாலிபர் எலக்ட்ரீசினியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் போத்தனூரை சேர்ந்த பட்டதாரியான 23 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 9-ந்தேதி திருமணம் நடந்தது.

    திருமணமான 2-வது நாளில் வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமானார். அவரை அவரது கணவர் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இந்தநிலையில் கணவரின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் உன்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாததால் வீட்டை விட்டு செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என அனுப்பி இருந்தார்.

    இதனால் கணவரும், பெண்ணின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். கணவர் இதுகுறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பே அவரது வீட்டின் அருகே வசிக்கும் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இளம்பெண்ணை திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 2-வது நாளில் புதுப்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவிக்கு பேஸ்புக் மூலமாக வாலிபர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது
    • போலீசார் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.

    கோவை 

    கோவை வேலாண்டி பாளையத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் தனியார் கல்லூரியில் பி.காம் 3-வது ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு பேஸ்புக் மூலமாக வாலிபர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் 2 பேரும் நட்பாக பழகினர். பின்னர் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் தந்தைக்கு தெரிய வரவே அவர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவியை கண்டித்தார். இதனால் கடந்த சில நாட்களாக மாணவி மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் பெற்றோரிடம் தெரிவிக்காமல் தனது மொபட்டில் வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இது குறித்து மாணவியின் தந்தை சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவரது கணவர் இறந்து விட்டார். இதனையடுத்து அவர் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அப்போது இளம்பெண்ணுக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமாகி விட்டார். இது குறித்து அவரது பெற்றோர் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    பாப்பம்பட்டியை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 23). இவர் அந்த பகுதியில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல வேலைக்கு சென்றார்.

    ஆனால் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இது குறித்து கஸ்தூரியின் பெற்றோர் பீளமேடு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் மாயமான கஸ்தூரியை தேடி வருகிறார்கள். 

    • பிளஸ்-1 மாணவியை ஏமாற்றிய வாலிபர் கைது
    • போக்சோ சட்டத்தில் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவிக்கும் சேலம் மாவட்டம் நாட்டுக் கோட்டையைச் சேர்ந்த தினேஷ் (வயது 21)எலக்ட்ரீசியன் என்பவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் தினேஷ் மாணவியை சந்திப்பதற்காக கன்னியாகுமரிக்கு வந்தார். கன்னியாகுமரிக்கு வந்த தினேஷ் மாணவியை கன்னியாகுமரிக்கு வருமாறு அழைத்தார்.இதையடுத்து மாணவி பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு கன்னியாகுமரிக்கு சென்றார்.

    அங்குள்ள லாட்ஜில் மாணவியுடன் தினேஷ் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தினேஷ் இங்கிருந்து ஊருக்கு சென்று விட்டார். அதன் பிறகு மாணவியுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். பின்னர் நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறினார்.

    இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர். நாகர்கோவில் மகளிர் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்‌.தினேஷை பொறிவைத்து பிடிக்க முடிவு செய்தனர்.இதையடுத்து மாணவியை தினேஷுடன் பேசி கன்னியாகுமரிக்கு வரவ ழைத்தனர். தினேஷ் கன்னி யாகுமரிக்கு வந்தார்.

    அப்போது போலீசார் தினேஷை பிடித்தனர்.பிடிபட்ட தினேஷை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அவர் கோர்ட்டில் ஆஜர் படுத் தப்பட்டு ஜெயி லில் அடைக் கப்பட்டார். மாணவி மருத்துவ பரிசோத னைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.

    ×