என் மலர்
நீங்கள் தேடியது "மனுக்கள்"
- ஒரு வருடத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நட்டு மரமாக வளர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம்.
- திருமலைசமுத்திரம் பகுதியில் 214 வகையான பல்வேறு மரங்களை கொண்ட மிகப்பெரிய சரணாலயம்.
பூதலூர்:
பூதலூர் ஊராட்சி ஒன்றியம் கச்சமங்கலம் கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.
கூடுதல் கலெக்டர் சுகபுத்திரா வரவேற்புரை ஆற்றினார்.
முகாமில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, பூதலூர் ஒன்றிய குழு தலைவர் அரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
முகாமில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறை ரீதியான திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.
நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 347 பேருக்கு ரூ.72 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வழங்கி பேசியதாவது :-
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிராமத்தை தேர்ந்தெடுத்து மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முகாம் நடைபெற்று வருகிறது.
முகாம் நடைபெறுவதற்கு முன்னதாக இந்த கிராமத்தில் முகாமிட்டு கிராம மக்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டன. பெரும்பாலான மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்த முகாமில் கொடுக்கப்படும் மனுக்கள் மீதும் உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் வீடுகள் தோறும் மரங்கள் நடுவதை ஒரு இயக்கமாக தொடங்கி நடந்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் ஒரு வருட காலத்தில் 1 லட்சம் மரக்கன்றுகளை நட்டு மரமாக வளர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறது.
நமது கிராமத்தின் அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் 214 வகையான பல்வேறு மரங்களைக் கொண்ட மிகப்பெரிய சரணாலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அனைவரும் அதை சென்று பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.மக்கள் நேர்காணல் முகாமில் பல்வேறு துறைகளில் சார்பில் காட்சி அரங்குகள் வைக்கப்பட்டிருந்தன. முகாமில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் பூதலூர் தாசில்தார் பெர்சியா நன்றி கூறினார்.
- ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி தர வேண்டும் மற்றும் தேங்கி நிர்க்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என பல கோரிக்கை விடுத்தனர்.
- பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து மனுக்கள் பெறப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி வாணி விலாஸ் தொடக்கப்பள்ளியில் ஈசான்ய தெரு 6வது வார்டு சார்பில் வார்டு குழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. நகர மன்ற கவுன்சிலர் பாலமுருகன் தலைமை வைத்தார் கணக்கர்கள் ராஜகணேஷ் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜ சேகர் கலந்து கொண்டு பொதுமக்களின் குறை களை கேட்டறிந்தார் பின்பு பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்று க்கொண்டார் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் சீர்காழி ஈசான்ய தெருவில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் அருகே கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது உடனடியாக தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈசான்ய தெருவில் மழை நீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி செய்து தர வேண்டும் மழைக் காலம் தொடங்கி விட்டதால் கொசு மருந்து அடிக்க வேண்டும் சீர்காழி நகராட்சி பகுதியில் வார சந்தை செயல்பட்ட வந்த நிலையில் கொரோனா காலத்தில் மூடப்பட்ட நிலையில் தற்போது வரை வாரசந்தை நடைபெறவில்லை உடனடி யாக மக்கள் பயன்பெறும் வகையில் இடத்தை தேர்வு செய்து வார சந்தை அமைத்து தினந் தோறும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர் கூட்டத்தில் 6வது வார்டு பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொ ண்டனர்.
- 2636 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
- இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து சமரச நடவடிக்கைகளில் நீதிபதிகள் ஈடுபட்டனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மக்கள் நீதிமன்றம் என்ற லோக் அதாலத் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு திருவாரூர் மாவட்ட நீதிபதி சாந்தி தலைமை வகித்தார். இந்த முகாமில் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சங்கர், மாவட்ட குற்றவியல் நடுவர் பாலமுருகன், சார்பு நீதிபதி சரண்யா, திருவாரூர் குற்றவியல் நடுவர் ரெகுபதி ராஜா, கூடுதல் மகிளா நீதிமன்ற நடுவர் சிந்தா ஆகியோர் கலந்து கொண்டு மனுக்களை விசாரித்தனர்.
இந்த முகாமில் சிவில் வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், திருமண விவாகரத்து தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள் மற்றும் வங்கி சாரா வாரா கடன் வழக்குகள் உள்ளிட்ட 2636 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த முகாமில் வழக்கு முறையிட்டார் உள்ளிட்ட இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து சமரசம் நடவடிக்கைகளில் நீதிபதிகளை ஈடுபட்டனர். அதில் 1443 மனுக்களுக்கு சமரசத் தீர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த வழக்குகள் மூலம் ரூபாய் 1 கோடியே 96 லட்சத்து 8 ஆயிரத்து 835க்கான சமரசத்தொகை தொகை முறையீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.
- பல்வேறு கோரிக்கைகள் குறித்த 268 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
- சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் வழங்கல்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொது–மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டு–மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 268 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
பின்னர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் பணிக்காலத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசு–தாரர்கள் 3 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்.
தமிழக அரசால் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற மன்னார்குடி வட்டம், பாலையக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியர் ராச கணேசனை பாராட்டினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பொது–மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றார்.
- ரூ.94 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அம்மாபேட்டை:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அருந்தவபுரம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்யாண–சுந்தரம் எம்.பி., அம்மா–பேட்டை ஒன்றியக்–குழு தலைவர் கே.வீ.கலைச் செல்வன், துணை தலைவர் தங்கமணி சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் குமார், அருந்தவபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர் தலைமை வகித்து பொது–மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் வீட்டுமனை பட்டா, உதவித்தொகை, உள்பட 345 பயனாளிகளுக்கு ரூ.94 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முடிவில் கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் பாபநாசம் தாசில்தார் பூங்கொடி மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு–களை ஊரக வளர்ச்சித்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் அருந்தவபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- பட்டா, உதவித்தொகை, குடும்ப அட்டை, கல்வி கடன் என பல கோரிக்கை மனு பெறப்பட்டது.
- உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது :-
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் அவர் வருவாய் துறை சார்பில் ஓரத்தநாடு வட்டத்தைச் சார்ந்த 1 மாற்றுத்திறனாளிக்கு மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணையினை வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
- பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் மனுக்களை பெற்றார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் 263 கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்க ளிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், பட்டா பெயர் மாற்றம், குடும்ப பிரச்சனைகள் தீர்த்து வைத்தல் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன.
பின்னர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராமநாதபுரம் மாவட்ட பிரிவு விளையாட்டு விடுதியில் தங்கி பயிலும் டி.டி.விநாயகர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 38-வது மாநில அளவிலான 19 வயதுக்கு உட்பட்ட பாரதியார் தின குழு ஹாக்கி விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதையொட்டி மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து 29 மனுக்களை பெற்றார்.
- 12 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது மீதமுள்ள மனுக்கள் விரைவில் எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து 29 மனுக்களை பெற்றார்.
அதில் 12 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும் மீதமுள்ள மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
மேலும் காவல்துறையிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க இலவச எண்கள் மூலம் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமாரன், வேணுகோபால், நாகப்பட்டினம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், மற்றும் காவல் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 507 மனுக்கள் பெறப்பட்டது.
- மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கு ஆணை.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டாமாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 507 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அவர், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓரத்தநாடு வட்டத்தை சேர்ந்த 1 மாற்றுத்திறனாளிக்கு மாதாந்திர உதவித் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆணையினையும், தஞ்சாவூர் வட்டத்தை சேர்ந்த 1 பயனாளிக்கு இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கு ஆணையினையும், பெருமகளூர் இரண்டாம் நிலை பேரூராட்சி கருணை அடிப்படையில் 1 பயனாளிக்கு தூய்மை பணியாளருக்கான பணி நியமன ஆணையினையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் (வருவாய்) சுகபுத்ரா, (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கடலுார் மாவட்டத்தில் வருகிற 11-ந்தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கீழ்க்கண்ட வட்டங்களில் பொதுவிநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
- பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் அளிக்கலாம்
கடலூர்:
கடலுார் மாவட்டத்தில் வருகிற 11-ந்தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கீழ்க்கண்ட வட்டங்களில் பொதுவிநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, விருத்தாச்சலம், திட்டக்குடி, வேப்பூர், திருமுட்டம் ஆகிய வட்டா ட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்களின் மீது உடனடியாக தீர்வு காணப்படும். இம் முகாமில்கைரேகை யினை பதிவு செய்ய இயலாத 65 வயதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் 60 சதவீதம் ஊனத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நியாயவிலைக்கடைகளுக்கு சென்று பொது விநியோத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியா வசியப் பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகாரச் சான்று கோரி மனுக்களை அளிக்கலாம்.
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம். 3-ம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டு இருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கு மனுக்கள் அளிக்கலாம். பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் அளிக்கலாம். தனியார் சந்தைகளில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை குறித்து நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை முகாமில் அளிக்கலாம்.
- குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.
- கலை திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயத்தை கலெக்டர் வழங்கினார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொது–மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 235 மனுக்களை அளித்தனர்.
இந்த மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்–திறனாளிகள் நலத்துறையின் சார்பில், கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.9050 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விடுதிகளில் தங்கி பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற கலை திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன் கூடிய கேடயத்தினையும் கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசந்தர், மாற்றுத்–திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- முன்னாள் ராணுவத்தினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
- தற்பொழுது 13 மனுக்கள் வரப்பெற்றுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) ராஜசேகரன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட 14 மனுக்களில் 12 மனுக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
2 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளது. தற்பொழுது 13 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. இந்த மனுக்கள் மீது தொடர்புடைய அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து முன்னாள் படைவீரர் 2 பேருக்கு கண்கண்ணாடி வாங்குவதற்கான மானியம் தலா ரூ.4 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். இதில் முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி ஆணையர் மதியழகன், கண்காணிப்பு அலுவலர் சங்கர சுப்பிரமணியன், முன்னாள் படை வீரர் நல வாரிய செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.