search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலை"

    • பைக் மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்
    • இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெருந்துறை,

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சீனாபுரம் தலையைாம்பாளையத்தைச் சேர்ந்தவர் நல்லசாமி மகன் நடராஜன் (வயது 40). இவர் பைக் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக வேலைக்கு செல்லமால் இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று விஷ மாத்திரை சாப்பிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நடராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வாலிபர்கள்-முதியவர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் கலைஞர் நகரை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது35). இவரது மனைவி சங்கீதா. லட்சுமணன் வீட்டின் அருகே நடந்து சென்றபோது அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் தனது நண்பர்கள் தம்பிகுமார், முத்து ஆகியோருடன் சேர்ந்து அவரை வழி மறித்துள்ளார். லட்சுமணன் அவர்களிடம் ஏன் வழிமறிக்கிறீர்கள்? என கேட்டபோது தனது சகோதரியுடன் பேச கூடாது என கூறி ஆனந்த், லட்சுமணனை கண்டித் துள்ளார்.

    அதற்கு தான் பேசவில்லை என கூறி லட்சுமணன் மறுத்துள்ளார். ஆனால் ஆத்திரமடைந்த ஆனந்த் மற்றும் நண்பர்கள் லட்சு மணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த லட்சுமணன் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் வீட்டின் மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து லட்சும ணனின் தந்தை விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகாசி தனியார் கல்லூரி பகுதியை சேர்ந்தவர் கனிபாண்டி(50), ரியல்எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து கனிபாண்டியின் மனைவி லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிபட்டி தெருவை சேர்ந்தவர் சங்கர லிங்கம்(78). இவருக்கு கடந்த சில வருடங்களாக உடல்நல பாதிப்பு இருந்து வந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்துக்குமார் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
    • சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குனியமுத்தூர்,

    கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பிள்ளை யார்புரத்தை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 29). டிரைவர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த திருமணமாக இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் வாலிபருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார்.

    இதன் காரணமாக முத்துக்குமார் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழக்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அவர்கள் இது குறித்து சுந்தராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விருதுநகர் அருகே தொழிலாளி, வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • தற்கொலைக்கான காரணம் குறித்து ஆமத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மஞ்சு ஓடைப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது78). 100 நாள் திட்டத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நல பாதிப்பு இருந்து வந்தது. மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகாததால் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் இறந்தார். இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் சஞ்சய் குமார் (21). திருமணமானவர். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து சஞ்சய் குமாரின் தாய் ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிளேடால் கழுத்தை அறுத்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • தலைமறைவான பெண்ணின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் கடந்த 3 நாட்களாக தனது கண வருடன் தங்கியிருந்த பெயர் விலாசம் தெரியாத சுமார் 40 வயது மதிக்க தக்க பெண் உடல்நிலை மற்றும் மன நிலை பாதிக்கபட்ட நிலையில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் தர்காவில் உள்ள கழிப்ப றையில் பிளேடால் கழுத்து மற்றும் இடது கை மணிக்கட்டில் அறுத்து தற்கொலை செய்து கொண்டார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழக்கரை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிப்பட்டு, மேல் சிகிச்சைக் காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    ஏர்வாடி தர்கா இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் இறந்த பெண் இருந்த இடத்தின் அருகில் தங்கியி ருந்தார். கோவை காந்தி புரத்தை சேர்ந்த ஜூலி (40) என்பவரிடம் விசாரித்ததில், கடந்த 25-ந் தேதி மாலை 3 மணிக்கு இறந்த நபர் பெரிய தற்கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், அங்கிருந்த வர்கள் தடுத்ததாகவும் தெரியவந்தது. இந்த நிலை யில் தலைமறைவான பெண்ணின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • சாப்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் சாப்டூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட வி. ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி மணிமாலா (வயது 28).

    இவருக்கு கடந்த சில மாதங்களாக தொடர் வயிற்று வலி இருந்து வந்தது. மருத்துவரிடம் காண்பித்தும் குணமாகவில்லை. இந்த நிலையில் 100 நாள் வேலைக்குச் சென்ற மணிமாலா வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாயார் சுனிதாவுக்கு போன் செய்து, தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று தற்கொலை
    • ஆகாஷ் சேலையால் தூக்கு மாட்டிய நிலையில் கிடந்துள்ளார்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஆகாஷ் (வயது 19). இவர், மரைன் கோர்ஸ் படித்து வந்துள்ளார்.

    கடந்த சில நாட்களாக ஆகாஷ் வெறுப்புடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று திங்கள்நகரில் வேலைக்குச் சென்றிருந்த தனது தாயார் சுனிதாவுக்கு போன் செய்த அவர், தனக்கு வாழ பிடிக்கவில்லை தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் எனக்கூறி உள்ளார்.

    சுனிதா இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் கூறியுள்ளார். அவர்கள் வீட்டில் சென்று பார்த்த போது ஆகாஷ் சேலையால் தூக்கு மாட்டிய நிலையில் கிடந்துள்ளார்.

    அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் ஆகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சுனிதா கொடுத்த புகாரின்பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×