என் மலர்
நீங்கள் தேடியது "நிதிஷ்குமார்"
- கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஜூன் 3-ந் தேதியில் இருந்து வெகு விமரிசையாக கொண்டாட தி.மு.க. முடிவு செய்துள்ளது.
- ஜனாதிபதி பங்கேற்கும் விழாவை மிகச் சிறப்பாக நடத்துவது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஜூன் 3-ந் தேதியில் இருந்து வெகு விமரிசையாக கொண்டாட தி.மு.க. முடிவு செய்துள்ளது.
இதையொட்டி 3-ந் தேதி மாலை வடசென்னையில் தி.மு.க. தோழமை கட்சியினர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கிண்டி கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக்கைகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை ஜூன் 5-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதுடன் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையும் தொடங்கி வைக்கிறார்.
இதன் பிறகு ஜூன் 20-ந் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெறுகிறது. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் மிகச் சிறப்பாக நடத்துவதற்காக தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டத்தை கூட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுச் செயலாளர் துரைமுருகன் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி எம்.பி., இவர்களுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் டி.கே.எஸ்.இளங்கோவன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன் முத்துராமலிங்கம், திருச்சி சிவா, கும்மிடிப்பூண்டி வேணு, குத்தாலம் கல்யாணம், பூச்சி முருகன் மற்றும் 23 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந் தேதியன்று நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஜனாதிபதி பங்கேற்கும் 5-ந் தேதியன்று விழாவை மிகச் சிறப்பாக நடத்துவது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
- சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் கட்சித் தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
- தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் அவரை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவினை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் எங்கெங்கும் நடத்திடக் கூட்டம் தீர்மானிக்கிறது.
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் கட்சித் தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, பொன்முடி, கனிமொழி எம்.பி., ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா, பூச்சி முருகன் உள்பட 40-க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர்.
ஒரு நூற்றாண்டுகால திராவிட இயக்க வரலாற்றில் முக்கால் நூற்றாண்டுகாலப் பங்களிப்பாளர், அரை நூற்றாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்து தமிழ்நாட்டு அரசியலின் அச்சாணியாக செயல்பட்டவர், களம் கண்ட 13 தேர்தல்களிலும் வெற்றி கண்ட சாதனையாளர், ஐந்து முறை தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நலன் விளைவிக்கும் திட்டங்களை வழங்கியவர்.
மூத்த அரசியல் தலைவர், இலக்கியம்-கவிதை-இதழியல்-நாடகம்-திரைப்படம் எனத் தொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்த பன்முகத்திறன் கொண்ட படைப்பாளர், திருக்கு வளையில் பிறந்து-திருவாரூரில் வளர்ந்து-உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைந்த நம் 'தமிழினத் தலைவர்' கலைஞரின் நூற்றாண்டு விழா 2023 ஜூன் 3-ந் தேதி நாள் தொடங்குகிறது.
தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் அவரை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவினை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் எங்கெங்கும் நடத்திடக் கூட்டம் தீர்மானிக்கிறது.
ஜூன் 3-ந் தேதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழாப் பொதுக் கூட்டம் வட சென்னையில் நடைபெற இருக்கிறது.
ஜூன் 20-ந் தேதி திருவாரூரில் எழிலுற அமைக்கப்பட்டு உள்ள கலைஞர் கோட்டத்தினை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைத்துச் சிறப்பிக்க உள்ளார். இந்த விழா, முழுநாள் நிகழ்வாகக் கவியரங்கம், பட்டிமன்றம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற விருக்கிறது.
கலைஞரின் நூற்றாண்டு விழாவினை மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 2023 ஜூன் 3-ந் தேதி தொடங்கி, 2024 ஜூன் 3-ந் தேதி வரை ஓராண்டு காலத்திற்குத் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்திட வேண்டும்.
ஜூன் 3-ந் தேதி கிளைக் கழகங்கள் தொடங்கி, அனைத்து அமைப்புகளின் சார்பிலும் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்க ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.
கிளைக் கழகங்களில் அமைந்துள்ள நமது பழைய கொடிக் கம்பங்களைப் புதுப்பிக்க வேண்டும்.
மாவட்டங்கள் தோறும் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி-அனுமதி பெற்று, "எங்கெங்கும் கலைஞர்" என்ற அடிப்படையில், கலைஞரின் முழு உருவச் சிலை, மார்பளவு சிலைகளை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் அளவில் 70 வயதுக்கும் மேலான, கழக மூத்த முன்னோடிகளுக்குப் "கழகமே குடும்பம்" எனும் தலைப்பில், பொற்கிழி வழங்க வேண்டும். கழகத்தின் மூத்த முன்னோடிகளின் இல்லங்களுக்கு கழக மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் சென்று கவுரவிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் "என்றென்றும் கலைஞர்" எனும் தலைப்பில், கருத்தரங்கம், பொதுக் கூட்டம் போன்ற நிகழ்வுகளும் நடத்தப்பட வேண்டும்.
கணினி, இண்டர்நெட் வசதிகளுடன் கூடிய நவீனமான கலைஞர் நூற்றாண்டு படிப்பகங்களைத் தொடங்கிட வேண்டும்.
கலைஞரின் புகழை, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவர் நெஞ்சிலும் நிலைபெறச் செய்யும் வகையில் அவரது நூற்றாண்டு விழாவினை முனைப்பாகவும் பயனுள்ள வகையிலும் ஆண்டு முழுவதும் கொண்டாடுவது எனக் கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசியல் வல்லுனர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே இடத்தில் திரளும் நிகழ்ச்சி வருகிற 12-ந்தேதி நடத்தப்பட உள்ளது.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தல் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு வாழ்வா? சாவா? என்ற மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி இருக்கிறது.
மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே பாரதிய ஜனதாவை தேசிய அளவில் வீழ்த்த முடியும் என்று மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா, நிதிஷ்குமார், லாலு பிரசாத், சரத்பவார் போன்ற தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனால் மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒன்றிணைந்து செயல்படுவதில் பல மாநிலங்களில் பல்வேறு பிரச்சனைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு தீர்வு கண்டு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.
இதுவரை அவர் மம்தா பானர்ஜி, சரத்பவார், சந்திரசேகர், அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால் உள்பட பல்வேறு மாநில கட்சி தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கேவையும் அவர் சந்தித்து பேசினார். இதையடுத்து எதிர்க்கட்சிகளை ஓரணிக்கு கொண்டு வரும் முயற்சிகள் இறுதி வடிவம் பெற்று வருகின்றன.
இந்த நிலையில் அரசியல் வல்லுனர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே இடத்தில் திரளும் நிகழ்ச்சி வருகிற 12-ந்தேதி நடத்தப்பட உள்ளது. பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் பிரமாண்டமான கூட்டம் நடைபெற உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர்களை இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நிதிஷ்குமார் அழைத்து உள்ளார். மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால், சரத்பவார் உள்பட எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 16 கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பதை உறுதிபடுத்தி உள்ளன. மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் பங்கேற்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
என்றாலும் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் விஷயத்தில் சில சிக்கல்களை நிதிஷ்குமார் சந்தித்து வருகிறார். பாரத் ராஷ்டீரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவ், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரை இன்னமும் நிதிஷ்குமாரால் சமரசம் செய்ய இயலவில்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல் இருவரும் வருகிற 12-ந்தேதி பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் 12-ந்தேதி வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டதால் பாட்னாவில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கார்கேவும் ராகுலும் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் இருவரையும் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு வருமாறு நிதிஷ்குமார் பல தடவை தொடர்ந்து வலியுறுத்தி அழைத்து விட்டார். என்றாலும் கார்கே, ராகுல் இருவரும் சரியான பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது.
கார்கே, ராகுல் இருவரும் 12-ந்தேதி கூட்டத்துக்கு வரமாட்டார்கள் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை ஜூன் 23-ந்தேதி நடத்தலாம் என்று கேட்டுக்கொண்டனர்.
ஆனால் அதை எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்கவில்லை. ஜூன் 12-ந்தேதி கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டதால் கூட்டத்தை ஒத்தி வைக்க இயலாது என்று தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் ஒன்றுசேரும் முதல் ஆலோசனை கூட்டம் இது தான். முதல் கூட்டத்திலேயே காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல் இருவரும் பங்கேற்காதது நிதிஷ்குமார், சரத்பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
குறிப்பாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வரும் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ் குமார் விரக்தி நிலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேசி வருகிறார்கள்.
கார்கே, ராகுலுக்கு பதில் காங்கிரசில் உள்ள மிக முக்கிய மூத்த தலைவரை 12-ந்தேதி கூட்டத்துக்கு அனுப்புமாறு எதிர்க்கட்சிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் முதல்-மந்திரிகளில் ஒருவரை ஆலோசனை கூட்டத்துக்கு அனுப்புமாறு சரத்பவார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
எனவே காங்கிரஸ் சார்பில் ராகுலுக்கு பதில் யார் கலந்துகொள்வார்கள் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டமே ராகுலால் முழுமை பெறாமல் போய்விடுமோ என்று பேசப்படுகிறது.
குறிப்பாக மாநில கட்சிகள் வலுவாக உள்ள இடங்களில் பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டம் நடைமுறைக்கு வருமா என்பதில் சிக்கல் உருவாகி இருக்கிறது.
- பீகார் தலைநகர் பாட்னாவில் வருகிற 12-ந் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள்.
பாட்னா:
அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போட்டியிட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார்.
இது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி தலைவர்கள், கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லவும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்தவும் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தை பீகாரில் நடத்த மம்தா பானர்ஜி பரிந்துரைத்து இருந்தார். அதன்படி பீகார் தலைநகர் பாட்னாவில் வருகிற 12-ந் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் 12-ந் தேதி இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது இந்த கூட்டம் 23-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பீகார் துணை முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் இதை அறிவித்தார்.
நிதிஷ்குமாருடன் இணைந்து பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறுகையில், 'காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளனர்' என தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின்
இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து இந்த தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என தெரிகிறது.
முன்னதாக எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனை கூட்டத்தில் அந்தந்த கட்சிகளின் தலைவர்கள்தான் பங்கேற்க வேண்டும் எனவும், பிரதிநிதிகளை அனுப்புவதை ஏற்க முடியாது என்றும் நிதிஷ்குமார் கூறியிருந்தார்.
அதன்படி இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களே நேரடியாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
- பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
- பீகார் மாநிலத்தில் ரூ.6,680 கோடி மதிப்பிலான 5,061 சாலைகள் மற்றும் பாலங்கள் திட்டப்பணிகளை நிதிஷ் குமார் தொடங்கி வைத்தார்.
பாட்னா:
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது.
அதே நேரம், பா.ஜனதாவை வீழ்த்த எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக பாட்னாவில் வருகிற 23-ந்தேதி எதிர்கட்சிகளின் பிரம்மாண்ட கூட்டத்தை கூட்ட அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் பீகார் மாநிலத்தில் ரூ.6,680 கோடி மதிப்பிலான 5,061 சாலைகள் மற்றும் பாலங்கள் திட்டப்பணிகளை நிதிஷ் குமார் தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் எப்போது நடக்கும் என்று யாருக்கு தெரியும்? அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.
தேர்தல் முன்கூட்டியே (இந்த ஆண்டு) நடைபெறக்கூடும் என்பதால் பணிகளை விரைவாக செய்ய வேண்டும். திட்டங்களை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், பிரதம மந்திரியின் கிராம் சதக் யோஜனா திட்டத்தில் மத்திய அரசின் பங்கை 100 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைத்ததற்காக மத்திய அரசை நிதிஷ்குமார் தாக்கி பேசினார்.
பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று நிதிஷ் குமார் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த ஆண்டே தேர்தல் நடத்தப்படலாம் என அவர் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
- முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல் -மந்திரி தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
சென்னை:
மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. அதில் கருணாநிதியின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோட்டத்தில் கருணாநிதியின் பொதுவாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம், 11 மணிக்கு சாலமன் பாப்பையா பட்டிமன்றம் நடை பெறுகிறது.
மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தது முத்தமிழறிஞர் கலைஞரின் பேச்சே-எழுத்தே என்ற தலைப்பில் நடைபெறும் பட்டிமன்றத்தில் புலவர் சண்முக வடிவேல், கவிதா ஜவகர், எஸ்.ராஜா, எம்.ராமலிங்கம், மாது, பாரதி பாஸ்கர் ஆகியோர் பேசுகிறார்கள்.
மதியம் 3.30 மணிக்கு பாட்டரங்கம் நடைபெறுகிறது. அதன் பிறகு கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலையை திறந்து வைத்து தலைமை உரை நிகழ்த்துகிறார்.
கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்-மந்திாி நிதிஷ் குமார் திறந்து வைத்து பேசுகிறார். முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல் -மந்திரி தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவே திருவாரூர் சென்று தங்கியிருக்கிறார்.
பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நாளை காலை ஐதராபாத் வழியாக திருச்சி விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து திருவாரூருக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். மதியம் சுமார் 2.30 மணிக்கு சென்றடைந்ததும் விழா நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளன.
நாளை மாலை 4.30 மணிக்குள் விழா முடிந்ததும் அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருச்சி சென்று அதன் பிறகு விமானம் மூலம் பீகார் சென்றடைகிறார்.
இதையொட்டி விழா நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் நகரமும் விழாக் கோலம் பூண்டுள்ளது.
- தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
- முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்கிறார்.
திருவாரூர்:
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
அதில் கருணாநிதியின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோட்டத்தில் கருணாநிதியின் பொதுவாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 7,000 சதுர அடியில், 12 கோடி ரூபாய் மதிப்பில் கலைஞர் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில், பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் கலைஞர் கோட்டத்தை இன்று திறந்து வைக்கிறார். பீகார் மாநில துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் முத்துவேலர் நூலகத்தை திறந்து வைக்கிறார். கருணாநிதியின் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
- சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலையை திறந்து வைத்து தலைமை உரை நிகழ்த்துகிறார்.
மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோட்டம் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக உள்ளது.
இதற்காக ரூ.12 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியின் பொது வாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவையும் இதில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவை சிறப்பாக நடத்துவதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பே திருவாரூர் வந்து விட்டார். நேற்று விழா ஏற்பாடுகளை கவனித்தார். இன்று காலையிலும் கலைஞர் கோட்டம் நிகழ்ச்சியை காண வந்திருந்தார்.
காலை 10 மணிக்கு திறப்பு விழா நிகழ்ச்சி மங்கள இசையுடன் கோலாகலமாக தொடங்கியது. முதலில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.
இதில் கபிலன், பா.விஜய், ஆண்டாள் பிரியதர்ஷினி, தஞ்சை இனியன் ஆகியோர் கவிதை வாசித்து சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
இதன் பிறகு சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தது முத்தமிழறிஞர் கலைஞரின் 'பேச்சே' என்ற தலைப்பில் புலவர் சண்முக வடிவேல், கவிதா ஜவகர், ராஜா ஆகியோர் பேசினார்கள். 'எழுத்தே' என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம், மாது, பாரதி பாஸ்கர் ஆகியோர் பேசினார்கள்.
நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் வந்து பார்த்து ரசித்தார். அவருடன் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமைக்கழக நிர்வாகிகள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் அமர்ந்து பார்வையிட்டனர்.
காலை நிகழ்ச்சிகள் முடிந்ததும் உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் 3.30 மணிக்கு கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலையை திறந்து வைத்து தலைமை உரை நிகழ்த்துகிறார்.
கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் வரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், சஞ்சய்சிங் எம்.பி. ஆகிய இருவரும் பீகாரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவாரூர் செல்கின்றனர். அவர்களுடன் திருச்சி சிவா எம்.பி.யும் செல்கிறார்.
இதனால் கலைஞர் கோட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று மாலை திறக்கப்படுகிறது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த விழாவில் நிதிஷ் குமார் திடீரென கலந்து கொள்ளாதது தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- நாளை பிற்பகல் பாட்னாவில் உள்ள முக்கிய அரங்கில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
- எதிர்க்கட்சிகள் திட்டம் நாளைய கூட்டத்துக்கு பிறகுதான் எப்படி இருக்கும் என்பது தெரியவரும்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை எதிர்க்கட்சிகள் இடையே சுமூகமான ஒருமித்த கருத்து உருவாகவில்லை.
இந்த நிலையில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நாளை (23-ந் தேதி) எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பா.ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பாட்னாவுக்கு வரும் எதிர்க்கட்சி தலைவர்களை வரவேற்க நகரம் முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சி தலைவர்களில் தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி ஆகியோர் இன்று இரவுக்குள் பாட்னா சென்று சேர உள்ளனர். அவர்கள் தங்குவதற்கு பாட்னாவில் பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் நாளை காலை பாட்னா செல்ல உள்ளனர். பெரும்பாலான தலைவர்கள் நாளை மதியத்துக்குள் பாட்னா சென்று சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் தங்கி ஓய்வு எடுப்பதற்காக பாட்னாவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் 17 அறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இது தவிர நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நாளை பிற்பகல் பாட்னாவில் உள்ள முக்கிய அரங்கில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்கான வியூகங்கள் வகுக்கப்பட உள்ளன. குறிப்பாக தேசிய கட்சிகளுடன் மாநில கட்சிகள் தொகுதிகளை விட்டுக் கொடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும் பா.ஜனதாவுக்கு எதிராக 450 தொகுதிகளில் பொது வேட்பாளர்களை நிறுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. இவை தவிர எதிர்க்கட்சிகள் அனைத்துக்கும் சேர்த்து பொதுவான தேர்தல் திட்டங்கள் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் பா.ஜனதாவை எதிர்த்து முதல் முறையாக நாளை கூடுகின்றன. இந்த கூட்டத்தில் பொதுத் திட்டம் கொண்டுவர இயலுமா என்பதில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் எதிர்க்கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து உருவாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மாநில கட்சிகள் செல்வாக்குள்ள தங்களது தொகுதிகளை விட்டுக் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும் எதிர்க்கட்சிகளில் பல வலுவான தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே எதிர்க்கட்சிகள் திட்டம் நாளைய கூட்டத்துக்கு பிறகுதான் எப்படி இருக்கும் என்பது தெரியவரும்.
- பீகாரில் பாலம் இடிந்து விழுந்ததை குற்றம் சாட்டியும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
- போலீசார் உடனடியாக அந்த போஸ்டர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பெங்களூரு:
அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் ஈடுபட்டார்.
இதை தொடர்ந்து அவரது மாநிலமான பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் கடந்த மாதம் 23-ந் தேதி நடந்தது. எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதன் 2-வது நாள் ஆலோசனை இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் எதிர்க் கட்சிகள் கூட்டம் நடைபெறும் பெங்களூருவில் நிதிஷ்குமாரை குறி வைத்து போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. நிலையற்ற பிரதமர் வேட்பாளர் என்று அவரை விமர்சனம் செய்து சுவ ரொட்டிகள் காணப்பட்டது. மேலும் பீகாரில் பாலம் இடிந்து விழுந்ததை குற்றம் சாட்டியும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
ஒரு போஸ்டரில் பீகார் முதல்-மந்திாி நிதிஷ்குமாரை வரவேற்கிறோம். சுல்தான் கஞ்ச் பாலம் நிதிஷ்குமாரின் பரிசு. பாலம் தொடர்ந்து இடிந்து வருகிறது. பீகாரில் உள்ள பாலங்கள் அவரது ஆட்சியை தாங்க முடியாத நிலையில் எதிர்க் கட்சிகளை அவர் வழி நடத்துவார் என்று நம்புங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு போஸ்டரில் நிலையற்ற பிரதமர் போட்டியாளர். நிதிஷ்குமாருக்கு பெங்களூருவில் சிவப்பு கம்பளம் விரிக்கிறது. சுல்தான் கஞ்ச் பாலம் இடிந்த முதல் தேதி ஏப்ரல் 2022. சுல்தான் கஞ்ச் பாலம் இடிந்த 2-வது தேதி ஜூன் 2023 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
எதிர்க் கட்சிகள் கூட்டம் நடைபெறும் பகுதி அருகே இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் நிதிஷ்குமாரை குற்றம் சாட்டும் இந்த சுவரொட்டி கள் முக்கிய போக்குவரத்து சந்திப்பில் காணப்பட்டது.
போலீசார் உடனடியாக அந்த போஸ்டர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். போஸ்டர்களை ஒட்டியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது.
- முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதை எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.
பாட்னா:
பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. அதற்காகத்தான் நாங்களும் காத்திருக்கிறோம்.
எவ்வளவு சீக்கிரம் தேர்தலை நடத்துகிறீர்களோ, அவ்வளவு நல்லது. தேர்தலுக்கு நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம். முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தல் நடந்தால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். மக்களுக்காக உழைத்து வருகிறோம், தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வோம்.
சாலைகள், பாலங்கள், மின்சாரம், குடிநீர் வசதிகளை அமைப்பது முதல் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் வரை மாநிலத்தில் பல பணிகளை செய்துள்ளோம். வாக்காளர்களே இறுதி முடிவை எடுப்பார்கள் என தெரிவித்தார்.
- பீகாரில் கருத்தரிப்பு சதவீதம் குறைவு குறித்து மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் கருத்து.
- நிதிஷ்குமார் கருத்து மிகவும் இழிவானது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
வாஷிங்டன்:
பீகார் சட்டசபையில் பெண் கல்வியின் பங்கு மற்றும் மக்கள்தொகை கட்டுப்பாட்டில் பெண்களின் பங்கு ஆகியவற்றை பற்றி முதல் மந்திரி நிதிஷ்குமார் நேற்று முன்தினம் பேசினார். அப்போது சர்ச்சைக்குரிய வகையில் சில விஷயங்களைக் குறிப்பிட்டது உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
அவர், குழந்தைகள் பிறப்புக்கான கட்டுப்பாட்டில் பெண் கல்வியின் பங்கு பற்றி அவையில் பேசும்போது, கர்ப்பிணியாகாமல் தவிர்க்கும் வகையில் எப்படி பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என கல்வியறிவு பெற்ற ஒரு பெண், தன்னுடைய கணவரிடம் கூறி, உறுதி செய்து கொள்வார் என்றார். இதனை விவரித்து பேசும்போது, கைகளை அசைத்து, அதற்கான செய்கைகளை வெளிப்படுத்தியதுடன், மிகைப்படுத்தியும் பேசினார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது.
அவரது பேச்சுக்கு பா.ஜ.க. சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தேசிய மகளிர் ஆணையமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிதிஷ்குமார் உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தியது.
இதையடுத்து, பீகார் சட்டசபை நேற்று கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். இதனால் எனது பேச்சுகளைத் திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என நிதிஷ்குமார் தெரிவித்தார்.
இந்நிலையில, நிதிஷ்குமார் விவகாரம் தொடர்பாக அமெரிக்க பாடகி மேரி மில்பென் எக்ஸ் சமூக வலைதளத்தில், பீகார் முதல் மந்திரிக்கான வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவேன் என தைரியமுள்ள பெண் ஒருவர் முன்வந்து அறிவிப்பார் என நான் நம்புகிறேன். நான் ஓர் இந்திய குடிமகளாக இருந்திருப்பேன் என்றால் பீகாருக்குச் சென்று முதல் மந்திரிக்கான தேர்தலில் போட்டியிடுவேன். பீகாரை வழிநடத்த பெண் ஒருவருக்கு பா.ஜ.க. அதிகாரமளிக்க வேண்டும். அதுவே பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் வளர்ச்சிக்கான உண்மையான உணர்வாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.