search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டல் உரிமையாளர்"

    • தினமும் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எங்களது ஓட்டலில் உணவு சாப்பிட வருவது வழக்கம்.
    • சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரி முத்தமிழை தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது.

    தருமபுரி:

    தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என தினந்தோறும் 3000-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது.

    இந்த போலீஸ் நிலையத்தில் போலீசார் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரி தினமும் மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஓட்டலில் உணவு சாப்பிடுவது வழக்கம். அவ்வாறு சாப்பிடும் உணவிற்கு கையில் உள்ள பணத்தை கொடுத்துவிட்டு மீதியை பின்பு தருகிறேன் என கூறிவிட்டு சென்று விடுவார் என கூறப்படுகிறது.

    இதேபோன்று நேற்று சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்காமல் பின்பு தருவதாக கூறி உள்ளார். அதேபோல் மாலை உணவு சாப்பிட வந்த காவேரி உணவை சாப்பிட்டுவிட்டு சென்றபோது கடை உரிமையாளர் முத்தமிழ் நேற்று சாப்பிட்ட உணவிற்கும் சேர்த்து பணம் கேட்டு உள்ளார். இதனால் கோபமடைந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரி முத்தமிழை தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது.

    மேலும் பணத்தை தூக்கி வீசிவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. மேலும் ஆத்திரமடைந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரி தனது காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி அடிக்க சென்ற சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது:-

    தினமும் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எங்களது ஓட்டலில் உணவு சாப்பிட வருவது வழக்கம். இவர் உணவு சாப்பிட்டு விட்டு பாக்கி வைத்து விட்டு சென்று விடுவார். மேலும் சாப்பிட்ட உணவிற்கு முழு தொகையை தராமல் கையில் இருப்பதை மட்டும் கொடுத்துவிட்டு செல்வார்.

    நேற்று முன்தினம் சாப்பிட்ட உணவிற்கும் சேர்த்து பணம் கேட்டதற்காக தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி என்னை தாக்க வந்தார்.

    இது குறித்து தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்க உள்ளேன் என தெரிவித்தார்.

    இந்நிலையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷூவை கழற்றி ஓட்டல் உரிமையாளரை தாக்க முயன்ற  சி.சி.டி.வி. காட்சி வெளியானதை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின்பேரில் தருமபுரி உதவி போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் விசாரணை நடத்தினர்.

    சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரியை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி மகேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    • ஆனந்த் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வைராபாளையம் வாட்டர் ஆபீஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆ னந்த் (42). இவரது மனைவி பிரேமா (32). இவர்கள் அதேபகுதியில் கடந்த 13 வருடங்களாக ஓட்டல் வைத்து நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஒரு வருடத்துக்கு முன் ஆனந்துக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு அதற்காக மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 4 நாள்களாக ஆனந்த மிகவும் சோர்வாக இருந்துள்ளார். மனைவி பிரேமா அவரிடம் மருத்துவமனைக்கு போகலாம் என கேட்டதற்கு வேண்டாம் என ஆனந்த் கூறிவிட்டார்.

    இந்த நிலை யில் சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு வழக்கம் போல ஓட்டலை பூட்டி விட்டு அங்கேயே கணவன்-மனைவி 2 பேரும் படுத்து தூங்கியுள்ளனர்.

    தொடர்ந்து அதிகாலை 4.30 மணிய ளவில் பிரேமா கண் விழி த்து பார்த்தபோது அருகில் ஆனந்த் இல்லாததால் பக்கத்து அறைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ஆனந்த் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலை மை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ஆனந்த் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
    • கணேசன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை

    நாகர்கோவில் :

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 54). இவர் ஏர்வாடி பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். இன்று காலை இவர் வள்ளியூர் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக கிடந்த கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணேசன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சேலம் அருகே பரோட்டா கேட்டு ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க. கவுன்சிலர் மகன் உள்பட 4 பேர் மீது புகார் செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் கோணகாபாடி பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. தனியார் பஸ் டிரைவர். இவரது மகன் செந்தில்குமார். இவர் சேலம் மெயின் ரோடு தண்டுமாரியம்மன் கோவில் அருகே கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஓட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த திங்கட்கிழமை தாரமங்கலம் நகராட்சி 6-வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வி மகன் அரவிந்த் என்பவர் செந்தில்குமார் கடைக்குச் சென்று பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது பரோட்டா இலவசமாக கேட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சாப்பிட்டு விட்டு சென்ற அரவிந்த் அடுத்த நாள் மது போதையில் கூட்டாளிகள் 4 பேருடன் செந்தில்குமாரின் ஓட்டலுக்கு வந்து தகராறில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கினர்.

    இதில் செந்தில்குமாரின் கண் மற்றும் நுரையீரல் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதுகுறித்து செந்தில்குமார் கூறும்போது திமுக கவுன்சிலர் செல்வி மகன் அரவிந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் இலவசமாக பரோட்டா கேட்டு என்னை தகாத வார்த்தையில் பேசி அடித்தனர். இதுபற்றி நான் போலீசில் கொடுத்த வழக்கை திரும்பப் பெறுமாறும், இல்லை என்றால் ஓட்டலை நடத்த முடியாது எனக் கூறி மிரட்டி வருகின்றனர். இதனால் மீண்டும் கடை நடத்த பயமாக உள்ளது. எனவே காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து மீண்டும் கடையை நடத்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.

    ×