என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "3 வாலிபர்கள் கைது"
- போதை மாத்திரைகளாக விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது.
- இதையடுத்து வசந்த், கவுதம், அமீர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு ஈ.பி.பி. நகரில் போதை மாத்திரை விற்ப னை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தக வல் கிடைத்தது. தகவலின் பேரில் ஈரோடு மதுவிலக்கு போலீ சார் அப்பகுதியில் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது ஈ.பி.பி. நகர் நால்ரோடு பகுதியில் சந்தேகப்படும்படியாக 3 வாலிபர்கள் நின்று கொ ண்டிருந்தனர். இதையடுத்து அந்த வாலிபர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் ஈரோடு மாணிக்க ம்பாளையத்தை வசந்த் (26), தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கவுதம்(26), ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த அமீர் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.
அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்றி போதை மாத்திரைகளாக விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து வசந்த், கவுதம், அமீர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 420 வலி நிவாரண மாத்திரைகளையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கொடைக்கானலில் மோட்டார் சைக்கிள்கைள திருடிய 3 மதுரை வாலிபர்கள் கைது
- பைக் திருடிய மதுரை வாலிபர்கள் கைது
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன் லாஸ்காட் ரோடு பகுதியில் சலேத் ஆண்டனி மேரியோ என்பவரது பல்சர் இருசக்கர வாகனம் திருடு போனது. அதேநாளில் பெருமாள்மலை–ப்பகுதி–யிலும் ஒரு பல்சர் வாகனம் திருடுபோனது. இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இதனையடுத்து கொடைக்கானல் டி.எஸ்.பி. சீனிவாசன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் மதுரையை சேர்ந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 பல்சர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை கரிசல்குளத்தை சேர்ந்த ஆதிகேசவன், திருப்பரங்குன்றத்தை சேர்ந்த நவீன், கவிதாநகரை சேர்ந்த முத்துராமலிங்கம் ஆகிய 3 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அைடத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்