என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜி 20 மாநாடு"
- தமிழகத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இசைக்கப்பட்ட தவில் உலக தலைவர்கள் மட்டுமின்றி மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் மெய்மறக்க செய்தது.
- சபாக்களில் மட்டுமே ஒலித்த இசை சர்வதேச மாநாட்டில் ஒலித்துள்ளது.
சிவகங்கை:
சர்வதேச நாடுகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ஜி 20 மாநாடு டெல்லியில் இரண்டு நாட்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, கனடா உள்ளிட்ட உலக நாடுகளில் தலைவர்கள் பங்கேற்றதன் மூலம் இந்தியாவின் பெருமை உலகறிய செய்துள்ளது.
முன்னதாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உலக தலைவர்களை மகிழ்விக்கும் வண்ணம் அளித்த விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டார். இதையொட்டி விருந்தில் பங்கேற்றவர்களின் நாவின் சுவைக்கு ஏற்ப பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. அதேபோல் செவிக்கு விருந்தளிக்கும் வகையில் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன.
பல்வேறு நாடுகள், பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலான இசை நிகழ்ச்சிகள் ஜி 20 மாநாட்டை கலகலக்க செய்தது. உலக தலைவர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் நாட்டின் பாதுகாப்பு, நலன், எதிர்காலம் மட்டுமின்றி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இதில் மேற்கத்திய இசைகள் எப்போதும் முதலிடம் பிடித்து வந்த நிலையில், அந்தந்த நாட்டின், மாநில இசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இதில் தமிழகத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இசைக்கப்பட்ட தவில் உலக தலைவர்கள் மட்டுமின்றி மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் மெய்மறக்க செய்தது. இதனை இசைக்க சிவகங்கையை சேர்ந்த மணி கண்டன் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
தமிழகத்தின் இசை பாரம்பரியத்தை உலகறிய செய்யும் வகையில் சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் பிள்ளைவயல் காளியம்மன் நகரை சேர்ந்த தவில் வித்வான் மணிகண்டன் (வயது 46) மற்றும் நாதஸ்வர கலைஞரான திருவாரூரை சேர்ந்த அரசு இசைப்பள்ளி நாதஸ்வர ஆசிரியர் இளையராஜா ஆகியோரை மத்திய அரசு சார்பில் அதிகாரிகள் டெல்லி அழைத்து சென்றனர்.
இவர் மும்பை உட்பட பல்வேறு நகரங்களில் நடைபெறும் கான சபா, மார்கழி உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தவில் இசைத்து வருகிறார். மேலும் புதுடெல்லியில் உள்ள சங்கீத நாடக சபாவிலும் உறுப்பினராக உள்ளார்.
இதனை அறிந்தே அவர் ஜி 20 மாநாட்டிற்கு அழைக்கப்பட்டு இருந்தார். தமிழகத்தின் அடையாளமான தவிலை மணிகண்டனும், மற்றொரு கலைஞர் நாதஸ்வரத்தையும் இசைத்து தமிழகத்தின் இசை பாரம்பரியத்தை உலக தலைவர்களின் செவிகளுக்கு விருந்தாக்கினர்.
இதுபற்றி மணிகண்டன் 'மாலை மலர்' நிருபரிடம் கூறுகையில், உலக தலைவர்கள் பங்கேற்று இந்தியா தலைமையேற்று நடத்திய ஜி 20 மாநாட்டில் ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரிய இசையை ஒலிக்க செய்யும் வகையில் 75 இசை கலைஞர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இதில் அவர்கள் அந்தந்த மாநில இசை கருவிகளுடன் வந்திருந்தனர்.
மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை விருந்து நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட ஒலியானது உலக தலைவர்களுக்கு பெரிதும் வியப்பை ஏற்படுத்தியது. அதிலும் நம்முடைய நாதஸ்வரம், தவில் இசையை அவர்கள் அனைவரும் மெய்மறந்து கேட்டு ரசித்தனர். நம்முடைய நாதஸ்வரம், தவில் இசை சுமார் அரை மணி நேரம் இசைக்கப்பட் டது.
அந்த நேரத்தில் நாங்கள் காவடி சிந்து, பஜனை பாடல்கள், தமிழக கலாசார பாடல்கள், மாலை மாற்றுதல் உள்ளிட்டவைகளை இசையாக வடித்தோம். இது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. சபாக்களில் மட்டுமே ஒலித்த இசை சர்வதேச மாநாட்டில் ஒலித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜி-20 மாநாடு நடத்த பிரமாண்ட மாநாட்டு கட்டிடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
- இந்திய பிரதமர் மோடியுடன் அதிபர் ஜோபைடன் இரு தரப்பு சந்திப்பில் பங்கேற்கிறார்.
வாஷிங்டன்:
ஜி-20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு வருகிற 9 மற்றும் 10-ந்தேதி இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.
ஜி-20 மாநாடு நடத்த பிரமாண்ட மாநாட்டு கட்டிடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பங்கேற்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் வருகிற 7-ந் தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ஜி-20 மாநாட்டுக்கு முன்பாக 8-ந்தேதி ஜோபைடன் இந்திய பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அதிபர் ஜோபைடன் 7-ந் தேதி இந்தியாவுக்கு வருகிறார். 8-ந்தேதி இந்திய பிரதமர் மோடியுடன் அதிபர் ஜோபைடன் இரு தரப்பு சந்திப்பில் பங்கேற்கிறார்.
9 மற்றும் 10-ந்தேதிகளில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கிறார். அதில் அதிபர் ஜோபைடன், மற்ற உறுப்பு நாட்டு தலைவர்கள், தூய்மையான எரிசக்தி மாற்றம், காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகளை சமாளிப்பதற்காக கூட்டு முயற்சிகள் குறித்து விவாதிப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.
ஜோபைடன்-மோடியின் இரு தரப்பு பேச்சு வார்த்தையில் இரு நாட்டு வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சீனாவின் புதிய வரைபடம் அபத்தமானது.
- இந்திய நிலப்பரப்பில் 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் சட்ட விரோதமாக சீனா ஆக்கிரமித்துள்ளது.
புதுடெல்லி:
சீனா ஆண்டுதோறும் புதிய வரைபடத்தை வெளியிட்டு வருகிறது. நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடத்தில் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளை உரிமை கொண்டாடி வெளியிட்டது. இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
சீனா வெளியிட்டுள்ள இந்த வரைபடம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி இது தொடர்பாக கூறியதாவது:-
சீனாவின் புதிய வரைபடம் அபத்தமானது. இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இந்திய நிலப்பரப்பில் 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் சட்ட விரோதமாக சீனா ஆக்கிரமித்துள்ளது.
டெல்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டுக்கு சீன அதிபர் ஜின் பிங்க் வருகை தருகிறார். அவருக்கு விருந்தளிப்பது சரியானதா? என்பதை நரேந்திர மோடி அரசு சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது
- அமெரிக்க அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்
ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்தி வருகிறது. 200 மாநாடு 32 இடங்களில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்திலும் மாநாடு நடைபெற்றது. உச்சி மாநாடு டெல்லியில் அடுத்த மாதம் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
இதனால் டெல்லி நகரை அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சுவர்கள் அனைத்திலும் வண்ண வண்ண படங்கள் வரைதல், மரங்கள் வளர்த்தல், பூச்செடி வைத்தல், சாலைகள் சீரமைப்பு போன்ற பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
டெல்லி என்றாலே மத்திய அரசுக்கும், அம்மாநில அரசுக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. தற்போது டெல்லியை அழகுப்படுத்துவதிலும் பா.ஜனதாவுக்கும், ஆம்ஆத்மிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
டெல்லி மாநில அரசின் செலவில்தான் நகரம் புதுப்பொழிவாக ஜொலிக்க இருக்கிறது என்கிறது ஆம் ஆத்மி கட்சி. ஆனால், மத்திய அரசுதான் பணம் செலவழிக்கிறது என்கிறார் டெல்லி மாநில பா.ஜனதா தலைவர். இதனால் டெல்லியை அழகுபடுத்தும் பணியில் பணம் செலவழிப்பது யார்? என்பதில் வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் டெல்லி மாநில பா.ஜனதா தலைவர் விரேந்த்ரா சச்வாடா கூறுகையில் ''டெல்லியில் ஜி-20 மாநாட்டிற்காக, நகரை அழகுப்படுத்தும் பணிகளை டெல்லி அரசு மற்றும் டெல்லி மாநகராட்சி செய்து வருகின்றன. ஆனால், இவை அனைத்தும் மத்திய அரசு வழங்கும் நிதியில் இருந்து செய்யப்படுகிறது'' என்றார்.
இதற்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் ''புதுடெல்லி நகராட்சி கார்பரேசன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றின் சாலைகள் தொடர்பான திட்டத்திற்கு மட்டும் மத்திய அரசு பணம் அளித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியால் செய்த வேலைகளை பா.ஜதான செய்தது என்று சொல்வது அதிர்ச்சி அளிக்கிறது. பொதுப்பணித்துறை சாலைகளுக்கு அனைத்து பணமும் டெல்லி அரசின் பொதுப்பணித்துறையால் செலவழிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எம்.சி.டி. சாலைகள் பணிக்கான செலவை எம்சிடி செய்துள்ளது'' என பதிலடி கொடுக்கப்பட்டது.
இதற்கு சச்வாடா பதில் கூறுகையில் ''டெல்லியை அழகுப்படுத்துவதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய அரசு செய்துள்ளது. மத்திய அரசு செய்த வேலைகளை ஆம் ஆத்மி மற்றும் கெஜ்ரிவால் மந்திரிகள், தாங்கள் செய்ததாக பெயரை தட்டிச்செல்ல பார்ப்பது அவமான செயல்'' என்றார்.
மேலும், "டெல்லியை அழகுப் படுத்துவதற்கான ஒரு திட்டத்தை செய்ததாக கெஜ்ரிவால் அரசால் சொல்ல முடியுமா?" என சாவல் விட்டுள்ளார்.
- இந்தியாவில் நடைபெறும் ஜி.20 மாநாட்டில் பங்கேற்க வருமாறு மோடி அழைப்பு விடுத்தார்.
- ஜோபைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியா வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
ஜி.20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடக்கிறது.
ஜி.20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் செப்டம்பர் 7-ந்தேதி இந்தியா வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.20 மாநாட்டில் பங்கேற்கும் அவர் 10-ந்தேதி அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறார்.
ஜோபைடன் தனது இந்திய பயணத்தில் பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழச்சிகளில் பங்கேற்றார். அதிபர் ஜோபைடனுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இந்தியாவில் நடைபெறும் ஜி.20 மாநாட்டில் பங்கேற்க வருமாறு மோடி அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஜோபைடன் ஏற்று கொண்டார்.
இந்தியாவில் ஜி.20 மாநாட்டில் பங்கேற்பதை மிகவும் ஆவலுடன் எதிர் நோக்கி இருப்பதாக ஜோபைடன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோபைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியா வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் சிவில் விமான பயணத்தில் பெண் விமானிகள் அதிக சதவீதத்தில் உள்ளனர்.
- பெண் அதிகாரிகள் செயல் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
புதுடெல்லி:
ஜி 20 அமைப்பின் கூட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று பெண்கள் அதிகாரம் குறித்த ஜி 20 அமைச்சர்கள் மாநாடு குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்தரில் நடந்தது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பெண்களின் பொருளாதார வலுவூட்டல் வளர்ச்சியை தூண்டுகிறது. அவர்களின் கல்விக்கான அணுகல் உலகளாவிய முன்னேற்றத்திற்கு உந்துதலாக உள்ளது. பெண்களின் தலைமையானது உள்ளடக்கத்தை வளர்க்கிறது. அவர்களின் குரல்கள் நேர்மறையான மாற்றத்தை ஊக்குவிக்கிறது.
பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் இந்தியா முன்னேறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளில் 46 சதவீதம் பேர் பெண்கள். இந்தியாவில் உள்ள செவிலியர்கள் மற்றும் பேறுகாலப் பணியாளர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள் ஆவார்கள்.
பெண்களை மேம்படுத்துவதற்கான மிகச்சிறந்த வழி பெண்கள் தலைமையிலான மேம்பாட்டு அணுகு முறையாகும். இந்த நிலையில் இந்தியா முன்னேறி வருகிறது. பெண்கள் செழிக்கும்போது உலகம் செழிக்கும்.
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவே ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார். அவர் பழங்குடி பின்னணியில் இருந்து வந்தவர். தற்போது உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை வழி நடத்துகிறார். உலகின் 2-வது பெரிய பாதுகாப்பு படையின் தளபதியாக பணியாற்றுகிறார்.
இன்று ஆண்களை விட பெண்களே உயர் கல்வியில் அதிகமாக சேருகின்றனர். இந்தியாவில் சிவில் விமான பயணத்தில் பெண் விமானிகள் அதிக சதவீதத்தில் உள்ளனர். மேலும் இந்திய விமானப்படையில் பெண் விமானிகள், போர் விமானங்களை இயக்குகிறார்கள். பெண் அதிகாரிகள் செயல் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
இவ்வாறு மோடி கூறினார்.
- ஜி20 கல்வி கருத்தரங்கு சென்னையில் 3 நாட்கள் நடைபெறுகிறது.
- இதையடுத்து சென்னையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் நாளை முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை 3 நாட்கள் ஜி-20 கல்வி செயற்குழு மாநாட்டின் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சிகள் மகாபலிபுரத்திலும் நட க்கிறது.
இந்த மாநாட்டு நிகழ்ச்சியில் 29 வெளிநாடுகள் மற்றும் 15 பன்னாட்டு நிறுவனங்களின்பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த பிரதிநிதிகள் சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல், தாஜ் கன்னிமாரா, ஹயாத், தாஜ் கிளப் ஹவுஸ் ஆகிய ஓட்டல்களில் தங்குகிறார்கள். ஐ.ஐ.டி.ஆராய்ச்சி பூங்காவில் நடைபெறும் கருத்தரங்கிலும் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில், மேற்கூறப்பட்ட சென்னை நகரில் உள்ள எல்லைப்பகுதியும்,மேற்படி பிரதிநிதிகள் செல்லும் வழித்தடங்களும் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இந்த எல்லைப்பகுதியில் மேற்கூறப்பட்ட 3 நாட்களும் டிரோன்கள் மற்றும் ஆள் இல்லா இதர வான்வெளி வாகனங்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என சென்னை போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்