என் மலர்
நீங்கள் தேடியது "கலெக்டர் திடீர் ஆய்வு"
- அதிகாரிகள் பலர் உடன் சென்றனர்
- 156 விவசாயிகள் பதிவு செய்து டோக்கன் பெற்றுள்ளனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து சரியான அளவு நெல்களை கொள்முதல் செய்யப்படு கிறதா? அவர்களுக்கான நெல் விலை உடனுக்குடன் வழங்கப்படுகின்றதா என்பது குறித்து கலெக்டர் வளர்மதி நேற்று நெல் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
நெமிலி வட்டம் பனப்பாக்கம் பேரூராட்சி அடுத்த குச்சிதோப்பு பகுதியில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வரும் நெல் மூட்டைகள் குறித்து கேட்டறிந்தார். மையத்தில் 156 விவசாயிகள் பதிவு செய்து டோக்கன் பெற்றுள்ளனர்.
இதுவரையில் 103 விவசாயிகள் நெல்லை கொள்முதல் நிலையங்களில் வழங்கி உள்ளனர். 40 கிலோ மூட்டைகள் விதம் எடை போட்டு 6,051 நெல் மூட்டைகள் இதுவரையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர். பின்னர் விவசாயிகள் தங்கள் விவரங்களை பதிவு செய்து நெல் மூட்டைகள் வழங்கிய பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதில் அதிக நெல் மூட்டைகள் போட்ட விவசாயி மேலப்புலம் புதூர் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த விவசாய வெங்கடேசன் என்பவர் விவரங்களை கேட்டு கலெக்டர் வளர்மதி மேலப்புலம் மோட்டூர் ஊராட்சிக்கு நேரடியாக சென்று வெங்கடேசன் விவசாய நிலத்தை பார்வையிட்டார்.
அங்கு வந்திருந்த வெங்கடேசன் மகன் ராஜேஷ் என்பவரிடம் அவருடைய விவரங்களை கேட்டறிந்தார்.சுமார் 16 ஏக்கர் நிலம் உள்ளதை விவசாயி தெரிவித்தார். இவைகளில் கோ 51 ரக நெல் பயிரிடப்பட்டு சுமார் 205 மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்துள்ளதாக விவசாயி தெரிவித்தார். சரியான முறையில் விவசாயி நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்துள்ளதை கலெக்டர் வளர்மதி உறுதி செய்தார். நெல் விற்பனை செய்தமைக்கான பணம் மூட்டைக்கு ரூ.1,600 வழங்கப்பட்டுள்ளது என்று விவசாயி தெரிவித்தார். அதற்கான பணங்கள் வங்கி கணக்கில் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நெமிலி வட்டம் நெல்வாய் ஊராட்சி எஸ் கொளத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது இம்மையத்தில் 174 விவசாயிகள் பதிவு செய்து டோக்கன் பெற்றுள்ளனர். அவர்களில் 140 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சுமார் 14,000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் தேதி வரையில் நெல்கொள்முதல் பெறப்பட்டவர்களுக்கான பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்ப ட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் விவரங்கள் அடங்கிய பதிவேடினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வினில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தேவிபிரியா, திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, துணை இயக்குனர் வேளாண்மை விஸ்வநாதன், வட்டாட்சியர் சுமதி மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பத்திரமாக வைத்து கொள்ள அறிவுரை
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வள்ளுவம்பாக்கம் ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மருத்துவ காப்பீடு அட்டை பெறாத குடும்பங்கள் அதிக அளவில் உள்ளதாக அரசு விழாவில் அமைச்சர் பெருமக்களிடையே பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். உடனடியாக சிறப்பு முகாமை ஏற்பாடு செய்ய கேட்டுக் கொண்டனர்.
அதன் அடிப்படையில் நேற்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை பெறாத குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை பெறுவதற்கான சிறப்பு பதிவு முகாம் வள்ளுவம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது. வள்ளுவம்பாக்கம் கிராமத்தில் மொத்தம் 536 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஒலிபெருக்கியின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு, மருத்துவ காப்பீடு பதிவு செய்யும் முகாமிற்கு பொதுமக்கள் வருகை தந்தனர்.
அந்த முகாம் நடைபெறுவதை கலெக்டர் வளர்மதி நேற்று நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது காலையில் இருந்து சுமார் 100 குடும்ப அட்டைதாரர்கள் வருகை தந்துள்ளனர். அவர்களில் இதுவரை 65 குடும்ப அட்டைதாரர்களை பரிசோதித்ததில் 25 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே மருத்துவ காப்பீடு அடையாள அட்டை இல்லை என தெரிகிறது. பெரும்பான்மையான மக்கள் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வைத்துள்ளனர்.
அதையும் கொண்டு வந்து காண்பித்து உறுதி செய்து சென்றனர். மருத்துவ காப்பீடு அட்டை இல்லாத குடும்பங்களுக்கு உடனடியாக பதிவு செய்து அவர்களுக்கான அடையாள அட்டை நகல் உடனு க்குடன் வழங்கப்ப டுகிறது என தெரிவித்தனர். பொதுமக்கள் இந்த மருத்துவ காப்பீடு அடையாள அட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். வருடத்திற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5 இலட்சம் வருடந்தோறும் மருத்துவ சிகிச்சைகளை இலவசமாக பெறுவதற்கு இந்த அடையாள அட்டை பயன்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதை பத்திரமாக வைத்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். நேற்றும் மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமையும் இரண்டு நாட்கள் இந்த கிராமத்தில் சிறப்பு முகாம் நடத்தி அனைவர்களிடமும் அடையாள அட்டைகள் உள்ளனவா என்பதை உறுதி செய்ய கலெக்டர் ச.வளர்மதி கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் தாரகேஸ்வரி, தாசில்தார் நடராஜன், மருத்துவ காப்பீட்டு அட்டை வாசுதேவன், வள்ளுவம்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் சின்னப்பொண்ணு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பொருட்களின் தரம் குறித்தும் ேசாதனை
- ஆதார் மையத்தை பார்வையிட்டார்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகம் மற்றும் ரேசன் கடைகளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
அப்போது தாலுகா அலுவலகத்தில் பராமரிக்கப் பட்டு வரும் பல்வேறு பதிவேடுகள், நாட்டறம்பள்ளி கற்பகம் கூட்டுறவு ரேசன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும், ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியிலும் ஆய்வு செய்தார்.
மாணவர்களுக்கு சுத்தமாகவும், தரமாகவும் உணவினை தயார் செய்து வழங்க வேண்டும் எனவும், விடுதி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என விடுதி காப்பாளருக்கு அறிவுறுத்தினார்.
தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பதிவேடு, இ-ஆபிஸ் பணிகள், பட்டா மாற்றம், 23 வகையான சான் றிதழ் வழங்கப்படும் பணிகளை பார்வையிட்டு நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஆதார் மையத்தை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது தாசில்தார்கள் குமார், சுமதி, வருவாய்த்துறை பணியாளர்கள், விடுதி காப்பாளர் உடனிருந்தனர்.
- மாவட்ட கலெக்டர் சாந்தி அமரித் சரோவர் திட்டத்தினை பார்வையிட்டு அதன் சுற்றுப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள மரக்கன்று நடவினையும் ஆய்வு செய்தார்.
- சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதிகளும் நிலமற்றோர்க்கு இடுப்பொருட்களும் வழங்கப்படுகின்றன.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டாரத்தில் செக்கோடி மற்றும் பூகானஅள்ளி கிராமங்களின் நீர்வடிப்பகுதிகளில் அமரித் சரோவர், கசிவு நீர்குட்டைகள், பெரியதடுப்பணை, தானிய உலர்களம் அமைத்தல் மற்றும் விவசாயிகளுக்கு மின்விசைத்தெளிப்பான் விநியோகம் ஆகிய திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் மாவட்ட கலெக்டர் சாந்தி அமரித் சரோவர் திட்டத்தினை பார்வையிட்டு அதன் சுற்றுப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள மரக்கன்று நடவினையும் ஆய்வு செய்தார். தானியக்களத்தினை ஆய்வு மேற்கொண்டு அதன் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். மேலும், மாவட்ட கலெக்டர் பெரிய தடுப்பணைகள், கசிவு நீர்குட்டைகள் ஆய்வு மேற்கொண்டதுடன் ஒரு விவசாயிக்கு மின்விசைத்தெளிப்பான் வழங்கினார்.
இயற்கை வள மேம்பாட்டுப்பணிகளில் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்காக கசிவுநீர்குட்டைகள், பெரிய தடுப்பணைகள், ஏரி தூர்வாருதல், கிராம குட்டைகள், Recharge Shaft மற்றும் நீர் அமிழ்வுக்குட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பாலக்கோடு வட்டாரத்தில் 5405 எக்டர் பரப்பளவில் 7 கிராமங்களில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டப்பணிகள் 5 ஆண்டு திட்டப்பணிகளாக 2021-2022 நிதியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டப்பணிகளில் விவசாயிகள் சுய உதவி குழுக்கள் மற்றும் பயனாளி குழுக்களுக்கு பயிற்சியும், வேளாண்மை உற்பத்தி திட்டப் பணிகளில் இடுப்பொருட்கள் விநியோகம் மற்றும் செயல் விளக்கங்கள் அமைக்கப்படுகின்றன. சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதிகளும் நிலமற்றோர்க்கு இடுப்பொருட்களும் வழங்கப்படுகின்றன.
இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, வேளாண்மை துணை இயக்குநர் ஜெகதீசன், வேளாண்மை உதவி இயக்குநர் சகாயராணி, உதவி பொறியாளர் பத்மாவதி, நீர்வடிப்பகுதி பொறியாளர் வேலவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- ஒரு மணி நேரம் நடந்தது
- பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு பாதுகாப்பு இல்லம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 22 வயதுக்கு உட்பட்ட 42 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 27-ந் தேதி 7 பேர் அங்குள்ள கட்டிடத்தின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அங்கிருந்த மின்விசிறி, டேபிள், சேர், டிவி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினார். அன்று இரவே அங்கு பணியில் இருந்த வார்டன்களை சரமாரியாக தாக்கி விட்டு சுவரேறி குதித்து தப்பி சென்றனர். போலீசார் அவர்கள் தேடி பிடித்தனர். ஒருவர் கோர்ட்டில் சரணடைந்தார்
கடந்த வியாழக்கிழமை 5 சிறுவர்கள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி சென்றனர். அவர்களை போலீசார் கலெக்டர் அலுவலகம் அருகே மடக்கிப்பிடித்து ஒப்படைத்தனர்.
சிறுவர்கள் அடிக்கடி தப்பிச்செல்லும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் உதவி கலெக்டர் கவிதா தாசில்தார் செந்தில் டிஎஸ்பி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் இன்று காலை சிறுவர் பாதுகாப்பு இல்லத்துக்கு சென்றனர்.
அப்போது அங்குள்ள சிறுவர்களுக்கு கலெக்டர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். மேலும் ஒரு மணி நேரம் ஆய்வு செய்தனர். இது வழக்கமான ஆய்வு தான் என கலெக்டர் தெரிவித்தார்.
- பொதுமக்களி டமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள்.
- இசேவை மையத்தில் விண்ணப்பிக்க வந்திருந்த விண்ணப்பதாரர்களிடம் கோரிக்கைகளையும் இசேவை மையத்தின் செயற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நல்லம்பள்ளி வட்டாட்சி யர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் இருக்கை வாரியாக நிலுவை இனங்கள் குறித்தும், நீண்டநாளாக நிலுவையில் உள்ள நிலஅளவை மனுக்கள், மக்கள் குறை தீர்க்கும் மனுக்கள் மற்றும் பட்டா மாறுதல்கள் குறித்தும், பெறப்பட்ட மனுக்கள் மீதான தொடர்நட வடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் விவரங்கள், பொதுமக்களி டமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள்.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காணப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நல்லம்பள்ளி வட்டாட்சி யர் அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் இசேவை மையத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டு, இசேவை மையத்தில் விண்ணப்பிக்க வந்திருந்த விண்ணப்பதாரர்களிடம் கோரிக்கைகளையும் இசேவை மையத்தின் செயற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டடத்தில் உள்ள உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வின்போது, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மாலா, செயல் அலுவலர் ஜீவானந்தம், நல்லம்பள்ளி துணை வட்டாட்சியர்கள் சுதாகர், பாலகிருஷ்ணன், சண்முகம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அரசு மருத்துவமனையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நள்ளிரவில் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் அரசு மருத்துவ மனையில் செயல்படும் பொது மருத்துவம்,பொது அறுவை சிகிச்சை, நோயாளிகள் பிரிவு, குழந்தைகள் நலமருத்துவம்,
மகப்பேறு மருத்துவப் பிரிவு மற்றும் 24 மணிநேரம் மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவான சீமாங் சென்டர் ஆகிய பிரிவுகளையும் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.
மேலும் மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். இரவு நேர பணியில் இருக்கும் மருத்து வர்களின் விபரங்கள் குறி த்தும் கேட்டறிந்தார்.
முன்னதாக மருத்துவமனையில் செயல்படும் மருந்து இருப்பு அறை மற்றும் மருந்தகத்தி னையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மருத்துவர்கள், செவிலி யர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே கூடச்சேரியில் உள்ள குவாரியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
- ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே கூடச்சேரியில் உள்ள குவாரியில் கலெக்டர் டாக்டர். உமா ஆய்வு மேற்கொண்டார்.
புன்செய் இடையார் மேல்முகம் பகுதியில் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கு இணைய வழி பட்டா வழங்கிட ஏதுவாக வரன்முறைபடுத்தும் பணிகள் மற்றும் பரமத்தி தாசில்தார் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பட்டா மாறுதல் விண்ணப்பங்கள், இணைய வழி பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் தற்போதைய நிலவரம், முன்னேற்றம் குறித்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து தாசில்தார் பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மகப்பேறு சிகிச்சை, குழந்தைகள் நலப் பிரிவு, மருந்துகள் இருப்பு விபரம், மருத்துவ உபகரணங்கள், தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை கர்ப்பிணித் தாய்மார்களின் பரிசோதனைகள் குறித்த பதிவேடுகள் உள்ளிட்ட விபரங்களை பார்வையிட்டு, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
முன்னதாக நாமக்கல் தாலுகா, கோனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மெய் நிகர் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறன், மாணவர்கள் வருகை உள்ளிட்ட விபரங்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
நிகச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச்செல்வி, துறைச்சார்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- புகார்கள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டார்
- கைததிகள் அறை, ஆயுதங்கள் வைப்பறை அதிகாரிகளிடம் விரவங்களை கேட்டறிந்தார்
ராணிப்பேட்டை:
வாலாஜா போலீஸ் நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்த பதிவேடுகள், இணைய வழியாக பதிவு செய்யப்பட்டுள்ள புகார்கள் குறித்த பதிவேடுகளையும் கைதிகள் அறை, காவலர்கள் ஓய்வெடுக்கும் அறை, ஆயுதங்கள் வைப்பறை, வரவேற்பாளர் அறை உள்ளிட்டவைகளை பார்வையிட்டு போலீஸ் அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாராஜா, சீனிவாசன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
- தேனி நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில், இந்திய உணவுக் கழகத்திலிருந்து வரப்பெற்ற அரிசி மற்றும் கோதுமையின் தரம் குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- அங்கன்வாடி மையத்தில் பராமரிக்கப்படும் 11 வகையான பதிவேடுகள் ஆகியன குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
தேனி:
தேனி நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில், இந்திய உணவுக் கழகத்திலிருந்து வரப்பெற்ற அரிசி மற்றும் கோதுமையின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், ரேசன் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பொருட்கள் முறையாக நகர்வு செய்யப்படுகிறதா, சரியான எடை அளவில் கொண்டு செல்லப்படுகிறதா என்று கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார்.
மேலும், அத்தியாவசிய பொருட்கள் இருப்பு பதிவேடு, காலி சாக்குகள் பதிவேடு, உள்வரும் வாகனங்கள் மற்றும் வெளி செல்லும் வாகனங்களை கண்காணிப்பதற்கான பதிவேடு, தரக்கட்டுப்பாட்டு பதிவேடு, எடை அளவு பதி வேடு, விற்பனை பதிவேடு, அரிசி மற்றும் கோதுமை நகர்வு பதிவேடு, பட்டியல் அட்டைகள் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
பின்னர், பழனி செட்டி பட்டி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பணி யாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, உள்நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு, மருந்து மாத்திரை களில் அச்சிடப்பட்டுள்ள காலாவதியாவதற்கான காலம், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, பழனிசெட்டிபட்டி பேரூ ராட்சி பகுதியில் ரேசன் கடைகளின் விற்பனை முனைய இயந்திரங்களில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் எடை அளவிடும் இயந்திர த்தில் முத்திரை பதிக்கப்பட்டு ள்ள காலம், இயந்திரத்தின் செயல்பாடு கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் முறைசாரா முன்பருவ கல்வி, எடை மற்றும் உயரம் அளவீடு செய்யப்பட்டு முறையாக பதிவேற்றம் செய்யப்படு கிறதா, ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா எனவும், அங்கன்வாடி மையத்திற்கு வழங்க ப்பட்டு ள்ள முன்பருவ கல்வி உபகரண கருவி நல்ல முறை யில் உள்ளதா, குழந்தை களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் மற்றும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் தரம் ஆகியவை மற்றும் அங்கன்வாடி மையத்தில் பராமரிக்கப்படும் 11 வகையான பதிவேடுகள் ஆகியன குறித்தும் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஆறு முகம் உள்ளிட்ட அலுவ லர்கள் பலர் உடன் இருந்த னர்.