என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஐபிஎல் டி20"
- இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜிடி- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதல்.
- விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி தனது முதல் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் 31 ரன் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் 277 ரன்கள் குவித்து ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன் எடுத்த அணி என்ற மகத்தான சாதனையை படைத்து அனைவரையும் மலைக்க வைத்தது.
குஜராத் அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை சாய்த்தது. 2-வது ஆட்டத்தில் 63 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் பணிந்தது.
இதை தொடர்ந்து, விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 13-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியன் சென்னை அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சையும், 2-வது ஆட்டத்தில் 63 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சையும் தோற்கடித்து வலுவான நிலையில் இருக்கிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சிடமும். அடுத்த ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடமும் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது.
சென்னை அணி 'ஹாட்ரிக்' வெற்றியை ருசிக்கும் ஆவலுடன் தயாராகி உள்ளது.
- அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது
- குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த முறை மும்பை அணி கேப்டனாக களமிறங்குகிறார்
17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, 2-வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகினறன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.
கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த முறை மும்பை அணி கேப்டனாக களமிறங்குகிறார். அதேநேரம், குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இன்று முதல்முறையாக களமிறங்க உள்ளது. இதனால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அகமதாபாத் மைதானம் கடந்த தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்ததால், பல போட்டிகளில் ரன் மழை பொழிந்தது. இன்றைய போட்டியிலும் ஆடுகளம் அதேநிலையில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற மும்பை ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.
- ஐபிஎல் போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.
17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மோத உள்ளன.
கடந்த ஆண்டு 5-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் களம் இறங்குகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ச்சியாக 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.
இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.
- யுனிவர்ஸ் பாஸ் என அழைக்கப்படும் கெய்ல் 6 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
- இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் 5 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆர்.சி.பி- குஜராத் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் ஆர்.சி.பி களம் இறங்கியது.
டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலியும், டூ பிளெஸிஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
ஆனால் மிடில் ஓவரில் ரஷித் கான், நூர் ஆகியோர் சிறப்பாக பந்து வீச டூ பிளெஸிஸ், மேக்ஸ்வெல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் ஆர்.சி.பி அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.
ஆனால் விராட் கோலி தன்னம்பிக்கையுடன் விளையாடினார். அரை சதம் அடித்த அவர் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.
இதன் மூலம் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அவர் தனது ஏழாவது சதத்தை பதிவு செய்தார். ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் ஏழு சதங்கள் அடித்தது கிடையாது.
ஆகவே, ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். யுனிவர்ஸ் பாஸ் என அழைக்கப்படும் கெய்ல் 6 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் 5 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
- சுப்மன் கில் அதிகபட்மாக 42 ரன்களை எடுத்தார்.
- ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து குஜராத் அணி தோல்வியடைந்தது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 36 பந்துகளில் அரை சதம் கடந்த அவர் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபே ஒரு ரன்னில் வெளியேறினார். ரகானே 17 ரன்களில் அவுட் ஆனார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தேவன் கான்வே, 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 125 ஆக இருந்தது.
ரகானே, அம்பதி ராயுடு தலா 17 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். 19வது ஓவரில் ஜடேஜாவுடன் இணைந்த கேப்டன் டோனி 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரது அதிரடி பேட்டிங்கை காண காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதன்பின் ஜடேஜா 22 ரன்கள், மொயீன் அலி 9 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது.
குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா, ஷமி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். தர்ஷன், ரஷித் கான், நூர் அகமது தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது.
இதில், சுப்மன் கில் அதிகபட்மாக 42 ரன்களை எடுத்தார். தொடர்ந்து, ஷனக்கா 17 ரன்களும், சாஹா 12 ரன்களும், விஜய் சங்கர் 14 ரன்களும், ஹர்திக் பாண்டியா 8 ரன்களும், டேவிட் மில்லர் 4 ரன்களும், ராகுல் திவாடியா 3 ரன்களும் எடுத்தனர்.
19வது ஓவரில் 9 விக்கெட்டுகளுடன் குஜராத் அணி 146 ரன்களை எடுத்திருந்தது. இன்னும் 6 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடியது. அப்போது, கடைசி பந்தில் ராஷித் கான் 30 ரன்களுடன் ஆட்டமிழந்தார். நூர் அகமது 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில், ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து குஜராத் அணி தோல்வியடைந்தது. 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிப்பெற்றது.
இதன் மூலம், முதன்முறையாக குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்