என் மலர்
நீங்கள் தேடியது "கூட்டுறவு"
- தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
- தொழிலாளர்களுக்கு ரூ.493-க்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும்.
கன்னியாகுமரி:
ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் வட மாநில தொழிலா ளர்களை பணியில் அமர்த்தக் கூடாது. தினக்கூலி தொழிலா ளர்களை நிரந்தரப்ப டுத்த வேண்டும். ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு நூற்பாலை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரியும் பட்டியல் தினக்கூலி தொழிலாளர்களை காலதாமதம் இன்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு ரூ.493-க்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும். ஆலையில் வட மாநில தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்துவதை நிர்வாகம் கைவிட வேண்டும் என கூறினார். இதில் அண்ணா தொழிற்சங்கம் மாசானம், ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் சுகுமாரன், சேர்மன் சகாயராஜ், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளர் மகாராஜா பிள்ளை, சி.ஐ.டி.யு.சக்திவேல், ஏ.ஐ.டி.யூ.சி. இசக்கிமுத்து, நகர பொருளாளர் சுயம்புலிங்கம், கச்சேரி நாகராஜன், சங்கரலிங்கம், வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே நமது மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்ற முடியும்.
- அமைச்சர் மனோதங்கராஜ் பேச்சு
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கூட்டுற வுத்துறையின் சார்பில், 69-வது கூட்டுறவு வார விழா மார்த்தாண்டத்தில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் தலை மையில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள், சிறந்த கூட்டுறவு சங்கங்க ளுக்கு கேடயங்கள் மற்றும் பயனானிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-
கன்னியாகுமரி மண்ட லத்தில் 202 கூட்டுறவு சங் கங்களின் வாயிலாகபொது மக்களுக்கு தேவையான கடனுதவிகள் உட்பட பல் வேறு சேவைகள் வழங்கப் பட்டு வருகிறது. மேலும், விவசாயிகளுக்கு தேவை யான பயிர்கடன்கள் விதை, உரங்கள். இடு பொருட்கள் வினியோகம் செய்வதுடன் குறுகியகால மற்றும் மத்தியகால வேளாண் கடன்கள் வழங்கி உணவு உற்பத்தியையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் கும் கூட்டுறவு சங்கங்கள் கிராமங்கள்தோறும் தங்க ளது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறது.
கடந்த ஆண்டுகளில் நமது மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கியிருந்த நிலை யில் தற்போது அந்த குப்பைகளை படிப்படியாக அகற்றிவருவதோடு, பிளாஸ்டிக் இல்லா மாவட்ட மாக மாற்றுவ தற்கு பல்வேறு முன்னெ டுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பொது மக்களாகிய நீங்கள் அனைவரும் முழு ஒத்து ழைப்பு வழங்கி னால் மட்டுமே நமது மாவட் டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்ற முடி யும்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளப்படி ஆட்சிப்பொறுப் பேற்ற சில மாதங்களிலே தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து கூட்டுறவுத் துறையின் கீழ் 5 சவரனுக்கு (40 கிராமிற்குட்பட்ட) உட்பட்ட நகைக்கடன் வைத்திருந்த நகைக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்திற்குட் பட்ட 24,321 நபர்களுக்கு ரூ.105 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழக அரசுக்கு முழு ஒத்து ழைப்பு வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை யில் 9-வது கூட்டுறவு வார விழா உறுதிமொழியினை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், பிரின்ஸ் எம.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பணியாளர் கள், பொதுமக்கள் உள்ளிட் டோர் ஏற்று கொண்டனர்.
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவா ளர் சந்திரசேகரன், மத்திய கூட்டுறவு வங்கி (நாகர்கோ வில் கிளை) மேலாண்மை இயக்குநர் குருசாமி, மத்திய கூட்டுறவு வங்கி (தக்கலை சரகம்) துணைப்பதிவாளர் நரசிம்மன், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் நாகராஜன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் முருகே சன், துணைப்பதிவாளர்கள் செந்தில் ஆறுமுகம், குருசாமி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலை வர்கள் பூதலிங்கம் உட்பட பலர்கலந்து கொண்டனர்.
- விவசாயிகளின் விளை பொருட்களை விற்க முடியாத நிலை உள்ளது.
- விவசாயிகள் பாதிக்கும் வகையில் வியாபாரிகள் கடை அமைக்க அனுமதிக்க கூடாது .
வீரபாண்டி :
திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையத்தில் இயங்கி வரும் உழவர் சந்தைக்கு தினமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் உழவர் சந்தை வியாபாரத்தை கெடுக்கும் வகையில் வியாபாரிகள் சாலையோரமாக கடை அமைத்து விதிகளை பின்பற்றாமல் காலை நேரங்களில் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொது மக்களின் வருகை குறைவதால் விவசாயிகளின் விளை பொருட்களை விற்க முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் பல்லடம் சாலையில் உள்ள திருப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் காலை 4 மணி முதல் 9 மணி வரை வியாபாரிகள் கடை அமைத்துக் கொள்ளலாம் என கூட்டுறவு சங்கத்தின் மூலம் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் சண்முகசுந்தரம், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏபிடி. எம் .மகாலிங்கம், திருப்பூர் மாநகர ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் மற்றும் தெற்கு உழவர் சந்தை விவசாயிகள் ஆகியோர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனரை நேரில் சந்தித்து உழவர் சந்தை இயங்கும் நேரத்தில் தங்களது வளாகத்தில் வியாபாரிகளுக்கு கடை அமைக்க வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வியாபாரிகள் இங்கு கடை அமைக்க அனுமதிக்க கூடாது எனவும் மனு வழங்கப்பட்டது.
- பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
- பொங்கல் பரிசு தொகுப்பு பெற ‘ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கை இணைக்க வேண்டும் என்று எந்தவித உத்தரவும் இதுவரை நமக்கு வரவில்லை.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலமாக 1,129 ரேஷன் கடைகள், மகளிர் குழுக்கள் மூலமாக 14 ரேஷன் கடைகள், நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் 22 ரேஷன் கடைகள் என மொத்தம் 1,129 ரேஷன் கடைகள் உள்ளன. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளது என்றும், இதற்காக ரேஷன் கார்டுதாரர்களின் ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு வங்கி கணக்கு இணைக்கப்பட உள்ளதாகவும் திருப்பூர் மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் குறுஞ்செய்தி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இவ்வாறு வங்கிக்கணக்கு இணைக்காமல் உள்ள கார்டுதாரர்கள், ரேஷன் கடைகளுக்கு சென்று கார்டில் உள்ள யாராவது ஒருவரின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றை கொண்டு சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்றும் குறுஞ்செய்தியில் வேகமாக தகவல் பரவியது. அதுவும் வருகிற 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, பொங்கல் பரிசு தொகுப்பு பெற 'ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கை இணைக்க வேண்டும் என்று எந்தவித உத்தரவும் இதுவரை நமக்கு வரவில்லை. அது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என்–றார்.
- கடனுக்குரிய மானியத்தொகையை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று கலெக்டர் கூறி உள்ளார்.
- கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜினு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
தகுதியுடைய கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் களஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாது காக்கவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை பாது காக்கவும், துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நில அளவைத்துறையினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியை விரைந்து மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைத்திடவும், கண்மாய்களில் உள்ள மடைகள், தடுப்புச்சுவர்கள் பழுதடைந்து இருப்பின் விரைந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், மேலும் புதிய தடுப்பணைகள் கட்டித்தரவும், வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்க உறுதுணையாக இருக்கவும், கடனுக்குரிய மானியத்தொகையை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜினு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேயிலை தொழிற்சாலையில் 800-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
- விவசாயம் இதுவரை மேற்கொள்ளாதவர்களுக்கு ரூ.12 வழங்கப்பட்டுள்ளது
ஊட்டி
தமிழக கேரள எல்லையையொட்டி கிண்ணக்கொரை கிராமம் உள்ளது. இங்குள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் 800-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கிண்ணக்கொரை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களை இயற்கை முறையில் மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததை அடுத்து, தோட்டக்கலை துறைமூலம் அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதில், விவசாயிகள் படிப்படியாக இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இத்தொழிற்சாலையில் உறுப்பினர்கள் கடந்த மாதம் வினியோகித்த தேயிலைக்கு சராசரி விலையாக கிலோவுக்கு, ரூ.10 வழங்க முடிந்தது. ஆனால், இயற்கை விவசாயம் முழுமையாக மேற்கொண்டவர்களுக்கு, கிலோவுக்கு, ரூ.18 விலை வழங்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் ரவிசந்திரன் கூறுகையில், இயற்கை விவசாயம் மேற்கொண்ட விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.18, இயற்கை மேற்கொள்வதாக எழுதி கொடுத்தவர்களுக்கு கிலோவுக்கு ரூ.14, இயற்கை விவசாயம் இதுவரை மேற்கொள்ளாதவர்களுக்கு ரூ.12 வழங்கப்பட்டுள்ளது என்றார்.
- விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் சட்டபூர்வ நிதி வழங்கப்பட்டது.
- மேலாண்மை நிலையங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
விருதுநகர்
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.ஜி.மாதவன் தலைமையில் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
அப்போது விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் சட்டபூர்வ நிதி வசூல் தொகை ரூ.1.11 கோடிக்கான காசோலை களை விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநரிடம் வழங்கினார்.
சிவகங்கை மண்டல இணைப் பதிவாளர் கோ.ஜினு, விருதுநகர் இணைப்ப்பதிவாளர் அலுவலக துணைப் பதிவாளர் சந்தன ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணைப்பதிவாளர் வீரபாண்டி, விருதுநகர் கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் ராமகிருஷ்ணன், கூட்டுறவு பிரசார அலுவலர் செல்வராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
- சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உற்பத்திக் குழு கூட்டம் கலெக்டர் கார்மேகம் நடைபெற்றது.
- தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உற்பத்திக் குழு கூட்டம் கலெக்டர் கார்மேகம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் தேங்காய், நிலக்கடலை, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட உற்பத்திப்பொருட்களை இடைத்தரகர்கள், கமிஷன் இன்றி மறைமுக ஏல அடிப்படையில் அதிக பட்ச விலைக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, கருமந்துறை, சங்ககிரி, கொங்கணாபுரம், கொளத்தூர், மேச்சேரி, ஓமலூர், காடையாம்பட்டி, எடப்பாடி ஆகிய 14 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்று பயனடையலாம்.
மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை சேலம், ஆத்தூர், கெங்கவல்லி மற்றும் தலா 2 இடங்களில் மேச்சேரி, வாழப்பாடி என 7 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட குளிர்பதனக் கிடங்குகளில் 6 மாதங்கள் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம். சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழையளவு 997.9 மி.மீ ஆகும். ஏப்ரல் மாதம் முடிய இயல்பாக பெய்ய வேண்டிய மழையளவு 86.0 மி.மீ ஆகும். ஆனால் நடப்பு ஆண்டில் (30.4.2023 வரை) 76.5 மி.மீ மழை பெய்துள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் போன்ற இடுபொருட்கள் போதுமான அளவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு உள்ளது. விவசாயிகள் பயன்பெற தங்கள் அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டுறவு விற்பனை இணைய நிறுவனம் உர வகைகளை காட்சிப்படுத்தியது.
- ஒன்றிய அலுவலர் முத்துகுமரன் ஆகியோரும் பங்கேற்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் உர வகைகள், ஏடி.டி.42 வகை நெல்விதை, வேப்பம் புண்ணாக்கு துகள்கள் மற்றும் மண்புழு உரம் காட்சிபடுத்தப்பட்டது.
மேலும் இந்த உரங்கள் தொடர்பான தெளிவான விளக்க உரையுடன் கூடிய பதாகைகளும் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. விவசாயிகள் புதிய வகை உரங்களை ஆர்வமுடன் விசாரித்து வாங்கி சென்றனர். இந்த கண்காட்சி அரங்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் பார்வையிட்டார்.
இந்த கூட்டத்தில் விருது நகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் செந்தில்குமார், விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் இணைப்பதிவாளர் ராஜலட்சுமி, இணை பதிவாளர், அலுவலக துணை பதிவாளர் மற்றும் பணியாளர் அலுவலர் சந்தனராஜ், அருப்புக்கோட்டை சரக துணை பதிவாளர் ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லி புத்தூர் சரக துணை பதிவாளர் வீரபாண்டி, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் காந்திராஜ், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய விருதுநகர் மண்டல மேலாளர் ஜீவானந்தம், கூட்டுறவு ஒன்றிய பிரசார அலுவலர் செல்வராஜன் மற்றும் ஒன்றிய அலுவலர் முத்துகுமரன் ஆகியோரும் பங்கேற்றனர்.
- கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பன் அவரை பணியில் சேர விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
- கூட்டுறவுத்துறை களப்பணியாளர்கள் 2 பேர் கூட்டுறவு சங்கத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
கன்னியாகுமரி:
மண்டைக்காடு புதூரை சேர்ந்தவர் ஜாண்சன். இவரது மனைவி ஜெய மலர்விழி (வயது 40).மாற்றுத்திறனாளி. இவர் மணவாளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேசன் கடையில் விற்பனையாளராக வேலையில் சேர கடந்த 4 நாட்களுக்கு முன்பு பணி நியமன ஆணைப் பெற்று கூட்டுறவு சங்கத்திற்கு சென்றார்.அங்கு கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பன் அவரை பணியில் சேர விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை ஜெய மலர்விழி மீண்டும் அவர் மணவா ளக்குறிச்சி கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு சென்றார்.அப்போதும் அவரை பணியில் சேர விடவில்லை என கூறப்படுகிறது.இதனால் அவருக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் கூட்டுறவு சங்கம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்த கல்குளம் தாசில்தார் கண்ணன், மண வாளக்குறிச்சி இன்ஸ் பெக்டர் பெருமாள் ஆகியோர் விரைந்து சென்று கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பனிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
தாசில்தாரிடம் அய்யப்பன் கூறியதாவது:- இங்கு 2 பணியிடங்களில் ஒருவர் பணியில் சேர்ந்து விட்டார்.15 வருடம் முன் இங்கு வேலை பார்த்து நீண்ட நாள் விடுப்பில் சென்ற மற்றொருவர் தற்போது வேலை கேட்டு வழக்கு தொடர்ந்து தீர்ப்பு பெற்றுள்ளார்.இதற்கு கூட்டுறவு சங்கம் சார்பில் அப்பீல் செய்ய வேண்டியுள்ளது.அதனால் கூட்டுறவு சங்க குழுவினர்களுடன் கலந்தாலோசித்துதான் முடிவு செய்ய முடியும் என்றார்.இதனால் இந்த விவகாரத்தில் முடிவு ஏற்படவில்லை. இதற்கிடையே கூட்டுறவுத்துறை களப்பணியாளர்கள் 2 பேர் கூட்டுறவு சங்கத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை முடிவில் மாலை 5.30 மணியளவில் ஜெய மலர்விழி பணியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஆதரவாக கூட்டுறவு சங்கம் முன் திரண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து கிளைகளும் 4-வது வார சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
- இன்றும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டது.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து கிளைகளும் 4-வது வார சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.நேற்றும்,இன்றும் தமிழக அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற இலவச வங்கி கணக்கு தொடங்க ஏதுவாக செயல்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-நேற்றும், இன்றும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டது. புதிய கணக்குகள் தொடங்கும் நடைமுறையினை மேற்கொள்ள பட்டது. எனவும் இதர பணபரிவர்த்தனைகள் மேற்கொள்ள வில்லை எனவும் தெரிவித்துள்ளனர். குடும்பத் தலைவிகள் ரூ 1000 உரிமைத் தொகை பெற இலவச வங்கி கணக்கு துவங்க வங்கிக்கு வரலாம். இந்த வாய்ப்பை மகளிர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
- திருப்புவனம் கூட்டுறவு சங்கத்துக்கு பால் வழங்காத உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்.
- கூட்டத்தில் சங்கத்தின் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
மானாமதுரை
திருப்புவனம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவரும் திருப்புவனம் பேரூராட்சி தலைவருமான சேங்கைமாறன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பழனியம்மாள், சரக முதுநிலை ஆய்வாளர் (பால்வளம்) ராமச்சந்திரன், விரிவாக்க அலுவலர் அமுதா மற்றும் சங்கத்தின் இயக்குநர்கள், உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சங்க மேலாளர் கிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் சங்கத்தின் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. திருப்புவனம் ஒன்றியம் கீழராங்கியத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள பால் குளிரூட்டும் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும், சங்கத்தின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வந்த உறுப்பினர்கள் மற்றும் சங்கத்துக்கு நீண்டகாலமாக பால் வழங்காத உறுப்பினர்களை சங்கத்திலிருந்து நீக்கவும் முடிவு செய்யப்பட்டது. முடிவில் இயக்குநர் முருகேசன் நன்றி கூறினார்.