என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consultative meeting"

    • உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் நடந்தது
    • கலெக்டர் எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆற்காடு சட்டமன்ற தொகுதி மக்களின் முக்கியமான 10 பிரச்சனைகளைக்கு தீர்வு காண்பதற்காக அளித்துள்ள மனுக்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆற்காடு சட்டமன்ற தொகுதி மக்களின் முக்கியமான 10 பிரச்சனைகளைக்கு தீர்வு காண்பதற்காக அளித்துள்ள மனுக்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ வழங்கியுள்ள 10 மனுக்கள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு செய்து, துறைகள் தங்களின் தலைமை இடத்திற்கு அறிக்கையை முறையாக தயார் செய்து வழங்கிட வேண்டும் எனவும், அனைத்து திட்டங்களும் அரசின் மூலம் ஒப்புதல் பெரும்படியாக முழுமையாக ஆராய்ந்து என்ன பிரச்சனைகள் அதனை நிவர்த்தி செய்வதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பயன்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக தன்னுடைய கவனத்திற்கு கொண்டுவர வேண்டுமென கலெக்டர் பாஸ்கர பாண்டியன் துறைச்சார்ந்த அலுவலர்களை கேட்டுக் கொண்டார்கள்.

    இக்கூட்டத்தில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை ஜி.லோகநாயகி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கட்டிட தொழிலாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது

    கரூர்:

    கரூர் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தாந்தோணிமலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜா, சித்திரைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் வடிவேல் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் வருகிற 16 மற்றும் 17-ந்தேதிகளில் ராணிப்பேட்டையில் நடைபெறும் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்க மாநில மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது, மாநாட்டிற்கு நிதி அளிப்பது மற்றும் வயது முதிர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் முதியோர் இல்லம், 60 வயதை கடந்த பதிவு செய்யாத கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் பிழைப்பூதியம் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட துணைத்தலைவர் மலையம்மாள் மற்றும் பலர் தமிழ் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசு முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    • வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் முன்னிலை வகித்தனர்.

    ஊட்டி,

    டான்டீ தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தி.மு.க துணை பொது செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா தலைமையில் நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் 10-ந் தேதி(இன்று)தேவாலா பஜார் பகுதியில் டான்டீ தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்க தமிழக அரசு முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயர்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, திராவிடமணி, காசிலிங்கம், கூடலூர் ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா, பந்தலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ், நெல்லியாளம் நகர செயலாளர் சேகர், தொழிற்சங்க பிரதிநிதிகள் எல்.பி.எப் தொழிற்சங்கம் சார்பில் மாடாசாமி, அருண்குமார், அண்ணாதுரை, கணபதி, அன்பழகன், சந்திரன், மகேந்திரன், தமிழ்வாணன், ஏ.ஐ.டி.யு.சி. பெரியசாமி, ஐ.என்.டி.யு.சி. யோகநாதன், சி.ஐ.டி.யு சந்திரகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நகர அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பூத் கமிட்டி அமைப்பது மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர் நியமனம் ஆகியவற்றை குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது.

    காங்கயம் :

    காங்கயத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.தி.மு.க. காங்கயம் நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான, அனைத்து பூத்களிலும் பூத் கமிட்டி அமைப்பது மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர் நியமனம் ஆகியவற்றை குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது.

    கூட்டத்தில் கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள், கட்சியின் 18 வார்டு செயலாளர்கள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • புதிய இளைஞர்களை கட்சியில் இணைப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
    • கூட்டத்தில் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    காங்கயம் : 

    காங்கயம் - சென்னிமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கயம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு காங்கயம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைப்பது, இளைஞர் இளம்பெண்கள் பாசறை அமைப்பது, நாடாளுமன்ற தேர்தலில் கட்சி நிர்வாகிகளின் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும், புதிய இளைஞர்களை கட்சியில் இணைப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    இதே போல் காங்கயம் நகர அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கயம் அ.தி.மு.க. நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை தாங்கினார். பொருளாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • வாணியம்பாடியில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    தமிழ் நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் வாணியம்பாடிக்கு வருகை தந்தார்.

    அவரை திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் பிரபாகரன், செயலாளர்கள் டாக்டர் தே.செந்தில்குமார், டாக்டர் எஸ் பசுபதி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    அதன் பின்னர் மாநில அளவிலான அரசு மருத்துவர்கள் சங்க பணிகள், மற்றும் நிர்வாகம் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர். சிவசுப்பிரமணிக்கு பொன்னாடை அணிவித்து மாநில தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் வாணியம்பாடி அரசு டாக்டர்கள். டேவிட் விமல் குமார், பார்த்திபன், நேதாஜி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • அரசு மருத்துவமனை கட்டிடத்தில் நடந்தது
    • நிர்வாகிகள் பங்கேற்பு

    திருப்பத்தூர்:

    அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை கட்டிடத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அரசு டாக்டர்கள் சங்க தலைவரும் இந்திய மருத்துவ சங்க கிளை தலைவர் டாக்டர் பி.பிரபாகர் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் கே. டி. சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார். டாக்டர் பசுபதி முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் செந்தில், இந்திய மருத்துவ சங்க தலைவர் என்ஆர்டிஆர். தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில், ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனைகளில் இணை இயக்குனர் டாக்டர் கலிவரதன், இந்திய மருத்துவர் சங்க திருப்பத்தூர் கிளை செயலாளர் டாக்டர் வினோதினி, உட்பட அரசு மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.12 லட்சத்தில் கட்டப்படுகிறது
    • பூமி பூஜை போட்டு பணிகள் தொடங்கியது

    திருப்பத்தூர்:

    கந்திலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதியூர் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளதாகவும் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதனை ஒட்டி ஆதியூர் ஊராட்சி தங்கபுரம் கிராமத்தில் ரூ.12 லட்சத்தில் கட்ட பூமி பூஜை போட்டு பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஏ. பி. பழனிவேல் முன்னிலை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா வரவேற்றார்.

    புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாவதி, துரை தொடங்கி வைத்து பேசினர்.

    • பவானி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னிமலையில் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்கும் இயக்கத்தை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

    சென்னிமலை:

    தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் கொண்டு வந்துள்ள அன்னூர், பவானிசாகர், வாரப்பட்டி தொழிற் பேட்டை திட்டங்களை ரத்து செய்ய கோரி பவானி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னிமலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் 18 லட்சம் மக்களுக்கு குடிநீராகவும், கீழ்பவானி, தடப்பள்ளி – அரக்கன் கோட்டை, காளிங்கராயன், அவிநாசி-அத்திக்கடவு, வழியோர பாசனங்கள் என 10 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்று வரும் பவானி ஆற்று நீரை, நொய்யல் ஆற்றை போல மனிதர்கள் பயன்படுத்த இயலாத நிலைக்கு கொண்டு செல்வதற்கு வழி வகுப்பதற்காக தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் கோவை மாவட்டம் அன்னூர்- சிறுமுகை இடையே 3,800 ஏக்கர், பவானிசாகரில் 1,084 ஏக்கரிலும் தொழிற் பேட்டைகளை அமைப்ப தற்கு திட்டமிட்டுள்ளது.

    பெருந்துறை சிப்காட் கழிவுகளால் புற்று நோயால் திணறும் ஈரோடு மாவட்டத்திற்கு மற்றொரு பேரழிவு திட்டமாக இத்திட்டம் உள்ளது.

    இத்திட்டத்தினை ரத்து செய்ய கோரி நேற்று பவானி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னிமலையில் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். திட்டத்தை ரத்து செய்ய அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் வரும் 30-ந் தேதி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்கும் இயக்கத்தை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

    • மதுரை மண்டல தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
    • தெப்பக்குளம் சந்திர குழந்தை திருமண மண்டபத்தில் இன்று மாலை நடக்கிறது.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல ஆலோசனை கூட்டம் இன்று மாலை தெப்பக்குளம் சந்திர குழந்தை திருமண மண்டபத்தில் நடக்கிறது.

    மண்டல தலைவர் மைக்கேல் ராஜ் தலைமை தாங்குகிறார். ஜெயக்குமார் முன்னிலை வகிக்கிறார். ஸ்வீட்ராஜன் வரவேற்கிறார்.

    சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில தலைவர் முத்துக்குமார், மாநில நிர்வாகிகள் தங்கராஜ், சூசை ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இதில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மதுரை மண்டல நிர்வாகிகள், உறுப்பினர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

    கூட்டத்திற்கான ஏற்பாடுகளை குட்டி என்ற அந்தோணிராஜ் செய்துள்ளார்.

    • அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி, திருவண்ணாமலை நகரம் மற்றும் திருவண்ணாமலை வடக்கு, தெற்கு கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் வருகின்ற 13, 14-ந் தேதிகளில் நடைபெறுகின்ற திமுக அரசின் சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு போன்ற விலைவாசி உயர்வு களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளன.

    இதனை முன்னிட்டு செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக அலுவல கத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைச்செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

    கூட்டத்தில் மாவட்டக் நிர்வாகிகள், சார்புஅணி செயலாளர்கள் நகர, ஒன்றிய நிர்வாகிகள், , வட்டக் செயலாளர்கள், நகரச் சார்பணி செயலாளர்கள், , முன்னாள், இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள், இன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் நீதி மய்யம் ஆலோசனை கூட்டம் சிவ.இளங்கோ தலைமையில் நடந்தது.
    • 10 நாட்களாக மண்டல ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.

    மதுரை

    மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் சிவ.இளங்கோ தலைமையில் 10 பேர் அடங்கிய குழுவினர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். அவர்கள் மதுரை வந்துள்ளனர். இங்கு அவர்கள் 10 நாட்களாக மண்டல அளவில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர்.

    மதுரை வடமேற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், மாநில செயலாளர் சிவ.இளங்கோ தலைமையில் நடந்தது. பொறியாளர் அணி மாநில செயலாளர் வைத்தீசுவரன், கட்டமைப்பு மாநில இணை செயலாளர் ஜெய் கணேஷ், மாநில துணைச் செயலாளர் சண்முகராஜன், மண்டல செயலாளர் அழகர், ஊடக அணி மண்டல அமைப்பாளர் முத்து கிருஷ்ணன், மகளிரணி மண்டல அமைப்பாளர் பத்மா ரவிச்சந்திரன், இளைஞரணி மண்டல அமைப்பாளர் பரணி ராஜன், வக்கீல் அணி மண்டல அமைப்பாளர் கிருஷ்ணகுமார், ஆதி திராவிட நல அணி மண்டல அமைப்பாளர் நாகநாதன், நற்பணி இயக்க அணி மண்டல அமைப்பாளர் சிவபாலகுரு, மாவட்ட செயலாளர் வி.பி.மணி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஒவ்வொரு மாவட்ட த்திலும் நிர்வாகிகளிடம் வளர்ச்சிப்பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும்? வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது. பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, கட்சி தலைவர் கமல்ஹாசனிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    மக்கள் நீதி மய்யத்தின் மண்டல வாரியான ஆலோசனைக் கூட்டம், நெல்லையில் தொடங்கியது. இதுவரை 6 மண்டலங்களுக்கு சுற்றுப்பயணம் முடிந்து ள்ளது. 7-வது மண்டலமாக மதுரையில் 10 நாட்களாக மண்டல ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. இதுவரை 124 சட்டமன்ற தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் முடிந்துள்ளது.

    கடந்த 5-ந் தேதி பழனி, திண்டுக்கல், தேனி, ஆண்டிப்பட்டி, 11-ந் தேதி மதுரை தெற்கு, மத்திய தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இன்று (12-ந் தேதி) மதுரை கிழக்கு, மேலூர் பகுதி நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. நாளை (13-ந் தேதி) மதுரை வடக்கு, சோழவந்தான், 14-ந் தேதி உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

    மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் மவுரியா தலைமையில் பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பான பாராளுமன்ற முன்னெடுப்பு கூட்டமும் நடந்து வருகிறது.

    ×