என் மலர்
நீங்கள் தேடியது "Worker"
- பாம்புகள் விரட்டி விரட்டி கடிப்பதால் தனக்கு நாகதோஷம் இருக்கலாம் என நினைத்தார்.
- ராகு, கேது மற்றும் பரிகார பூஜைகளை செய்தார். இருப்பினும் பாம்புகள் அவரை விடவில்லை.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கும்மரகுண்டாவை சேர்ந்தவர் சுப்ரமணியம் (வயது 50). இவரது மனைவி சாரதா.
சுப்பிரமணியத்திற்கு 20 வயதாக இருந்தபோது முதல் முறையாக பாம்பு கடித்தது. அதன் பிறகு கூலி வேலைக்கு செல்லும் போதெல்லாம் வருடத்திற்கு 4 முதல் 5 தடவை பாம்புகள் கடித்தன.
ஒவ்வொரு முறையும் பாம்பு கடிக்கும் போதும் உயிர் பிழைப்போமா என்று கவலையடைந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.
பாம்பு கடிக்கு பயந்து சுப்பிரமணியம் தனது குடும்பத்தினருடன் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். அங்கு கட்டிட வேலை செய்தார். பெங்களூரில் கட்டிட வேலை செய்யும் போதும் சுப்பிரமணியத்தை பாம்புகள் கடித்தன.
இதனால் விரத்தி அடைந்த சுப்பிரமணியம் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார்.
பாம்புகள் விரட்டி விரட்டி கடிப்பதால் தனக்கு நாகதோஷம் இருக்கலாம் என நினைத்தார். இதனால் ராகு, கேது மற்றும் பரிகார பூஜைகளை செய்தார். இருப்பினும் பாம்புகள் அவரை விடவில்லை.
சொந்த ஊருக்கு திரும்பிய சுப்பிரமணியம் அங்குள்ள கோழிப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்தார். நேற்று முன் தினம் கோழி பண்ணையில் வேலை செய்து கொண்டு இருந்தபோது மீண்டும் ஒரு பாம்பு வந்து சுப்பிரமணியத்தை கடித்தது. அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு சுப்பிரமணியம் தற்போது குணம் அடைந்து வருகிறார்.
இதுகுறித்து அவரது மனைவி சாரதா கூறுகையில்:-
எனது கணவரை டஜன் கணக்கில் பாம்புகள் கடித்துள்ளன. ஒவ்வொரு தடவை பாம்பு கடிக்கும் போதும் வெளியில் கடன் வாங்கி சிகிச்சை பெறுவதும் மீண்டும் கூலி வேலை செய்து கடனை அடைப்பதே எங்கள் வாழ்க்கையில் சுமையாக மாறிவிட்டது என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இனியாவது பாம்பு கடியில் இருந்து தப்பிக்க முடியுமா? என்ற கலக்கத்தில் சுப்பிரமணியின் குடும்பத்தினர் உள்ளனர்.
- ஜெயக்குமார் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திட்டக்குடியில் உள்ள தனது வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
- நேற்று இரவு வெளியில் சென்ற ஜெயக்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை.
பெரம்பலூர்
கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு உட்பட்ட வதிஷ்டபுரம் பாட்டை தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 45). இவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராஜாமணி என்ற மனைவியும், ரேவதி என்ற மகளும், குணா என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திட்டக்குடியில் உள்ள தனது வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் வெள்ளாற்றில் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளாற்றில் இடுப்பளவு தண்ணீர் ஓடுகின்றது. இந்நிலையில் நேற்று இரவு வெளியில் சென்ற ஜெயக்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இதற்கிடையே அவர் வெள்ளாற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த குன்னம் காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து இறந்து போன வாலிபர் குடிபோதையில் இருந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த பழனிச்சாமி, தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஒரு சிறிய பாட்டிலில் பிடித்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
- அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்து அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.
சேலம்:
சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி காந்தி நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பழனிச்சாமி (வயது 38). கூலி தொழிலாளியான இவருக்கு சரஸ்வதி (35) என்ற மனைவியும், 2 பெண், 1 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
மது குடிக்கும் பழக்கம் உள்ள பழனிச்சாமி வழக்கம்போல் நேற்று இரவு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.மீண்டும் மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். சரஸ்வதி பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த பழனிச்சாமி, தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஒரு சிறிய பாட்டிலில் பிடித்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
வீட்டின் வெளியே பழனிச்சாமியின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த சரஸ்வதி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்து அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.
அங்கு பழனிச்சாமி சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்த தகவலின் பேரில் வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரியாங்குப்பத்தில் கட்டிட தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அய்யனாருக்கு போன் செய்து தான் அதிக போதையில் இருப்பதால் தன்னை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கூறினார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பத்தில் கட்டிட தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியாங்குப்பத்தை அடுத்த மணவெளி கலைஞர் நகரை சேர்ந்தவர் அய்யனார். (வயது 30) கட்டிட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அய்யனாருக்கு போன் செய்து தான் அதிக போதையில் இருப்பதால் தன்னை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கூறினார்.
அதனை ஏற்று மணிகண்டனை அழைத்து வர அய்யனார் நோணாங்குப்பத்தில் உள்ள சாராயக்கடைக்கு சென்றார்.
அங்கு மணிகண்டனிடம் நோணாங்குப்பத்தை சேர்ந்த வர்மா என்பவர் தகராறு செய்து கொண்டிருந்தார்.
இதனை பார்த்த அய்யனார் தகராறை சமாதானம் செய்து மணிகண்டனை அங்கிருந்து ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
இந்த நிலையில் அய்யனாரும் மணிகண்டனும் சாராயம் குடிக்க நோணாங்குப்பம் சாராயக்கடைக்கு சென்றனர்.
அப்போது அங்கிருந்த வர்மா மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் அய்யனாரை வழிமறித்து தடியால் சரமாரியாக தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அய்யனார் மயங்கி கீழே சாய்ந்தார்.
அப்போது வர்மா மற்றும் அவரது கூட்டாளிகள் பீர் பாட்டிலை எடுத்து வந்து எங்களிடம் பிரச்சினை செய்தால் குத்தி கொலை செய்து விடுவோம் என அய்யனாரை மிரட்டிவிட்டு சென்றனர். இந்த தாக்குதலில் தலையில் காயமடைந்த அய்யனாரை மணிகண்டன் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். பின்னர் இது குறித்து அய்யனார் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சங்கரன்கோவில் ஆதிமூல விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் கூலி தொழிலாளி
- தெற்கு சங்கரன்கோவில் பகுதியில் ஒரு கோவில் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கிடந்தார்.
நெல்லை:
சங்கரன்கோவில் ஆதிமூல விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 39). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் சின்னகோவிலான்குளம் அருகே உள்ள தெற்கு சங்கரன்கோவில் பகுதியில் ஒரு கோவில் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கிடந்தார். தகவல் அறிந்த சின்னகோவிலான்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
- களக்காடு சி.எஸ்.ஐ சர்ச் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது28). தொழிலாளி.
- படுகாயம் அடைந்த செல்வம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
களக்காடு:
களக்காடு சி.எஸ்.ஐ சர்ச் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது28). தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். கடந்த 3 ஆண்டுகளாக கணவன், மனை விக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று முன் தினம் செல்வம், தனது மனைவி மாரியம்மாளிடம் தகராறு செய்தார். இதைப்பார்த்த ஆற்றாங்கரை தெருவை சேர்ந்த முப்பிடாதி (27) என்பவர் செல்வத்தை தட்டிக் கேட்டார்.
இதில் செல்வதிற்கும், முப்பிடாதிக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர். நேற்று இரவில் செல்வம் களக்காடு-சேரன்மகாதேவி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த முப்பிடாதிக்கும், செல்வத்திற்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த முப்புடாதி, செல்வத்தை கத்தியால் குத்தினார். பின்னர் தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த செல்வம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி முப்புடாதியை கைது செய்தனர்.
- வாழப்பாடி அடுத்த சிட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பவருக்கும், 16 ஆண்டுக்கு முன் திருமணமாகி, 12 வயதில் மகன் உள்ளான்.
- மனைவி வர மறுத்ததால் மதுபோதையில் இருந்த தங்கராஜ் மனமுடைந்து, பூச்சிக்கொல்லி விஷத்தை குடித்துள்ளார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த
நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழி லாளி தங்கராஜ் (வயது 38). இவருக்கும் வாழப்பாடி அடுத்த சிட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பவருக்கும், 16 ஆண்டுக்கு முன் திருமணமாகி, 12 வயதில் மகன் உள்ளான்.
தங்கராஜிற்கு குடிப்ப ழக்கம் ஏற்பட்டதால், கண வன் –மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே, தீபாவளி பண்டிகை தருணத்தில், நடுப்பட்டியில் இருந்து சிட்டாம்பட்டியிலுள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு ஆனந்தி சென்றுள்ளார். ஒரு வாரம் கடந்தும் இவர் தனது கணவர் வீட்டிற்கு திரும்பவில்லை.
இந்நிலையில், நேற்று மாலை, சிட்டாம்பட்டி யிலுள்ள மாமனார் வீட்டிற்கு சென்ற தங்கராஜ், தனது மனைவியை தன்னுடன் வீட்டிற்கு வரு மாறு அழைத்துள்ளார். மனைவி வர மறுத்ததால் மதுபோதையில் இருந்த தங்கராஜ் மனமுடைந்து, பூச்சிக்கொல்லி விஷத்தை குடித்துள்ளார்.
மயங்கிக்கிடந்த இவரை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாப மாக உயிரிழந்தார். இது குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூக்கில் தொழிலாளி பிணமாக தொங்கினார்
- குடும்ப பிரச்சனை காரணமாக மன விரக்தியில் இருந்ததாக தெரிகிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வடக்கலூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் செந்தில் (வயது28) இவரது மனைவி பவானி. இவருக்கு திருமணம் மாகி ஒரு வருடம் ஆகின்றன. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன விரக்தியில் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் செந்தில் சம்பவத்தன்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் மங்களமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துசெந்திலை யாராவது கொலை செய்து தூக்கில் தொங்கவிடடிருப்பார்களா அல்லது தற்கொலை செய்து இருப்பார என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.
- களக்காடு அருகே உள்ள மாவடி புதூரை சேர்ந்தவர் ராஜாகுமார் (வயது 41). கூலி தொழிலாளி.
- தாக்குதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சிவலிங்கம், அருணை தேடி வருகின்றனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மாவடி புதூரை சேர்ந்தவர் ராஜாகுமார் (வயது 41). கூலி தொழிலாளி. மாவடியை சேர்ந்தவர்கள் சிவலிங்கம், அருண். இவர்கள் இருவரும் மாவடி-டோனாவூர் சாலையில் அதிக வேகத்தில் விபத்தை ஏற்படுத்துவது போல், மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.
இதைப்பார்த்த ராஜாகுமார் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்கிறீர்களே என தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவலிங்கமும், அருணும் சேர்ந்து ராஜாகுமாரை தாக்கினர். இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சிவலிங்கம், அருணை தேடி வருகின்றனர்.
- தூத்துக்குடி 3 செண்ட் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து நேற்று மாலை தன்னுடைய 14 வயது மகனுடன் நின்று பேசி கொண்டிருந்தார்
- முகேஷ் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாரிமுத்துவின் மகனை அரிவாளால் வெட்டினார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி 3 செண்ட் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 41). இவர் அழகேசபுரத்தில் உள்ள கோழி இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அவர் அந்த பகுதியில் தன்னுடைய 14 வயது மகனுடன் நின்று பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முகேஷ் (24) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாரிமுத்துவின் மகனை அரிவாளால் வெட்டினார். இதனை தடுக்க வந்த மாரிமுத்துவுக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்த தூத்துக்குடி டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப்-இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மாரிமுத்துவின் மகனை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் சுவரொட்டி ஒட்டுவதில் நடந்த தகராறில் முகேஷ் தரப்பினர் இந்த சம்பவத்தை நிகழ்த்தியது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொட ர்பாக சிப்காட் பகுதியில் பதுங்கி இருந்த முகேஷ் (23), தூத்துக்குடி சக்தி நகரை சேர்ந்த பத்ரகாளிமுத்து (27), எஸ்.என்.ஆர். நகரை சேர்ந்த ஜெயலிங்கம் (25) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதில் தொடர்பு டைய முத்துமீரான் (21), இன்பராஜ் (19), கண்ணன் (23) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- களக்காடு அருகே உள்ள தோப்பூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன். தொழிலாளி.
- இதில் அவருக்கு தலை, கை, விரல்கள், கால்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள தோப்பூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 40). தொழிலாளி.
இவருக்கும், பரப்பாடி அருகே உள்ள கழுவூரை சேர்ந்த ரெஜினா என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.
இந்நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு இருவருக்கும் விவாகரத்தானது.
இதற்கு தோப்பூர் வடக்குத்தெருவை சேர்ந்த தீனதயாளனும், அவரது மனைவி செல்வியும் (51) தான் காரணம் என ஜெயசீலன் கருதினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இதற்கிடையே சம்பவத்தன்று செல்வி வீட்டில் இருந்த போது, ஜெயசீலன் அவரது வீட்டுக்குள் புகுந்து செல்வியை அவதூறாக பேசி, அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதில் அவருக்கு தலை, கை, விரல்கள், கால்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெயசீலனை தேடி வருகின்றனர்.
- தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிராமம் மந்திவளவு பகுதியில் விஷம் குடித்து நெசவு தொழிலாளி பலியானர்.
- இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிராமம் மந்திவளவு பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் கதிர்வேல் (வயது 22). இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு வீட்டில் நெசவு தொழில் செய்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.