என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 330207
நீங்கள் தேடியது "Cultivation"
தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட செங்கோட்டை பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது.
செங்கோட்டை:
தமிழ்நாட்டில் தென்மாவட்டத்தில் சின்ன வெங்காய சாகுபடியில் தென்காசி மாவட்டம் முதல் இடம் வகிக்கிறது. மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
மேற்குதொடர்ச்சி அடிவார பகுதியான செங்கோட்டை தாலூகா வுக்கு உட்பட்ட செங்கோட்டை நகர்பகுதி, கணக்கபிள்ளை வலசை, சீவநல்லூர், இலத்தூர் சித்திராபுரம், நெடுவயல், அச்சன்புதூர் சிவராமபேட்டை, கொடிகுறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சின்ன வெங்காயம் ஆண்டுதோறும் சாகுபடி செய்யப்படுகிறது. இதனைநம்பியே வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.
இப்பகுதி விவசாயிகள் சித்திரை, வைகாசி, புரட்டாசி, ஆகிய முன்று மாதங்களில் பூமகசூலான வெங்காயம், மல்லி, துவரை, மோச்சை, பயறு வகைகள் உள்ளிட்ட வைகளை தென்மேற்கு பருவமழையை நம்பி பயிரிடுவர்.
அவற்றுள் பெரும்பாலானோர் 70 நாள் பயறும் குறைந்த செலவில் அதிக லாபம் தரக்கூடிய சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்வது வழக்கமாக செய்துவருகின்றனர்.
ஒரு ஏக்கர் சின்ன வெங்காயம் பயிரிட 600கிலோ தேவை, இதற்கான உள்ளி விதைகளை திண்டுக்கல் பகுதிகளிலிருந்து ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை வாங்கிவந்துள்ளனர். இவ்வாறு பயிரிட சாராசரியாக உழவு, பாத்தி கெட்டுதல், இயற்கை உரம் என ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்து சின்ன வெங்காயம் நடவு பணி மேற்கொள்கின்றனர்.
70 நாட்களுக்கு பின் ஒரு ஏக்கருக்கு 7000 முதல் 7200 கிலோ சின்ன வெங்காயம் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டில் தென்காசி மாவட்டத்தில் 800 ஏக்கருக்கு மேல் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் தங்களது நிலத்தை உழுது அடி உரமிட்டு சின்ன வெங்காயம் நடுவதற்காக கரை அமைத்தனர்.
இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் சின்ன வெங்காயம் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் பயிறுக்கு குறைந்த அளவு தண்ணீரே போதுமானது.
பெரும்பாலானோர் இயற்கை உரங்களான மண்புழு, எறுசாணம், வேப்பம் புண்ணாக்கு, வேப்ப எண்ணை உள்ளிட்டவையே உபயோகித்து வருவதால் இங்கு விளையும் சின்ன வெங்காயத்திற்கு மதிப்பு கூடுதல் என்பதால் வியாபாரிகள் வாங்கி செல்வதில் அதிகளவில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து கார்சாகுபடிக்காக இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
சிங்கை:
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் இருந்து ஆண்டுேதாறும் கார், பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு கார் சாகுபடியையொட்டி வழக்கம்போல் கடந்த 1-ந்தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
தற்போது அணையின் நீர்மட்டம் 71.55 அடியாக இருப்பதால், இன்று முதல் விவசாயிகளின் நலன் கருதி அணையில் இருந்து சாகுபடிக்கு தண்ணீர் திறக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி இன்று சபாநாயகர் அப்பாவு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு அணையில் இருந்து கார்சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு பாபநாசம் அணையில் 135 அடி தண்ணீர் இருந்தது.
இதனால் ஜூன்1-ம் தேதி திறந்து விடப்பட்டது. தற்போது 71 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. எனினும் தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்யும் என்பதால் இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக்ெகாள்ள வேண்டும். நெல், நாற்று உற்பத்தி செய்ய இன்று முதல் 20 நாட்களுக்கு 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதன்பின்னர் நீர் இருப்பை பொறுத்து தேவையான அளவு தண்ணீர் திறந்து விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் ரூபிமனோகரன், இசக்கி சுப்பையா, மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகர் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.
பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்படும் நீரினால் வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் 2,260 ஏக்கரும், தெற்கு கோடைமேலழகியான் கால்வாயில் 870 ஏக்கரும், நதியுண்ணி கால்வாயில் 2460 ஏக்கரும், கன்னடியன் கால்வாய் மூலம் 12,500 ஏக்கரும், கோடகன் கால்வாய் மூலம் 6000 ஏக்கரும், பாளையங்கால்வாய் மூலம் 6200 ஏக்கரும், நெல்லை கால்வாய் மூலம் 2525 ஏக்கரும் பாசன வசதி பெறும்.
மொத்தம் 32,815 ஏக்கர் நிலப்பரப்பு நேரடியாகவும்,. மறைமுகமாகவும் பயன் பெறும் என்பதால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று முதல் வருகிற அக்டோபர் மாதம் 12-ந்தேதி வரை நீர் இருப்பை பொறுத்து 132 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் அம்பை, சேரன்மகாதேவி, நெல்லை, பாளை ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள் பயன்பெறும்.

×

X