என் மலர்
நீங்கள் தேடியது "Celebration"
- நான் செய்த Celebration எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்றான காந்தாராவில் இடம் பெற்ற காட்சி.
- இந்த மைதானம்தான் என் வீடு என்பதை மீண்டும் ஞாபகப்படுத்தவே அப்படி செய்தேன்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 164 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 93 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல். ராகுல் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார். இந்த வெற்றியை கே.எல்.ராகுல், தனது பேட்டை தரையில் வட்டமிட்டு அடித்து ஆக்ரோஷமாக கொண்டாடினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்நிலையில் ஆக்ரோஷமாக கொண்டாடியதற்காக காரணத்தை கேஎல் ராகுல் கூறியுள்ளார். அதில், சின்னசாமி மைதானம் மிகவும் ஸ்பெஷலான இடம். ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் வென்ற பின்பு நான் செய்த Celebration எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்றான காந்தாராவில் இடம் பெற்ற காட்சி. இந்த மைதானம்தான் என் வீடு என்பதை மீண்டும் ஞாபகப்படுத்தவே அப்படி செய்தேன் என ராகுல் கூறினார்.
- புதுவை விடுதலை நாளையொட்டி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆணையர் ஆறுமுகம் தேசியக்கொடியேற்றி மாணவர்களிடம் விடுதலை நாள் குறித்து பேசினார்.
- ஊழியர்கள், மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை விடுதலை நாளையொட்டி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆணையர் ஆறுமுகம் தேசியக்கொடியேற்றி மாணவர்களிடம் விடுதலை நாள் குறித்து பேசினார்.
பிறகு மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள், நோட்டுப்புத்தகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கொம்யூன் மேலாளர் குப்பன், வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார், உதவிப்பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப்பொறியாளர்கள் ரங்கமன்னார், சத்திய நாராயணன், கருத்தையன் மற்றும் ஊழியர்கள், மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
- பிட் இந்தியா ப்ரீடம் ரன் 3.0 கொண்டாடப்பட்டது.
- ஜோதியை ஏற்றி மாணவர்களுக்கு நகர்மன்ற தலைவர் சிறப்புறையாற்றினார்.
சீர்காழி:
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி உடற்கல்வித்துறை சார்பில் உலக ஒற்றுமை நாள் சுடர் ஓட்டமானது பிட் இந்தியா ப்ரீடம் ரன் 3.0 கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் எஸ். அறிவுடைநம்பி தலைமை வகித்தார். நகர்மன்ற துணை தலைவர் மா. சுப்பராயன் முன்னிலை வகித்தார்.
ஜோதியை ஏற்றி மாணவர்களுக்கு நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் சிறப்புறை யாற்றினார்.ஜோதி ஓட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாட்டினை காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவல் துறையினர் செய்திருந்தனர்
உடற்கல்வி ஆசிரியர்கள் சக்திவேல் ஹரிஹரன், ராகேஷ் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, மார்கண்டன் செய்திருந்தனர். உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் நன்றி கூறினார்.
- விழாவுக்கு வள்ளியூர் மேக்ரோ கல்லூரி சேர்மனும், சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவருமான டாக்டர் பொன் தங்கதுரை தலைமை தாங்கினார்.
- சங்கம் கடந்து வந்த பாதையினை பட்டைய தலைவர் எஸ்.என்.தங்கத்துரை விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.
வள்ளியூர்:
வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பாக பட்டய நாள் கொண்டாட்டம் ரோட்டரி சங்க கட்டிடத்தில் நடை பெற்றது.
விழாவில் தலைமை விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் ரோட்டே ரியன் ஜே.கே.குமார் கலந்து கொண்டார். விழாவுக்கு வள்ளியூர் மேக்ரோ கல்லூரி சேர்மனும், சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவருமான டாக்டர் பொன் தங்கதுரை தலைமை தாங்கினார். பட்டய தலைவர் எஸ்.என்.தங்கதுரை, பட்டய செயலர் முன்னாள் மாவட்ட ஆளுநர் நவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரோட்டேரியன் அந்தோணி செல்லத்துரை ரோட்டரி இறைவணக்கம் வாசித்தார். பின்பு ரோட்டே ரியன் முன்னாள் துணை ஆளுநர் முத்துகிருஷ்ணன் விருந்தினர்களை வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து சங்கத்தின் தலைவர் டாக்டர் பொன் தங்கதுரை விழாவின் சிறப்பினை பற்றி எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார்.
பட்டைய தலைவர் எஸ்.என்.தங்கத்துரை சங்கம் கடந்து வந்த பாதையினை விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.
முன்னாள் மாவட்ட ஆளுநர் பட்டய செயலாளர் நவமணி இந்த சங்கத்தின் முன்னாள் தலைவர்களின் சிறப்பினையும் கூறி வாழ்த்துக்களை தெரி வித்தார். பட்டய தலைவர் எஸ்.என். தங்கத்துரை, பட்டய செயலர் முன்னாள் மாவட்ட ஆளுநர் நவமணி ஆகியோருக்கு சந்தன மாலை, பொன்னாடை அணிவித்தனர்.
முதன்மை விருந்தினர் முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜே.கே.குமாரை முன்னாள் துணை ஆளுநர் ரோட்டேரியன் ரமேஷ் வலங்கை புலி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் ஜே.கே.குமார் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சின்போது முன்னாள் சங்க தலைவர்களுக்கு பரிசு பொருட்களை பட்டய தலைவர், செயலர் வழங்கினர். மாவட்ட துணை ஆளுநர் வாழ்த்தி பேசினார். விருந்தினர் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவினை ரோட்டேரியன் மேஜர் எல்.சுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் திசையன்விளை எலைக்ட் ரோட்டரி சங்கம், கன்னியாகுமரி ரோட்டரி சங்கம், நாகர்கோவில் மிட்டவுன் ரோட்டரி சங்கம், நாகர்கோவில் சவுத் ரோட்டரி சங்கம், நாகர்கோவில் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், வள்ளியூர் ரோட்டரி சங்கம், திருநெல்வேலி தாமிரபரணி ரோட்டரி சங்கம், பேர்ல்ஸ் சிட்டி தூத்துக்குடி ரோட்டரி சங்கம், திருநெல்வேலி வெஸ்ட் ரோட்டரி சங்கம், நாகர்கோவில் ரோட்டரி சங்கம் ஆகிய சங்கங்களில் இருந்து உறுப்பினர்கள் கலந்து ெகாண்டனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் தலைவர் டாக்டர் பொன் தங்கதுரை சிறப்பு பரிசுகளை வழங்கினார். செயலர் சுதிர் கந்தன் நன்றி கூறினார்.
- போட்டிகளில் பங்கேற்று விளையாடி மகிழ்ந்தனர்.
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே காரமடை எஸ்.வி.ஜி.விமெட்ரிக் பள்ளியில் தாத்தா, பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி தாளாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். முதல்வர் சசிகலா வரவேற்றார். பள்ளி செயலாளர் ராஜேந்திரன், அறங்காவலர் தாரகேஸ்வரி, நிர்வாக அதிகாரி சிவ சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். விழாவில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தாத்தா, பாட்டிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முதுமையை மறந்து இளமையான நினைவு கூற நடனம் மற்றும் விளையாட்டு உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி மகிழ்ந்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த பள்ளி நிர்வாகத்துக்கு தாத்தா, பாட்டிகள் நன்றி கூறினார்.
- நூலகத்தில் உள்ள புத்தகங்கள் ,புத்தக வரிசைகள் குறித்து நூலகர் கலாவதி மற்றும் நூலகர்கள் விளக்கினர்.
- துணைத்தலைவர் சிவகுமார் ,முன்னாள் நூலகர் கணேசன் உட்படபலர் கலந்து கொண்டனர்.
உடுமலை:
உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகம் எண் இரண்டில் தேசிய நூலக வார விழா 14 -ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது .முதல் நாள் நிகழ்ச்சியில் புத்தக கண்காட்சி மற்றும் புதிய நூல்கள் அறிமுக விழா, உறுப்பினர் சேர்க்கை, நூலக புரவலர்கள் சேர்க்கைகள் நடைபெற்றன. இதில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தலைமை ஆசிரியர் விஜயா வழிகாட்டுதலுடன் பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி தலைமையில் மாணவிகள் நூலகத்திற்கு சைக்கிளில் களப்பயணம் வந்தனர்.
நூலகத்தில் உள்ள புத்தகங்கள் ,புத்தக வரிசைகள் குறித்து நூலகர் கலாவதி மற்றும் நூலகர்கள் விளக்கினர். இதில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் ,சுபேதார் நடராஜ் ,பொருளாளர் சிவகுமார், நூலக வாசகர் வட்ட ஆலோசகர் ஐயப்பன், துணைத்தலைவர் சிவகுமார் ,முன்னாள் நூலகர் கணேசன் உட்படபலர் கலந்து கொண்டனர். வரும் 20ந் தேதி வரை நடக்கும் நூலக வார விழாவில் பல்வேறு போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படுகிறது. முன்னால் ராணுவ வீரர் நலச் சங்கம் மற்றும் ஆசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் புரவலர்களாக சேர்ந்தனர்.
- அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது.
- மாணவ, மாணவிகளின் கோலாட்டம் நடந்தது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சிவபுரிப்பட்டி ஊராட்சி மக்கன்டான் கோவில்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. தலைமை ஆசிரியை ஈஸ்வரி தலைமை தாங்கினார்.
வட்டார கல்வி அலுவலர் இந்திரா தேவி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் செந்தில் மற்றும் சேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் கோலாட்டம், ராதா ருக்மணி ஆட்டம், தப்பாட்டம் மற்றும் பேச்சுப்போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி மேலாண்மை குழு தலைவி சுபாஸ்ரீ, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவி ரஞ்சிதா, செல்வம், கோளம்பழனி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை பரிமளா நன்றி கூறினார்.
- அரிட்டாபட்டி கிராம மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
- இப்பகுதி பல பறவைகள் மற்றும் விலங்குகள் வாழ்விடமாக பல வருடங்களாக உள்ளது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி கிராமம் உள்ளது. இதனை தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்பிரியா சாகு தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் அரிட்டாபட்டி அமைந்து உள்ளது.
அரிட்டாபட்டி கிராமம் 7 சிறு குன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ள பகுதியாகும். இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பகுதி இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இங்கு 72 ஏரிகள், 200 இயற்கை நீர் ஊற்று கொண்ட குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளன. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி 16-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர் ஆட்சியில் கட்ட ப்பட்டது.
இந்த கிராமத்தில் உள்ள மலைப்பகுதிகளில் சிறு மற்றும் நடுத்தர பறவை இனங்கள் 300-க்கும் மேல் உள்ளன. இதில் லகர் ராஜாளி, சாகின் ராஜாளி மற்றும் ராஜாளி பருந்து ஆகிய 3 முதன்மையான கொன்னுருண்ணி பறவை இனங்கள் உள்ளன. எறும்புத்தின்னிகள், மலைப்பாம்பு மற்றும் அரிய வகை தேவாங்கு ஆகிய வனவிலங்குகளும் உள்ளன. இப்பகுதி பல பறவைகள் மற்றும் விலங்குகள் வாழ்விடமாக பல வருடங்களாக உள்ளது.
மேலும் இங்கு பல்வேறு சமண சிற்பங்கள், சமண படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்ட எழுத்து கல்வெட்டுக்கள், 2200 ஆண்டுகள் பழமையான குடை வரை கோவில்கள் உள்ளன.
இந்த வரலாற்றுச் சின்னங்கள் இப்பகுதிக்கு கூடுதல் சிறப்பையும் தருகின்றது. இதனை பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்க கோரி ஊராட்சி மன்ற தலைவர் வீரம்மாள் ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பினார்.
அதேபோல் இப்ப குதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன், வன பாதுகாவலர் ஓடையன், நரசிங்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த், முன்னாள் நரசிங்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஓடையன் உள்பட பலர் அரசிற்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
மதுரையை சுற்றியுள்ள சமூக ஆர்வலர்களும் மற்றும் பறவை இன பாதுகாவலர்கள் வன பாதுகாவலர்களும் கோரிக்கை விடுத்தனர். கல்லூரி மாணவ-மாணவிகள் இங்கு வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் தமிழக அரசு அரிட்டா பட்டியை தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்தது. இதையொட்டி அரிட்டா பட்டி கிராம பிரமுகர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் தங்களது கிராமத்தை பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்ததற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
- திருமங்கலத்தில் உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.
- விழாவை முன்னிட்டு சிறுவர்- சிறுமியர் மற்றும் ஏழை- எளியவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.
திருமங்கலம்
தி.மு.க. மாநில இளைஞ ரணி செயலாளரும், சென்னை சேப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் நாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர தி.மு.க. சார்பில் முன்சீப் கோர்ட்டு சாலையில் ராஜாஜி தெரு சந்திப்பில் 45 கிலோ கேக் வெட்டி உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடினர். விழாவை முன்னிட்டு சிறுவர்- சிறுமியர் மற்றும் ஏழை- எளியவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் திருமங்க லம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகரசபை தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை சேர்மன் ஆதவன் அதியமான், இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட அவைத் தலை வர் நாகராஜன், நகர அவைதலைவர் சேட், துணைச் செயலாளர் செல்வம், வழக்கறிஞர்கள் தங்கச்சாமி, தங்கேஸ்வரன், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், காசி பாண்டி, ரம்ஜான் பேகம், வினோத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தேசிய பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வார விழா கடந்த ஒரு வாரமாக விமர்சையாக கொண்டாடப்பட்டது.
- நிறைவு நாள் விழாவில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் குழந்தை நலத்துறை மற்றும் இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கம் புதுவை கிளையும் இணைந்து தேசிய பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வார விழா கடந்த ஒரு வாரமாக விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நிறைவு நாள் விழாவில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
மேலும் இவ்விழாவில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மருத்துவ கல்லூரி இயக்குனர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, டீன்கள் கார்த்திகேயன், கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் பரத்குமார் வரவேற்புரையாற்றினார். செங்கல்பட்டு மருத்துவ கல்லுரியின் பச்சிளம் குழந்தைகள் துணை பேராசிரியர் டாக்டர் மணிகுமார், பிறந்தவுடன் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு குறித்தும் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியையொட்டி மாணவ-மாணவிகளுக்கு வினா-வினாடி போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் குழந்தைகள் நலத்துறை இணை பேராசிரியர் பிரித்தி நன்றி கூறினார்.
- தாத்தா பாட்டிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
- தாத்தா பாட்டிகள் குழந்தைகளுக்கு கதைகள் கூறி தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் அவினாசி சாலை அசர்நகர் கிழக்கில் அமைந்துள்ள வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்மழலை குழந்தைகளின் தாத்தா, பாட்டிகள் கலந்து கொள்ளும் தாத்தா - பாட்டிகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாக அலுவலர் சாருலதா, மற்றும் முதல்வர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் துணை முதல்வர் சித்ராதேவி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாத்தா பாட்டிகள் குழந்தைகளுக்கு கதைகள் கூறி தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.மேலும் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று விளக்கம் அளித்தனர். தாத்தா பாட்டிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் ஆஷா நன்றி கூறினார்.
- ஆறுமுகநேரியில் நகர காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
- நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
ஆறுமுகநேரி:
இமாச்சல பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை கொண்டாடும் விழா மற்றும் சோனியா காந்தி பிறந்த தின விழா ஆறுமுகநேரியில் நகர காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் வட்டார செயலாளர் அழகேசன், தூத்துக்குடி மாவட்ட செய லாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நகர துணை தலைவர்கள் சிவகணேசன், மூக்கன் கிறிஸ்டியான் நகரச் செய லாளர்கள் ராஜலிங்கம், நடராஜன், மகளிர் காங்கிரஸ் தலைவர் பெனிட் ராணி, முன்னாள் வார்டு கவுன்சிலர் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.