என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private"

    • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம்.
    • பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மகளிருக்கு ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இளநிலை தொழில் நிபுணா் பணி வழங்கப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மகளிா் தனியாா் நிறுவனத்தில் பணியில் சேருவதற்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந்தேதி நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஆகியன சாா்பில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மகளிருக்கு ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இளநிலை தொழில் நிபுணா் பணி வழங்கப்படவுள்ளது.

    இதற்கான வேலைவாய்ப்பு முகாம் திருப்பூா் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருகிற 26-ந்தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையில் நடைபெறுகிறது.

    ஆகவே, திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 18 வயது முதல் 22 வயதுக்கு உள்பட்ட மகளிா் தங்களது மாற்றுச்சான்றிதழ், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றுடன் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் தனியார் மில் ஒன்று செயல்பட்டு வருகிறது.
    • மாசு ஏற்படுத்தும் இந்த நிறுவனத்தை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் .

     திருப்பூர் : 

    திருப்பூர் அடுத்த பல்லடம் இச்சிப்பட்டி சிங்கப்பூர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன .மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் தனியார் மில் ஒன்று செயல்பட்டு வருகிறது.மில்லில் பஞ்சுகளை அரவை இயந்திரம் மூலம் அரைத்து வருகின்றனர். அதிலிருந்து வெளிவரும் கழிவுப்பஞ்சுகள் கம்பரசர் ஏர் மூலம் அடித்து வருகின்றனர்.

    இதனால் நகர் முழுவதும் காற்றின் மூலமாக கழிவு பஞ்சு படர்கிறது. மேலும் அனைத்து வீடுகளுக்கும் காற்றில் பரவுகிறது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் அனைவரும் மூச்சு திணறல், சளி, இருமல் போன்ற தொந்தரவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மாசு ஏற்படுத்தும் இந்த நிறுவனத்தை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் .இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    • விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ந் தேதி நடக்கிறது.
    • www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வரவேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இதில் 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டிஐ., டிப்ளமோ கல்வித் தகுதி உடையவர்கள் விருதுநகர், சிவகாசி, கோவை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள்

    16-ந் தேதி நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வரவேண்டும்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளவேண்டும். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்ற வர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழிலாளி ஒருவரை ரூ.30 ஆயிரம் பணத்திற்காக மர்ம நபர் கடத்தினார்.
    • போலீசார் தனிப்படை அமைத்து கடத்தலில் ஈடுபட்ட மர்மநபரை கைது செய்தனர்.

    பட்டீஸ்வரம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநல்லூரை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 43) தொழிலாளி. இவரை ரூ.30 ஆயிரம் பணத்திற்காக மர்ம நபர் கடத்தினார்.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவுப்படி கும்பகோணம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மேற்பார்வையில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவசெந்தில், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கீர்த்தி வாசன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம் செந்தில், ஜனார்த்தனன், நாடிமுத்து, பார்த்திபநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட நபர் பாபநாசம் அருகே உத்தமதானியை சேர்ந்த உத்திராபதி (25) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பதுங்கி இருந்த உத்திராபதியை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

    அவரிடமிருந்து ரமேஷ்பாபுவை பத்திரமாக மீட்டனர்.

    இவ்வழக்கை விரைவாக விசாரித்து 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    • ஓடைக்கரையின் 2 பக்கமும் அதிகளவில் பனைமரங்கள், மற்றும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது.
    • காவல் துறையில் புகார் அளிக்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், வேப்பூர்-சேலம் சாலையின் ஓரமாக சுமார் 2. கிலோ மீட்டர் தூரம் பெரியநெசலூர் வரை ஓடை நீர்நிலை புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த ஓடைக்கரையின் 2 பக்கமும் அதிகளவில் பனைமரங்கள், மற்றும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. இந்நிலையில். மர்ம நபர்கள் ஜே.சி.பி., எந்திரம் மூலம் பனை மரங்களை வெட்டிலாரியில் ஏற்றும் பணி நடந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் திட்டக்குடி போலீஸ் டி.எஸ்.பி. காவ்யாவிற்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் டிஎஸ்பி, காவ்யா, வேப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், வேப்பூர் துணை தாசில்தார் மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர் மற்றும் வேப்பூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றனர் . இதை அறிந்த மரம் வெட்டிக்கொண்டு இருந்தவர்கள் ஜே.சி.பி. டிரைவர் உள்ளிட்டோர் தப்பி ஓடினார்கள்.

    இது குறித்து திட்டக்குடி டி.எஸ்.பி., காவ்யா அங்கு விசாரணை செய்ததில் அரசு அனுமதியின்றி, சுமார் 61 பனைமரங்கள், 6 சீமை கருவேல மரங்கள், 1 ஈச்ச மரம் ஆகியவற்றை வெட்டி கடத்தி சென்றது தெரிய வந்தது அதனை தொடர்ந்து டி.எஸ்பி. காவ்யா பனை மரங்கள் வெட்டப்பட்ட இடங்களை அளவீடு செய்து, காவல் துறையில் புகார் அளிக்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இது குறித்து சிறுநெசலூர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து உள்ளனர். மரங்களை வெட்டிய மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • நிதிஷ்குமார் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
    • இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரிநகர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் காட்டுராஜா. இவருடைய மகன் நிதிஷ்குமார் (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த விஜயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிதிஷ்குமார் கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று காலையில் விஜயா வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். கதவு உள் பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார்.

    அப்போது நிதிஷ்குமார் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    பின்னர் நிதிஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே நிதிஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதிஷ்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விருதுநகரில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது
    • பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது

    விருதுநகர்,

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக நாளை (20-ந் தேதி) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.

    இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி, டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடையவர்கள் விருதுநகர், சிவகாசி, கோவை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தெரிவு செய்ய உள்ளார்கள்.

    இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் நாளை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பு (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படு கின்றனர்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனத்தினர் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • அரசு துறைகளை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூா்:

    சமூக நீதி மறுக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். அரசு துறைகளைத் தனியார்ம யமாக்கும் முயற்சியைக் கைவிட செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    முடக்கப்பட்ட சரண் விடுப்பு, மறுக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை மீட்டெடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணியை தொடங்கினர்.

    சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பேரணியை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோட்டத் தலைவர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். சங்கத்தின் மாவட்டச் செயலர் ரெங்கசாமி கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

    தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி, சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர்கள் தமிழ்வாணன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பேரணியானது பனகல் கட்டிடம் முன்பு முடிவடைந்தது . பின்னர் அங்கு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 17-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • முகாமில் கலந்து கொள்ளபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகம் வாயிலாக மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக வருகிற 17-ந்தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இதில் 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ./டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடையவர்கள் விருதுநகர், சிவகாசி, கோவை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.

    இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 17-ந்தேதி நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனத்தினர் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

    இந்த தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரி வித்துள்ளார்.

    • கல்விக் கடன் பெறுவதில் இருந்த இறுக்கம் தளர்ந்து நெகிழ்வுத் தன்மை ஏற்பட்டுள்ளது.
    • வங்கிகளையும் தனியார் நிறுவனங்களையும் எளிதில் அணுகும் நிலை உருவாகியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் ஏ.டி.எம். மகளிர் கல்லூரியில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோர் தொடங்கி வைத்து, பணி நியமன ஆணையினை வழங்கினர்.

    முகாமில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசியதாவது, மாணவர்கள் வேலை வாய்ப்புக்காக தனியார் நிறுவனங்களை தேடி அலைந்த காலம் உண்டு.

    ஆனால் இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு கடந்த 20 மாதங்களில் மாவட்டம் தோறும் கல்விக் கடன் முகாம்களும் வேலை வாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு, வங்கிகளையும் தனியார் நிறுவனங்களையும் எளிதில் அணுகும் நிலை உருவாகியுள்ளது.

    கல்விக் கடன் பெறுவதிலும் வேலை வாய்ப்பு பெறுவதிலும் இருந்த இறுக்கம் தளர்ந்து நெகிழ்வுத் தன்மை ஏற்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட அளவில்கல்விக் கடன் முகாம் நடத்தப்பட்டு அதிகம் பேர் பயன் பெற்றுள்ளனர். அதுபோல் மாவட்ட அளவில் 4 பெரிய வேலை வாய்ப்பு முகாம்களும், வட்டார அளவில் 6 முகாம்களும் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.

    சுமார் 10,000 பேர் பங்கேற்ற அம்முகாம்களின் மூலம் சுமார் 4,000 பேருக்கு இதுவரை வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய அளவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வேலையின்மை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.
    • www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக நாளைமறுநாள்(17-ந் தேதி) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் மாற்றுத்திறனா ளிகளுக்கென சிவகாசி மற்றும் விருதுநகரில் உள்ள CIEL Services Pvt Ltd., Lovely Offset மற்றும் Pentagon போன்ற நிறுவனங்களும், சாய்ராம் அறக்கட்டளை போன்ற 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்களும் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டிஐ., டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 17-ந் தேதி நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும். முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.

    தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
    • காலை 7 மணிக்கு வந்து நுழைவுப்படிவம் பெற்று வருகை பதிவேட்டில் பதிந்து கொள்ள வேண்டும்.

    மதுரை

    மதுரையில் போலீசார், தீயணைப்பு படை மற்றும் ஊர்க்காவல் படை ஆகியவற்றில் வேலை பார்க்கும் ஊழியர்களின் வாரிசுகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை 25-ந் தேதி மற்றும் நாளை மறுநாள் 26-ந்தேதிகளில் நடக்க உள்ளது.

    மதுரை விமான நிலையம் அருகே வலையப ட்டியில் உள்ள நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    தமிழ்நாடு போலீசார் குடும்பத்தினருக்கான மெகா சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் கடந்த ஆண்டு 230 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. 4009 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 1054 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    எனவே மதுரையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் மட்டும் நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர், காலை 7 மணிக்கு வந்து நுழைவுப்படிவம் பெற்று வருகை பதிவேட்டில் பதிந்து கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தகவலை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. ஆஸ்ரா கர்க், மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி, போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    ×