என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "burglary"

    • மணி என்ற சுப்ரமணியன் (வயது 42) இவர் கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
    • சம்பவத்தன்று ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர்கள் அலுவலக கண்ணாடி மற்றும் மின் சாதனங்களை உடைத்து சேதப்படுத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே பொரசக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி என்ற சுப்ரமணியன் (வயது 42) இவர் கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர்கள் அலுவலக கண்ணாடி மற்றும் மின் சாதனங்களை உடைத்து சேதப்படுத்தினர். இதனை கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்த சுப்ரமணியன் சம்பந்தப்பட்ட நபர்களான கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அய்யப்பன் (38), ராமச்சந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (40) ஆகியோரை நேரில் சென்று ஏன் எனது அலுவலக கண்ணாடியை உடைத்தீர்கள் என கேட்டுள்ளார். அப்பொழுது அய்யப்பன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் அவரை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் வழக்கு பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணகுமாரை தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று நள்ளிரவு அந்த வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்தனர்.
    • 2 பேர் தனது வீட்டில் திருடியதாக கூறி இருந்தார்

    சேலம்:

    ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை ஊராட்சி சின்னவடகம்பட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது 39). கட்டிட மேஸ்திரி. அவருக்கு சொந்தமான தோட்டத்தில் வீடு ஒன்று உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு அந்த வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அவர்கள் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 2¼ பவுன் நகை, ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர். இதுகுறித்து சேகர் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    அதில் அதே பகுதியை சேர்ந்த 2 பேர் தனது வீட்டில் திருடியதாக கூறி இருந்தார்.இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீடு புகுந்து நகை திருடப்பட்டது.
    • முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி முத்தமிழ் வீதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 56). இவர் குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தார். இந்த நிலையில் வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அருகில் வசிப்பவர்கள் அவருக்கு போனில் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து உடனடியாக அவர் ஊருக்கு வந்தார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகள் திருடப்பட்டது தெரிய வந்தது. யாரோ மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகையை திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் கண்ணன் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடு புகுந்து நகை திருடப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    ராஜபாளையம் அருகே சுந்தர நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் சீனியம்மான் (வயது32). இவர் குழந்தைகள் வீட்டில் இருந்ததால் வீட்டை திறந்து வைத்து விட்டு பக்கத்து ஊருக்கு வேலைக்கு சென்று விட்டார்.

    திரும்பி வந்து பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்து 5பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் லட்சுமி காலனியை சேர்ந்தவர் சீனிவாஸ் (வயது45). இவரது வீட்டில் புதிதாக ஏ.சி.பொருத்தியுள்ளனர். அந்த பணியை முடித்து பின் பார்த்த போது 1 1/2 மோதிரம் காணாமல் போயியுள்ளது.

    இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் சீனிவாஸ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம் அருகே கீழராஜகுல ராமன் பகுதியில் அச்சம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலையில் பூஜை செய்வதற்காக பூசாரி சங்கர நாராயணன் வந்தார்.

    அப்போது உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்து 2 மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகி நவநீத கிருஷ்ணன் கீழராஜகுலராமன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருடப்பட்டிருந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஆனையூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தமிழ் நகரை சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி சோலையம்மாள் (வயது45). இவர்கள் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டனர். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகை,வெள்ளி கொலுசு, ரூ.50 ஆயிரம் மற்றும் டி.வி. உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சோலையம்மாள் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • பீரோவை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த சு.வாளவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (வயது 32). புதுச்சேரியில் தங்கியிருந்து கட்டிட உள் அலங்கார வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி நந்தினி மற்றும் தாய் பாரதி ஆகியோர் சு.வாளவெட்டி கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டில் இருவரும் தூங்கிய போது வீட்டில் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து 2 பவுன் நகை, ரூ.13000 ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

    அதிகாலை வீட்டின் அறைக்குள் சென்று பார்த்த போது திருட்டு நடந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 48). இவர் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சி புரத்தில் செங்கல் சூளையில் வேலை செய்கிறார்.

    இவரது மனைவி ராணி சென்னையில் உள்ள தனியார் மருத்து வமனையில் செவிலியர் ஆக பணிபுரிகிறார். இதனால் இவர்களுடைய வீடு பூட்டி இருந்தது.

    எனவே நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.12000 ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.

    இந்த 2 திருட்டு சம்பவங்கள் தொடர்பாக புகாரின் பேரில் வெறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடு புகுந்து நகை-பணம் திருட்டு நடந்தது.
    • வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.

    மதுரை

    திருநகர் பாலசுப்பிரமணி யம் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மகன் ஆதி (வயது 25). இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது முன்கத வின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 3½ பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. யாரோ மர்ம நபர்கள் பாலசுப்பிரமணியம் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு நகை-பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து திருநகர் போலீஸ் நிலையத்தில் பாலசுப்பிரமணியம் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டி டாக்டர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மனைவி பிரபாவதி (வயது 73). சம்பவத்தன்று இவர் வீட்டைப் பூட்டிவிட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார். நேற்று வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் தங்க செயின், 7 கிராம் தோடு மற்றும் ரூ.32 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி தப்பி சென்றது தெரியவந்தது.

    இதுபற்றி அவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சப் -இன்ஸ்பெக்டர் சாம்சன்லியோ தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தனிப்படை அமைத்து குற்றவாளிளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த னர்.
    • இதையடுத்து 2 மோட்டார் சைக்கிளையும் சின்னசேலம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் தொடர்ந்து திருட்டு மற்றும் வழிபறி சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட நபர்கள் சின்னசேலம் போலீ சாரிடம் புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சின்ன சேலம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த்ராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த னர். இந்நிலையில் கனியாமூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது 2 மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். மோட்டார் சைக்கி ளை நிறுத்திய போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினர். சந்தேக மடைந்த போலீசார், 3 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் திருச்சி மாவட்டம் திருவெரும்பூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் குணசீலன் (வயது 28), மாரிமுத்து மகன் கண்ணன் (40), பொன்னுரங்கன் மகன் செந்தில் (39) என்பதும், 3 பேரும் சேர்ந்து திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது. அதன்படி, சின்னசேலத் தில் உள்ள வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்தவரிடம் கொள்ளையடித்தது, மூங்கில் பாடியில் உள்ள செறுப்பு கடையில் பணம் திருடியது, நைனார்பாளை யத்தில் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் வழிப்பறி செய்தது போன்ற சம்பவங்களில் 3 பேரும் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 2 மோட்டார் சைக்கிளையும் சின்னசேலம் போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்களை கைது செய்த போலீசாரை சின்னசேலம் பகுதி மக்கள் வாழ்த்தி வருகின்றனர்.

    • உள்ளே சென்று பார்த்த பொழுது மாரியம்மன் சிலையில் இருந்த இரண்டு மாங்கல்யங்கள் களவு போனது தெரிய வந்தது
    • இருப்பினும் நேற்று சந்திர கிரகணம் நடைபெற்றதால் மக்கள் நடமாற்றம் குறைவாக காணப்பட்டது

    உப்பிலியபுரம்

    உப்பிலியபுரத்தை அடுத்துள்ள தெற்கு விசுவாம்பாள் சமுத்திரம் கோவில்களில் பூட்டுகள் உடைக்கப்பட்டு துணிகர கொள்ளை நடைபெற்று உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    உப்பிலியபுரம் ஒன்றியம் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியை சேர்ந்த தெற்கு விஸ்வாம்பாள் சமுத்திரத்தில் பிரதான சாலையில் அமைந்துள்ளது மகா மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் நேற்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு வழக்கமான பூஜைகளை முன்னதாகவே முடித்துவிட்டு கோயில் பூசாரி செல்வராஜ் மாலை 6 மணிக்கு கோவிலை பூட்டி விட்டு சென்று உள்ளார்.

    இன்று அதிகாலை சந்திர கிரகண பரிகார பூஜைகளை செய்வதற்காக வந்தவர் கோயிலின் கேட்டில் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டும் உள்பிரகாரத்தில் உள்ள மாரியம்மன் அர்த்த மண்டப கதவுகள் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த பொழுது மாரியம்மன் சிலையில் இருந்த இரண்டு மாங்கல்யங்கள் களவு போனது தெரிய வந்தது இதனையடுத்து உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

     

    இதேபோல் தெற்கு விஸ்வாம்பாள்சமுத்திரம் பிரதான சாலையில் உள்ள விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று அன்னாபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

    சந்திரகிரகணத்தை முன்னிட்டு வழக்கத்திற்கு முன்னதாகவே மாலை அன்னாபிஷேக பூஜைகள் முடிவடைந்ததன் பெயரில் கோயில் குருக்கள் கார்த்திக் கோவில் கதவுகளை மூடி பூட்டிவிட்டு சென்று உள்ளார்.

    இன்று காலை சந்திரகிரகண பரிகார பூஜைகளை செய்வதற்காக கோவிலுக்கு வந்தவர் அம்மன் கோயில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு விசாலாட்சி அம்மன் சிலையில் இருந்த மாங்கல்யம் திருடு போயிருந்தது கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தார்.

     

    தகவலின் பேரில் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ் செபாஸ்டின், சந்தியாகு பாலமுருகன், மாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு கோவில்களிலும் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் களவு போன, சிவன் கோயிலில் ஒரு திருமாங்கல்யம், மாரியம்மன் கோவிலில் இரண்டு திருமாங்கல்யம் என கோவில் தங்க நகைகளின் மதிப்பு இரண்டு லட்சம் இருக்கும் என்பது தெரிய வந்தது.

    2 கோவில்களும் அமைந்துள்ள இடம் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். இருப்பினும் நேற்று சந்திர கிரகணம் நடைபெற்றதால் மக்கள் நடமாற்றம் குறைவாக காணப்பட்டது. இதனை கொள்ளையர்கள் சாதகமாக பயன்படுத்தி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.

    ஒரே நாளில் 3 இடங்களில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் சிக்கினர் மற்றும் அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள்.
    மதுரை

    சிவகங்கை மாவட்டம் பாசியாபுரம், வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவர் நேற்று காலை மஸ்தான்பட்டி, மந்தை திடல் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அவரை 2 பேர்  வழிமறித்து, கத்திமுனையில் மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றனர்.

    இதே போல் பசுமலை விநாயகர் நகர் இளங்கோ தெருவைச் சேர்ந்தவர் ராகவன் (53). இவர் நேற்று மாலை அந்த பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர்  கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.

    மேலும் பாலாஜி நகரைச் சேர்ந்த துரைராஜ் (66) என்பவர் நேற்று மதியம் தேவி நகர் மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில்  வந்த 2 பேர் கத்திமுனையில் துரைராஜ் வைத்திருந்த ரூ.1, 150 ரொக்கம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

    மதுரை மாநகரில் ஒரே நாளில் 3 இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    எனவே இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர துணை கமிஷனர்கள் தங்கதுரை, ராஜசேகரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் அனுராதா (அண்ணா நகர்), ரவீந்திரன் (திருப்பரங்குன்றம்)  ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

    அவர்கள் சம்பவ இடங்களில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராக்களை கைப்பற்றி, அவற்றில் இடம் பெற்று இருந்த காட்சி தொகுப்புகளை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது மேற்கண்ட 3 சம்பவங்களிலும் ஒரே நபர்கள் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. 

    இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அப்போது திருப்பரங்குன்றத்தில் பதுங்கி இருந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து  போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். 

    இதில் அவர்கள் பழைய குயவர் பாளையத்தை சேர்ந்த மாரிச்செல்வம் (28), மேல அனுப்பானடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி, குட்டை ராஜேஷ் (25) என்பது தெரியவந்தது. அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.இதனைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    ×