என் மலர்
நீங்கள் தேடியது "property tax"
- ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்துள்ளார்.
- ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.
பல்லடம்:
பல்லடம் நகராட்சியில் ரூ.7 கோடி வரி பாக்கி நிலுவையில் உள்ளதாகவும் பொதுமக்கள் வரி இனங்களை விரைவாக செலுத்தி, ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பல்லடம் நகராட்சி 18 வார்டுகளில் 15,664 குடியிருப்புகள் 1,263 வணிக கட்டடங்கள், 546 தொழிற்கூடங்கள் மற்றும் 25 கல்வி நிறுவனங்கள் உள்ளன. சொத்து வரி ரூ.2கோடியே99லட்சத்து 59 ஆயிரம், காலியிட வரி ரூ.5லட்சத்து65 ஆயிரம், தொழில் வரி ரூ.15லட்சத்து39 ஆயிரம், குடிநீர் கட்டணம் ரூ.1கோடியே63லட்சத்து12 ஆயிரம், கடை வாடகை ரூ.3கோடியே15லட்சத்து10 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.
எனவே வரி இனங்களை பொதுமக்கள் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்துக் கொள்ளுவதோடு, நகராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் தங்களது இல்லத்தில் இருந்தே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து TN URBAN ESEVAI என்ற செயலியில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்த தங்களது அலைபேசி எண்ணின் மூலமாக செலுத்தலாம். அதற்குரிய ரசீது உடனே வரும் அதனை பதிவு இறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சென்னைக்கு அடுத்த படியாக திருச்சி மாநகராட்சியில் 42 சதவீத சொத்து வரி வசூலை நடப்பு மாத இரண்டாவது வாரத்திலேயே முடித்துள்ளனர்.
- திருச்சி மாநகராட்சியில் வரி சீரமைப்புக்கு முன்பு சொத்து வரி ரூ. 61.2 கோடியாகவும், சீரமைப்புக்கு பின் ஒரு ரூ. 108.9 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
திருச்சி,
தமிழகத்தில் நகர்புறங்களில் சொத்து மற்றும் தண்ணீர் வரி சமீபத்தில் உயர்த்தப்பட்டது.
திருச்சி மாநகராட்சி பகுதியிலும் இந்த வரி உயர்வு அமல்படுத்தப்பட்டது. 2022 -23 நிதி ஆண்டுக்கான சொத்து வரி வசூலில் திருச்சி மாநகராட்சி சாதனை படைத்துள்ளது. சென்னைக்கு அடுத்த படியாக திருச்சி மாநகராட்சியில் 42 சதவீத சொத்து வரி வசூலை நடப்பு மாத இரண்டாவது வாரத்திலேயே முடித்துள்ளனர்.
திருச்சி மாநகராட்சி பொருத்தமட்டில் வரி சீரமைப்புக்கு பின் 2022 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2023 மார்ச் மாதத்திற்குள் நிலுவைத் தொகை உட்பட ரூ. 162 கோடி வசூலிக்க வேண்டும். இதில் தற்போது ரூ. 68 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
அதே வேளையில் ஆவடி மாநகராட்சி 38 சதவீதமாகவும், கோவை மாநகராட்சி 35 சதவீதமாகவும், மதுரை மாநகராட்சி 33 சதவீதமாகவும், தாம்பரம் 32 சதவீதமாகவும் பின் தங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சென்னையில் நடந்த நகராட்சி நிர்வாக ஆய்வு கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.
திருச்சி மாநகராட்சியில் வரி சீரமைப்புக்கு முன்பு சொத்து வரி ரூ. 61.2 கோடியாகவும், சீரமைப்புக்கு பின் ஒரு ரூ. 108.9 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் வருவாய் ரமேஷ் குமார் கூறும் போது, சொத்துவரி செலுத்துமாறு அதன் உரிமையாளர்களுக்கு பில் கலெக்டர்கள் மூலம் நேரடியாக நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது. மேலும் ஆட்டோ ரிக்ஷாக்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒரு சில பொதுமக்கள் திருத்தி அமைக்கப்பட்ட சொத்து வரியை தாமாக முன்வந்தும் நிலுவையை செலுத்தியுள்ளனர்.
மேலும் நிர்ணயிக்கப்பட்ட தொழில்வரி ரூ.9 கோடியில் 74 சதவீதமும், தண்ணீர் வரி ரூ. 25 கோடியில் 38 சதவீதமும், இதர வருவாயில் ரூ. 8.8 கோடியில் 37 சதவீதமும், பாதாள சாக்கடை டெபாசிட் தொகை ரூ. 10 கோடியில் 34 சதவீதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.
- நகராட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக உடனே நிலவையில் உள்ள வரித்தொகையினை அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
- கடை வாடகை தொழில் உரிமை கட்டணம் ஆகிய அனைத்து தொகையை வரும் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி பொதுமக்கள் ஜப்தி நடவடிக்கைகளில் இருந்து மீளுவதற்கு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்துள்ளார்.
வேதாரண்யம் நகராட்சியில் 2022-2023 ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய சொத்து வரி தொழில்வரி குடிநீர் கட்டணம் கடை வாடகை மற்றும் தொழில் உரிமை கட்டணம் ஆகியவற்றை உடனடியாக நகராட்சியில் இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும் வேதாரண்யம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. அதில் சுமார் 40,000 பொதுமக்கள் வசித்து வருகின்றனர் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி தெரு விளக்கு பொது சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது நகராட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக உடனே நிலவையில் உள்ள வரித்தொகையினை அலுவலகத்தில் செலுத்த வேண்டும்
வரிகளை செலுத்தவில்லை என்றால் பாக்கி வைத்துள்ளவரின் பெயர்கள் பொது இடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். எனவே உடனே வரி செலுத்தவும். வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படும்.
மேலும் ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கை நகராட்சி நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்படும். நகராட்சி மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை கருத்தில் கொண்டு நகராட்சி செலுத்த வேண்டிய சொத்து வரி குடிநீர் கட்டணம் தொழில்வரி கடை வாடகை தொழில் உரிமை கட்டணம் ஆகிய அனைத்து தொகையை வரும் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா கேட்டுக் கொண்டுள்ளார்.
- 2-ம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்த காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
- வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு செலுத்தப்படும் சொத்து வரியில் 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
2022-23-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொத்துவரி சீராய்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது 2-ம் அரையாண்டுக்கான சொத்துவரி சீராய்வின்படி, சொத்து உரிமையாளர்களால் 1.10.22 முதல் செலுத்தப்பட்டு வருகிறது.
சொத்துவரி சீராய்வின்படி உயர்த்தப்பட்ட சொத்து வரியினை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை தனி வட்டி இல்லாமல் செலுத்துவதற்கு 15.11.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி உயர்த்தப்பட்ட சொத்து வரியினை 5 லட்சத்து 92 ஆயிரம் சொத்து உரிமையாளர்கள் நிலுவை இல்லாமல் செலுத்தி உள்ளனர்.
இந்நிலையில், சொத்து உரிமையாளர்களின் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்து வரியினை இதுநாள்வரை செலுத்தாதவர்கள், வட்டி இல்லாமல் செலுத்த டிசம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதுவரை சொத்து வரியை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி டிசம்பர் 15-ந் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தி 2 சதவீத தனி வட்டியினை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கட்டிட உரிமையாளர்கள் சொத்து வரி விதிப்புகளை உறுதி செய்திடும் வகையில் ஆவணங்களை சமர்ப்பிக்க போதிய அவகாசம் வழங்கப்பட்டது
- சொத்துவரி எண் பெறாதவர்களுக்கு 31-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:-
தூத்துக்குடி மாநகராட்சி யுடன் இணைக்கப்பட்டுள்ள ஊராட்சி பகுதிகளான வார்டு எண் 1, 2, 3, 14 முதல்18, 48, 50முதல்53, மற்றும் 55,57,60 ஆகியவற்றில் அமைந்துள்ள கட்டிடங்களுக்கு ஊராட்சி மூலம் ஏற்கனவே சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டு, தொடர்ச்சியாக சொத்து வரி செலுத்தாத காரணமாக மாநகராட்சி யுடன் இணைக்கப்பட்ட சமயத்தில் கணினியில் பதிவேற்றம் செய்யாமல் விடுபட்டு ள்ளது.
எனவே கட்டிட உரிமையாளர்கள் மாநகராட்சியை தொடர்பு கொண்டு சொத்து வரி விதிப்புகளை உறுதி செய்திடும் வகையில் ஊராட்சி சொத்து வரி ரசீது,பத்திரம் பட்டா, போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க போதிய அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் சொத்து வரி நிர்ணயம் செய்யாமல் இருப்பது தொடர்பாக பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை வந்த வண்ணம் உள்ளது,இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலர் மற்றும் பணியாளர்களின் நேரடி ஆய்வின்போது வரிவிதிப்பு எண்கள் பெறப்படாதது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே மேற்படி குறைகளை நிவர்த்தி செய்து ஒழுங்குபடுத்தும் விதமாக சொத்து வரி நிர்ணயம் செய்வதன் பொருட்டு பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் எளிதில் பெரும் வகையில் வாய்ப்பு அளிக்கும் விதமாக மாநகராட்சிக்கான சொத்துவரி எண் இதுவரை பெறாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மண்டல அலுவலகங்களை உரிய ஆவணங்களுடன் தொடர்பு கொள்ள வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதல் அரையாண்டுக்கான சொத்துவரி செப்டம்பர் மாதம் செலுத்தி இருக்க வேண்டும்.
- தற்போது 2-வது அரையாண்டு நடந்து வருகிறது.
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகள், வணிக கட்டிடங்கள் மூலம் பெறப்படும் சொத்துவரி மாநகராட்சிக்கு முக்கிய வருவாயாக உள்ளது. வருடத்திற்கு 2 முறை அரையாண்டு வீதம் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.
முதல் அரையாண்டுக்கான சொத்துவரி செப்டம்பர் மாதம் செலுத்தி இருக்க வேண்டும். தற்போது 2-வது அரையாண்டு நடந்து வருகிறது. முதல் அரையாண்டில் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம் இல்லாமல் கட்ட இன்று (15-ந் தேதி) வரை மாநகராட்சி அவகாசம் கொடுத்து இருந்தது.
நாளையில் இருந்து செலுத்த வேண்டிய தொகைக்கு அபராதம் சேர்த்து வசூலிக்கப்படும்.
இதற்கிடையில் பொதுமக்கள் ஆன்லைன் மற்றும் நேரடியாக சொத்துவரி செலுத்து வருகின்றனர்.
ஆனாலும் சிலர் இறுதி நாளான இன்று சொத்துவரி செலுத்தினர். மாநகராட்சி சொத்துவரி மையங்களிலும், வங்கிகள் மற்றும் இணைய தளம் வழியாகயும் செலுத்தினார்கள். அபராதத்தை தவிர்க்கும் வகையில் சொத்தின் உரிமையாளர்கள் இன்று கடைசி நேரத்தில் வரி செலுத்தி வருகிறார்கள்.
இது குறித்து மாநகராட்சி வருவாய் அதிகாரிகள் கூறும்போது, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை காலத்திற்குள் செலுத்தி அபராதத்தை தவிர்க்க வேண்டும். முதல் அரையாண்டு கால சொத்து வரி இன்று இரவு வரை ஆன்லைனில் செலுத்தலாம். நாளை முதல் அபராதம் வசூலிக்கப்படும்.
மேலும் பெரும் தொகையை நீண்ட காலமாக செலுத்தாமல் இருக்கும் சிலர் மீது அதிரடியாக பல்வேறு நடவடிக்கையும் தொடர்கிறது. எனவே மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தி மேல் நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.
- 2022 -2023-ம் நிதி ஆண்டுக்கான சொத்து வரி செலுத்த வேண்டிய காலம் 31.10.2022-ந்தேதியுடன் முடிவடைந்து விட்டது.
- தவறினால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வண்டலூர்:
மறைமலைநகர் நகராட்சி கமிஷனர் லட்சுமி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மறைமலைநகர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி முதல் அரையாண்டுக்கான தொகை ஏப்ரல் 30-ந்தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டுக்கான தொகை அக்டோபர் 30-ந்தேதிக்குள்ளும் செலுத்துவதற்கான கடைசி நாள் ஆகும். 2022 -2023-ம் நிதி ஆண்டுக்கான சொத்து வரி செலுத்த வேண்டிய காலம் 31.10.2022-ந்தேதியுடன் முடிவடைந்து விட்டது.
எனவே மறைமலைநகர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கடை வாடகை, உள்ளிட்டவற்றை பொதுமக்கள் உடனடியாக நிலுவையின்றி செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆரம்பத்தில் அடையாள சான்றாக பயன்படுத்தப்பட்ட ஆதார் அட்டை முதற்கட்டமாக வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டது.
- 100 யூனிட் இலவச மின்சாரம் ஒரு நபருக்கு ஒரு மின் இணைப்புக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது.
சென்னை:
இந்தியாவில் ஆதார் எண் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய அடையாளமாகிவிட்டது. ஆரம்பத்தில் அடையாள சான்றாக பயன்படுத்தப்பட்ட ஆதார் அட்டை முதற்கட்டமாக வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்கும் பணி நடந்தது. அதன் பிறகு வருமானவரி கணக்கு எண்ணுடன் இணைக்க உத்தர விடப்பட்டது.
கடந்த மாதம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் ஒருவருக்கு எத்தனை மின் இணைப்பு உள்ளது என்பது தெரிந்து விடும் என்பதால் சிலர் ஆதாரை இணைக்க தயக்கம் காட்டி வந்தனர்.
ஏனென்றால் 100 யூனிட் இலவச மின்சாரம் ஒரு நபருக்கு ஒரு மின் இணைப்புக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரே வீட்டில் ஒருவர் எத்தனை மின் இணைப்பு வைத்திருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தருவோம் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்திருந்தார். இது எத்தனை நாட்களுக்கு அமலில் இருக்கும் என்பது போக போகத்தான் தெரிய வரும்.
இந்த சூழலில் ரேஷன் கார்டுடன் வங்கிக்கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இப்போது ரேஷன் கார்டு எண்ணுடன் சொத்து வரி எண்ணை இணைக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் வீடுவீடாக ரேஷன் கார்டு எண்ணுடன் சொத்துவரி எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் ஒவ்வொரு ரேஷன் கார்டு தாரர்களுக்கு என்னென்ன சொத்து உள்ளது. எவ்வளவு வரி கட்டுகிறார்கள். இவர்கள் ஏழையா? வசதி படைத்த வர்களா? என்ற விவரம் துல்லியமாக தெரிந்துவிடும்.
- பெரும்பாலான சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
- முதல் கட்டமாக ரூ.25 லட்சத்துக்குமேல் சொத்து வரி செலுத்தாத 38 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது.
சென்னை:
சென்னையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் 13 லட்சம் பேரிடம் இருந்து அரையாண்டுக்கு தலா ரூ.700 கோடி என ஆண்டுக்கு ரூ.1400 கோடி வரை சென்னை மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்கிறது.
காசோலை, பணம், ஆன்லைன் என பல்வேறு வகையில் சொத்துவரி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்துவோருக்கு 5 சதவீதம் அல்லது ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தாமதமாக சொத்துவரி செலுத்துபவர்களுக்கு 2 சதவீத அபராத தொகை வசூலிக்கப்படுகிறது.
இந்த நிதியாண்டில் சொத்துவரி உயர்த்தப்பட்டதால் அபராத தொகை இல்லாமல் சொத்துவரி செலுத்த வருகிற ஜனவரி 12-ந்தேதி வரை சென்னை மாநகராட்சி அவகாசம் அளித்துள்ளது.
ஆனாலும் பெரும்பாலான சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இதையடுத்து சொத்து வரி செலுத்தாதவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி http://chennaicorporation.gov.in/gcc/propertytax_revision என்ற இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.
முதல் கட்டமாக ரூ.25 லட்சத்துக்குமேல் சொத்து வரி செலுத்தாத 38 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சொத்துவரி செலுத்தாத 321 பேர், ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை சொத்துவரி செலுத்தாத 140 பேர் என மொத்தம் இதுவரை 499 பேரின் பட்டியலை சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.
அதில் ஒவ்வொருவரும் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னையில் பல நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாமல் உள்ளனர்.
சொத்துவரி செலுத்துவதில் அவர்கள் அலட்சியம் காட்டி வருகிறார்கள். எனவே சொத்துவரி செலுத்தாத தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறோம்.
தற்போது ரூ.66.37 கோடி வரை சொத்துவரி பாக்கி வைத்துள்ள 499 பேரின் பட்டியலை வெளியிட்டு உள்ளோம். அதன்மூலம் அந்த தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அதன்பிறகும் சொத்து வரி செலுத்தாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த நடவடிக்கை மிக தீவிரமாக இருக்கும்.
எனவே சொத்துவரி செலுத்தாதவர்கள் உடனடியாக சொத்துவரி செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நாட்டின் பொருளாதார நலனுக்காக நிதிக்குழு அளித்த பரிந்துரைப்படி சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்ததில் எந்த தவறும் இல்லை.
- கடந்த 30 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சொத்து வரி இப்போது உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார்ச் 30-ந்தேதி அரசாணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மே 30-தேதி சென்னை மாநகராட்சி, சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த அரசாணையையும், மாநகராட்சி தீர்மானத்தையும் எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, "மக்கள் நலத்திட்டங்களுக்கு தேவையான நிதியையும், அரசின் செலவினங்களுக்காகவும் வருவாயை திரட்டுவதும், வரி விதிப்பால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் சமன்படுத்துவதும் ஒரு மக்கள் நல அரசுக்கு அவசியமாகிறது என்பதால் வரி விதிப்பை வெளிப்படைத் தன்மையுடனும், கேள்விகளுக்கு அப்பாற்பட்டும் மேற்கொள்ள வேண்டும்.
நாட்டின் பொருளாதார நலனுக்காக நிதிக்குழு அளித்த பரிந்துரைப்படி சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்ததில் எந்த தவறும் இல்லை. சொத்து வரியை உயர்த்துவது குறித்த அரசாணை என்பது ஆலோசனையாக உள்ளதே தவிர, உத்தரவாக இல்லை.
இந்த அரசாணையின் அடிப்படையில், கடந்த 30 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சொத்து வரி இப்போது உயர்த்தப்பட்டுள்ளது.
சொத்து வரி அரசாணையும், மாநகராட்சி தீர்மானங்களும் செல்லும். அதேசமயம், சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை சொத்துவரி செலுத்தும் 15 லட்சம் பேரில், 30 பேர் தெரிவித்த ஆட்சேபங்களை முறையாக பரிசீலித்து பதிலளித்திருந்தால் இந்த வழக்குகள் ஐகோர்ட்டுக்கு வந்திருக்காது. அதேபோல வரி உயர்வுக்கு பொதுமக்கள் ஆட்சேபங்கள் தெரிவிக்கும் விதமாக முறையாக அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.
மேலும், சொத்து வரியை நிர்ணயிக்க பின்பற்றப்படும் நடைமுறையை குறை கூற முடியாது. 2022-23ம் ஆண்டுக்கான இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தக் கூறி மனுதாரர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்களை ரத்து செய்யக்கூடும். 2023-24ம் ஆண்டின் முதல் அரையாண்டு முதல், அதாவது வரும் ஏப்ரல் முதல் சொத்து வரி உயர்வை அமல்படுத்த வேண்டும்.
சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் பெற ஏதுவாக மாநகராட்சிகள், தங்கள் இணையதளங்களை மேம்படுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.
- மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் புதிய நாய் இனக்கட்டுபாடு மையம் அமைக்கப்பட உள்ளது.
- கொரோனா, டெங்கு, மலேரியா தடுப்பு பணிகளில் பணிபுரிய ஏதுவாக நியமிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் ஒப்பந்த காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை மாநகராட்சியின் டிசம்பர் மாதத்துக்கான மாதாந்திர கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங்பேடி மற்றும் கவுன்சிலர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கேள்வி நேரத்தின் போது 10 உறுப்பினர்களும், நேரமில்லா நேரத்தில் 14 உறுப்பினர்களும் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் 80 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த தீர்மானங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான கால அவகாசம் ஜனவரி 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பணிகள் துறைக்கு நகர திட்டமிடல் துறை என பெயர் மாற்றம் செய்யவும், கட்டணங்கள் மாற்றி அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சாலையில் வணிக விற்பனையகம் நிகழ்ச்சிகள் ( கமர்ஷியல் ஷாப்பிங் நிகழ்வுகள்) மாநகராட்சியின் சாலை பகுதிகளில் நடத்த கட்டணம் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் புதிய நாய் இனக்கட்டுபாடு மையம் அமைக்கப்பட உள்ளது.
கொரோனா, டெங்கு, மலேரியா தடுப்பு பணிகளில் பணிபுரிய ஏதுவாக நியமிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் ஒப்பந்த காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் நலமிகு சென்னை மற்றும் நட்புமிகு சென்னை என்ற அடிப்படையில் தனியார் நிகழ்வுகள் நடத்திட அனுமதி வழங்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களில் 1 லட்சத்து 77 ஆயிரம் தெருவிளக்கு மின் கம்பங்கள் மற்றும் 200 உயர் கோபுர மின் விளக்குகளை பராமரிக்க ஒரு ஆண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
கொசஸ்தலை ஆற்றில் கட்டமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவடையாத காரணத்தினால் அதன் ஒப்பந்த காலத்தை நீட்டிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
பெருங்குடி குப்பை கிடங்கு பயோ மைனிங் முறையில் சுத்தப்படுத்தும் போது சுற்றுச்சூழல் பூங்கா, சி.என்.ஜி. பூங்கா ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஏற்ப தயார்படுத்த முடிவு செய்யப்பட்டன என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- சிவகாசி பகுதியில் வருகிற 28-ந் தேதிக்குள் சொத்து வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
- உயா்த்தப்பட்ட சொத்துவரி மூலம் மாநகராட்சியின் வருமானம் ரூ. 21 கோடியாக உயா்ந்தது.
சிவகாசி
நகராட்சியாக இருந்த சிவகாசி 2021-ம் ஆண்டு முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து சொத்து வரி உயா்வு, நகராட்சி கணக்குகளை இணைத்தல், மறு சீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால் 2021-22, 2022-23 ஆகிய நிதியாண்டுகளுக்கான வரி வசூலில் காலதாமதம் ஏற்பட்டது.
சிவகாசி, திருத்தங்கல் ஆகிய நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டதால் வரி இனங்கள் மறு சீரமைப்புக்கு பின் கடந்த செப்டம்பா் மாதம் வரி வசூல் தொடங்கியது. உயா்த்தப்பட்ட சொத்துவரி மூலம் மாநகராட்சியின் வருமானம் ரூ. 21 கோடியாக உயா்ந்தது.
2021-22-ம் நிதி ஆண்டுக்கான வரி செலுத்தும் காலம் முடிவடைந்த நிலை யில் அந்த ஆண்டு வரி வசூல் நிலுவை ரூ.7.70 கோடி உள்ளது. மேலும் 2022-23 நிதியாண்டிற்கான வரி வசூல் தற்போது வரை சுமாா் 30 சதவீதம் மட்டுமே வசூலாகி உள்ளது. இதனால் மாநகராட்சியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிவகாசி மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட வரிகளை வருகிற 28-ந் தேதிக்குள் செலுத்தா விட்டால், சம்பந்தப்பட்ட வீட்டின் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் வரி செலுத்தாமல் உள்ளதால் மாநகராட்சிப் பகுதியில் வளா்ச்சிப் பணிகள் தாமதமாகி வருவதாகவும், நடப்பு நிதியாண்டில் வருகிற மாா்ச் இறுதிக்குள் 100 சதவீத% வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ண மூர்த்தி தெரிவித்தார்.