என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் விசாரணை"

    • ரூ. 20 லட்சம் மதிப்பிலான 33.5 கிலோ எடை கொண்ட வெள்ளியை வாங்கி சென்றார்.
    • பல மாதங்கள் ஆகியும் தேவேந்திரன் அதை திருப்பிக் கொடுக்கவில்லை

    சேலம்:

    சேலம் சிவதாபுரம் பன ங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ ஆனந்தராஜன் (வயது 45). வெள்ளி வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கடந்த ஜூன் மாதம் குடுமியான் தெருவை சேர்ந்த தேவேந்திரன் (44) என்பவர், வெள்ளி வேலை செய்து தருவதாக கூறி ரூ. 20 லட்சம் மதிப்பிலான 33.5 கிலோ எடை கொண்ட வெள்ளியை வாங்கி சென்றார்.

    பல மாதங்கள் ஆகியும் தேவேந்திரன் அதை திருப்பிக் கொடுக்கவில்லை. மேலும் வெள்ளிக்கான பணத்தையும் கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.இது குறித்து பலமுறை கேட்டும் கொடுக்காத நிலையில் நேற்று முன்தினம் ஆனந்தராஜனின் வீட்டிற்கு சென்ற தேவேந்திரன், பூபதி, முரளி ஆகிய 3 பேர், ஆனந்தராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். இது குறித்து ஸ்ரீ ஆனந்தராஜன் கொண்ட லாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஆற்றில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் இறந்த நிலையில் நீரில் மிதந்து வந்தது.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூரில் அருகே திருவந்திபுரத்தில் கெடிலம் ஆறு உள்ளது. இன்று காலை இந்த ஆற்றில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் இறந்த நிலையில் நீரில் மிதந்து வந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீரில் மிதந்து வந்த மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காந்திநகர் மணி முத்தாற்றங்கரையிலுள்ள முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
    • மர்ம நபர்கள் அம்மன் சிலை கழுத்திலிருந்து 6 கிராம் தாலி, 3000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட காந்திநகர் மணி முத்தாற்றங்கரையிலுள்ள முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு கோயில் பூசாரி வழக்கம் போல் பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டிச் சென்றுள்ளார். இன்று காலை, கோயில் பூசாரி தனவேல் கோயிலுக்கு வந்து பார்த்த போது கோயில் கதவு பூட்டை உடைத்து, நேற்று இரவு மர்ம நபர்கள் அம்மன் சிலை கழுத்திலிருந்து 6 கிராம் தாலி, 3000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.

    இதுகுறித்து கோயில் உண்டியல் மற்றும் இரும்பு கம்பி கோயில் எதிரே உள்ள மணிமுத்தாற்றங்கரையில் கிடந்துள்ளது. இதனையடுத்து, விருத்தாச்சலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்திருட்டு சம்பத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கிருத்திகா கலைக் கல்லூரியில் பி. காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • திருச்செந்தூர் நோக்கி சென்ற விரைவு ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூர்:

    சிதம்பரம் வல்லம்படுகை ெரயில்வே நிலையம் அருகில் கணேசமூர்த்தி மகள் கிருத்திகா (வயது 19) இவர் கடலூர் கலைக் கல்லூரியில் பி. காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கிருத்திகா கல்லூரிக்கு சென்று விட்டு பின்னர் சிதம்பரத்தில் உள்ள கம்ப்யூட்டர் பயிற்சி நிலையத்திற்கும் சென்று விட்டு இரவு வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

    அப்போது வல்ல ம்படுகை -மயிலாடுதுறை ெரயில் நிலையத்திற்கு உட்பட்ட ெரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி விரைவு ரயில் ஒன்று வந்தது. இந்நிலையில் கிருத்திகா வீட்டின் பின்புறம் உள்ள ெரயில் நிலையத்திற்கு வந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற விரைவு ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து மயிலாடுதுறை ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த மயிலாடுதுறை ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருத்திகா உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் இதுகுறித்து ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனைவரும் ஒன்றாக வீட்டில் வசித்து வருகின்றனர்.
    • வீட்டுக்கு வந்து பார்த்தபோது தாய் மற்றும் தங்கை காணவில்லை.

    கடலூர்:

    கடலூர் முதுநகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 21).மீனவர். இவரது தாய் வனரோஜா (வயது 42). தங்கை அனுசியா (வயது 19). அனைவரும் ஒன்றாக வீட்டில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று ஆகாஷ் வீட்டில் இருந்து வெளியில் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தாய் மற்றும் தங்கை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த ஆகாஷ் 2 பேரையும் பல்வேறு இடத்தில் தேடிப் பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வன ரோஜா, அனுசியா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் முதுநகரில் தாய், மகள் மாயமான சம்பவம் பரபரப்பாக காணப்பட்டு உள்ளது.

    • ஆற்றின் மணல் திட்டு நடு பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
    • நெல்லிக்குப்பம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே வளவனூர் போலீஸ் சரகம் சொர்ணாவூர் மேல்பாதியில் தடுப்பணைக்கட்டு உள்ளது. இந்த தடுப்பணை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு பருவ மழை காரணமாக ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றின் இருகரை களை தொட்டும் தண்ணீர் சீறி பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றின் மணல் திட்டு நடு பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வள வனூர் போலீ சாருக்கு தகவல் தெரிவி க்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பால முருகன், நெல்லிக்குப்பம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்றனர். வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆற்றில் பிணமாக மிதந்த வாலிபர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை யாராவது அடித்து கொன்று உடலை வீசி விட்டு சென்றார்களா? அந்த பகுதியில் யாராவது காணாமல் போனார்களா? என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சாலையோர பள்ளத்தில் சரவணன் இருசக்கர வாகனத்துடன் பிணமாககிடந்தார்.
    • இது தொடர்பாக போலீசார் கிடுக்கிப்படி விசாரணை நடத்தி வருகிறாார்கள்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தொளார் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 26). இவர் சென்னையில் தனியார் ஹோட்டலில் காசாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 4நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று இரவு 7 மணி அளவில் பெண்ணாடம் சென்று விட்டு வருவதாக வீட்டில் இருந்தவரிடம் கூறி சென்றவர் இது வரை வீட்டிற்கு வரவில்லை.

    இந்த நிலையில் பெண்ணாடத்திலிருந்து தொளார் செல்லும் சாலையோர பள்ளத்தில் சரவணன் இருசக்கர வாகனத்துடன் பிணமாககிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டனர். சரவணனின் முகத்தில் காயங்கள் உள்ளது. எனவே அவரை யாராவது அடித்து கொன்று உடலை வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் கிடுக்கிப்படி விசாரணை நடத்தி வருகிறாார்கள். சரவணன் உடலை போலீசார் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதனைக்கான அனுப்பி வைத்தனர். 

    • பெண் சிசு வீட்டின் அருகே யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டதாகவும் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தை தோண்டி பார்த்தனர்.ஆனால் அங்கு பெண் சிசுவின் உடல் இல்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகேயுள்ளது பி. மோட்டுப்பட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவருடைய மனைவி பெருமா. இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருமாவிற்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்ததாகவும், அந்த பெண் சிசு வீட்டின் அருகே யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டதாகவும் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இது தொடர்பாக கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளி கிருஷ்ணாபுரம் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு, தருமபுரி தாசில்தார் சரவணன் மற்றும் போலீசார் பி.மோட்டுப்பட்டிக்கு நேரில் சென்று பெருமா மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது தங்களுக்கு 3- வது பெண் சிசு பிறக்கவில்லை என்று முத்துகிருஷ்ணனும், பெருமாவும் கூறியுள்ளனர். இருப்பினும் சம்பவ இடத்திற்கு மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.

    அங்கு பெண்சிசு புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தை தோண்டி பார்த்தனர்.ஆனால் அங்கு பெண் சிசுவின் உடல் இல்லை. இதனால் போலீசாரும், வருவாய்த்துறையினரும் அங்கிருந்து திரும்பினர்.

    இதையடுத்து முத்துகிருஷ்ணன்-பெருமா தம்பதிக்கு உண்மையில் 3-வதாக பெண் சிசு பிறந்து அதை கொன்று புதைத்தார்களா அல்லது யாராவது தவறான தகவல் கொடுத்துள்ளார்களா? என்று கிருஷ்ணாபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முத்துகிருஷ்ணன் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் இன்று டிரைவர்கள் பஸ்களை எடுக்க வந்தனர்.
    • அவசரமாக பஸ்சை எடுத்துச் சென்றதால் மைதான காம்பவுண்ட் சுவர் மீது பஸ் உரசி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஆரணி:

    ஆரணி அருகே படவேடு பஸ் நிறுத்தம் எதிரே பாட்டு கச்சேரி மைதானம் உள்ளது. இங்கு தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5-க்கும் மேற்பட்ட பஸ்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.

    சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் இன்று (திங்கட்கிழமை) டிரைவர்கள் பஸ்களை எடுக்க வந்தனர். அப்போது ஆற்காடு பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி பஸ் அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் அக்கம் பக்கத்தில் விசாரித்தார்.

    அப்போது அங்கிருந்தவர்கள் கடந்த 26-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கு பஸ்சை மர்ம நபர் ஒருவர் எடுத்துச் சென்றதாகவும், அப்போது அங்கிருந்தவர்கள் விடுமுறை நாளில் ஏன் பஸ்சை எடுக்கிறீர்கள் என கேட்டதற்கு சர்வீஸ் செய்ய கொண்டு போகிறேன் எனக் கூறியுள்ளார்.

    அவசரமாக பஸ்சை எடுத்துச் சென்றதால் மைதான காம்பவுண்ட் சுவர் மீது பஸ் உரசி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வந்த சந்தவாசல் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.ஆர்.எஸ். கருவி பழுது அடைந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    கல்லூரிக்கு செல்ல வந்த மாணவர்கள் வேறு பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கவுன்சிலர் சாந்தமூர்த்தி வெளியே வந்து பார்த்தபோது, 3 பேரும் கையில் கத்தியுடன் நின்றதை பார்த்த உடனே அவர் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவை ஆய்வு செய்தனர்.

    சேலம்:

    சேலம் வின்சென்ட் வெங்கடேசபுரத்தில் வசித்து வருபவர் சாந்தமூர்த்தி (வயது 35). இவர் குமாரசாமிபட்டி பகுதி தி.மு.க செயலாளராகவும், 14-வது டிவிசன் கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். இவரது வீட்டிற்கு நேற்று இரவு 10 மணிக்கு 3 மர்ம நபர்கள் கத்தியுடன் வந்து, கதவை தட்டி உள்ளனர்.

    கவுன்சிலர் சாந்தமூர்த்தி வந்து யார் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்கள் உங்களை பார்க்க வேண்டும், வெளியே வாருங்கள் என்றனர். ஆனால் கவுன்சிலர் சாந்தமூர்த்தி என்ன பிரச்சினையாக இருந்தாலும் காலையில் பேசி கொள்ளலாம் என தெரிவித்தார். உடனே அந்த மர்ம நபர்கள், வெளியே வாடா, உன்னை கொல்லாமல் விடமாட்டோம் என்று கூறினர்.

    இதையடுத்து கவுன்சிலர் சாந்தமூர்த்தி வெளியே வந்து பார்த்தபோது, 3 பேரும் கையில் கத்தியுடன் நின்றதை பார்த்த உடனே அவர் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். மேலும் அஸ்தம்பட்டி போலீசாருக்கு போன் செய்து இது பற்றி தெரிவித்தார்.

    இதை அறிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவை ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இம்மானுவேல் அப்துல்லா, தனது மனைவியை அடித்து கொன்றுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
    • தப்பி ஓடிய இம்மானுவேல் அப்துல்லாவை பிடிக்க 2தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் திருமாஞ்சி நகரைச் சேர்ந்தவர் ஜான் ராஜ். இவருடைய மகன் இம்மானுவேல் அப்துல்லா (வயது 32). கூலி தொழிலாளி.

    காதல் மனைவி கொலை

    இவருடைய மனைவி கன்னித்தாய் (30). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு செய்யது அலி பாத்திமா (4), கதிஜா பிஸ்மி (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    நேற்று கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த இம்மானுவேல் அப்துல்லா, தனது மனைவியை அடித்து கொன்றுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

    போலீசார் விசாரணை

    இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசாருக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இம்மானுவேல் அப்துல்லா சரிவர வேலைக்கு செல்லாமல், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    நேற்றும் கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த அவர் கன்னித்தாயை கொன்றது தெரியவந்தது.

    இதற்கிடையே தப்பி ஓடிய இம்மானுவேல் அப்துல்லாவை பிடிக்க டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் ஒரு தனிப்படையும், முத்தையாபுரம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் மற்றொரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படையினர் விசாரணையில் அவர் தூத்துக்குடியில் உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து தனிப்படையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • இந்த வழக்கு தொடர்பாக கடந்த 19-ந்தேதி சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் 6 பேர் சரண் அடைந்தனர்.
    • நேற்று கைது செய்யப்பட்டவரின் வீட்டில் இருந்து ரூ.1 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினர்.

    சென்னை:

    மண்ணடி அருகே உள்ள முத்தியால்பேட்டை, மலையப்பன் தெருவில் வசித்து வருபவர் முகமது அப்துல்லா. இவர் பர்மா பஜாரில் செல்போன் கடை வைத்துள்ளார்.

    கடந்த 13-ந்தேதி இவரது வீட்டுக்கு வந்த மர்மகும்பல் தாங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் என்று தெரிவித்தனர். மேலும் கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என்று கூறி வீடு மற்றும் செல்போன் கடைகளில் சோதனை நடத்தினர். பின்னர் ரூ.2 கோடியே 30 லட்சம், 6 செல்போன், லேப்-டாப், கம்ப்யூட்டர் சி.பி.யூ. ஆகியவற்றை எடுத்துச்சென்றுவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து விசாரித்த போதுதான் மர்ம நபர்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து பணத்தை சுருட்டி சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து முத்தியால் பேட்டை போலீசில் முகமது அப்துல்லா புகார் செய்தார். முதலில் கொள்ளை போனது ரூ.20 லட்சம் என்று புகார் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் ரூ.2 கோடியே 30 லட்சம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.

    இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக கடந்த 19-ந்தேதி சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் 6 பேர் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த கொள்ளை தொடர்பாக மண்ணடி அங்கப்பன் தெருவை சேர்ந்த முகமது பாசில் என்பவரை இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

    அவரது வீட்டில் இருந்து ரூ.1 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரத்தை கைப்பற்றினர். கொள்ளை திட்டத்துக்கு மூளையாக செயல்பட்டது யார்? இதன் பின்னணி என்ன என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×