என் மலர்
நீங்கள் தேடியது "human chain"
- மார்ச் 3-ந் தேதி உலக வனவிலங்கு தினம் அனுசரிக்கப்படுகிறது.
- பறவைகளும், விலங்குகளும் மனிதன் தோன்றுவதற்கு முன்பே இந்த பூமியில் தோன்றியுள்ளது.
திருப்பூர் :
உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி சார்பாக இன்று கல்லூரி முன்பு வனவிலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி முகமூடி அணிந்தும், மனித சங்கிலி அமைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வனச்சரக அலுவலர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3-ந் தேதி உலக வனவிலங்கு தினம் அனுசரிக்கப்படுகிறது. இது பூமியில் உள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், உலகின் காட்டு விலங்கினங்கள் மற்றும் தாவரங்களைப் பற்றிய விழிப்புணர்வை கொண்டாடுவதும் வளர்ப்பதும் இந்த நாளின் நோக்கம். பறவைகளும், விலங்குகளும் மனிதன் தோன்றுவதற்கு முன்பே இந்த பூமியில் தோன்றியுள்ளது. அவைகள் மனிதனை நம்பி வாழ்வது இல்லை.மனிதர்கள் தான் அவைகளை நம்பி வாழவேண்டும். ஆகையால் வன உயிரினங்களை பாதுகாப்பது நமது கடமை. மேலும் அவற்றை பாதுகாக்கும் வழிமுறைகளை பற்றி கூறினார். கல்லூரி மாணவ மாணவிகள் வனவிலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி முகமூடி அணிந்தும், மனித சங்கிலி அமைத்தும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- ஜிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
- முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்
உடுமலை :
ஜாக்டோ-ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை மத்திய பஸ் நிலையத்துக்கு எதிரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.தலைமை வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.
போராட்டத்தின் போது,ஜிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை சரண்டர், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.போராட்டத்தில் ஆசிரியர்,அரசு ஊழியர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
- சேகர், பூப்பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
ராமநாதபுரம்
ஆசிரியர், அரசு ஊழியர்களின் கூட்ட மைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் வட்டார வளர்ச்சி அலுவ லகத்தில் இருந்து ரோமன் சர்ச் வரையும், பரமக்குடியில் பஸ் நிலையத்தில் இருந்து ஓட்டப்பாலம் வரையும் மனிதச்சங்கிலி நடந்தது.
மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் முரு கேசன், சிவபாலன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமை தாங்கினர். சேகர், பூப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். இதில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பா ளரும், ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவருமான முருகேசன் பேசியதாவது:-
எங்களது கோரிக்கைகளை இதுநாள் வரை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்ற மன சங்கடத்தில் பணி செய்து வருகிறோம். இந்த நிலையில் கல்வித்துறையில் கற்றல்-கற்பித்தல் பணியை செய்து வரும் ஆசிரியர்களை மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் எமிஸ் போன்ற கற்றல்-கற்பித்தல் பணிக்கு சம்மந்தமில்லாத அலுவலகப்பணியை ஆசிரியர்கள் மீது கல்வித்துறை அதிகாரிகள் திணித்து வருகிறார்கள். கல்வி அமைச்சர் இதில் தலையிட்டு ஆசிரியர்கள் சுதந்திரமாக கற்றல்-கற்பித்தல் பணியை செய்ய அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் காளிராஜ், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டச்செயலாளர் கிருஷ்ணன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முனியசாமி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் லாரன்ஸ், கால்நடைத்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முத்துச்சாமி மற்றும் ஜாக்டோ-ஜியோ உறுப்பு சங்க மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஒருங்கிணைப்பாள குமார் நன்றி கூறினார்.
- உசிலம்பட்டியில் ஜாக்டோ- ஜியோ மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
- அகவிலைப்படி நிலுவைத்தொகை சரண்டர், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொற்செல்வன் தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ரங்கநாதன், கார்த்திகேயன், மனோகரன், அய்யங்காளை, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தீனன், செல்வி, தமிழ்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை சரண்டர், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி நடந்தது.
- உலக கல்லீரல் தினத்தையொட்டி நெல்லை சந்திப்பு ஷிபா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி இன்று நடைபெற்றது.
- கல்லீரல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே உலக கல்லீரல் தினத்தின் நோக்கமாகும்.
நெல்லை:
உலக கல்லீரல் தினத்தையொட்டி நெல்லை சந்திப்பு ஷிபா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி இன்று நடைபெற்றது. வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் எம்.கே.எம். முகமது ஷாபி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் ஷபீக், உமா மகேஸ்வரன், முகமது இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மருத்துவமனையின் வயிறு, குடல் நோய் நிபுணர் கந்தசாமி என்ற குமார் கூறுகையில், கல்லீரல் நோயினால் இந்தியாவின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய தகவலாகும். கல்லீரல் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். கல்லீரல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே உலக கல்லீரல் தினத்தின் நோக்கமாகும். வருடத்திற்கு ஒருமுறை கல்லீரல் பரிசோதனை மிகவும் அவசியம் என்றார்.
நிகழ்ச்சியில் ஷிபா காலேஜ் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் சென்டர் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். தொடர்ந்து கல்லீரலை பாதிக்கும் செயலை செய்வதில்லை என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவமனை மேலாளர் சுதர்சன் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு ஆண்ட்ரூ ஜெபா, ராதாகிருஷ்ணன், வீரகுமார், ஜானகிராமன், சுரேஷ், பாலா மற்றும் பலர் செய்திருந்தனர்.
- நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மிகப்பெரிய ஏரி தூசூர் ஏரியாகும்.
- சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மிகப்பெரிய ஏரி தூசூர் ஏரியாகும். இது நாமக்கல்-துறையூர் ரோட்டில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. தூசூர் ஏரியின் மூலம் சுமார் 1000 ஏக்கர் ஆயக்கட்டு நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரி நீர் மூலம் இப்பகுதி விவசாயிகள் நெல், கரும்பு, கேழ்வரகு, சோளம் போன்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் மழை பெய்யும் போது அங்கிருந்து காட்டாற்றின் வழியாக வரும் வெள்ள நீர், காரவள்ளி, நடுக்கோம்பை, சின்னக் குளம், பெரியக் குளம், பழையபாளையம் உள்ளிட்ட 6 குளங்கள் முதலில் நிரம்பும். பின்னர் வழிந்தோடும் உபரி நீர் தூசூர் ஏரிக்கு வந்தடையும்.
இங்கிருந்து வெளியேறும் உபரி நீர் பின்னர் ஆண்டாபுரம் வழியாக திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே காவிரியில் சென்று கலக்கும். ஏரியில் ஒப்பந்த அடிப்படையில் மீன் வளர்ப்பும் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக, நாமக்கல் நகராட்சிப் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஓடை வழியாக வந்து தூசூர் ஏரியில் கலக்கிறது.
இதனால் ஏரி நீர் மாசடைந்து மீன்கள் செத்து மிதக்கின்றன. ஏரி நீர் மட்டுமல்லாது இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரும் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்களுக்கும் உடல் நிலை பாதிக்கப்படுகிறது.
தூசூர் ஏரியில் கழிவு நீர் ஏரியில் கலப்பதைக் கண்டித்தும், அதை தடை செய்யக்கோரியும், தூசூர் ஏரிக்கரையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட உதவி செயலாளர் சதாசிவம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய கமிட்டி உறுப்பினர் பெருமாள் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினா்.
- தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணத்தை உயர்த்தியது.
- வருகிற டிசம்பர் 4-ந் தேதி, மாவட்ட தலைநகரங்களில் திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டம் நடக்கும்.
திருப்பூர்:
தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணத்தை உயர்த்தியது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் என்றும் பாராமல், பீக் ஹவர் மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மின்சார நிலை கட்டணம் 430 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. தொழில் நிறுவனங்கள் சொந்த முயற்சியில் அமைத்த மேற்கூரை சோலார் மின் கட்டமைப்புக்கு யூனிட்டுக்கு 1.54 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்தகைய கட்டண உயர்வு மற்றும் பீக்ஹவர் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய கோரி தொழில்துறையினர் போராடி வருகின்றனர்.
தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பை உருவாக்கி மாநில அளவிலான, அறப்போராட்டங்கள் நடத்தப்படுகிறது. அதன் ஒருபகுதியாக மனிதசங்கிலி போராட்டம், வருகிற 4-ந் தேதி, மாவட்ட தலைநகரங்களில் நடக்குமென, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் தொழில் அமைப்பு கூட்டமைப்பினர் கூறியதாவது:- மின் கட்டண உயர்வால், திருப்பூர் பனியன் தொழில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது. இனியும் தொழில் நடத்த முடியாது என்பதால் பீக் ஹவர் மின் கட்டணம் உள்ளிட்ட கட்டண உயர்வுகளை திரும்ப பெறக்கோரி போராட்டம் நடத்தி வருகிறோம். அதன்படி வருகிற டிசம்பர் 4-ந் தேதி, மாவட்ட தலைநகரங்களில் திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டம் நடக்கும். அன்றைய தினம், திருப்பூர் குமரன் சிலையில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை மனித சங்கிலி நடத்தப்படும். தொழில்துறையினர் மட்டுமல்லாது, தொழிலாளர்களும் குடும்பத்துடன் இப்போராட்டத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மனித சங்கிலி போராட்டத்துக்கு பின்னரும் தமிழக அரசு அழைத்து பேசி, தீர்வு வழங்காதபட்சத்தில் 18-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நெல்லை ஷிபா மருத்துவமனை சார்பில், உலக தைராய்டு தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, வண்ணார்பேட்டை வடக்கு புற வழிச்சாலையில் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் எம்.கே.எம். முகம்மது ஷாபி தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் கலந்து கொண்டு மனித சங்கிலியை தொடங்கி வைத்தார். துணை மேயர் கே.ஆர்.ராஜு முன்னிலை வகித்தார். மருத்துவமனையின் தைராய்டு நோயியல் சிறப்பு மருத்துவர் அருண் விஸ்வநாத் தைராய்டு தின சிறப்பு செய்தி வழங்கினார்.
மனித சங்கிலியில் ஷிபா மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், ஷிபா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் ஐகிரவுண்ட் அப்துல் ரஹ்மான் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஷிபா மருத்துவமனையின் அவசர சிகிச்சை மருத்துவர் ஷியாவுல்லா, டவுன் அருண் நர்சிங் ஹோம் சுந்தரலிங்கம் உட்பட சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஷிபா மருத்துவமனையின் மார்க்கெட்டிங் பிரிவினர் செய்திருந்தனர்.