search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக கல்லீரல் தினத்தையொட்டி ஷிபா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி
    X

    ஷிபா மருத்துவமனை இயக்குனர் முகமது ஷாபி தலைமையில் மனித சங்கிலி நடைபெற்ற போது எடுத்த படம்.

    உலக கல்லீரல் தினத்தையொட்டி ஷிபா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி

    • உலக கல்லீரல் தினத்தையொட்டி நெல்லை சந்திப்பு ஷிபா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி இன்று நடைபெற்றது.
    • கல்லீரல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே உலக கல்லீரல் தினத்தின் நோக்கமாகும்.

    நெல்லை:

    உலக கல்லீரல் தினத்தையொட்டி நெல்லை சந்திப்பு ஷிபா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி இன்று நடைபெற்றது. வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் எம்.கே.எம். முகமது ஷாபி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் ஷபீக், உமா மகேஸ்வரன், முகமது இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மருத்துவமனையின் வயிறு, குடல் நோய் நிபுணர் கந்தசாமி என்ற குமார் கூறுகையில், கல்லீரல் நோயினால் இந்தியாவின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய தகவலாகும். கல்லீரல் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். கல்லீரல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே உலக கல்லீரல் தினத்தின் நோக்கமாகும். வருடத்திற்கு ஒருமுறை கல்லீரல் பரிசோதனை மிகவும் அவசியம் என்றார்.

    நிகழ்ச்சியில் ஷிபா காலேஜ் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் சென்டர் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். தொடர்ந்து கல்லீரலை பாதிக்கும் செயலை செய்வதில்லை என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவமனை மேலாளர் சுதர்சன் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு ஆண்ட்ரூ ஜெபா, ராதாகிருஷ்ணன், வீரகுமார், ஜானகிராமன், சுரேஷ், பாலா மற்றும் பலர் செய்திருந்தனர்.

    Next Story
    ×