search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prime minister"

    • நிகழ்ச்சியில் தமிழக தலைவர்கள் மத்திய மந்திரி எல்.முருகன், அண்ணாமலை, பொன்.ராதா கிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.
    • ஒரு மாதம் நடைபெறும் நிகழ்ச்சியில் 12 குழுக்களாக தமிழகத்தில் இருந்து 2,500 பேர் பங்கேற்றுள்ளனர்.

    பன்னெடுங்காலமாக காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே கலை, கலாச்சாரம், ஆன்மீக ரீதியாக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது.

    ஏற்கனவே தமிழ் கலாச்சாரத்தையும், தமிழின் பெருமையையும் அடிக்கடி மேற்கோள்காட்டி வரும் பிரதமர் மோடி, இந்த உறவை இரு மாநில மக்களும் அறிந்து கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் 'காசி தமிழ் சங்கமம்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.

    இந்த நிகழ்ச்சியை மத்திய கல்வி அமைச்சகம், கலாச்சாரம், ரெயில்வே உள்ளிட்ட துறைகளுடன் உத்தரபிரதேச அரசும் இணைந்து பிரமாண்டமாக நடத்துகிறது.

    சென்னை ஐ.ஐ.டி., வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

    மாணவர்கள், இலக்கிய வாதிகள், தமிழறிஞர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். அவர்கள் தங்கள் துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடவும், உள்ளூர் வாசிகளுடன் கலந்துரையாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    தமிழ் சங்கமம் நிகழ்ச்சியையொட்டி காசி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகத்தில் இருந்து செல்பவர்களை வரவேற்கவும், அவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தையும் எந்த குறையும் இல்லாமல் செய்து கொடுக்க வேண்டும் என்றும் அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.

    பாரதியார் காசியில் சில காலம் வசித்துள்ளார். அங்குள்ள அனுமன்காட் பகுதியில் பாரதியின் இல்லம் உள்ளது. மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று வாரணாசி சென்றார். அப்போது பாரதி வாழ்ந்த இல்லத்துக்கு சென்றார். பாரதியின் உறவினரான 96 வயது கே.வி.கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தார்.

    பின்னர் நிகழ்ச்சி ஏற்பாடுகளையும் பார்வையிட்டார். அப்போது அவர் கூறும் போது, "இரு மாநிலங்களையும் சேர்ந்த அறிஞர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து அவர்களின் அறிவு, கலாச்சாரம் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும், அனுபவங்களை கற்றுக்கொள்ளவும் வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்" என்றார்.

    இன்று முதல் ஒரு மாதம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை பனாரஸ் பல்கலைக்கழகத்தில் இன்று பிற்பகலில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக தலைவர்கள் மத்திய மந்திரி எல்.முருகன், அண்ணாமலை, பொன்.ராதா கிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

    தொடர்ந்து ஒரு மாதம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 12 குழுக்களாக தமிழகத்தில் இருந்து 2,500 பேர் பங்கேற்றுள்ளனர்.

    • இளைஞர்கள் அதிக அளவில் விவாதங்களில் பங்கேற்று இந்திய அரசியல் அமைப்பை வலுப்படுத்த வேண்டும்.
    • மகிழ்ச்சியாக வைத்திருப்பதுடன் மக்களிடம் இணக்கமாக நடப்பதும் ஆளும் அதிகாரத்தின் முக்கிய வேலையாகும்.

    1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அரசியல் சாசனம் பாராளுமன்றத்தில் முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை நினைவில் கொள்ளும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இன்றைய தினம் அரசியல் சாசன தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முன்பு தேசிய சட்ட தினமாக கடை பிடிக்கப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட்டில் அரசியல் சாசன தின விழா இன்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மெய் நிகர் நீதி கடிகாரம், கைப்பேசி செயலி 2.0 டிஜிட்டல் நீதிமன்றம், எஸ். 3 வாஸ் இணையதளம் ஆகிய நீதித்துறை தொடர்பான சேவைகளை தொடங்கி வைத்தார்.

    டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் இந்திய ஜனநாயகத்தின் தாய் என்ற தலைப்பில் அரசியல் சாசன நிகழ்ச்சிகள் நடந்தது. அரசியல் சாசன தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பொது மக்கள், பாதுகாப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நமது அரசியல் சாசனமே மிகப்பெரிய பலமாகும். அரசியல் சாசனம் நமக்கு கொடுத்து இருப்பது மிகப்பெரிய நம்பிக்கையாகும்.

    இளைஞர்கள் அதிக அளவில் விவாதங்களில் பங்கேற்று இந்திய அரசியல் அமைப்பை வலுப்படுத்த வேண்டும். சரியான நேரத்தில் நீதி கிடைக்க நமது நீதித்துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்கிறது.

    மக்களின் அடிப்படை கடமைகளை நிறைவேற்றுவது முன்னுரிமையாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக வைத்திருப்பதுடன் மக்களிடம் இணக்கமாக நடப்பதும் ஆளும் அதிகாரத்தின் முக்கிய வேலையாகும்.

    இந்தியாவின் வளர்ச்சி வலுவான பொருளாதாரம். சர்வதேச அளவில் நமக்கு நற்பெயர் பெற்று கொடுத்து உள்ளது.

    இவ்வாறு மோடி பேசினார்.

    விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

    • வரும் நாட்களில் ஜி-20 தொடர்புடைய பல நிகழ்ச்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்படும்.
    • ராக்கெட் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவதைபோல் டிரோன் தொழில்நுட்பமும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் 'மான் கி பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

    இன்று காலை 95-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மான் கி பாத் நிகழ்ச்சி 100-வது பதிப்பை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. டிசம்பர் 1ம் தேதி இந்தியா, சக்திவாய்ந்த குழுவான ஜி20-யின் தலைவர் பதவியை ஏற்கும்.

    இது இந்தியாவுக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெரிய பண்டிகையாக மாறியுள்ளது. இந்த பொறுப்பு இந்தியாவுக்கு வந்திருப்பது சிறப்பு வாய்ந்தது. ஜி-20க்கு தலைமை தாங்குவது இந்தியாவுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

    உலகளாவிய நன்மை மற்றும் நலனில் கவனம் செலுத்த ஜி-20 தலைமையின் வாய்ப்பை இந்தியா பயன்படுத்த வேண்டும். அமைதியாக இருந்தாலும் சரி, ஒற்றுமையாக இருந்தாலும் சரி, சுற்றுச்சூழலை பற்றிய உணர்திறன் அல்லது நிலையான வளர்ச்சியாக இருந்தாலும் அனைத்து விஷயங்களுக்கும் இந்தியாவிடம் தீர்வு உள்ளது.

    வரும் நாட்களில் ஜி-20 தொடர்புடைய பல நிகழ்ச்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்படும். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஜி-20 தொடர்பான விவாதம், கலந்துரையாடல் மற்றும் போட்டி நிகழ்ச்சிகளை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ஆளில்லா விமானத்துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. ராக்கெட் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவதைபோல் டிரோன் தொழில்நுட்பமும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

    கடந்த 18ம் தேதி இந்தியா, தனது முதல் தனியார் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. இது குறைந்த செலவில் உலகத்தரம் வாய்ந்தது. இந்தியாவில் தனியார் விண்வெளித்துறைக்கு ஒரு புதிய சகாப்தத்தின் விடியலை குறிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
    • அவர் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன் என்றார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மோடி டுவிட்டரில் கூறும்போது, "சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவர் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    • பிரதமர் மோடி நாட்டுக்கு மிக நல்லத் திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
    • மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் தலைமையில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜனதாவில் இணைந்தார். அனுபமா என்ற இந்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரூபாலி கங்குலி. திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது டி.வி. சீரியல்களில் பிரபலமாக உள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.

    டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் ரூபாலி கங்குலி அக்கட்சியில் இணைந்தார்.

    பிரதமர் மோடி நாட்டுக்கு மிக நல்லத் திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அவர் கொண்டு வந்துள்ள தொலைநோக்குத் திட்டங் கள் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கின்றன. அவரது கொள்கைகளால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன். பிரத மர் மோடியின் பாதையை பின்பற்றி நாட்டு மக்களுக்கு சேவை செய்ய நான் பா.ஜனதாவில் இணைந்து உள்ளேன். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் தலைமையில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய ரெயில் பாலம் கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
    • இந்தியாவிலேயே கடலுக்கு நடுவே அமைந்துள்ள செங்குத்து வடிவிலான திறந்து மூடும் முதலாவது தூக்குப்பாலம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    மண்டபம்:

    தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் பாக் ஜலசந்தியில் அமைந்துள்ளது பாம்பன் ரெயில் பாலம். ராமேசுவரம் தீவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்புடன் இணைக்கும் வகையில் கடந்த 1914-ம் ஆண்டு திறக்கப்பட்டது. கடல் வழி வணிகத்தில் நம் நாடு தழைத்தோங்கிய காலத்தில் இந்த ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்துள்ளது.

    அதற்கேற்ப கப்பல்கள் செல்லும் வகையில் பாலத்தின் நடுப்பகுதியில் தண்டவாளத்தை இரண்டாக பிரிப்பது போன்று தூக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 2.05 கி.மீ. நீளமுள்ள இது இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெயரையும் பெற்றது. 1964-ம் ஆண்டு பாம்பன் தீவை பெரும் புயல் தாக்கியது. அப்போது இந்த பாலம் சேதம் அடைந்து, விரிவான பழுது பார்க்கும் பணிகள் நடந்தது.

    இதற்கிடையே கடந்த 1988-ல் பாம்பன் ரெயில் பாலத்துக்கு இணையான ஒரு சாலைப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. அதுவரை இந்த ரெயில் பாலம் மட்டுமே மண்டபத்திற்கும் ராமேசுவரத்திற்கும் இடையிலான ஒரே இணைப்பாக இருந்தது. தற்போது 110 ஆண்டுகளை கடந்த நிலையில் அடிக்கடி ஏற்படும் மண் அரிப்பு காரணமாக பாலம் அதன் ஸ்திரத்தன்மையை இழுந்து பலத்த சேதம் அடைந்தது.

    மேலும் இந்த பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதாலும் பழைய பாலம் அருகிலேயே புதிய ரெயில் பாலம் கட்டுவதற்கான முடிவினை மத்திய ரெயில்வே அமைச்சகம் கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தது. முதற்கட்டமாக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2019 மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் புதிய பாம்பன் பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

    தொடர்ந்து 2019, ஆகஸ்டு 11-ந்தேதி பாம்பனில் புதிய ரெயில்வே பாலம் கட்டுவதற்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கின. அப்போது 2021, செப்டம்பர் மாதத்திற்குள் புதிய பாம்பன் ரெயில் பாலத்திற்கான பணிகள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால், பாம்பன் கடற்பகுதியில் அவ்வப்போது ஏற்பட்ட கடல் சீற்றம், புயல் உள்ளிட்ட வானிலை மாற்றங்கள் மற்றும் கொரோனா பெருந்தொற்று காரணமாக நிர்ணயிக்கப்பட்ட நாளில் முடிக்க முடியவில்லை. தொடர்ந்து, புதிய பாம்பன் பாலத்துக்கான திட்டச் செலவு ரூ.535 கோடியாகவும் அதிகரிக்கப்பட்டது. இந்திய ரெயில்வேயின் பொறியியல் பிரிவான ரெயில் விகாஸ் நிகாம் நிறுவனம் மூலம் பணிகள் நடைபெற்றன.

    இந்தநிலையில் பழைய பாம்பன் ரெயில் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக 2023 டிசம்பர் மாதம் முதல் ராமேசுவரத்துக்கு முற்றிலுமாக ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. ராமேசுவரத்துக்கு வரும் ரெயில் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ரெயில் நிலையங்கள் வரையிலும் இயக்கப்படுகிறது. இதனால் கடந்த 22 மாதங்களாக ராமேசுவரத்துக்கு ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

    தற்போது கட்டப்படும் புதிய பாம்பன் ரெயில் பாலத்தின் நீளம் 2,078 மீட்டர் ஆகும். கடலில் 333 கான்கிரீட் அடித்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 101 தூண்களைக் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் கடலில் இரட்டை வழித்தடத்துடன் மின்சார ரெயில்களை இயக்கும் வகையில் பாலத்தின் தூண்கள் வடிவைமைக்கப்பட்டுள்ளது.

    தூண்கள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, இந்தத் தூண்கள் இடையே ஒரு வழித்தடத்துக்கான 60 அடி நீளம் கொண்ட 100 இணைப்பு கர்டர்களில் மண்டபம் பகுதியில் தூக்குப் பாலம் வரையிலுமான 76 கர்டர்கள் பொருத்தப்பட்டு விட்டன. அவை 18.3 மீட்டர் நீளம் கொண்டதாகும்.

    புதிய ரெயில் பாலம் கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது பழைய ரெயில் பாலத்தை விட சுமார் 1½ (ஒன்றரை) மீட்டர் உயரம் அதிகம் என்பதால், பாம்பன் பக்க நுழைவு பகுதியில் இருந்த தண்டவாளங்களும், சிலீப்பர் கட்டைகளும் அகற்றப்பட்டு இருப்புப்பாதையை உயரமாக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதன் மூலம் ரெயில் பாலத்துக்கு கீழ் பெரிய அளவிலான கப்பல்கள், விசைப்படகுகள் தடையின்றி செல்ல முடியும்.

    பாம்பன் சாலை பாலத்துக்கு இணையான உயரத்தில், புதிய ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்குப் பாலம் அமைக்கும் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் அருகில் செங்குத்து தூக்கு பாலத்துக்கான ஆபரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை, மின்சார கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் வைப்பதற்காக இரண்டு மாடி கட்டிடமும் கடலிலேயே கட்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பாம்பன் புதிய ரெயில் பாலத்தின் நடுப்பகுதியான தூக்கு பாலம் இணைக்கும் பணியும் முடிவடைந்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் 2-ந்தேதி முதல் ராமேசுவரம்-மண்ட பம் இடையேயான ரெயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் செய்திக்குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவிலேயே கடலுக்கு நடுவே அமைந்துள்ள செங்குத்து வடிவிலான திறந்து மூடும் முதலாவது தூக்குப்பாலம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே புதிய பாம்பன் ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையம் மற்றும் பல திட்டங்களையும் திறந்து வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • உடல்நல குறைவு ஏற்பட்டதால் ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
    • ஒப்பந்தத்தை இறுதி செய்ய இரு தரப்பிலும் நேர்மறையான முடிவு எட்ட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வாரம் உடல்நல குறைவு ஏற்பட்டதால் ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். 

    அதில் அவரது சிறுநீர் பாதையில் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து நெதன்யாகுவுக்கு இன்று புரோஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், நெதன்யாகவுக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிரித்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு அந்நாட்டில் ஆபரேஷன் அல்-அக்ஸா மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 250 பேர் வரை பணய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர்.

    தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்க கடந்த 13 மாத காலமாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 45 ஆயிரத்துக்கும் அதிகமானோரைக் கொன்று குவித்துள்ளது. இதில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

    ஹமாஸ் கட்டுப்பாட்டில் இன்னும் 100 இஸ்ரேல் கைதிகள் வரை உள்ள நிலையில் காசாவில் ஹமாஸ் பிடியில் இருக்கும் எஞ்சிய பணயக்கைதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தை இஸ்ரேல் அரசு எட்ட வேண்டும் என்று கோரி ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் டெல் அவிவ் நகரில் நேதன்யாகுவை கண்டித்து பேரணி நடத்தினர்.

    அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்தின் மூத்த அதிகாரிகள் இந்த மாத தொடக்கத்தில் 14 மாத கால போரை நிறுத்த தங்கள் மத்தியஸ்த முயற்சிகளை மீண்டும் தொடங்கினர், ஒப்பந்தத்தை இறுதி செய்ய இரு தரப்பிலும் நேர்மறையான முடிவு எட்ட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது.

    ×