search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "investigation"

    • சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த மங்கலூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது.

    இங்குள்ள நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல லாரி ஒன்று வந்தது. லாரியை திருத்துறைப்பூண்டி உப்பூக்கார தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 53) ஓட்டி வந்தார்.

    கொள்முதல் நிலையத்தில் லாரியை நிறுத்திவிட்டு தான் ஏற்றி வந்த சாக்குகளை இறக்க லாரியின் பின்பகுதி கதவை சுப்பிரமணியன் திறந்து விட்டார்.

    அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுப்பிரமணியன் இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தங்கி செல்போன் திருட்டில் ஈடுபட்ட முதியவரை தனிப்படை போலீசார் பிடித்தனர்.
    • இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அனுப்பானடி, டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் நவீன் குமார் (வயது29), இவரது தாய்க்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட தால் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனும தித்தனர். நவீன்குமார், தாய்க்கு உதவியாக ஆஸ்பத்திரி வளாகத்தில் தங்கியிருந்தார். அவர் இரவு படுத்து தூங்கியபோது மர்ம நபர் செல்போனை திருடிச் சென்று விட்டார்.

    இதுபற்றி அறிந்த நவீன்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசா ரணை நடத்தினர்.

    மேலும் ஆஸ்பத்திரியில் அடிக்கடி செல்போன் திருட்டு நடந்து வந்ததால் இதில் சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தர விட்டார். அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதில் நவீன்குமாரின் செல்போனை ஒரு முதியவர் திருடிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் செல்போன் திருட்டில் ஈடுபட்ட விவேகானந்தன்(59) என்பவரை கைது செய்தனர். அவர் திருடிய செல்போனை போலீசார் மீட்டு நவீன்குமா ரிடம் ஒப்படைத்தனர். போலீசில் சிக்கிய முதியவர் அரசு ஆஸ்பத்திரியில் அடிக்கடி தங்கி செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • இறந்து கிடப்பது யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை.
    • பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் வடக்கிலிருந்து பெரமையா கோயில் சந்திப்பு வழியாக பெரிய கோட்டை செல்லும் சாலையோரம் 70 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்ததை பொதுமக்கள் பார்த்து மதுக்கூர் போலீஸ் நிலை யத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

    ஆனால் இறந்து கிடப்பது யார் ? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை.

    இதையடுத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மதுக்கூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் ஜீவானந்தம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி நிர்வாகம் மாணவனை கண்டித்து, நாளை பெற்றோரை அழைத்து வருமாறு கூறினர்.
    • அப்பகுதி மீனவர்கள் காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    புதுச்சேரி:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செட்டி மண்டபம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். டைல்ஸ் வேலை பார்த்து வரும் இவரது மகன் சிவராஜன் (வயது16). இவர், அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ்-1 படித்து வந்தார். சிவராஜன் பள்ளிக்கு செல்போனை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பள்ளி நிர்வாகம் மாணவனை கண்டித்து, நாளை பெற்றோரை அழைத்து வருமாறு கூறினர்.

    இதனால் பயந்து போன மாணவன் வீட்டுக்கு செல்லாமல், பள்ளியி லிருந்து காரைக்கால் கடற்கரைக்கு சென்றார். இந்நிலையில், சிவராஜன் உடல், காரைக்கால் முகத்துவாரத்தை ஒட்டிய, அரசலாற்று பகுதியில் மிதந்தை கண்டு அப்பகுதி மீனவர்கள் காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த மாணவன் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கரநாராயணன் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
    • மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்திருப்பதை அறிந்த சங்கரநாராயணன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் சிவா தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன்(வயது 43). இவர் அப்பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

    இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு வழக்கமான பணிகளை முடித்துவிட்டு அவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டுமுன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது இருச்சக்கர வாகனம் முழுதும் தீயில் கருகி எலும்புக்கூடாக காட்சியளித்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    மர்ம நபர்கள் தீவைத்திருப்பதை அறிந்த அவர் இதுதொடர்பாக டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டதுடன் அப்பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • அந்த வழியாக வந்த ஒற்றை காட்டு யானை கருப்பனை தாக்கி தூக்கி வீசியது.
    • உடனடியாக முள்ளங்காடு, நரசிபுரம் வனப்பணியாளர்கள் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    கோவை:

    கோவை ஆலந்துறை செம்மேடு அருகே உள்ள பட்டியார் கோவில்பதியை சேர்ந்தவர் கருப்பன் (வயது 73). கூலித் தொழிலாளி. இவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கழிப்பறை செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒற்றை காட்டு யானை கருப்பனை தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்றனர். பின்னர் யானையை காட்டுக்குள் விரட்டினர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக முள்ளங்காடு, நரசிபுரம் வனப்பணியாளர்கள் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து மயங்கிய நிலையில் இருந்த கருப்பனை ஆம்புலன்சு மூலமாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றவர் வீட்டில் 13 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
    • இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திருவனந்த புரம் பச்சமடம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பரம சிவம் (வயது 55). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரது மனைவி மகாலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு, கண வரை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றி ருந்தார்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் பரமசிவத்தை உள்நோயாளியாக அனு மதித்தனர். இதற்கிடையே அவர்களது மகள் தனலட்சுமி தந்தைக்கு உடைகள் எடுப்பதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நள்ளிரவில் வந்து இந்த திருட்டை அரங்கேற்றியுள்ள னர்.

    இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இதற் கிடையே பாளையங் கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவமும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×