என் மலர்
நீங்கள் தேடியது "tag 94963"
- தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
- ஜவுளி சந்தையில் இன்று சில்லரை வியாபாரம் 35 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறுவது வழக்கம்.
இந்த ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், வெளிமாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ஜவுளி ரகங்களை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.
சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
பின்னர் படிப்படியாக அதிலிருந்து மீண்டு வந்தபோது நூல் விலை உயர்வு காரணமாக கடந்த சில வாரங்களாக ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடந்து வந்தது.
இந்நிலையில் தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி கடந்த வாரம் ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. அதேபோல் இந்த வாரமும் ஜவுளி சந்தையில் சில்லரை, மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
பள்ளிகள் கோடை விடுமுறை தொடர்ந்து நேற்று திறக்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளி சீருடைகள் வாங்க பெற்றோர்கள் திரண்டனர். ஜவுளி சந்தையில் பள்ளி சீருடை களுக்கு கிராக்கி நிலவுகிறது.
இதேப்போல் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்த நாட்களில் வருவதால் ஜவுளி சந்தையில் இன்று சில்லரை வியாபாரம் 35 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்ததால் மொத்த விற்பனை 25 சதவீதம் நடந்ததாக வியா பாரிகள் தெரிவித்தனர்.
- மானாமதுரை அருகே மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வரவேற்பு அளித்தனர்.
- புதிய கல்வி ஆண்டில் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரம் தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் புதிய கல்வி ஆண்டு தொடக்க நாள் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் மற்றும் உதவி ஆசிரியர்கள் வருகை தந்த பள்ளி நிர்வாக குழு தலைவர் சத்தியசீலன் செயலாளர் அன்பழகன் உறுப்பினர்கள் தங்கராசு சத்தியமூர்த்தி மற்றும் பெற்றோர்கள் மாணவர்களுக்கு சந்தனம் குங்குமம் கொடுத்து வரவேற்றனர்.
புதிய கல்வி ஆண்டில் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்தனர். 5 வயது முடிந்த குழந்தைகளை முதல் வகுப்பில் சேர பெற்றோர்கள் அழைத்து வந்தனர். அவர்களை வரவேற்று குழந்தைகள் பிறப்பு சான்றிதழ், ஆதார் நகல்களை சரிபார்த்து முதல் வகுப்பில் 26 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். பள்ளி மாணவர்கள் அனை வருக்கும் தமிழக அரசால் வழங்கப்பட்ட விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.
பள்ளியின் சார்பில் பெற்றோர்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள், மாணவர்களுக்கான 23 வழிகாட்டி நெறி முறைகள் கொண்ட குறிப்பு வழங்கப்பட்டது. உதவி ஆசிரியை தேவி 1 முதல் 5 வகுப்பு மாண வர்கள் 150 பேருக்கு மதிய உணவு சாப்பிடும் எவர்சில்வர் தட்டுகள் வழங்கி னார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- புனித அடைக்கல அன்னை ஆலய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.
- சாயர்புரம் பேரூராட்சி மன்றத் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கினார்.
சாயர்புரம்:
சாயர்புரம் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட நடுவைகுறிச்சி பகுதியில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சாயர்புரம் பேரூராட்சி மன்றத் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
பேரூராட்சி துணைத் தலைவர் பிரியா மேரி மற்றும் 13-வது வார்டு கவுன்சிலரும், சாயர்புரம் நகர தி.மு.க. செயலாளருமான கண்ணன், சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அறவாழி முன்னிலை வகித்தனர்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியர் அல்போன்ஸ் ஷா மேரி வரவேற்றார். பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.
- பயிற்சி வகுப்பில், 3 வயது முதல் 7 வயது வரையில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
- பயிற்சி வகுப்பின் இறுதியில் மாணவா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.
திருப்பூர் :
திருப்பூரில் பள்ளி மாணவா்களுக்கான ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்கு நன்னெறிப் பயிற்சி வகுப்புகள் வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
திருப்பூரை அடுத்த குன்னங்கல்பாளையம் சாமத்தோட்டம் நாச்சிமுத்து நினைவு நூலகத்தில் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில், 3 வயது முதல் 7 வயது வரையில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். இவா்களுக்கு ஆத்திசூடி, கொற்றைவேந்தன் பயிற்சி வகுப்புகளும், 8 வயதுக்கு மேற்பட்டோருக்கு திருக்கு பயிற்சி வகுப்புகளும் நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி வகுப்பின் இறுதியில் மாணவா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு நூலக ஒருங்கிணைப்பாளா் பி.மணிநாதனை 99439-48156, திருக்கு ஆய்வாளா்கணேசனை 99948-92756 என்ற செல்போன் எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து செயற்பொறியாளரிடம் கேட்டறியப்பட்டது.
- சானல் தூர்வாரும் பணியையும் பார்வையிட்டார்
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட பள்ளி கட்டிடங்களை மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார். சானல் தூர்வாரும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதி களில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. நாகர் கோவில் மாநகராட்சிக்குட்பட்ட நாகர்கோவில் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் 20 ஆண்டு களுக்கு மேல் கட்டப்பட்ட வகுப்பறையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பழுதடைந்த பகுதிகளை சீரமைக்குமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இடலாக்குடி அரசு தொடக்கப் பள்ளி வகுப் பறை கட்டிடத்தினை யும் பார்வையிட்டு, கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து செயற்பொறியாளரிடம் கேட்டறியப்பட்டது.
ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட ஆத்திக்காட்டுவிளை ஊராட்சி, சீயோன்புரம் அரசு தொடக்கப்பள்ளி சமையலறை கட்டிடம், கணியாகுளம் ஊராட்சி புளியடி அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறை கட்ட டம், புத்தேரி அரசு தொடக் கப்பள்ளி கட்டடத்தினை ஆய்வு மேற்கொண்டு அக் கட்டிடங்களின் உறுதித் தன்மை குறித்து தலைமை யாசிரியர்கள், ஆசிரியர்கள், துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. வட கிழக்கு பருவமழை பெய்து வருவதால் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பழுதடைந்த கட்டிடங்களை விரைந்து சரிசெய்யவும், மிகவும் பழுதடைந்த கட்டிடங்களை உடனடியாக அப்புறப்ப டுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து தர்மபுரம் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட் டத்தின்கீழ் அத்திக்கடை கால்வாயினை தூர்வாரும் பணியினை நேரில் பார் வையிட்டு, வாய்க்கால் வழியாக வரும் தண்ணீரை வீணாக்காமல் விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஊரக திறனாய்வு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
- நடப்பு ஆண்டுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 10ம் தேதி நடத்தப்பட உள்ளது.
திருப்பூர் :
கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில், அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஊரக திறனாய்வு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. தேர்வு முடிவு மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 படிப்பு முடிக்கும் வரை, ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
நடப்பு ஆண்டுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 10ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தகுதியான மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் மாணவர்கள், அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம், ஒரு லட்சம் ரூபாய்க்கும் மிகாமல் இருக்க வேண்டும். பெற்றோரின் வருமான சான்றிதழை கட்டாயம் இணைக்க வேண்டும்.நாளை (26ந் தேதி) முதல் நவம்பர் 5-ந் தேதி வரை தலைமை ஆசிரியர் உதவியுடன் மாணவர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மாணவர் விபரங்களை 28ந் தேதி முதல், நவம்பர் 8 க்குள் தலைமை ஆசிரியர்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து விட வேண்டும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாணவிகள் தினமும் பள்ளி முடிந்தவுடன் அரசு பஸ்களில் செல்வது வழக்கம்.
- கூடுதலாக பஸ்கள் ஏதும் இயக்கப்–படாததால், மாணவர்கள் கூட்ட நெரிசலில் செல்கின்றனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் மணலி, ஆலத்தம்பாடி, பல்லாங்கோயில், கலப்பால், பாமணி, நெடும்பலம், திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து மாணவ- மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் பள்ளி முடிந்தவுடன் அரசு பஸ்களில் செல்வது வழக்கம்.
இந்நிலையில், தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் வெளியூருக்கு செல்வ–தற்காக பயணிகள் அதிகளவில் திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்தில் குவிந்துள்ளனர்.
ஆனால், கூடுதலாக பஸ்கள் ஏதும் இயக்கப்–படாததால், மாணவர்கள் கூட்ட நெரிசலில் செல்கின்றனர். மேலும், பஸ்சுக்காக பல மணி நேரம் பஸ் நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே, விழா காலங்களில் கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கள்ளக்குறிச்சி அடுத்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 16 வயது மாணவர். இவர் சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- நேற்று காலை பள்ளிக்கு சென்றுவிட்டு பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் செல்லாமல் அங்கிருந்து பஸ்சில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு இரவு 8 மணி அளவில் வந்துள்ளார்.
சேலம்:
கள்ளக்குறிச்சி அடுத்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 16 வயது மாணவர். இவர் சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் அந்த பகுதியில் உள்ள டியூசன் சென்டரில் டியூசன் படித்து வந்துள்ளார். டியூசன் சென்டரில் செல்போன் மாயமானது குறித்து நேற்று முன்தினம் மாணவனிடம் அந்த டியூசன் ஆசிரியர் விசாரித்துள்ளார். மேலும் அவரது தந்தைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து வீட்டில் மாணவனை கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த அவர், நேற்று காலை பள்ளிக்கு சென்றுவிட்டு பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் செல்லாமல் அங்கிருந்து பஸ்சில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு இரவு 8 மணி அளவில் வந்துள்ளார்.
பள்ளி சீருடையில் பஸ் நிலையத்தில் சுற்றித் திரிந்த மாணவனை கண்ட பள்ளப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோர் அவரிடம் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் மாணவனுக்கு இரவு உணவு வாங்கி கொடுத்து உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனிடையே மாணவன் வீடு திரும்பாததால் அவரது தந்தை கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்திருந்தார். இதையடுத்து கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி புகழேந்தி கணேசன் மற்றும் மாணவனின் பெற்றோர் நேற்று நள்ளிரவு சேலம் வந்து மாணவனை அழைத்துச் சென்றனர்.
- மாணவ, மாணவிகள் சிறுதானியவகைகள், கீரைவகைகள், பழச்சாறுகள், என்று பல்வேறு விதமானஉணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.
- உணவின் பயன்களையும் மற்றும் செய்முறை விளக்கத்தினையும் எடுத்துரைத்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. டிரஸ்ட் நேசனல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் "உணவுத்திருவிழா'' மிக சிறப்பாககொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் கார்த்திகேயன் விழாவைதுவக்கி வைத்தார். விழாவில் மாணவ, மாணவிகள் சிறுதானியவகைகள், கீரைவகைகள், பழச்சாறுகள், கூழ் வகைகள், கலவை சாதம், இனிப்புவகைகள் மற்றும் முளை கட்டிய பயிறு வகைகள் என்று பல்வேறு விதமானஉணவு வகைகளை சுவை மிகுந்ததாகவும், சத்துள்ளதாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தினர்.
மேலும் தாங்கள் கொண்டு வந்த உணவின் பயன்களையும் மற்றும் செய்முறை விளக்கத்தினையும் எடுத்துரைத்தனர். ஒவ்வொரு மாநிலத்தில் விளையும் விளைபொருட்கள் என்னென்ன என்பதை இந்திய வரைப்படம் மூலம் விளக்கினர். விழாவில் பெற்றோர்களும் பங்கு கொண்டு மாணவர்களை உற்சாகமூட்டினர். விழாவின் நிறைவாக தாளாளர் கார்த்திகேயன், முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு மற்றும் மேலாளர் ராமசாமி மாணவர்களையும், அவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டினர்.
- தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் காந்தி பிறந்த நாளையொட்டி கடந்த 12-ந்தேதி பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது.
- பரிசு தொகையையும், பாராட்டு சான்றையும் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வழங்குகிறார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் காந்தி பிறந்த நாளையொட்டி கடந்த 12-ந்தேதி நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கிடையே பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது.
பேச்சுப்போட்டியில் 2 மாணவர்கள் மற்றும் 13 மாணவிகள் என மொத்தம் 15 பேர் கலந்துகொண்டனர். கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் கல்லூரி மாணவர் 1, மாணவிகள் 13 பேர் என மொத்தம் 14 மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.
பேச்சுப் போட்டியில் முதல் பரிசு தொகை ரூ. 5 ஆயிரத்தை 10 -ம் வகுப்பு மாணவி அக் ஷரா, இரண்டாம் பரிசுத் தொகை ரூ.3 ஆயிரத்தை 12 -ம் வகுப்பு மாணவி நீது, மூன்றாம் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரத்தை 11 -ம் வகுப்பு மாணவி நிபிஷா, சிறப்பு பரிசுத் தொகை ரூ.2 ஆயிரம் 9 -ம் வகுப்பு மாணவர் கார்த்திகேயன் மற்றும் 7 -ம் வகுப்பு மாணவி லேகா ஆகியோர் பெற்றனர்.
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் முதல் பரிசுத் தொகை ரூ.5ஆயிரத்தை முதுகலை ஆங்கிலம் துறை மாணவி கனிஷ்மா, இரண்டாம் பரிசுத் தொகை ரூ. 3 ஆயிரத்தை இளங்கலை கணித துறை மாணவி நேஹா, மூன்றாம் பரிசுத் தொகை ரூ.2 ஆயிரத்தை முதுகலை வணிகத்துறை மாணவர் டெல்ஜின் ஆகியோர் பெற்றனர். பின்னர் பரிசு தொகையையும், பாராட்டு சான்றையும் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வழங்குகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இஸ்லாமியா மெட்ரிகுலேஷன் பள்ளியில் தனித்திறன் போட்டி நடந்தது.
- பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது.
கீழக்கரை
கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிகுலேஷன் பள்ளி யில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 91-வது பிறந்தநாள் விழா பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் ஆலோசனையின் பேரில், பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டிஸ் தலைமையில் நடந்தது.
முதலாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை நடந்த தனித்திறன் போட்டியில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்களது தனித்திறனை வெளிப்படுத்தினர். இதில் ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், பேச்சு போட்டி, வினாடி வினா ஆகியவை நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் ஆசிரியர்கள் செய்தனர்.
கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் கூறியதாவது:-
மாணவர்களின் அறிவியல் திறமையை அதிகரிக்கும் வகையில் ஆண்டு தோறும் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கண்காட்சி நாளை 14-ந்தேதி நடைபெறுகிறது. இதில் மாணவ-மாணவிகளின் நூற்றுக்கணக்கான படைப்புகள் இடம் பெற உள்ளது. மாணவர்களின் படைப்புகளை பெற்றோர்கள் கண்டு களிக்கலாம். பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நீண்ட நாட்களுக்கு முன்பே அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவில் இந்தியை அறிமுகப்படுத்தி விட்டனர்.
- இந்தி மொழி மீது மத சாயமோ, அரசியல் சாயமோ பூசுவது உகந்தது அல்ல.
திருப்பூர் :
இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் கே.கோபிநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்தி மொழியை அறிமுகப்படுத்துவதை இந்து முன்னேற்ற கழகம் வரவேற்கிறது. நீண்ட நாட்களுக்கு முன்பே அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவில் இந்தியை அறிமுகப்படுத்தி விட்டனர். இந்தி மொழியை ஒரு மொழியாக அனைவரும் பார்க்க வேண்டும். அம்மொழி மீது மத சாயமோ, அரசியல் சாயமோ பூசுவது உகந்தது அல்ல. இந்தியை எதிர்க்கும் தலைவர்களின் மகன், மகள்களும் மற்றும் பேரக்குழந்தைகளும் இந்தி மொழியை கற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற வகையில் தமிழகம் மட்டுமல்லாது பரந்த நமது இந்தியாவில் பயணம் செய்வதற்கு மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது. எனவே நம்முடைய எதிர்கால குழந்தைகளின் அறிவு மற்றும் அவர்களின் நலன் கருதி இந்தி மொழியை அரசியல் ஆக்காமல் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.