search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருட்டு"

    • 11 நகை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வந்தது.
    • 2 கைப்பேசிகள், இரண்டு இரு சக்கர வாகனங்கள், இரு நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், நமண சமுத்திரம் மற்றும் அரிமளம் பகுதிகளில் நடைபெற்ற 11 திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 5 பேரை தனிப்படையினா் கைது செய்து, அவா்களிடமிருந்து தங்கம் மற்றும் வெளளிக் கட்டிகளைப் பறிமுதல் செய்துள்ளனா்.

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உட்கோட்டம் திருமயம், நமணசமுத்திரம் மற்றும் அரிமளம் பகுதிகளில் நடைபெற்ற 11 நகை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வந்தது.

    விசாரணையில், அறந்தாங்கி எல்என்புரத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் தேவா (வயது58), சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கீழத்தெரு மீனாட்சி சுந்தரம் மகன் ஹரிஹரன் (44), ஆவுடையார்கோவில் முண்டகவயல் சமத்துவபுரத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் வெங்கடேஷ் (26), அறந்தாங்கி பூவைமாநகா் அலஞ்சரக்காடு கணபதி மகன் சொக்கலிங்கம் (54), கீரமங்கலம் வேப்பங்குடி மேற்கு செட்டித் தெருவைச் சோ்ந்த துரைராஜ் மகன் தங்கபாண்டியன் (46) ஆகிய 5 பேரையும் தனிப்படையினா் கைது செய்தனா்.

    இவா்களிடமிருந்து 100 கிராம் எடை கொண்ட தங்கக் கட்டி, 5.750 கிலோ எடை கொண்ட வெள்ளிக் கட்டிகள், ரொக்கம் ரூ.1,500, 2 கைப்பேசிகள், இரண்டு இரு சக்கர வாகனங்கள், இரு நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

    கைது செய்யப்பட்ட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனா். குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே நேரில் அழைத்துப் பாராட்டினார்.

    • நகராட்சி கமிஷனர் மற்றும் போலீசார் இதனை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.
    • நீதிபதி அளித்த நூதன தண்டனை ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆந்திர மாநிலம் கனிகிரி பகுதியை சேர்ந்தவர் அங்கய்யா (வயது 28) கடந்த 13-ந்தேதி அங்குள்ள கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது கோவிலுக்குள் நுழைந்த அங்கய்யா அங்கிருந்து பித்தளை அண்டா உள்ளிட்ட 3 பாத்திரங்களை நைசாக திருடி சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருட்டு நடந்த சில மணி நேரத்தில் அங்கய்யாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கோவில் அண்டா உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவரை கனிகிரி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அங்கய்யா தான் தற்போது தான் முதன் முதலில் திருட்டில் ஈடுபட்டேன். என்னை மன்னித்து விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரத் சந்திரா இந்தியாவில் புதிதாக அமல்படுத்தப்பட்ட குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் அங்கய்யாவுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

    அதில் நவம்பர் 2-ந் தேதி (இன்று) முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை கனிகிரி முக்கிய சந்திப்புகள் மற்றும் தெருக்களை காலை 6 மணி முதல் 9 மணி வரை அங்கய்யா சுத்தம் செய்ய வேண்டும். நகராட்சி கமிஷனர் மற்றும் போலீசார் இதனை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.

    கோர்ட்டு அளித்த இந்த சமூக சேவை நூதன தண்டனை ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருடியதை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
    • திண்டிவனம் போலீசார் சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் கண்டனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் உள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் மருத்துவமனையில் கல்லாப்பெட்டியில் இருந்த 3500 பணத்தை காணவில்லை என்று திண்டிவனம் நகரபோலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தது. புகாரின் அடிப்படையில் திண்டிவனம் போலீசார் சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் கண்டனர்.

    இதில் திருடிய நபர்கள் அதே பகுதியில் சுற்றி திரியும் திண்டிவனம் கிடங்கல்-1 பகுதியைச் சேர்ந்த சின்னையன் (58) மற்றும் குமார் (45) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசர் கைது செய்தனர். இதில் அவர்கள் திருடியதை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் தொடர்புடைய கீழ்சிவிரி கிராமத்தைச் சேர்ந்த விஷ்வகுமாரை (45) போலீசார் தேடி வருகின்றனர் பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மருத்துவமனையிலேயே கல்லாப்பெட்டியில் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
    • அலட்சியமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கமுடிவு.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் ஸ்ரீபத்ம நாபசுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். சம்பவத் தன்றும் வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் கோவிலுக்கு வந்திருந்தனர். தரிசன நேரம் முடிந்ததும் கோவில் பணியாளர்கள் நடை சாத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோவிலின் கருவறையில் இருந்த நைவேத்ய உருளி (வெண்கல பாத்திரம்) மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் உருளியை எடுத்துச் செல்வது தெரிய வந்தது. கோவிலை சுற்றி வந்த போது அவர்கள் அதனை எடுத்து உடைக்குள் மறைத்து கொண்டு சென்ற தும் உறுதியானது.இது குறித்து கோட்டை போலீசில் புகார் கொடுத்தனர்.

    போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தியபோது, அந்தக் கும்பல், திருவனந்த புரத்தில் இருந்து உடுப்பி சென்றதும், அங்கிருந்து விமானம் மூலம் ஹரியானா சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அரி யானா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், 3 பெண்கள் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவர், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற டாக்டர் ஜெகனேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

    கைதானவர்கள் கூறுகையில், கோவிலில் இருந்து கப்பலை (வெண்கல பாத்திரம்) திருடியது பண ஆதாயத்திற்காக அல்ல. பூஜை அறையில் வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்பியதால் தான் எடுத்து வந்ததாக கூறினர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் திருவனந்தபுரம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பத்மநாபசுவாமி கோவிலில் குறிப்பிடத்தக்க பொக்கிஷங்கள் உள்ளதால், 2011-ம் ஆண்டு முதல் அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமலில் உள்ளது. இந்த நிலையில் கோவிலில் திருட்டு நடைபெற்றுள்ளது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.

    • டெல்லியில் இருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிக்கானர் [ Bikaner ] பகுதியில் கார் நின்றுகொண்டிருந்தது.
    • இந்த கார் டெல்லியின் பாலாம் காலனியில் திருடப்பட்டது, மன்னிக்கவும்.

    காரை திருடிவிட்டு பிறகு மனம் கேட்காமல் அதில் மன்னிப்பு கடிதம் எழுதிவைத்து ரோட்டிலேயே திருடன் விட்டுச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியில் பாலாம் காலனியை [Palam colony] சேர்ந்த வினய் குமார் என்பவரின் ஸ்கார்பியோ கார் சமீபத்தில் திருடுபோயுள்ளது. இதுகுறித்து கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி காரின் உரிமையாளர் வினய் குமார் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

     

    அதன்படி எப்ஐஆர் பதித்து டெல்லி போலீஸ் காரை தேடிவந்தது. இந்நிலையில் டெல்லியில் இருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் ராஜஸ்தானில் உள்ள பிக்கானர் [Bikaner] பகுதியில் திருடுபோன அந்த ஸ்கார்பியோ கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அந்த காரின் பின்புற கண்டாடியில் காகிதங்கள் ஒட்டப்பட்ட நிலையில் இருந்தன. அதில், இந்த கார் டெல்லியின் பாலாம் காலனியில் திருடப்பட்டது, மன்னிக்கவும் என்ற வாசகத்துடன் அந்த காரின் நம்பர் எழுதப்பட்டிருந்தது. இது காரை மீண்டும் உரிமையாளரிடம் சிரமமின்றி ஒப்படைக்க திருடன் எழுதி வைத்த தகவல். மற்றொரு காகிதத்தில் நான் இந்தியாவை நேசிக்கிறேன் [I LOVE INDIA] என்று  எழுதப்பட்டு மற்றொன்றில் இந்த கார் டெல்லியில் திருடப்பட்டது, உடனே போலீசுக்குச் சொல்லுங்கள், அவசரம் என்று எழுதப்பட்டுள்ளது.

     

    ஜெய்ப்பூர் பிக்கானர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு சாலையோர உணவகத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இந்த காரை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்  போலீசுக்கு புகார் அளித்ததன் மூலம் கார் மீட்கப்பட்டுள்ளது. இந்த கார் வேறு ஏதேனும் குற்றச்செயல்களுக்காக திருடப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
    • திருப்பதியில் பதுங்கி இருந்த கணேஷ் நாயக்கை போலீசார் கைது செய்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஜல் பல்லி மஞ்சு டவுன்ஷிப் பகுதியில் நடிகர் மோகன்பாபு வசித்து வருகிறார். கடந்த 22-ம் தேதி ரூ.10 லட்சத்தை லாக்கரில் வைத்திருந்தார். மறுநாள் பார்த்தபோது பணம் திருடு போனது.

    இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மோகன் பாபுவிடம் பணிபுரியும் உதவியாளர் கணேஷ் நாயக் என்பவர் பணத்தை திருடியது தெரியவந்தது.

    திருப்பதியில் பதுங்கி இருந்த கணேஷ் நாயக்கை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.7.36 லட்சம் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் ரூ.2 லட்சத்திற்கு நவீன செல்போன் வாங்கியது தெரியவந்தது. அந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

    • அவரை தேடிக்கொண்டு பெண்ணின் கணவனும் அந்த கிராமத்துக்குள் வந்துள்ளார்.
    • பெண்ணின் கட்டை அவிழ்த்து விடுவதற்கு முன் அவரிடம் சிலர் அத்துமீறியதாவும் கூறபடுகிறது.

    உத்தரப் பிரதேசத்தில் திருட வந்ததாக கூறி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது கணவனையும் மரத்தில் கட்டி வைத்து அடித்து பழுக்க காய்ச்சிய கம்பியால் சூடு போட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது. உ.பியில் தியோரியா [Deoria] மாவட்டத்தில் சுரவுலி [Surouli] பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி மன நலம் பாதிக்கபட்ட நடுத்தர வயது பெண் உலவியுள்ளார்.

    சுரவுலியில் மற்றொரு பகுதியை சேர்ந்த அந்த பெண் வழிதவறி அங்கு வந்ததாக தெரிகிறது. எனவே அவரை தேடிக்கொண்டு பெண்ணின் கணவனும் அந்த கிராமத்துக்குள் வந்துள்ளார். இவர்கள் இருவரையும் திருட வந்தவர்கள் என சந்தேகித்த கிராம மக்கள் இருவரையும் மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    மேலும் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் அந்த பெண்ணின் கால்களில் சூடு வைத்து அதன்பின் அவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர். பெண்ணின் கட்டை அவிழ்த்து விடுவதற்கு முன் அவரிடம் சிலர் அத்துமீறியதாவும் தெரிகிறது. அவர்களை கிராமத்தினர் அடித்து சூடுவைத்து சித்ரவதை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    • இரும்பு பேரிகார்டை சேதப்படுத்தி திருடி செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
    • பேரிகார்டு திருட்டு சம்பவம் குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் நேதாஜி பாரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புலியூர் பகுதியில் தர்மபுரி-திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது.

    இந்த ஏரியின் வளைவில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாலும் வாகன ஓட்டிகள் நேரடியாக தண்ணீரில் விழுந்து விபத்து ஏற்படும் நிலையில் இருந்தது. அதனை தடுக்கும் பொருட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இரும்பாலான பேரிகார்டு அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் அந்த பேரிகார்டை மர்ம நபர்கள் சேதப்படுத்தி அதனை திருடிச் சென்றனர். இந்த காட்சி அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

    தற்போது மர்மகும்பல் சரக்கு வாகனத்தில் வந்து இரும்பு பேரிகார்டை சேதப்படுத்தி திருடி செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

    பேரிகார்டு திருட்டு சம்பவம் குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் நேதாஜி பாரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அடகுக்கடையில் இருந்து நகைகளை மீட்டுக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும்போது பேரனுக்கு வடா பாவ் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
    • தங்க நகைகளை ஒருவன் திருடிக்கொண்டு ஓடும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புனேவில் பேரனுக்கு வடா பாவ் வாங்க வண்டியை நிறுத்திய வயதான தம்பதியிடம் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ரூ. 4.95 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை ஒருவன் திருடிக்கொண்டு ஓடும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில், தசரத் பாபுலால் -ஜெயஸ்ரீ என்ற மூத்த தம்பதியினர் அடகுக்கடையில் இருந்து ரூ.4.95 மதிப்புடைய தங்களது தங்க நகைகளை மீட்டுக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும்போது பேரனுக்கு வடா பாவ் வாங்குவதற்காக புனே -சோலாப்பூர் சாலையில் உள்ள கடை ஒன்றின் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

    பாபுலால் வடா பாவ் வாங்கச் சென்ற நிலையில் வாகனத்தின் அருகே நின்றுகொண்டிருந்த ஜெயஸ்ரீ சற்று அசந்த நேரம் பார்த்து அவ்வழியாக வந்த ஒருவன் வண்டியின் முன்புறம் இருந்த நகைகள் அடங்கிய பையை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தான். ஜெயஸ்ரீ அவனை துரத்தியும் பிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி தொலைக்காட்சி காட்சிகளின் அடிப்படையில் திருடனைத் தேடி வருகின்றனர். 

    • சம்பவம் கடந்த 29-ந்தேதி நடந்ததாக கூறப்படுகிறது.
    • இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குஜராத்தில் திருடியதற்காக வாலிபர் ஒருவரை காரின் முன்பக்க பகுதியில் கட்டிவைத்து தாக்குவது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    கோத்ரா தாலுகா கன்கு தம்பலா பகுதியில் உள்ள ஷாப்பிங் சென்டரில் வாலிபர் ஒருவர் பொருட்களை திருட முயன்றுள்ளார். இதுகுறித்து அறிந்த கடை உரிமையாளர் மற்றும் உடன் இருந்தவர்கள் அந்த வாலிபரை பிடித்து அடித்து காரின் பானெட்டில் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தை அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர். இச்சம்பவம் கடந்த 29-ந்தேதி நடந்ததாக கூறப்படுகிறது. போலீசாரின் கவனத்திற்கு சென்ற வீடியோ குறித்து விசாரணை நடத்தி இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குற்றவாளிகளை ஒப்படைக்காமல், சட்டத்தை கையில் எடுத்து கொடூரமான முறையை கையாளும் சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருவதால் இதுகுறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

    • வீடியோ 6 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் விருப்பத்தை பெற்றுள்ளது.
    • வீடியோவை பார்த்த பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ரெயில்களில் உள்ள கழிப்பறையில் வாளி திருட்டை தடுக்க அது இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கும். அதேபோன்று ஒரு ஹோட்டலில் சோப்பை யாரும் எடுத்து போகாமல் இருக்க அதன் நடுவே ஒரு துளையிடப்பட்டு உள்ளது.

    பின்னர் கயிற்றால் கட்டப்பட்டு அங்கு தொங்க விடப்பட்டு இருக்கிறது. இதனை பார்த்த வாடிக்கையாளர் ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.

    இந்த வீடியோ 6 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் விருப்பத்தை பெற்றுள்ளது. மேலும் சிலர் இந்த தொழில்நுட்பம் இந்தியாவை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கிண்டலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • செல்போன் காணாமல் போன சம்பவம் குறித்து விடுதி காப்பாளரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
    • மாணவர் விடுதியில் மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தை ஒட்டி ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி செயல்பட்டு வருகிறது.

    இந்த விடுதி வளாகத்தில் ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்கள், கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு என தனித்தனி கட்டிடங்களில் விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த 2 விடுதிகளிலும் சேர்த்து சுமார் 220 மாணவர்கள் தங்கி இருந்து நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று விடுமுறையையொட்டி விடுதியில் உள்ள மாணவர்கள் தங்களது செல்போன்கைளை பயன்படுத்தி வந்துள்ளனர்.

    பின்னர் இரவில் செல்போன்களை வழக்கமாக சார்ஜ் செய்யும் இடங்களில் வைத்துவிட்டு தூங்கி உள்ளனர். மேலும் ஒரு சிலர் தங்களது தலை பகுதிக்கு அருகே செல்போன்களை வைத்து தூங்கி உள்ளனர்.

    நள்ளிரவில் மாணவர்கள் விடுதியில் உள்ள பின்பக்க காம்பவுண்டு சுவரை தாண்டி விடுதிக்குள் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். அந்த நபர்கள் 2 விடுதி கட்டிடங்களிலும் இருந்து மாணவர்களின் 23 செல்போன்கள் மற்றும் அவர்களது சில சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

    இன்று காலை மாணவர்கள் எழுந்து செல்போனை தேடிய போது அவை காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து செல்போன் காணாமல் போன சம்பவம் குறித்து விடுதி காப்பாளரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார், விடுதியின் உட்புறமும், வெளிபுறமும் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதுகுறித்து விடுதி பொறுப்பாளரான நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மூலமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    உள்ளூர் மற்றும் வெளியூர் பஸ்கள் வந்து செல்வதால் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் புதிய பஸ் நிலையத்தின் அருகே உள்ள மாணவர் விடுதியில் மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×