என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 96460
நீங்கள் தேடியது "கடத்தல்"
கல்லூரி மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அய்யம்பட்டி பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது46). இவரது மகள் சித்ரா லட்சுமி (21). இவர் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த சித்ரா லட்சுமி திடீரென மாயமா னார். இதனால் பதட்டமடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் பலனில்லை. இதுகுறித்தும் முத்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.அதில், சம்பவத்தன்று வீட்டில் இருந்த எனது மகளை இந்த கிராமத்தைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் கடத்திச் சென்றதாக தெரிகிறது.
எனவே அவரிடம் இருந்து மகளை மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியையும், அவரை கடத்திச் சென்ற வாலிபரையும் தேடி வருகின்றனர்.
பரமத்திவேலூர் அருகே சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தலில் ஈடுப்பட்ட 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார்கள்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் தண்ணீர்பந்தல்மேடு அருகே வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தண்ணீர்பந்தல் மேட்டிலிருந்து பரமத்தி நோக்கி அவ்வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை போலீசார் நிறுத்தி வாகன சோதனை செய்ய முயன்றனர். அப்போது சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் அதில் வந்த மற்றொருவரும் சரக்கு ஆட்டோவை நிறுத்தி சாவியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து போலீசார் சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் 40 மணல் மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டவிரோதமாக அனுமதியின்றி காவிரி ஆற்றில் இருந்து கடத்தி வந்த மணல், சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து வேலூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
பின்னர் வழக்குப்பதிவு செய்து, மணல் திருட்டில் ஈடுபட்டு தப்பி ஓடிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
ஒட்டகத்தில் மணல் கடத்தியவர் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை
லாரி, டிப்பர், டிராக்டர் மூலம் மணல் கொள்ளை கேள்விபட்டிருப்போம் ஆனால் இங்கு வித்தியா சமாக ஒட்டகத்தை வரவழைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் ஒட்டகத்தை மாட்டுவண்டியில் கட்டி மணல் கடத்தி போலீசார் வந்தவரிடம் பறிமுதல் செய்துள்ளனர்.
மறவமங்கலம் அருகே பல்லாக்கோட்டை சரவணன் (வயது 52). இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்தார். கடந்த 2 மாதத்திற்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது ராஜஸ்தானில் இருந்து ஆண் ஒட்டகம் ஒன்றை வாங்கி வந்து வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் மறவ மங்கலம் பஸ் நிலையத்தில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது மாட்டு வண்டி யில் ஒட்டகத்தை கட்டி நாட்டாறு ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததை பார்த்தனர்.
மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஒட்டகத்தை பறிமுதல் செய்த மறவமங்கலம் புறக்காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
சேலம் சின்னக்கடை வீதியில் மளிகைக் கடைக்காரர் மகன் கடத்தலில் சி.சி.டி.வி. காமிரா பதிவை வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மூலாராம் .இவர் சேலம் சின்னக்கடை வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெயராம் (வயது 21). இவர் நேற்று கடையில் இருந்தபோது 6 பேர் கும்பல் இவரை காரில் தூக்கிப் போட்டு கடத்தி சென்றது.
இந்த சம்பவம் குறித்து சேலம் டவுன் மற்றும் அம்மாபேட்டை போலீசார், ஜயராமை கடத்திய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப்பொருட்கள் கடத்தல் பிரச்சனையில் ஜெயராம் கடத்தப்பட்டதும், அவரை மிரட்டி பணம் பறிப்பதற்காக மர்ம கும்பல் ஜெயராமை கடத்தி சென்றுள்ளதும் தெரியவந்தது.
இதற்கிடையே ஜெயராமை கடத்திச் சென்ற கும்பல் உருவம் கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ பதிவை வைத்து தனிப்படை போலீசார் தீவிரமாக அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் தர்மபுரி, ஓசூர் பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X