என் மலர்
நீங்கள் தேடியது "tag 96649"
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த வைரவன்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மகன் பெரியகருப்பன் (வயது 20) தேங்காய் பறிக்கும் தொழிலாளி.
இவரும், வைரவன்பட்டியை சேர்ந்த தனசேகரன் என்பவர் மனைவி முத்துச்செல்வியும் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் பெரியகருப்பனும் தனசேகரன் மனைவியும் நெருங்கி பழகி வந்ததாகவும், அவர்களுக்கிடையே தகாத உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெரியகருப்பனுடன் தனது மனைவி தனியாக பேசி கொண்டிருப்பதை தனசேகரன் பார்த்து விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர் தனது நண்பர்கள் சிலரிடம் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை தனசேகரன் உள்ளிட்ட சிலர் பெரியகருப்பனை சந்தித்து அவருடன் தகராறு செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தனசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் பெரியகருப்பனை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த பெரியகருப்பனை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி பெரியகருப்பனின் தந்தை மணிகண்டன் கொட்டாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கொலை செய்த தனசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் கோவை ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட்டில் தங்கி பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வினோத்குமாருக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான 27 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வினோத்குமார், அந்த பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றதும் அவரது வீட்டிற்கு சென்று இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து வந்தார்.
இந்த விவகாரம் அரசல், புரசலாக அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. இதை கேட்டதும் அதிர்ச்சியான அவர், தனது மனைவியை கண்டித்தார். மேலும் அந்த வாலிபருடனான பழக்கத்தை கைவிடுமாறு கூறி அறிவுரைகளை வழங்கினார்.
ஆனால் அதனை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் தங்களை பிரித்து விடுவார்கள் என்று நினைத்த அந்த பெண் சம்பவத்தன்று வினோத்குமாரை வீட்டிற்கு அழைத்தார்.
அப்போது இளம்பெண், நம்மை இவர்கள் சேர்ந்து வாழவிடமாட்டார்கள். நாம் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்தனர்.
அதன்படி 2 பேரும் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தனர். சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கி விழுந்தனர். இதனை அக்கம்பக்கத்தினர் பார்த்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடியினரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் உயிரிழந்தார்.
அவரது கள்ளக்காதலிக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதையடுத்து போலீசார் வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் 40 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 22 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். கணவர் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் இளம்பெண் மாணவரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் உல்லாசமாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது.
இதனால் அவர் தனது மனைவியை கண்டித்தார். மேலும் 19 வயது கல்லூரி மாணவருடனான கள்ளக்காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினார். ஆனால் இளம்பெண் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார்.இதன்காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமாகி விட்டார். இதனையடுத்து அவரை அவரது கணவர் அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது இளம்பெண் 19 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. அவரது செல்போ னுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து பெண்ணின் கணவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் 19 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த 40 வயது பெண்ணை தேடி வருகிறார்கள்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள தாவுகாடு பகுதியைச் சேர்ந்தவர் கோகுலராஜ் (வயது24). இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை உள்ளது.
கோகுலராஜின் பெரி யப்பா சுப்பிரமணி மகன் கோபாலகிருஷ்ணன் (24). இவர் அப்பகுதியில் பனை மட்டையில் இருந்து தும்பு உற்பத்தி செய்யும் தொழில் செய்து வந்தார். இவரிடம் கோகுலராஜ் வேலை செய்து வந்தார்.
கோபாலகிருஷ்ண னுக்கும், கோகுலராஜின் மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கள்ளக்காதலர்கள் இருவரும் ஊரைவிட்டு வெளியேறி வெளியூர் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த கோகுலராஜ் மற்றும் குடும்பத்தினர் 2 பேரையும் தேடி கண்டுபிடித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இருவரையும் கண்டித்த குடும்பத்தினர் மீண்டும் கோகுல ராஜூடன் முத்துலட்சுமியை சேர்த்து வைத்தனர். இதனால் கோபாலகிருஷ்ணன் மீது கோகுலராஜ் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
நேற்று புதுவலசை பகுதியில் கோபால கிருஷ்ணன் சென்று கொண்டிருந்தார். அப்போது கோகுலராஜ் மற்றும் அவரது உறவினரான விஜயகுமார் உள்பட சிலர் வழிமறித்து கோபாலகிருஷ்ணனை அரிவாளால் வெட்டினார்கள்.
இதைப்பார்த்த அவரது சகோதரி இசக்கியம்மாள் (32) தடுக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த கும்பல் வெட்டியது. கொலை கும்பல் பிடியில் இருந்து கோபாலகிருஷ்ணன் தப்ப முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த தேவிபட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அரிவாள் வெட்டில் காயமடைந்த இசக்கியம்மாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகி விட்டனர். அந்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தேவி பட்டினம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சாய்பாபா காலனி சபாபதி வீதியைச் சேர்ந்தவர் அஸ்வதி (20). பி.கம். பட்டதாரி. திருமணம் ஆகவில்லை. இவரது தந்தை இறந்து விட்டார். தற்போது தாயாருடன் வசித்து வந்தார்.
அஸ்வதி தடாகம் ரோட்டில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு பணியாற்றிய திருமணம் ஆன பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கும் அவர் சென்று வந்தார்.
அப்போது அந்த பெண்ணின் கணவருடன் அஸ்வதிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அவர்கள் கள்ளக்காதலர்களாகினர். இந்த விவகாரம் அந்த பெண்ணுக்கு தெரிந்து கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த பெண் கணவரை பிரிந்து சென்றார்.
அதன்பிறகு அஸ்வதிக்கும், பெண்ணின் கணவருக்குமான நெருக்கம் அதிகரித்தது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.
இந்தநிலையில் அஸ்வதி தனது வீட்டில் பிணமாக கிடந்தார். கழுத்தில் துணியால் இறுக்கப்பட்ட தடயங்கள் இருந்தன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி அஸ்வதியின் உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அஸ்வதியுடன் தொடர்பில் இருந்த நபர் யார்? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். செல்போன் மூலம் அவரை போலீசார் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. செல்போன் டவரை சோதனை செய்தபோது அந்த நபர் ஊட்டியில் இருப்பது தெரியவந்தது.
இதனால் அஸ்வதியுடன் ஏற்பட்ட மோதலில் அவரை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு அவர் தப்பிச் சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரை பிடித்தால் தான் அஸ்வதி எப்படி இறந்தார்? எதற்காக கொல்லப்பட்டார்? என்ற விவரம் தெரியவரும்.
எனவே அந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.