search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    தொடர்பை கண்டித்ததால் ஆத்திரம்- வாலிபரை கத்தியால் குத்திய தாய்-2 மகள்கள் கைது

    குள்ளனம்பட்டி அருகே வாலிபரை கத்தியால் குத்திய தாய் மற்றும் 2 மகள்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள குடைபாறைப்பட்டியை சேர்ந்த குமரேசன் மனைவி மனிஷா(25). குமரேசனை கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தது. அதன்பிறகு மனிஷா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். அப்போது குடைபாறைப்பட்டியை சேர்ந்த சர்தார்(25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இதனை மனிஷாவின் உறவினரான சூர்யா என்பவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சர்தார் தனது நண்பர்களான ரியாஸ், யோகராஜ், கவுதம் ஆகியோருடன் சேர்ந்து சூர்யாவை சரமாரியாக கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த சூர்யா திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் 7 பேர் மீது வழக்குபதிவு செய்து சர்தார், ரியாஸ், யோகராஜ், கவுதம் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த மனிஷா உள்பட 3 பேரை தேடி வந்தனர்.

    ஆனால் அவர்கள் எங்கு தங்கி உள்ளனர் என போலீசாரால் கண்டுபிடிக்க சவாலாக இருந்தது. ஏ.எஸ்.பி அருண்கபிலன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

    அப்போது அவர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளேயே தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்கள் பயன்படுத்திய செல்போன் மூலம் இது உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து வீட்டை திறந்து சோதனை செய்ய திண்டுக்கல் கோர்ட்டில் அனுமதி கடிதம் பெறப்பட்டது.

    இதனைதொடர்ந்து மகளிர் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் விக்டோரியா லூர்துமேரி, திலகா, வினோதா ஆகியோர் கொண்ட மகளிர் போலீசார் வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது வீட்டினுள் பதுங்கியிருந்த மனிஷா மற்றும் சீமாதேவியை ஊர் பொதுமக்கள் உதவியுடன் வெளியே கொண்டு வந்தனர். இவர்களை வெளியே அழைத்துவருவதை பார்த்த அவர்களது தாய் தமிழரசி மற்றொரு வீட்டில் இருந்து ஓடி வந்தார். இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×