என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேரோட்டம்"

    • தங்கத்தேரை ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
    • 10 நாட்கள் சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. கோவில் உள்ளே அதிகாலை 1.30 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முதலில் சொர்க்கவாசல் வழியாக சென்று வி.ஐ.பி. பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு காலை 6 மணியளவில் இலவச தரிசன பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    அதைத் தொடர்ந்து காலை தங்கத்தேரோட்டம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தங்கத்தேரை தேவஸ்தான பெண் ஊழியர்கள், ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    பின்னர் திருமலையில் உள்ள அன்னமயபவனில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வைகுண்ட துவார தரிசனம் செய்ய அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வைகுண்ட துவார தரிசனத்துக்காக 10 நாட்கள் சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

    ஸ்ரீவாணி டோக்கன்கள் நேரில் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசன பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் 9 இடங்களில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    இலவச தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் திருமலையை அடைந்து, அங்குள்ள தரிசன வரிசைக்கு சென்று விட வேண்டும். பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    பக்தர்கள் சிரமமின்றி வைகுண்டம் துவார தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகளும், ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களும் சேவை செய்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினா்ா.

    • அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவிலில் ஆத்மநாத சுவாமி கோவில் திருவாதிரை தேரோட்டம் நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவிலில் மிக–வும் பழமை மற்றும் சிறப்பு வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான ஸ்ரீ ஆத்மநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு–தோறும் மார்கழி மாத திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக நடை–பெறுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டு மார்கழி மாத திரு–வாதிரை திருவிழா கடந்த கடந்த (டிசம்பர்) மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் மாணிக்கவாசகர் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று திருவாதிரை திருத் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. விழாவினையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத் தேரில் மாணிக்கவா–சகரை எழுந்தருள செய்த–னர். தேர் சக்கரத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் தேங்காய் உடைத்து தேர் வடத்தை தொட்டு தொடங்கி வைத்த–னர். இதையடுத்து ஆவுடை–யார்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிரா–மங்களை சேர்ந்த பல்லாயி–ரக்கணக்கான பக்தர்கள், ஆத்மநாதா, மாணிக்க–வாசகா என்று பக்தி கோஷம் எழுப்பி, தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் 4 ரத வீதிக–ளிலும் வலம் வந்து பின்பு தேரடியை அடைந்தது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ் குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீ–சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • 5-ம் திருநாளில் கருட தரிசனம் விமரிசையாக நடந்தது.
    • மார்கழி திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. 3-ம் திருவிழா நாளில் இரவு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிர மணிய சுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் சுசீந்திரம் கோவிலுக்கு வந்ததும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

    5-ம் திருநாளில் கருட தரிசனம் விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 7-ம் திருநாளான நேற்று இரவு கைலாச பர்வதம் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. இன்று காலை சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா நடந்தது.

    9-ம் திருவிழா நாளான நாளை (5-ந் தேதி) தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர், பிட்சாடனராக திருவீதி உலா செல்கிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் மற்றும் விநாயகர் தேர்கள் இழுக்கப் படுகின்றன.

    முன்னதாக 3 சாமிகளும் சிறப்பு அலங்காரத்துடன் தேர்களுக்கு எழுந்தருளு கின்றனர்.தொடர்ந்து தீபா ராதனை நடைபெற்றதும் தேர்கள் இழுக்கப்படு கின்றன. மாலையில் மண்டகப்படிக்கு தங்க பல்லக்கில் சுவாமி எழுந்தரு ளுகிறார்.

    இரவு 12 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிர மணிய சுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் விடைபெறும் சப்தாவர்ண நிகழ்ச்சி நடக்கிறது. 10-ம் நாள் நிறைவு விழாவில் காலை 10 மணிக்கு ஆரூத்ரா தரிசனம், அஷ்டாபிஷேகம் நடக்கிறது. மாலையில் நடராஜர் வீதி உலா, இரவில் ஆராட்டு போன்றவை நடக்கிறது.

    • இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சி நடக்கிறது.
    • நாளை அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், திருவாதிரை களி திருவிழாவும் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 10 நாட்கள் பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டுக்கான மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இசை, பக்தி மெல்லிசை, சொல்லரங்கம், பரத நாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 3-ம் திருவிழா அன்று மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும், 5-ம் திருவிழா அன்று கருட தரிசன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    7-ம் திருவிழாவான நேற்று முன்தினம் கைலாசப்பர்வத வாகன நிகழ்ச்சியும், 8-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா வந்த போது பேரம்பலம் திருக்கோவில் முன்பு நடராஜ பெருமான் ஆனந்தத் திருநடனம் ஆடினார். இதனைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரத்தில் கூடினர்.

    மார்கழி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 9-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று கங்காளநாதர் பிட்சாடனராக வீதி உலாவரும் நிகழ்ச்சியும், சுவாமியும் அம்பாளும், அறம் வளர்த்த நாயகியும், விநாயகரும் கோவிலில் இருந்து தட்டு வாகனங்களில் புறப்பட்டு தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    பெரிய தேரான சுவாமி தேரில் சுவாமியும் அம்பாளும், அம்மன் தேரில் அறம்வளர்த்த நாயகி அம்மனும், பிள்ளையார் தேரில் விநாயகரும் எழுந்தருளுவார்கள்.

    அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவார்கள். நான்கு ரதி வீதிகள் வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக உலா வரும் தேர் பின்பு வெடி முழக்கத்துடன் நிலைக்கு வந்து சேரும். அதன் பின்னர் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. தேரோட்டத்தை காண குமரி மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் பக்தர்கள் சுசீந்திரத்திற்கு வருவார்கள்.

    இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், திருவாதிரை களி திருவிழாவும் நடைபெறுகிறது.

    விழாவையொட்டி குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபடுகிறார்கள். மேலும் சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் துப்புரவு பணிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுசீந்திரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்துள்ளனர்.

    • தங்கக் காசினால் சொர்ணாபிஷேகம் நடைபெறும்.
    • நாளை மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கவுள்ளது.

    உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த டிச.28-ந்தேதியன்று உற்சவ ஆச்சாரியார் நடராஜ குஞ்சிதபாத தீட்சிதரால் கொடியேற்றி துவக்கி வைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தினமும் காலையும், மாலையும் சுவாமி விதியுலா மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. இதன் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடைற்றது. இதனை ஒட்டி இன்று அதிகாலை ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சித்சபையில் இருந்து புறப்பட்டு தேர்நிலையான கீழரத வீதி வந்தடைந்தது.

    சுமார் 8 மணி அளவில் தேர் நிலையிலிருந்து புறப்பட்ட சுவாமிகள் ஸ்ரீ நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர், முருகர், விநாயகர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    கீழரத வீதியிலிருந்து புறப்பட்ட இத்தேர் முறையே தெற்குரத வீதி, மேலரத வீதி, வடக்குரத வீதி வழியாக வலம் வரும்.

    கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம், தேர்த் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு நடை பெறுவதால் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் விண்ணதிரும் கோஷங்களை எழுப்பிய வண்ணம் பங்கேற்று திருத்தேரினை வடம் பிடித்து மாட வீதிகளில் இழுத்து வந்தனர்.

    முன்னதாக தேரோடும் வீதிகளில் திரளான பெண்கள் சாலைகளை சுத்தம் செய்து கோலமிடுவதும், சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பக்தி பதிகங்களை, மேளதாளம் முழங்க பாடி வருவதும் ஒரு அற்புதமான நிகழ்வாக அமைந்திருந்தது.

    விழாவிற்கு வரும் பக்தர்களின் நலனுக்காக சிதம்பரம் நகராட்சி சார்பில் சேர்மன் செந்தில்குமார் உத்தரவின் பெயரில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.

    மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சக்தி கணேஷ் மேற்பார்வையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், துணை போலீஸ் சுப்பிரண்டு ரகுபதி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து இன்று மாலை சுமார் 6 மணி அளவில் தேர் நிலையான கீழரதவீதி வந்தடையும். அங்கு ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சிறப்பு தீபாராதனை செய்யப்படும். தொடர்ந்து தேர் நிலையிலிருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இரவு முழுவதும் சிறப்பு தீபாரதனை, அர்ச்சனைகள் நடக்கவுள்ள நிலையில், நாளை அதிகாலை இரண்டு மணி முதல் ஆறு மணி வரை ராஜசபை என்கிற ஆயிரம் கால் முன் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் ஆராதனை செய்யப்படும். தொடர்ந்து தங்கக் காசினால் சொர்ணாபிஷேகம் நடைபெறும். பின்னர் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு லட்சார்ச்சனை நடைபெறும், நாளை மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கவுள்ளது.

    இதைத் தொடர்ந்து நாளை மாலை சுமார் 4 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து புறப்படும் ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகள் முன் மண்டபம் நடனப்பந்தலுக்கு கொண்டு வந்து முன்னுக்கு பின்னாக 3 முறை நடனடமாடிய படி வலம் வந்து பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம் அளிப்பார். அதைத் தொடர்ந்து ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகளின் சித்சபை ரகசிய பிரவேசம் நடை பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சி தர்கள் செய்து வருகின்றனர்.

    • தேரின் மேல் வானத்தில் 3 கருடர்கள் வட்டமிட்டு பறந்தன.
    • அம்மன் தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3-ம் திருவிழா அன்று மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும் 5-ம் திருவிழா அன்று கருட தரிசன நிகழ்ச்சியும் நடந்தது.

    விழாவையொட்டி தினமும் காலை மாலை சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது. 9-ம் திருவிழாவான இன்று காலையில் கங்காளநாதர் பிட்சாடனராக திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் தட்டு வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் அறம் வளர்த்தநாயகியும் விநாயகரும் எடுத்து வரப்பட்டனர்.

    பின்னர் பெரிய தேரான சுவாமி தேரில் சுவாமியும் அம்பாளும் அம்மன் தேரில் அறம் வளர்த்த நாயகி அம்மனும் பிள்ளையார் தேரில் விநாயகரும் எழுந்தருளினார்கள். இதைத் தொடர்ந்து தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து தேர் சக்கரத்தில் தேங்காய் உடைக்கப்பட்டது. பின்னர் 3 தேர்களும் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. 'ஓம் காளி ஜெய் காளி' என்ற பக்தி கோசத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். அப்போது தேரின் மேல் வானத்தில் 3 கருடர்கள் வட்டமிட்டு பறந்தன.

    விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர் கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், சுவாமி பத்மேந்திரா, இணை ஆணையர் ஞான சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அம்மன் தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். 3 தேர்களும் 4 ரத வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்டது. தேரோட்ட விழாவில் புதுமணத் தம்பதியினர் பலரும் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருந்தனர். 4 ரத வீதிகளிலும் பக்தர்கள் தலையாகவே காட்சி அளித்தது. இதையடுத்து கோவில் 4 ரத வீதிகளிலும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. சாலை ஓரங்களில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு தேரேட்டத்தை காண வந்திருந்தனர் சுசீந்திரம் புறவழிச்சாலையிலும் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. சுசீந்திரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு குளிர்பானங்கள், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர் திருவிழாவையொட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.

    இன்று இரவு 12 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சாமி, வேளிமலை குமார சுவாமி ஆகியோர் விடை பெறும் சப்த வர்ண நிகழ்ச்சி நடக்கிறது.

    10-ம் திருவிழாவான நாளை 6-ந் தேதி காலை 10 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. மாலையில் நடராஜர் வீதி உலாவும் இரவில் ஆராட்டும் நடக்கிறது.

    • 13-ந்தேதி சூர்ணாபிஷேகம் நடைபெறுகிறது.
    • வருகிற 15-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தை மாதம் 1-ந் தேதி பொங்கலன்று நடைபெற உள்ள தைத்தேரோட்டத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

    இந்த ஆண்டு தேரோட்டம் வருகிற 15-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று முன் தினம் தேர் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சாந்தா, கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி மற்றும் உபயதாரர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை (சனிக்கிழமை) கொடியேற்றமும், 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கருட வாகன வீதிஉலாவும், 13-ந் தேதி சூர்ணாபிஷேகம் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளைக் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • இளையத்தங்குடியில் ஆருத்ரா தரிசன தேரோட்டம் நடந்தது.
    • விழாவிற்கான பாதுகாப்பு பணியில் திருப்பத்தூர் மற்றும் கீழசேவல் பட்டி போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கீழசேவல்பட்டி அருகே உள்ள இளையத்தகுடியில் கைலாசநாதர் நித்திய கல்யாணி சமேத கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன தேர்த்திருவிழா இன்று நடந்தது.

    முன்னதாக கைலாச நாதர் நாதருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அதனை தொடர்ந்து நடராஜர் தேரிலும் சிவகாமி அம்பாள், சுந்தரர் ஆகியோர் சப்பரத்தில் எழுந்தருளினர். அதன்பின் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கினர். இளையத் தங்குடியில் உள்ள முக்கிய வீதிகளில் தேர் வலம் வந்தது.

    தேர் திருவிழாவை காண இளையதங்குடி மற்றும் அதனை சுற்றிஉள்ள 28 கிராமத்தைச் சேர்ந்த நாட்டார்கள், நகரத்தார்கள், ஊர் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி மகிழ்ச்சியோடு தேரை வலம் பிடித்து இழுத்து வந்து சாமி தரிசனம் பெற்றனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளையாத் தங்குடி கைலாசநாதர் கோவில் தேவஸ்தானம் நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவிற்கான பாதுகாப்பு பணியில் திருப்பத்தூர் மற்றும் கீழசேவல் பட்டி போலீசார் ஈடுபடுத்தப் பட்டனர்.

    கடந்த எட்டாம் நூற்றாண்டில் இருந்து இக்கோவிலில் தேர் திருவிழா தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இக்கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
    • பெருமாள் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாரங்கபாணி பெருமாள் கோவில் உள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில், 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்ய தேசமாகும். இங்கு பெருமாள் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    ஆழ்வார்களால் பாடல் பெற்றதும், நாலாயிர திவ்வியப்பிரபந்தம் எனும் தமிழ்ப்பாடல் தொகுப்பு கிடைக்க பெற்றதுமான தலமாக இக்கோவில் கருதப்படுகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் தினத்தில் தேரோட்டம் நடப்பது வழக்கம்.

    அதன்படி கடந்த 7-ந் தேதி தைப்பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் தைப்பொங்கலை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத சாரங்கபாணி தேரில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா வருணா தொகுதிக்கு உட்பட்ட சுத்தூர் மடத்தின் வளாகத்தில் ஆதியோகி சிவராத்திரீஸ்வரர் மற்றும் மாதேஸ்வரர் சன்னதிகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் சிவராத்திரீஸ்வரர் மற்றும் மாதேஸ்வரருக்கு சுத்தூர் மடம் சார்பில் விழா நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 3 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.

    இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் சிவராத்திரீஸ்வரர் மற்றும் மாதேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அதையடுத்து சுத்தூர் மடத்தின் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமி தலைமையில், மைசூரு மன்னர் யதுவீர், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் வேண்டுதல் வைத்திருந்த பக்தர்கள் வாழைப்பழத்தில் மரிக்கொழுந்து, நவதானியங்கள், நாணயங்கள் ஆகியவற்றை திணித்து தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். வேண்டுதல் இல்லாதவர்கள் இவ்வாறு வீசினர்.

    அப்படி செய்தால் வாழ்வில் புனிதம் அடைவார்கள் என்று நம்பப்படுகிறது. அதையடுத்து கோவிலில் நடந்த நிகழ்ச்சிகளை முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவும், மன்னர் யதுவீரும் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். அதையடுத்து மாதேஸ்வரர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். தேரோட்டம் மங்கள வாத்தியங்கள் முழங்க ஆடல், பாடலுடன், பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே கோலாகலமாக நடந்தது.

    தேரோட்ட முடிவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தேரோட்டத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • பரமத்தி வேலூர் தாலுக்கா, பாண்டமங்கலத்தில் உள்ள அலமேலு மங்கா, கோதாநாயகி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் திருத்தேர் பெருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
    • திருத்தேர் பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் சாமி கோவில் செயலர் அலுவலர், தக்கார், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா, பாண்டமங்கலத்தில் உள்ள அலமேலு மங்கா, கோதாநாயகி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் திருத்தேர் பெருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அங்குரார்ப் பணமும், திருமுளைபாலிகை இடுதலும் நடைபெற்றது. நேற்று நண்பகல் பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் டாக்டர் சோமசேகர், துணைத்தலைவர் பெருமாள் என்கிற முருகவேல் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இரவு அன்ன வாகனத்தில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருத்தேர் பெருவிழாவை முன்னிட்டு இன்று முதல் வரும் 27-ந் தேதி வரை தினந்தோறும் காலை பல்லக்கு உற்சவமும், இரவு சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், பெரிய திருவடி கருட சேவை, சேஷ வாகனம், யானை வாகனம், திருக்கல்யாண உற்சவம், புஷ்ப விமான புறப்பாடு மற்றும் குதிரை வாகனங்களில் சாமி முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    வரும் 28-ந் தேதி அதிகாலை சாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 29-ந் தேதி முதல் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி வரை தொடர்ந்து காலை பல்லக்கு உற்சவம், இரவு வராக புஷ்கரணியில் தீர்த்தவாரி, கெஜலட்சுமி வாகனம், வசந்த உற்சவம், புஷ்ப யாகம் மற்றும் படிச்சட்டத்தில் சுவாமி திருவீதி உலா புறப்பாடும் நடைபெறுகிறது.

    திருத்தேர் பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் சாமி கோவில் செயலர் அலுவலர், தக்கார், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    • பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • பத்ரகாளியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலுக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் தை மாதம் விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த தேர்த்திருவிழாவானது, நான்கு கோடி மகாஜனங்கள், மிராசுதாரர்கள், கட்டளைதாரர்களின் ஒத்துழைப்போடு பெரியாம்பட்டி, சிக்கம்பட்டி, பொத்தியாம்பட்டி, கருக்கப்பட்டி நாடார் சமுதாய கட்டளைதாரர்கள் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது, அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று முன்தினம் இரவு பூத வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது, இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி, தேரில் எழுந்தருளிய பத்ரகாளியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து தேர்நிலையம் அருகே பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது சுவாமிக்கு பூஜைகள் செய்து தீப ஆராதனை செய்து பம்பை மேளம், அதிர்வேட்டு முழங்க, மாடு ஆட்டம், ஒயிலாட்டத்துடன் இருபுறமும் குவிந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்டு இறுதியாக தேர் நிலைக்கு வந்தடைந்தது.

    இந்த விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×