என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 97927"

    அடிப்படை வசதிகளை செய்து தர கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே முடுவார்பட்டி கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு  கட்சி  மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிளை செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். 

    மாவட்ட செயற்குழு  உறுப்பினர் உமாமகேஸ்வ ரன், ஒன்றிய செயலாளர் ஆண்டிச்சாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    மாநில குழு உறுப்பினர் பொண்ணுத்தாய் சிறப்புரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிக பரப்பளவு கொண்ட முடுவார்பட்டி ஊராட்சியில் வடக்கு பகுதியில் ரேசன் கடை அமைக்க வேண்டும்,  தினசரி பழ மார்கெட்டில் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். 

    அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் நியமனம், குடிநீர் வசதி, நிழற்குடை மற்றும் சுற்றுச்சுவர் வசதி செய்து தர வேண்டும். பழுதடைந்த பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதுப்பித்து தர வேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் பிச்சை நன்றி கூறினார்.
    குளச்சலில் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
    கன்னியாகுமரி, ஜூன்.1-

    குளச்சல் நகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் கட்டணம், வீட்டு வரி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு குளச்சல் நகர கிளைகள் சார்பில் காமராஜர் பஸ் ஸ்டாண்டு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குளச்சல் கிளை செயலாளர் யூசுப் தலைமை தாங்கினார். 

    மாவட்ட முன்னாள் செயலாளர் முருகேசன், கிளை செயலாளர்கள் லெனின்குமார், தைபீக் அகமது, கேசவலால் மது, வட்டாரக்குழு உறுப்பினர் சசி, முன்னாள் கவுன்சிலர் குமரேசன், ஒன்றிய செயலாளர் புஷ்பதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் சாகுல் அமீது, பால் ஞானசேகரன், சுரேஷ், ஹரிக்குமார், மரிய வின்சென்ட், ஜோசப், ஜேம்ஸ், வெங்கடேஷ், வில்பிரட், செல்வராஜ், வப்புசன், கிரிஜா, கீதா, ஜெனோ, மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • ரெயில்கள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தனியார் மயமாக்கலை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன.

    ஈரோடு:

    கோவை-ஷீரடி விரைவு ரெயிலை தனியாருக்கு விடுவதை உடனடியாக கைவிட வேண்டும். நாடு முழுவதும் விரைவு ரெயில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    ராமாயண யாத்திரை என்ற பெயரில் டெல்லி-நேபால் ரெயிலை ஐ.ஆர்.சி.டி.சி-க்கு விற்றதை வாபஸ் பெற வேண்டும். பாரத் கவுரவ் என்ற பெயரில் சுற்றுலா ரெயில்கள் என்ற பெயரில் 100 விரைவு ரெயில்களை தனியாருக்கு விற்கும் முடிவை உடனே கைவிட வேண்டும்.

    உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் ஈரோடு கிளை சார்பில் இன்று கறுப்பு தினமாக கடைபிடித்து ஈரோடு ரெயில்வே பணிமனையில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் வினோத்குமார், செயலாளர் தர்மராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    நிர்வாகிகள் முனிச்சந்த் மீனா, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தனியார் மயமாக்கலை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன. இதில் ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் தலைவர்கள் மீது, வழக்கு போடப்பட்டதற்கு எதிர்ப்பு
    • திங்கள்நகர், பிலாக்கோட்டு சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

    கன்னியாகுமரி :

    குளச்சல் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் சார்பில், திங்கள்நகர், பிலாக்கோட்டு சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    காங்கிரஸ் தலைவர்கள் மீது, வழக்கு போடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பா.ஜ.க. அரசை கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி தலைவர் ஜேக்கப் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், குமரி கிழக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் ஜாண் சவுந்தர், திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் சுமன், கல்லுக்கூட்டம் பேரூராட்சி தலைவர் மனோகர்சிங், அணில்குமார் மற்றும் லாரன்ஸ் ஜெயசிங், செல்வம், ரீத்தாபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் விஜூமோன், தொகுதி பொதுச்செயலாளர்கள் தவசுமணி, ஆல்பர்ட், டிஜு, விஷ்ணு, வின்சென்ட், எமில், அரவிந்த், மணிகண்ட பிரபு, முன்னாள் வட்டார துணை தலைவர் தலைவர் தேவதாசன், முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • விரைவு ரெயிலை தனியாருக்கு விற்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    நெல்லை:

    தெற்குரெயில்வே மஸ்தூர் யூனியன் மதுரை கோட்ட நெல்லை கிளை சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில்நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மத்தியசங்க துணைத்தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். எஸ்.ஆர். எம். யூ. நெல்லை கிளை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்க செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரராஜா சிறப்புரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோவை-சீரடி சுற்றுலா விரைவு ரெயிலை தனியாருக்கு விற்பனை செய்ததை திரும்பபெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    • விளவங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட சேதமடைந்து காணப்படும் அனைத்து சாலைகளையும் சீரமைக்கவேண்டும்
    • மனித பாதுகாப்பு கழகம் ஆர்ப்பாட்டம்

    கன்னியாகுமரி :

    மனித பாதுகாப்பு கழகம் மற்றும் உண்ணாமலைக்கடை நைட்டிங்கேல் வெல்ஃபேர் நலச் சங்கமும் இணைந்து மார்த்தாண்டம் காளை சந்தை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு மக்கள் நற்பணி மன்றத் தலைவர் பி.கே.சிந்துகுமார் தொடக்கி வைத்தார்.ஆர்ப்பாட்டத்தின்போது விளவங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட சேதமடைந்து காணப்படும் அனைத்து சாலைகளையும் சீரமைக்கவேண்டும். தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவு நீரை தடுக்க வேண்டும்.சுத்தமான குடிநீர் மக்களுக்கு வழங்கவேண்டும்.சீர்குலைந்து காணப்படும் மார்த்தாண்டம் சந்தையை உடனடியாக சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இதில் மனித பாதுகாப்பு கழகம் மற்றும் நல சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • இதில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    முகமது நபியை அவதூறாக விமர்சித்து பேசியதாக கூறி பா.ஜ.க நிர்வாகிகள் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டாலை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட துணை தலைவர் சோமு தலைமையில் ராமநாதபுரம் மாவட்டம் சந்தைத் திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில செயற்குழு உறுப்பினர் ஜெமிலுன்னிசா, மாநில செயலாளர் நஜ்மா பேகம் ஆகியோர் பேசினர். மாநில துணைத்தலைவர் சுலைமான், பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல், செயலாளர்கள் அப்துல் கலாம், ஆசாத், நஜ்முதீன், பொருளாளர் ஹசன் அலி பாப்புலர் பிரண்ட் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் (கிழக்கு) மாவட்ட ஊடகப் பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.

    • தனியார் மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழங்கங்களை எழுப்பினர்.

    சிவகாசி

    சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பராசக்தி காலனி பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஏராளமானோர் கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபானகடை அமைய ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், குடியிருப்பு பகுதியில் மன மகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபானகடை அமைக்க மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசாங்கமும் அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி பா.ஜ.க.வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழங்கங்களை எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் சுரேஷ், திருத்தங்கல் கலையரசன், பாட்டக்கு ளம் பழனிச்சாமி, வழக்க றிஞர்பாலசுப்பிரமணியம், ஆறுமுகசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    • சத்தியமங்கலத்தில் இன்று விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டதில் பழைய ஓய்வூதியத் திட்டம், ஆசிரியரின் பணி பாதுகாப்பு, அகவிலைப்படி உயர்வு ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் தனியார் பள்ளியில் அனைத்து முதுகலை ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டதில் பழைய ஓய்வூதியத் திட்டம், ஆசிரியரின் பணி பாதுகாப்பு, அகவிலைப்படி உயர்வு ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பட்டது.

    இதில் நேரடி நியமன முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அன்பரசு, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பிரச்சார செயலாளர் பிரபாகரன் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நிறுவனத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.

    அரூர்,

    கோட்டப்பட்டி அருகே மலைவாழ் பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.

    கோட்டப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட புதுக்கோட்டை சரடு பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நிலம் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி பத்திர பதிவு குறித்து கேட்டறிந்த மலைவாழ் பழங்குடியினர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

    எனவே, புதுக்கோட்டை சரடு கிராமத்தில் பழங்குடி யின மக்கள் மீது தாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி ஆவ ணங்கள் மூலம் செய்யப்பட்ட பத்திர பதிவினை ரத்து செய்ய வேண்டும்.

    மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு எதிராக செயல்படும் கோட்டப்பட்டி காவல் நிலைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் ஸ்ரீதர், மாநில செயலர் ஸ்ரீராமன், மாநில துணைச் செயலர் பழனி, மாநில பொருளர் குப்புசாமி, இளைஞரணி தலைவர் இளையராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அடிப்படை வசதிகள் கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    அரியலூர்:

    ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட கீழக்குடியிருப்பு கிராமத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து பேசினர். ஒத்த தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலை அமைக்க வேண்டும். புதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். புதுத்தெருவில் சிமெண்டு சாலை, மின்விளக்கு கம்பம் அமைக்க வேண்டும். கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட அனைவருக்கும் நகைகளை உடனடியாக திருப்பி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது."

    • சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    புதுக்கோட்டை

    தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இணை செயலாளர் சாவித்திரி தலைமை தாங்கினார். கொரோனா தடுப்பு பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணிபுரிந்த முன்கள பணியாளர்களான சுகாதார செவிலியர்களுக்கு விடுபட்ட ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அஞ்சலை, மாவட்ட செயலாளர் பிரேமா உள்பட சங்கத்தை சேர்ந்த செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்."

    ×