என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 98196"

    நவகாளியம்மன் கோவில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதம் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
    புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள காராப்பாடி கிராமத்தில் நவகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் விநாயகர், நவகாளியம்மன், கருப்ப ராயனுக்கு சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யயப்பட்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கோபுரம் புதிதாக கட்டப்பட்டு மூலவர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

    மேலும் இக்கோவிலில் தமிழகத்தில் முதன் முறையாக 10 கைகளுடன் 71 அடி உயரத்தில் பிரமாண்ட நவகாளியம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோவில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதம் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:-

    தமிழகத்திலேயே முதன் முறையாக நவகாளியம்மனுக்கு இங்கு தான் 10 கைகளுடன் 71 அடி உயரத்திற்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அம்மனை வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோவில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    முன்னதாக இந்த பிரமாண்ட சிலையை ஏராளமான பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.
    கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து தாரை, தப்பட்டை, செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
    எடப்பாடி நடுத்தெரு பகுதியில் உள்ள விநாயகர், பெரியகாண்டி அம்மன், பாலமுருகன், அய்யப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

    இதையொட்டி நேற்று கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து தாரை, தப்பட்டை, செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

    பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில், சின்ன மாரியம்மன் கோவில், மேட்டுத்தெரு மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்த பக்தர்கள், முக்கிய வீதிகள் வழியாக தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    காரியாபட்டி அருகே நடந்த கோவில் கும்பாபிஷேகத்தில் பெண்களிடம் 8 பவுன் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம்  காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரில் கருப்பணசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். 

    அரசகுளத்தைச் சேர்ந்த மீனாட்சி (வயது 55) என்பவர் கூட்ட நெரிசலில் நின்று கொண்டு கும்பாபி ஷேகத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். 

    இதேபோல் அரசகுளத்தைச் சேர்ந்த தமிழரசி என்பவரிடமும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் 3 பவுன் நகையை பறித்துச் சென்றனர். 

    2 பேரும் கொடுத்த புகாரின் பேரில் ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்துச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 
    சோழவந்தான் அருகே உள்ள காளியம்மன் ேகாவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே தென்கரைபுதூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு 
    2 நாட்கள் பிரசாந்த்சர்மா தலைமையில் யாகபூஜை நடைபெற்றது. 

    இன்று காலை மேளதாளத்துடன் புனித நீர்க் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்து கோவில் கோபுரத்தின் கும்ப கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி  கும்பாபிஷேகம் நடந்தது. 

    இதைத்தொடர்ந்து காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. 

    இவ்விழாவில் டாக்டர் மகேந்திரன்,ராஜேந்திரன் ,ஊராட்சி மன்ற தலைவர்மஞ்சுளாஅய்யப்பன்,துணைத்தலைவர் கிருஷ்ணன் ,ஊராட்சி 
    செயலாளர்கள்முனிராஜ்,திருச்செந்தில், செல்வம் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • திருப்பத்தூர் அருகே பாலவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பாலவிநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சமத்துவபுரம் எதிரில் காமாட்சி சன்மீனா வளாகத்தில் பிள்ளையார்பட்டி சாலையில் அமைந்துள்ள பால விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

    இதையொட்டி யாகசாலை பூஜைகள் வைரவன்பட்டி குருக்கள் தலைமையில் நடந்தது. கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. கோ.பூஜை, விக்னேசுவர பூஜை நடந்தது. புனித தீா்த்தம் வைக்கப்பட்ட கும்ப கலசங்களுக்கு 3 கால பூஜைகள் நடத்தப்பட்டது.

    பின்பு மகாபூா்ணாகுதி, தீபாராதனை நிறைவு பெற்று புனித நீா்க்குடங்கள் யாகசாலையிலிருந்து கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

    தொடா்ந்து மூலவா் பாலவிநாயகருக்கு பால், பன்னீா், இளநீா், திரவியம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகங்கள் தீபாராதனை நடந்தன. சிறப்பு பூஜைகளும் நடந்தன. பாலவிநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

    விழா ஏற்பாடுகளை காமாட்சி சன்மீனா நாக ராஜன் குடும்பத்தினர் செய்திருந்தனா். கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    • குடும்பத்தினரின் ஆசைக்கு இணங்க கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு வான்வழி பயணம் மேற்கொண்டார்.
    • நடராஜனின் தந்தை பாலசுப்பிரமணியன். இவர்களது சொந்த ஊர் தெற்கு தீத்தாம்பட்டி.

    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தீத்தாம்பட்டி கிராமத்தில் பத்திரகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திராளன பக்கதர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அதே கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் வந்து அசத்தினார்.

    நடராஜனின் தந்தை பாலசுப்பிரமணியன். இவர்களது சொந்த ஊர் தெற்கு தீத்தாம்பட்டி. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பாலசுப்பிரமணியன் தனது குடும்பத்துடன் கும்மிடிப்பூண்டிக்கு அங்கு வசித்து வருகிறார். இந்நிலையில் குடும்பத்தினரின் ஆசைக்கு இணங்க கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு வான்வழி பயணம் மேற்கொண்டார்.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து பெங்களூருக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக தெற்கு தீத்தாம்பட்டிக்கு வந்தனர். ஊருக்கு வந்து ஹெலிகாப்டர் ௨ முறை சுற்றியதை அக்கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்தது மட்டுமின்றி செல்பி எடுத்துக் கொண்டனர்.

    நடராஜன் தனது குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு பின்னர் அதே ஹெலிகாப்டரில் ஊருக்கு திரும்பினார். இது அந்த கிராமமக்களை ஆச்சரியப்படுத்தியது.

    • திருப்பூர் மாவட்டம் சீராம்பாளையத்தில் அமைந்துள்ளது ஸ்ரீகோரங்காட்டு கருப்பராயன் கோவில்.
    • இன்று (வியாழக்கிழமை) யாகசாலை பூஜை, கோபுர கலசங்கள் வைத்தல் நடைபெறுகிறது.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் காளிபாளையம் கிராமம் கிழக்கு சீராம்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோரங்காட்டு கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி இங்குள்ள ஆதிசெல்வ விநாயகர் கோவில், ஸ்ரீதேவி பூதேவி உடனமர், ஸ்ரீ அரங்கநாதப்பெருமாள் கோவில், ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீசப்தகன்னிமார்,ஸ்ரீகருப்பராய சுவாமி கோவில்கள் புதுப்பித்து,வர்ணம் பூசியும் கோபுரகலசங்களை புதுப்பித்தும் உள்ளது.

    மேலும் யாக சாலைகள் அமைத்து கோவிலி்ல் உள்ள தெய்வங்களுக்கு புகழ் பெற்ற திருத்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கும்பாபிஷேக விழா கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் சிரவையாதீனம் கவுமார மடாலயம் சரவணம்பட்டி குமரகுருபர சுவாமிகள், கூனம்பட்டி கல்யாணபுரி 57-வது ஜகத்குரு குரு ஸ்ரீமத் ராஜசரவண மாணிக்கவாசக குரு சுவாமிகள், அவினாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், கவுந்தப்பாடி ஓம் வெற்றி வேலாயுதசுவாமி சித்தர் குடில் முருகன் அருள்அபி சுவாமிகள் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறுகிறது. முன்னதாக நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இன்று (வியாழக்கிழமை) யாகசாலை பூஜை, கோபுர கலசங்கள் வைத்தல் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை(வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் ஸ்ரீஆதிசெல்வ விநாயகர், அரங்கநாத பெருமாள் விமானம், மூலவர், விநாயகர், கோரங்காட்டு சப்தகன்னிமார், கருப்பராயன் சுவாமிகள் கோவில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து மகா அபிஷேகம், மகா தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கண்ணன் குல பங்காளிகள், ஸ்ரீ கோரங்காட்டு கருப்பராயன் கோவில் அறக்கட்டளை திருப்பணி குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்துவருகின்றனர்.

    • ஜூலை 6-ந்தேதி சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • யாக சாலை அமைப்பதற்காக முகூர்த்தகால் நடப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.

    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி ஆகும். அதன்படி இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. கோவிலின் முன்பகுதியான கிழக்குப் பக்கத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்காக கோவில் நிதி ரூ.2½ கோடியில் சுமார் 30 அடி உயரத்தில் கல்காரம் கட்டும் பணி நடந்து முடிந்தது.

    மேலும் கோவிலின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இந்நிலையில், ராஜகோபுரம் கட்டும் பணி மேலும் காலதாமதம் ஆகும் என்பதால் முதல் கட்டமாக வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதையடுத்து, விரைவில் ராஜகோபுரத்தின் கட்டுமான பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள இடையாற்று மங்கலத்தை சேர்ந்த பொன்னர் -சங்கர் என்ற உபயதாரர்கள் ராஜகோபுரம் கட்டி தர முன்வந்தனர். இதையடுத்து திட்ட மதிப்பீடு செய்து 73 அடி உயரத்தில் 7 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி முடிவுற்றது.

    அதைத் தொடர்ந்து, ராஜகோபுரத்தில் கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து செல்லும் காட்சி, அக்னிசட்டி ஏந்தி பெண் பக்தர் நடந்து வருவதைப் போன்ற அழகிய சிற்பம், விரதமிருந்து அலகு குத்தி நடந்து வரும் பக்தர் போன்ற சிற்பம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டு தரமான முறையில் வர்ணம் தீட்டும் பணி நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து ராஜகோபுரம் கட்டுமான பணிக்கு அமைக்கப்பட்டிருந்த சவுக்கு கட்டைகளால் ஆன சாரங்களை பிரிக்கும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து ராஜகோபுரம் தண்ணீரால் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    மேலும் யாக சாலை அமைப்பதற்காக முகூர்த்தகால் நடப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. அடுத்த மாதம் (ஜூலை) 6-ந்தேதி சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலய கும்பாபிஷேக விழா யாக சாலையை பிச்சை குருக்கள் பார்வையிட்டார்,
    • 28-ந் தேதி காலை 7 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், காலை 9 மணிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளன.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் பசுபொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயம் உள்ளது. இங்கு தினமும் பூஜைகள், மாதந்தோறும் பவுர்ணமி பூஜைகள், திருவிளக்கு பூஜை, அன்னதானம் போன்றவை நடைபெற்று வருகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு தேவர் நினைவாலய வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர் கோவில் கட்டி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தேவர் நினைவாலயத்தில் கடந்த 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    இதனை அடுத்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தேவர் குருபூஜையுடன் கும்பாபி ஷேகமும் நடைபெற உள்ளது. வருகிற 30-ந் தேதி தேவரின் 115-வது ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. அக்டோபர் 28-ந் தேதி ஆன்மீக விழாவும், 29-ந் தேதி அரசியல் விழாவும், 30-ந் தேதி குருபூஜை விழாவும் நடைபெற்று வருகின்றன.

    வருகிற 28-ந் தேதி தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் விநாயகர் கோவில், சுப்பிரமணியர் கோவில், முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேக ஏற்பாடுகளை பிள்ளையார்பட்டி தலைமை குருக்கள் பிச்சை குருக்கள் மற்றும் குழுவினர் பசும்பொன் வந்து யாகசாலை பூஜை பணிகளை பார்வையிட்டு சிவாச்சாரியார்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    வருகிற 27-ந் தேதி காலை 9 மணிக்கு அனுக்ஞை விக்னேசுவரர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு முதலாம் காலை யாக பூஜையும் 28-ந் தேதி காலை 7 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், காலை 9 மணிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளன. பிற்பகல் 2 மணி அளவில் அன்னதானம் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன், பழனி, தங்கவேல், சத்தியமூர்த்தி உள்பட விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • பசும்பொன் தேவர் நினைவிடத்தில் கும்பாபிஷேக விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது.
    • 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குருபூஜையுடன் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராம லிங்கத் தேவர் நினைவாலயம் அமைந்துள்ளது. இங்கு தினமும் பூஜைகள், மாதம் தோறும் பவுர்ணமி பூஜைகள்‌, திருவிளக்கு பூஜை, அன்னதானம் நடைபெற்று வருகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு தேவர் நினைவாலய வளாகத்தில் விநாயகர், சுப்ரமணியர் கோவில் கட்டி சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தேவர் நினைவாலயத்தில்2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 22 ஆண்டு களுக்கு பிறகு தற்போது குருபூஜையுடன் கும்பாபிஷே கமும் நடைபெற உள்ளது.

    வருகிற 30-ந்தேதி தேவரின் 115-வது ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் 28-ந்தேதி ஆன்மீக விழாவும், 29-ந்தேதி அரசியல் விழாவும், 30-ந்தேதி குருபூஜை விழாவும் நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டில் வருகிற 28-ந் தேதி தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் விநாயகர், சுப்ரமணியர் கோவில், முத்துராமலிங்க தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேகம் நடை பெறும். இதையொட்டி 27-ந் தேதி காலை 9 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.

    அன்று மாலை 6 மணிக்கு முதலாம் காலை யாக பூஜையும், 28-ந் தேதி காலை 7 மணிக்கு 2-ம் கால யாகபூஜையும், காலை 9 மணிக்கு தீபாரனையும் நடைபெற உள்ளன.

    இதுகுறித்து தேவர் நினைவாலைய பொறுப்பா ளர் காந்திமீனாள் நடராஜன் கூறுகையில், தேவர் நினைவிடத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் குழுவின ரால் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட உள்ளது என்றார்.

    • கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் நடத்தப்பட உள்ளது.
    • கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கோவிலில் உள்ள மண்டபங்கள் தூய்மை செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள், கோபுரங்களில் வர்ணம் பூசும் பணிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    இந்நிலையில் கோவில் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கும்பாபிஷேகத்தின்போது மூலவர் சிலையை பாதுகாத்திடவும், பலப்படுத்தவும் தேவையான நடவடிக்கை எடுக்கவும் ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்கவும் ஆன்மிக பெரியோர்கள், ஓய்வுபெற்ற நீதியரசர், சிற்ப சாஸ்திரம் கற்று அறிந்த ஸ்தபதிகள், ஆகம வல்லுநர்கள், மக்கள் பிரதிநிதிகள் என 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த குழுவில் ஓய்வுபெற்ற நீதியரசர் பொங்கியப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சரவணம்பட்டி கவுமார மடம் குமரகுருபர சுவாமிகள், பழனி ஸ்தல அர்ச்சர்கள் பிரதிநிதி கும்பேஸ்வர குருக்கள், ஆகம வல்லுநர் செல்வசுப்பிரமணிய குருக்கள், பழனி திருமஞ்சன ஊழியர்கள் பிரதிநிதி பழனிசாமி, சென்னை தலைமை ஸ்தபதி தட்சிணாமூர்த்தி, ஸ்தபதி செல்வநாதன், முதுகலை சித்த மருத்துவம் மற்றும் மாநில மருந்து உரிமம் வழங்கும் ஆணைய அலுவலர் பிச்சையாகுமார், திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார், பழனி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, சென்னை அறநிலையத்துறை தலைமையிட இணை ஆணையர், பழனி கோவில் இணை ஆணையர் ஆகியோர் உள்ளனர்.

    இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் பழனி முருகன் கோவில் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் நடத்தப்பட உள்ள நிலையில் அதற்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    கடந்த முறை பழனி கோவிலில் நடந்த கும்பாபிேஷகத்தின் போது மூலவர் சன்னதியில் உள்ள நவபாசான சிலை குறித்து சர்ச்சையான கருத்துகள் வெளிவந்தது. அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கும்பாபிஷேக பணிகளுக்கு முன்பாக சிலைக்கு மருந்து சாத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் தேவஸ்தானம் சார்பில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி தொகையான ரூ.1 கோடியே 13 லட்சத்திற்கான காசோலையை இணை ஆணையர் நடராஜன், நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரியிடம் வழங்கினார்.

    • கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கும்பாபிஷேக பாலாலய பூஜை தொடங்கியது.
    • கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகமவிதிப்படி 2018-ம் ஆண்டு நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் பல்வேறு காரணங்களால் நடைபெறவில்லை. இதையடுத்து கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கும்பாபிஷேக பாலாலய பூஜை தொடங்கியது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் கும்பாபிஷேக பணிகள் தொய்வடைந்தது.

    இந்தநிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி சிதிலமடைந்த மண்டபங்கள், தூண்கள் சீரமைக்கப்பட்டு, வர்ணம் பூசும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது.

    குறிப்பாக கோவில் ராஜகோபுரம், சிறிய கோபுரங்கள், வெளிப்பிரகாரத்தில் உள்ள மண்டபங்களில் வர்ணம் பூசும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இதற்காக அங்கு கம்புகளால் சாரம் அமைக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. எனவே பணிகள் நிறைவுற்று விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று பக்தர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

    ×