என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி"

    • வருத்தத்துடன் வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • நான் வயலில் வேலை செய்து கொண்டிருந்தேன்.

    உத்தரப் பிரதேசத்தில் கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட விரக்தியில் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கமலா ஷரன் யாதவ் இன்டர் பள்ளியில் பயின்று வந்த 9 ஆம் வகுப்பு மாணவி ரியா பிரஜாபதி (17 வயது) நேற்று தேர்வு எழுத சென்றுள்ளார்.

    பள்ளிக் கட்டணத்தில் ரூ.800 நிலுவைத் தொகையை செலுத்தாததால் அவரை தேர்வு எழுத அனுமதிக்காமல் பள்ளி நிர்வாகத்தினர், கட்டணம் செலுத்தாததற்காக அவரை அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வருத்தத்துடன் வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தற்கொலை செய்த சிறுமியின் தாய் பேசுகையில், "பள்ளி மேலாளர் சந்தோஷ் குமார் யாதவ், அதிகாரி தீபக் சரோஜ் மற்றும் முதல்வர் ராஜ்குமார் யாதவ் மற்றும் பலர் அவளை எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியுள்ளனர். அவளை தேர்வு எழுத விடவில்லை.

    அவர்களின் நடத்தையால் வருத்தமடைந்த என் மகள் வீட்டிற்கு திரும்பி வந்து தன் அறைக்குச் சென்றாள். நான் வயலில் வேலை செய்து கொண்டிருந்தேன்.

    நான் வீடு திரும்பியபோது, என் மகள் தூக்கில் தொங்குவதை கண்டேன்" என்று தெரிந்தார். பள்ளி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    [தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]

    • திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன.
    • தீபாவளி பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு கடந்த வாரம் சென்றனர்.

    திருப்பூர் :

    தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு தொழிலாளர்கள் சென்றதால், அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் வருகை குறைவாக இருந்தது.

    திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு கடந்த வாரம் சென்றனர். இதன் காரணமாக திருப்பூர் மாநகரம் தொழிலாளர்கள் இன்றி காணப்படுகிறது. மேலும், வெளி மாவட்டங்களை சேர்ந்த பலர் திருப்பூரில் ஹோட்டல்கள் நடத்திய வருகிறார்கள். தற்போது அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால், திருப்பூர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

    இதுபோல் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் பலர் திருப்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்பாத நிலையில் அவர்கள் குழந்தைகள் பல பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக திருப்பூர் மாநகரில் உள்ள பல பள்ளிகளில் மாணவ மாணவிகளின் வருகை குறைந்தது. பள்ளி வகுப்பறைகள் பலவும், மாணவ- மாணவிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    • இந்தியாவின் அனைத்து மாநிலங்களுடைய பெயர்களையும், யூனியன் பிரதேசங்களின் பெயர்களையும், அதனுடைய தலைநகரங்களையும் வரிசையாக 47 செகண்ட்டில் கூறி சாதனை படைத் துள்ளார்.
    • உலக நாடுகளில் உள்ள 60 நாடுகளின் பெயர் களையும், கொடிகளையும், தலைவர்களுடைய பெயர்களையும், இந்திய சுதந்திர போராட்டத்தின் வீரர்களின் பெயர்களையும் சரளமாக கூறும் திறமை பெற்றுள்ளார்.

    கன்னியாகுமரி:

    கூட்டாலுமூடு அருகே சென்னிநின்றவிளையை சேர்ந்தவர்கள் பிரேம் குமார்-ராணி தம்பதியினர். இவரது மகள் ஸ்ருதி (வயது 4).

    இவர் கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் எல்.கே.ஜி. பயின்று வருகிறார். இவர் பிரிகேஜி பயிலும் போது பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டியில் முதல் பரிசு வென்றுள்ளார்.

    மேலும் இந்தியாவின் அனைத்து மாநிலங்க ளுடைய பெயர்களையும், யூனியன் பிரதேசங்களின் பெயர்களையும், அதனுடைய தலைநகரங்களையும் வரிசையாக 47 செகண்ட் டில் கூறி சாதனை படைத் துள்ளார்.

    தொடர்ந்து ஆங்கிலே எழுத்துக்களை இசட்டில் இருந்து திருப்பி ஏ வரை யிலும், உலக நாடுகளில் உள்ள 60 நாடுகளின் பெயர் களையும், அந்த நாட்டி னுடைய கொடிகளையும், தலைவர்களுடைய பெயர்களையும், இந்திய சுதந்திர போராட்டத்தின் வீரர்களின் பெயர்களையும் சரளமாக கூறும் திறமை பெற்றுள்ளார்.

    இவருடைய திறமையை பாராட்டி அப்துல் கலாம் வேர்ல்ட் ரெக்கார்டு என்ற அமைப்பு விருது வழங்கி உள்ளது. விருது பெற்ற மாணவி ஸ்ருதியை கூட்டாலுமூடுமெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் குமார், செய லாளர் துளசிதாஸ் (பொறுப்பு), பொருளாளர் சவுந்தரராஜன், துணை தலைவர் முருகன், முதல்வர் நாராயணன், துணை முதல்வர் சந்தோஷ் உட்பட ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினர்.

    • தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் கத்தி மாறன்வளவு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது.
    • இங்கு 295 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் கத்தி மாறன்வளவு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு 295 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமைஆசிரியராக நாகவள்ளி என்பவர் பணி புரிந்து வருகிறார்.

    இந்த பள்ளி சற்று தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் மழை காலங்களில், பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் மாறிவிடுகிறது. இதனால் மாணவர்கள் கடும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர், கடந்த வாரம் கல்வி அதிகாரிகளுக்கும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் தெரிவித்து உள்ளார்.

    இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக பள்ளியில் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால், நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு அருகில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தில் வைத்து பாடம் நடத்தப்பட்டது.

    இதுபற்றி அறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர்கள், பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு தலைமைஆசிரியரிடம் வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த வட்டார கல்வி அலுவலர் வாசுகி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கருணாநிதி, ஒன்றிய குழு தலைவர் சுமதிபாபு, ஊராட்சி மன்ற தலைவர் பெரியதாயி ஆகியோர் பள்ளிக்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும், பள்ளியில் தண்ணீர் புகாதவாறு தற்காலிகமாக தடுப்பு பணி மேற்கொள்வதாகவும், மழைநீர் வடிந்த பிறகு ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து நிரந்தர கால்வாய் அமைத்து கொடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • மதுக்கூர் - சிரமேல்குடி ரோடு புதுக்குளம் அருகில் அமைந்துள்ள ரேஷன் கடை ஆய்வு.
    • பள்ளியில் உணவு, முட்டை தரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து வகுப்பறைக்கு சென்று மாணவர்களிடம் உரையாடினார்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் பகுதியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார்.

    முதலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து அங்கிருக்கும் வருகை பதிவேடு மற்றும் கர்ப்பிணிப் பெண்களிடம் சரியாக சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.

    அங்கு லேப்டாப், எக்ஸ்ரே கருவிகளை பார்வையிட்டார் மேலும் மருத்துவர் ராஜ்குமாரிடம் விபரங்களை கேட்டறிந்தார் பிறகு மதுக்கூர் - சிரமேல்குடி ரோடு புதுக்குளம் அருகில் அமைந்துள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார்.

    அங்கு அரிசி எடை உள்ளிட்ட பொருட்களின் தரம் சரியாக இருக்கிறதா என்றும் அங்கு வாங்கும் நபர்களிடம் பொருட்கள் சரியாக இருக்கிறதா என்று கேட்டறிந்தார்.

    இதனை அடுத்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உணவு, முட்டை தரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து வகுப்பறைக்கு சென்று மாணவர்களிடம் உரையாடினார்.

    பிறகு மதுக்கூர் வடக்கு பகுதியில் வயலில் நானோ யூரியா செயல் விளக்க ஆய்வு மேற்கொண்டார்.

    50 சதவீதம் மானியத்தில் விதைகள் வழங்கினார்.

    இந்த ஆய்வு போது மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜி, பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன் மதுக்கூர் உதவி வேளாண்மை இயக்குனர் திலகவதி மற்றும் அதிகாரிகள் பல கலந்து கொண்டனர்.

    • புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை
    • சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டி தற்போது நிலை கொண்டுள்ளது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நாளை (சனிக்கிழமை) நகர்ந்து வரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) வரை பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும், இன்று காஞ்சீபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதி கனமழை வரை பெய்யக்கூடும். இதனால் இந்த மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 15 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மிக கனமழையும்.

    தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து தமிழகத்தில் விழுப்புரம் உள்பட 11 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், பெரம்பலூர்,மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும்  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சிதம்பரத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்தது மழை.
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

    வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய உள்ளதால் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் 14-ந் தேதி வரை பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. சிதம்பரத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் நகர பகுதியில் பெரும்பாலான சாலைகளை மழை நீர் மூழ்கடித்தது.

    இந்நிலையில் இன்று 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர், நீலகிரி, மயிலாடுதுறை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோவை, கரூர், பெரம்பலூர், மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் சேலம், தருமபுரி, தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    • இன்றைய விஞ்ஞானம் நாளையதொழில்நுட்பம் என்னும் தலைப்பில் அறிவியல் கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பிரபல விஞ்ஞானியுமான டாக்டர். வெங்கடேஸ்வரன் மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட்பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் இன்றைய விஞ்ஞானம் நாளையதொழில்நுட்பம் என்னும் தலைப்பில் அறிவியல் கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பநிறுவனத்தின் அறிவியலாளரும், விஞ்ஞான் பிரசார் அமைப்பின் பிரபலவிஞ்ஞானியுமான டாக்டர். வெங்கடேஸ்வரன் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களிடையே மனித உடல்உறுப்புகள்,மனிதசெல் பயன்பாடுகள் பற்றியும், எதிர்காலத்தில் நாம்எதிர்கொள்ளும் சவால்கள் , புவி வெப்ப மயமாதல், உலகை ஆளும்அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்தும் கலந்துரையாடினார்.

    முன்னதாகப் பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக் குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி பேசினார். பள்ளியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் மோகனா வரவேற்றார். பள்ளியின் முதல்வர் பிரமோதினி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். முடிவில் மாணவி கரிஷ்மா மன்ஷாரமணி நன்றி கூறினார்.

    • கோதுமை ரவா, காய்கறி கிச்சடி மற்றும் கூடுதலாக ரவா கேசரி வழங்கப்பட்டு வருகிறது.
    • உணவு தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த முன்னோடி திட்டம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாநகராட்சியில் 8 தொடக்கப்பள்ளியில் பயிலும் 375 மாணவ- மாணவியர்களுக்கு திங்கட்கிழமை தோறும் சேமியா, உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் , செவ்வாய்க்கிழமை தோறும் கோதுமை ரவா, காய்கறி கிச்சடி, புதன்கிழமை தோறும் வெண் பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை தோறும் அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை தோறும் ரவா காய்கறி கிச்சடி மற்றும் கூடுதலாக சேமியா கேசரியும், வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோன்று கும்பகோணம் மாநகராட்சியில் 13 தொடக்கப் பள்ளியில் பயிலும் 1067 மாணவ -மாணவியர்களுக்கும் திங்கட்கிழமை தோறும் ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை தோறும் ரவா காய்கறி கிச்சடி, புதன்கிழமை தோறும் வெண் பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை தோறும் கோதுமை ரவை உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை தோறும் கோதுமை ரவா, காய்கறி கிச்சடி மற்றும் கூடுதலாக ரவா கேசரி வழங்கப்பட்டு வருகிறது. ஆக மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 21 மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 1442 மாணவ -மாணவியர்கள் இத்திட்டம் மூலம் பயன்பெறுகின்றனர்.

    தஞ்சாவூர் மாநகராட்சி பள்ளிகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் கூட்டுறவு மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும், கும்பகோணம் மாநகராட்சி காலனி பள்ளிகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் கோபுசிவகுருநான் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைப்பு மையங்களில் உள்ள சமையல் கூடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

    மாணவ-மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல், ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செய ல்படுத்தப்பட்டுவருகிறது. இவ்வாறு அவர் கூறறினார்.

    இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற தஞ்சாவூர் மாவட்ட–த்தை சேர்ந்த மாணவி ஓவியதிலகம் கூறும்போது :-

    நான் தஞ்சாவூர் கூட்டுறவு காலனி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறேன். நானும் என் நண்பர்க–ளும் தினமும் பள்ளியில் வழங்கப்படுகின்ற காலை உணவினை விரும்பி சாப்பிடுகின்றோம். சில சமயங்களில் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருகின்ற சூழ்நிலை தற்பொழுது முழுவதுமாக மாறிவிட்டது. தினமும் காலையில் வழங்கப்படுகின்ற சூடான உணவு வகைகள் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இத்தகைய காலை உணவு திட்டத்தினை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்றார்.

    தஞ்சையை சேர்ந்த மாணவன் கதிரேசனின் பெற்றோர் கூறும்போது, எனது மகன் தஞ்சை ராஜப்பாநகர் மாநகராட்சி தொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். நான் தினமும் கூலி வேலைக்கு சென்று வருகிறேன். சில நேரங்களில் வேலைக்கு கால தாமதம் ஆகி விடும் என்பதால் சமைக்க முடிவ–தில்லை. குழந்தைகள் பழைய உணவினை சாப்பிட்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர். இப்போது முதல்-அமைச்சர் மு.க.–ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை அறிமுகப்ப–டுத்திய பின்னர் என் குழந்தைகள் தினமும் காலை உணவை பள்ளியில் சூடாக சாப்பிடு–கின்றனர். இது என்னை போன்ற பெற்றோருக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு நன்றி என்றார்.

    • பள்ளியில் கட்டிட வசதி இல்லாததால் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
    • பள்ளியில் கட்டிட பணி தொடங்கப்படாமல் உள்ளது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கொம்பேறிப்பட்டி மலை கிராமப் பகுதியான செம்மணாம் பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை பல்வேறு கிராமங்களில் இருந்து குழந்தைகள் கல்வி பயில வருகின்றனர்.

    இப்பள்ளியில் சுமார் 70 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு மற்ற தனியார் பள்ளிகள் எதுவும் இல்லாததாலும், பெரும்பாலும் விவசாய கூலித் தொழிலாளர்களே உள்ளதாலும் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளிக்கே ஆரம்ப கல்விக்காக அனுப்பி வந்தனர்.

    ஆனால் பள்ளியில் கட்டிட வசதி இல்லாததால் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்காலிக ஏற்பாடாக அங்குள்ள கலையரங்கத்தில் பாடம் சொல்லிக் கொடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக அதே கலையரங்கில் கடந்த சில மாதங்களாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

    ஆனால் பள்ளியில் கட்டிட பணி தொடங்கப்படாமல் உள்ளது. தற்போது கன மழை பெய்து வரும் சமயங்களில் கூட மாணவர்கள் வகுப்பறை வசதியின்றி திறந்தவெளி கலையரங்கில் கல்வி பயின்று வருகின்றனர். இதனால் அந்த குழந்தைகளுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    சுகாதாரமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளது. எனவே மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் கலெக்டர் இப்பிரச்சினையில் தலையிட்டு பள்ளி கட்டிடத்தை விரைந்து சீரமைக்கவும் மாணவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் கல்வி பயில நடவடிக்கை எடுக்கவும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • பழைமையான நாணயங்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தனர்.
    • வெளிநாட்டு நாணயங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு, அது தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் பாண்டியன் நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பள்ளி தலைமையாசிரியர் ஜோசப் வரவேற்றார். 2-வது வார்டு கவுன்சிலர் மாலதி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். மாற்றுத் திறனாளிகள் வாரத்தையொட்டி அந்த பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளியான இளம்ஞாயிறு என்பவரை கவுரவப்படுத்தும் வகையில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் இந்தியாவின் பழைமையான நாணயங்கள் முதல் தற்போது பயன்பாட்டில் உள்ள நாணயங்களையும், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களையும் கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தனர். மேலும் நாணயங்கள் எங்கு தயார் செய்யப்படுகிறது? எந்த ஆண்டில் எந்தெந்த நாணயங்கள் தயார் செய்யப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது என்பதையும், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஷ், பகத்சிங், ரவீந்திரநாத்தாகூர் உள்பட முக்கிய தலைவர்கள் படத்துடன் பயன்பாட்டில் இருந்த நாணயங்கள் பற்றிய முழு தகவல்கள் அடங்கிய கண்காட்சியை பார்வையிட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மாணவர்கள் விளக்கிக் கூறினார்கள். இதேபோல் வெளிநாட்டு நாணயங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு, அது தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. கண்காட்சியை பார்வையிட்டு வெளியே வந்தவர்களிடம் மாணவர்கள் அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தனர். இதில் ஏராளமான மாணவர்களும், பெற்றோரும் கலந்து கொண்டு ஆர்வமுடன் நாணயங்களை பார்வையிட்டு, தகவல்களை அறிந்துக் கொண்டனர்.

    • பல்லுயிர், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் குறித்து தேவையான விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
    • 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை ஈடுபடுத்தலாம்.

    திருப்பூர் :

    இளைய தலைமுறையினர் தங்கள் மாநிலத்தின் பல்லுயிர், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் குறித்து தேவையான விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.அதற்காக, மிஷன் இயற்கை திட்டம் பள்ளிகளில் உள்ள சுற்றுசூழல் மன்றங்கள் வாயிலாக செயல்படுத்தப்படுவதால், மாணவர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதோடு சுற்றுச்சூழல் மன்ற நடவடிக்கைகளை வலுப்படுத்த உதவும்.

    இதற்காக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கான செயல்முறை பயிற்சி நிறைவடைந்த நிலையில், சுற்றுச்சூழல் ஆசிரியர்களுக்கு, இத்திட்டத்திற்கான வழிகாட்டு பயிற்சிகள் இணையவழியில் நடந்தது. நேரடியாக பயிற்சி வரும் 21-ந் தேதி முதல் 24ந் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன்கீழ் ஒவ்வொரு பள்ளிகளிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை ஈடுபடுத்தலாம். பள்ளி வாரியாக, 5 மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் பெயர்களை சுற்றுச்சூழல் ஆசிரியர் மற்றும் 'WWF india' வின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 10ந் தேதி வரை வாரத்தில் 5 மணி நேரம் மாணவர்கள், ஆசிரியர்கள் இதுசார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.இதன் வீடியோ ,அறிக்கைகள் அடிப்படையில் சிறப்பாக செயல்படும் 5 பள்ளிகள் மற்றும் 25 மாணவர்களுக்கு 2023 பிப்ரவரி மாதம் மாநில விருது வழங்கப்படும் என திருப்பூர் மாவட்ட கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    ×