search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teenager died"

    • மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதியது.
    • விபத்தில் ராஜவேலு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் பாலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேலு (வயது 30).

    இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஒரத்தூர் மெடிக்கல் காலேஜ் ரோடு அருகே செட்டிச்சேரி என்ற இடத்தில் வந்த போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதியது.

    இந்த விபத்தில் ராஜவேலு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜவேலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • ஓடும் பஸ்சில் மயங்கி விழுந்து வாலிபர் இறந்தார்.
    • பஸ்சை திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாயன்மான்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜ் குமார் மகன் முகேஷ் (வயது26). இவரது மனைவி இசைவாணி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். முகேஷ் சென்னை கோயம்பேடு பகுதியில் பிளக்ஸ் போர்டு வைக்கும் வேலை பார்த்து வருகிறார். கணவன்-மனைவி அங்கே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று தென்காசியில் நடைபெறும் உறவினர் இல்ல விழா விற்காக வருவதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ்சில் புறப்பட்டார். பஸ் அதிகாலை 4 மணியளவில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு வந்தது.அப்போது முகேஷ் வாந்தி எடுத்துள்ளார்.

    பின்னர் திருமங்கலம் பஸ் நிலையத்தை கடந்தபோது முகேஷ் பஸ்சுக்குள் மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் வந்து பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து திருமங்கலம் டவுன் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பஸ்சில் பயணித்த வாலிபர் இறந்ததால் பஸ்சை திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு ெசன்று விசாரணை நடத்தினர். இதனால் அந்த பஸ்சில் பயணிந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் 3 மணி நேரம் காத்திருந்து பரிதவித்தனர். பின்னர் பஸ் அனுப்பி வைக்கப் பட்டது.

    • விபத்தில் வாலிபர் பலியானார்.
    • மாரனேரி ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் சக்திவேல். உறவினர் இவரது வீட்டில் நிறுத்தியிருந்த மோட்டார் ைசக்கிளில் வெளியே சென்றார்.

    உவர்குளம் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் படுகாயமடைந்த சக்திவேலை காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் எ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள நரிக்குடியை சேர்ந்தவர் வைரமுத்து(வயது45), கட்டிடத்தொழிலாளி. இவருக்கு குடிபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    அங்குள்ள ஒரு கிணற்றின் சுவற்றில் அமர்ந்திருந்தபோது தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து மனைவி முத்து கணபதி கொடுத்த புகாரின்பேரில் மாரனேரி ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் மாசாணம் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன். இவரது மகன் முத்துகிருஷ்ணன் (வயது21). அதே பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிகண்டன் (24). முத்துகிருஷ்ணனும், மணிகண்டனும் நண்பர்கள். இவர்கள் இருவரும் நேற்று இரவு மது அருந்திவிட்டு நள்ளிரவு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றதாக கூறப்படுகிறது.

    மோட்டார் சைக்கிளை முத்துகிருஷ்ணன் ஓட்டி வந்தார். மணிகண்டன் பின்னால் அமர்ந்து வந்தார். மோட்டார் சைக்கிள் ஆராய்ச்சி ஊரணி பகுதியில் வந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

    பின்தலையில் பலத்த காயமடைந்த முத்து கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயங்களுடன் கிடந்த மணிகண்டன் உறவினர்களுக்கு போனில் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சேத்தூர் புறக்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். முத்துகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மணிகண்டனை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிணற்றில் பிணமாக வாலிபர் பிணமாக கிடந்தார்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் மகன் ராகுல் (வயது 26). இவர் கனடாவில் எம்.பி.ஏ. படித்து வந்தார். இந்நிலையில் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விடுமுறையில் புதுக்கோட்டைக்கு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் ஆலங்குடி நகரில் உள்ள அவரது பாட்டி நடேசன் மனைவி மங்களம் வீட்டிற்கு நேற்றுமுன்தினம் மாலை வந்தார். பின்னர் வீட்டில் ராகுல் தூங்கினார். இந்நிலையில் நேற்று காலையில் மங்களம் எழுந்து ராகுலை தேடிய போது அவரை காணவில்லை. அப்போது வீட்டில் உள்ள கிணற்றில் பார்த்த போது, ராகுல் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த மங்களம் கதறி அழுதார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் ஆலங்குடி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி ராகுலின் உடலை மீட்டு வெளிேய கொண்டு வந்தனர். பின்னர் பிேரத பரிசோதனைக்காக ராகுல் உடலை போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகன விபத்தில் வாலிபர் பலியானார்
    • சினிமா பார்த்து வீட்டிற்கு வரும்போது விபரீதம்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்து சிலால் மெயின் ரோட்டு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். மகன் எழிலரசன். இவர் தனது நண்பர்கள் பரத், ரிஷிபாலன், சுதாகர் ஆகியோருடன் ஜெயங்கொண்டம் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக ஜெயங்கொண்டம்-கும்பகோணம் ரோட்டில் சிலால் வால் பட்டறை அருகே அவர்கள் வந்த வாகனத்தை மாற்றிக் கொண்டு அவரவர் வீட்டிற்கு புறப்பட தயாரான நிலையில் சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற கார் எழிலரசன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் எழிலரசன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூவரும் லேசான காயங்களுடன் உயிர்த்தபினர். மேலும் இது குறித்து தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எழரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் திருநாகேஸ்வரம் கல்லுக்கார தெருவை சேர்ந்த ராஜாராமன் (48) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இருசக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதி வாலிபர் பலியானார்
    • மெடிக்கல் கடையில் பணிபுரிந்து வந்தார்.

    திருச்சி

    திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வெள்ளனூர் வடக்கு தெருவை சார்ந்த கல்யாண குமார் மகன் சரண் (வயது 22 ). இவர் அரியலூரில் உள்ள தனியார் மெடிக்கல் கடையில் பணிபுரிந்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் அரியலூரில் இருந்து சொந்த கிராமமான வெள்ளனுருக்கு இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது புள்ளம்பாடி சங்கேந்தி பிரிவு பாதை அருகே சென்ற பொழுது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலை தடுப்பில் மோதினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு விசாரணை செய்து வருகிறார்.

    • திருமணமான ஒரு வருடத்தில் சோகம்.
    • தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது.

    கோவை:

    கோவை கருமத்தம்பட்டி உஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 24). கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கிதா (24). இவர்களுக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ரஞ்சித்துக்கு குடிப்பழக்கம் உள்ளது.

    சம்பவத்தன்று ரஞ்சித் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் சிகிரெட்டை பற்ற வைத்தார். இதில் எதிர்பாராத விதமாக தீ அவரது உடையில் பற்றியது. தீ மளமளவென அவர் உடல் முழுவதும் பரவியது. வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அவர்கள் தீயை அனைத்து ரஞ்சித்தை மீட்டனர். பின்னர் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு வருடத்தில் வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதயில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கல்குவாரி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து ஒடிசா வாலிபர் பலியானார்.
    • ஒருவருக்கு பலத்த காயம்

    கரூர்

    கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள கோடந்தூரில் கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் ஒடிசா மாநிலம் என்ஜாரன் சுந்தர் கார்த் பகுதியைச் சேர்ந்த சுதீப் மின்ஸ் (வயது 21 ),ஒடிசா சுந்தர் கார்த் ரால்டேகா பகுதியைச் சேர்ந்த சலீம் பெக் (24) ஆகியோர் டிரைவர்களாக வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று அந்த குவாரியில் இரவு பாறை வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இதை யடுத்து சுதீப் மற்றும் சலீம் ஆகிய இருவரும் டிராக்டர் எடுத்துக்கொண்டு குவாரியின் தரைப்பகுதிக்கு சென்றனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக 60 அடி உயரத்திலிருந்து டிராக்டர் கவிழ்ந்தது. இதில் சுதீப் , சலீம் ஆகிய இருவரும் இடுப்பாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தனர்.

    சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுதீப் மின்ஸ் பரிதாபமாக இறந்தார். சலீமுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தென்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கல்குவாரியில் டிராக்டர் கவிழ்ந்து ஒடிசா வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நேற்று இரவு 2 பேரும் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டு உள்ளனர்.
    • தளபதிசமுத்திரம் மேலூர் அருகே நான்குவழிச்சாலையில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லி பெரியார்நகரை சேர்ந்தவர் வினோத்குமார்(வயது 31). இவரும், இவரது நண்பரும் நாகர்கோவில் அருகே உள்ள கோணத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    கட்டுப்பாட்டை இழந்தது

    நேற்று இரவு 2 பேரும் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டு உள்ளனர். நள்ளிரவில் நாங்குநேரியை அடுத்த தளபதிசமுத்திரம் மேலூர் அருகே நான்குவழிச்சாலையில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

    இதில் வினோத்குமாரும், அவரது நண்பரும் சாலையில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் நின்றவர்கள் 2 பேரையும் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பலி

    ஆனால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே வினோத்குமார் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அவருடைய நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தின்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்றும் அவர்கள் மீது மோதிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஏர்வாடி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×