என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teenager killed"

    • மதுரை கள்ளிக்குடி அருகே மினிவேன் மோதி வாலிபர் பலியானார்.
    • சிவரக்கோட்டையில் மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையை நடந்து கடக்க முயன்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகேயுள்ள சிவரக்கோட்டையை சேர்ந்தவர் சுரேஷ்கண்ணன் மகன் அழகேசன்(22). இதே கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் கதிர்வேலு (22).

    இன்று அதிகாலை 5.30 மணியளவில் இவர்கள் இருவரும் சிவரக்கோட்டையில் மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையை நடந்து கடக்க முயன்றனர்.

    அப்போது விருதுநகரில் இருந்து பலசரக்கு ஏற்றி கொண்டு மதுரை நோக்கி சென்ற மினிவேன் இவர்கள் இருவர் மீதும் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட வாலிபர்கள் அழகேசன், கதிர்வேலு இருவரில் வாலிபர் அழகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    கதிர்வேலு படுகாய மடைந்து உயிருக்கு போராடினார். அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு திருமங்கலம் அரசுமருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் உயிரிழந்த வாலிபர் அழகேசன் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்து தப்பியோடி மினிவேன் டிரைவரை தேடிவருகின்றனர்.

    • சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலியானார்.
    • சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடேசன் என்பவர் காரை ஓட்டி வந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மாதவசேரியை சேர்ந்தவர் அமுதா (வயது 47). இவரது கணவனர் வேலு கடந்த 4 ஆண்டுக்கு முன்பு இறந்து போனார். இவர்களது மகன் முத்துசாமி (23) இவர் கச்சிராய பாளையத்திலிருந்து சின்ன சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.கணியாமூர் அருகே உள்ள உணவகம் அருகே சென்ற போது கள்ளக்குறிச்சி யில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடேசன் என்பவர் காரை ஓட்டி வந்தார். இந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் முத்துசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் முத்து சாமியின் உடலை கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இறந்து போன முத்துசாமியின் தாய் அமுதா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அக்கினி குரால் கிராமத்திற்கு அருகே உள்ள கூகையூர் கிராமத்திற்கு மருந்து கடைக்கு மருந்து வாங்க சென்றார்.
    • இது குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே குரால் கிராமத்தைச் சேர்ந்தவர் மதுமதி (வயது 22) இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அக்கினி என்பவருடன் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது மதுமதி 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அக்கினி குரால் கிராமத்திற்கு அருகே உள்ள கூகையூர் கிராமத்திற்கு மருந்து கடைக்கு மருந்து வாங்க சென்றார். அப்பொழுது பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராத விதமாக அக்கினி சென்ற இருசக்கர வாகனம் பள்ளத்தில் விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • இளைஞர் இரவு ஒரு மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகி றார்கள்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாதோ தனியார் பாலி டெக்னிக் என்ற இடத்தில் இளைஞர் இரவு ஒரு மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சொகுசு கார் அவர் மீது மோதி தலைக்கு ப்பராக கவிழ்ந்தது மோதிய விபத்தில் பெயர் ஊர் தெரியாத இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவல்அறிந்த திரு நாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக கல்லூரி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வாகன விபத்தில் சிக்கியவரையும் மீட்டு உளுந்தூர்பேட்டைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகி றார்கள்.

    • தனது இருசக்கர வாகனத்தில் கெடிலம் கூட்டுரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் வட்டம் பிரிவிடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நந்தகோபால். இவரது மகன் கார்த்தி (வயது 28). இவர் தனது இருசக்கர வாகனத்தில் கெடிலம் கூட்டுரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே காட்டு செல்லூர் கிராமத்தை சேர்ந்த தினேஷ், மற்றும் சிபிராஜ் என்பவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். எதிர்பாராதவிதமாக கார்த்திக் இருசக்கர வாகனமும், எதிரே வந்த வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கார்த்தி மற்றும் எதிரே வந்த தினேஷ், மற்றும் சிபிராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கார்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே மேல்சிகிச்சைக்காக தினேஷ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், சிபிராஜ் சென்னை மருத்துவ மனைக்கும் அனுப்பி வைக்கப்பட்ட னர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் உரசி சென்றதால் தகராறு ஏற்பட்டது.
    • தலைமறைவாக இருந்த சுபாஷ் சென்னையில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    சூலூர்:

    கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் டோல்கேட் அருகே கடந்த 1-ந் தேதி பதுவம்பள்ளியை சேர்ந்த முகுந்த ராஜேஷ் (வயது 22) என்பவர் தனது 4 நண்பர்களுடன் நடந்து சென்றார்.

    அப்போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த சுபாஷ் (22) என்பவர் அவர்கள் மீது உரசியபடி சென்றதாக தெரிகிறது. இதை முகுந்த ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தட்டிகேட்டனர். இதனால் 5 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த முகுந்த ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சுபாஷை தாக்கினர். இதனால் கோபத்தில் இருந்த சுபாஷ் மறுநாள் தனது நண்பர்களுடன் முகுந்த ராஜேஷ் தங்கி இருந்த அறைக்கு சென்றார். அங்கு தூங்கி ெகாண்டிருந்த முகுந்த ராஜேஷை அடித்து உதைத்து சென்றனர். இதில் முகுந்த ராஜேசுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

    பின்னர் முகுந்த ராஜேஷ் தனது நண்பர்களிடம் தலை சுற்றுவதாக கூறியுள்ளார். அவர்கள் முகுந்த ராஜேசின் பெற்றோருக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனே அன்னூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று முகுந்த ராஜேஷுக்கு சிகிச்சை அளித்தனர்.

    அதன்பின்னர் அங்கிருந்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவருக்கு தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இதுகுறித்து முகுந்த ராஜேசின் தந்தை ராசு கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரி ன்பேரில் கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முகுந்தராஜேஷ் மேல் சிகிச்சைக்காக கடந்த 16-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

    இந்தநிலையில் தலைமறைவாக இருந்த சுபாஷ் சென்னையில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • மோட்டார் சைக்கிளில் சங்க ராபுரம்-பூட்டை சாலையில் உள்ள செல்போன் கடைக்கு சென்றார்.
    • மினிலாரி அண்ணாமலை மீது எதிர்பாராதவிதமாக மோதியது

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 34). மளிகைக்கடை நடத்தி வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சங்க ராபுரம்-பூட்டை சாலையில் உள்ள செல்போன் கடைக்கு சென்றார். பின்னர் அவர் கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தனது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்து விட்டு, மீண்டும் மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மினிலாரி அண்ணாமலை மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சங்கராபுரம் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அண்ணாமலையை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தியாகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ராமநாதபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலியானார்.
    • விபத்து குறித்து சிக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் விஜயகுமார் (வயது 20). நேற்று இரவு இவரும், அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சூர்யாவும் சிக்கல் அருகே உள்ள சிறைக்குளம் கிராமத்தில் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் ெசன்றனர்.

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிக்கல் டாஸ்மாக் கடை அருகே சென்று கொண்டிருந்தபோது கேரளாவில் இருந்து ராமேசு வரத்தில் மீன்லோடு ஏற்றி வந்த வேன் எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.இதில் விஜய குமார், சூர்யா ஆகிய 2 பேர் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த விஜய குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய சூர்யாவை அங்கிருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த சிக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துஉடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் மருங்கூரில் இருந்து கொள்ளுக்காரன்குட்டை நோக்கி சென்றார்.
    • இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி தோப்புகொல்லை வடக்கு தெருவை சேர்ந்தவர்சுப்பிரமணியன். இவர் மோட்டார் சைக்கிளில் மருங்கூரில் இருந்து கொள்ளுக்காரன்குட்டை நோக்கி சென்ற போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்மோதியதில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்ததும் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டிஅர சுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • நின்றிருந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    • இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாயில்பட்டி

    சிவகாசி அருகே உள்ள கீழதாயில்பட்டியைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் முனீஸ்வரன் (வயது 23). தாயில்பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் மோகன்ராஜ்.

    நண்பர்களான இவர்கள் இருவரும் சிவகாசியில் உள்ள அச்சகத்தில் ஒன்றாக வேலை செய்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு இவர்கள் இருவரும் வேலை முடித்து மோட்டார் சைக்கிளில் தாயில்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    கொங்கலாபுரம் விலக்கு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்றிருந்த வேன் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த முனீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் படுகாயமடைந்த அவரது நண்பர் மோகன்ராஜ், சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதி வாலிபர் பலியானார்.
    • தன்னுடன் வேலை செய்யும் தொழிலாளர்களை அக்ராய பாளையத்திற்கு விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

    சின்னசேலம், ஜன. 14-

    கள்ளக்குறிச்சி வி.ஓ.சி.நகரை சேர்ந்த சாகுல் ஹமீத் என்பவர் கள்ளக்குறிச்சியில் உள்ள லேத்து பட்டறையில் வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் நேற்று வேலையை முடித்துவிட்டு தன்னுடன் வேலை செய்யும் தொழிலாளர்களை அக்ராய பாளையத்திற்கு விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர் அக்ராய பாளையத்தில் அவர்களை இறக்கிவிட்டு மீண்டும் கள்ளக்குறிச்சியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக இரவு 10.30 அக்கரா பாளையத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்லும் சாலையில் முத்தையா மில் அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது புதுப்பல்லக் கச்சேரி ஊரை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு கச்சிராயபாளையம் நோக்கி வந்து வந்தவர் எதிர்பாராத விதமாக சாகுல் ஹமீத் சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த அடிப ட்டார் பின்னர் அடிபட்டு கீழே கிடந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ள க்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது பின்னர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • இவ்விருவரும் மோட்டார் சைக்கிளில் வேப்பூருக்கு சென்று காணும் பொங்கல் விழாவினை குதூகலமாக கொண்டாடி விட்டு வீடு திரும்பினர்.
    • சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நின்றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அம்பேத்கார் உயிரிழந்தார்

    கடலூர்:

    வேப்பூர் அருகே அவ்வதகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் அம்பேத்கார் (வயது 30). அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சவுந்திரபாண்டியன் (27). இருவரும் அப்பகுதியில் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகையில் 3-ம் நாளான காணும் பொங்கல் விழா நேற்று நடந்தது. இதையொட்டி இவ்விருவரும் மோட்டார் சைக்கிளில் வேப்பூருக்கு சென்று காணும் பொங்கல் விழாவினை குதூகலமாக கொண்டாடி விட்டு வீடு திரும்பினர்.

    அப்போது வேப்பூர் கூட்ரோடு சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நின்றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அம்பேத்கார் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்தார். இத்தகவலறிந்து விரைந்து சென்ற வேப்பூர் போலீசார் பலத்த காயமடைந்த சவுந்திரபாண்டியனை சிகிச்சைக்காக விருத்தாசலம் மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அம்பேத்காரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×