என் மலர்
நீங்கள் தேடியது "temple"
- ராயசந்திரா பகுதியில் மதுரம்மா கோவில் திருவிழா நடைபெற்றது.
- காற்றின் வேகம் அதிகரித்ததால், 150 அடி தேர் ஒரு பக்கமாக சாய்ந்தது
கர்நாடகா தலைநகர் பெங்களூரு அடுத்த ராயசந்திரா பகுதியில் மதுரம்மா கோவில் திருவிழாவின்போது 150 அடி உயர தேர் சாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காற்றின் வேகம் அதிகரித்ததால், 150 அடி தேர் ஒரு பக்கமாக சாய்ந்தது
இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- திட்வானா பகுதியில் பஞ்சமுகி ஹனுமான் கோவில் அமைந்துள்ளது.
- கொலை செய்வதற்கு முன் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவை பூசாரி சிவ்பால் அணைத்துள்ளார்.
ராஜஸ்தானில் கோவில் பூசாரி பூஜை செய்வது தொடர்பான தகராறில் சக பூசாரியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் தவுசா (Dausa) மாவட்டத்தில் லால்சோட் எல்லைக்கு உட்பட திட்வானா பகுதியில் பஞ்சமுகி ஹனுமான்கோவில் அமைந்துள்ளது. இங்கு பரசுராம் தாஸ் மகாராஜ் (60 வயது).மற்றும் சிவ்பால் தாஸ் ஆகியோர் பூசாரிகளாக உள்ளனர்.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை கோவிலில் சாமி சிலைக்கு ஆரத்தி காட்டுவது தொடர்பாக இருவரும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிவ்பாலை பரசுராம் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூசாரி சிவ்பால் தாஸ், பரசுராமை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
கோவிலுக்குள் பூசாரி உடல் கிடப்பதை அறிந்து உள்ளூர் மக்கள் திரண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் தப்பியோடிய பூசாரி சிவ்பால் கோவிலுக்கு 18 கிலோமீட்டர் தொலைவில் காயமுற்ற நிலையில் போலீசிடம் பிடிபட்டார். அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
கொலை செய்வதற்கு முன் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவை சிவ்பால் அணைத்துவிட்டு அதன் பின் கொலை செய்ததும் தெரியவந்தது. கோவில் பூசாரி சக பூசாரியால் கோவிலில் வைத்தே கொல்லப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அங்கிதா மற்றும் அஜய் ஆகியோர் கோவிலில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
- கோவில் பூசாரி நாகேந்திர செல்வால் கோவில் கதவுகளை பூட்டியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வாலில், கோவில் வளாகத்தில் தலித் தம்பதியினரின் திருமணத்திற்கு அனுமதி மறுத்த பூசாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்..
மார்ச் 5 ஆம் தேதி அங்கிதா மற்றும் அஜய் ஆகியோர் கோவிலில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். அப்போது கோவில் பூசாரி நாகேந்திர செல்வால் கோவில் கதவுகளை பூட்டிவிட்டு அவர்களை சாதி ரீதியாக திட்டியுள்ளார். இதனால் அந்த தம்பதியால் அன்று திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.
கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி மணமகளின் தந்தை மார்ச் 12 அன்று புகார் அளித்ததைத் தொடர்ந்து, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- நேற்று சீக்கிய புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.
- குரு ராம்தாஸ் சாராய் வளாக கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. ஹோலா மொஹாலா எனப்படும் சீக்கியர்களின் புத்தாண்டு கடந்த மார்ச் 14 தொடங்கி மார்ச் 16 வரை கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் சீக்கிய புத்தாண்டை முன்னிட்டு நேற்றும் ஏராளமான பக்தர்கள் தங்கக்கோவிலுக்கு வந்திருந்தனர்.
இந்நிலையில் கையில் இரும்பு கம்பியுடன் நுழைந்த நபர் ஒருவர் கோவிலில் குரு ராம்தாஸ் சாராய் வளாக கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளார்.
கையில் ஒரு இரும்புக் கம்பியுடன் வந்த அவரை பார்த்த கோவில் ஊழியர் ஜஸ்பீர் சிங் தடுக்க முயன்றார். ஆனால் அந்த நபர் ஊழியரை கம்பியால் தாக்கினார். பின் பக்தர்களும் மற்ற ஊழியர்களும் அந்த நபரை தடுக்க முயன்றபோது, அவர்களையும் அவர் தாக்கினார்.

பிற பக்தர்களும் ஊழியர்களும் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று பக்தர்கள் மற்றும் இரண்டு ஊழியர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். அபவர்கள் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நிலையில் காயமடைந்தவர்களில், ஒரு பக்தர் மற்றும் ஊழியர் ஆகிய இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, பொற்கோயிலில் பக்தர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. போலீசார் அதிக சோதனைக்கு பின் பக்தர்களை உள்ளே அனுமதித்தனர். தாக்குதல் நடத்தியவர் அரியானாவின் யமுனா நகரில் வசிக்கும் சுல்பான் என்பது தெரியவந்துள்ளது.
- அருப்புக்கோட்டையில் அமுதலிங்கேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நடந்தது.
- காலம் காலமாக மக்கள் கந்த சஷ்டி விழாவின் போது விரதமிருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டையில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அமுத லிங்கேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவராக அமுதலிங்கேஸ்வரர் மற்றும் அம்பாளாக அமுதவல்லி அம்மன் அருள் பாலிக்கின்றனர்.
வருடா வருடம் இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் கந்தசஷ்டி விழா தொடங்கி நடந்து வருகிறது. 3-வது நாளான நேற்று கோவிலில் மகா ருத்ரயாகம் உலக நன்மைக்காக நடைபெற்றது.இந்த யாகத்தை சிவாச்சா ரியார்கள் நடத்தினர். இதையொட்டி சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, தீப ஆராதனைகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறைபொது அபிவிருத்தி டிரஸ்ட் தலைவர் காமராஜ், செய லாளர் முத்துசாமி, டிரஸ்டி ராஜரத்தினம், துணைத் தலைவர் முத்துக்குமார். உறவின்முறை சிறப்பு ஆலோசகர் ரவீந்திரன், எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் மணிமுருகன், எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஜெயவேல் பாண்டியன் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
மேலும் இந்த மகா ருத்ரயாகத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு யாகத்தில் வைக்கப்பட்ட ருத்திராட்சம் வழங்கப்பட்டது. இங்கு கந்த சஷ்டி விழாவின் போது குழந்தை இல்லாத தம்பதியினர் விரதம் இருந்து கோவிலில் இருக்கும் முருகன் மற்றும் வள்ளி தெய்வானையை வணங்கி வந்தால் குழந்தை பேரு உண்டாகும் என்பது ஐதீகம்.
காலம் காலமாக மக்கள் கந்த சஷ்டி விழாவின் போது விரதமிருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.
- கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பெருமாள் கோவிலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கோவிலுக்குள் வந்து பூட்டை உடைத்தார்.
- கோவில் மூலஸ்தான அறையின் பூட்டை உடைக்கும் போது சத்தம் கேட்டு காவலாளி பார்த்து சத்தம் போட்டுள்ளார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பெருமாள் கோவிலில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கோவிலுக்குள் வந்து பூட்டை உடைத்து அங்கிருந்த அம்மனின் ஒரு கிராம் பொட்டு தங்கத்தை திருடியுள்ளார். பின்னர் கோவில் மூலஸ்தான அறையின் பூட்டை உடைக்கும் போது சத்தம் கேட்டு காவலாளி பார்த்து சத்தம் போட்டுள்ளார். இதனால் அந்த திருடன் திருட கொண்டு வந்த பொருட்களை கோவிலிலேயே போட்டு விட்டு தப்பி சென்று விட்டான். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி உள்ளிட்ட பொருட்களையும் உடைத்து சென்றுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவில் வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. பெரம்பலூர்
- நாட்டு நலப்பணி திட்ட முகாம்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் புது விராலிப்பட்டி கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. முகாமில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தில் தூய்மை பணிகளை மேற்கொண்டு, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதனை பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பொன்னுத்துரை பார்வையிட்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி ஊக்கப்படுத்தினார். முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்."
- அலங்காநல்லூர் அருகே முருகன், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- விழா ஏற்பாடுகளை கரட்டு காலனி சிவனடியார்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் வெள்ளிமலை கரட்டு காலனியில் அமைந்துள்ள சிவன், அங்காள ஈஸ்வரி அம்மன், பெருமாள், அனுமார், முருகன், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. 2 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களுடன் யாகவேள்வி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. அனைத்து தெய்வங்களுக்கும், கோபுர கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கரட்டு காலனி சிவனடியார்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.
- கோவிலில் உள்ள முக்கிய பெரிய தீட்சிதர்கள் நடத்தினர்.
- குடந்தை, நாங்கூர் அண்ணன் கோவில், திருவிளத்தூர் முதலிய தீட்சிதர்கள் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோ பாலசாமி கோவிலில் ஆச்சார்ய அபிஷேக தீட்சை நடைபெற்றது.
சென்ட் அலங்கார குடும்பம், ஸ்ரீ ராஜா வள்ளல், செண்பகவள்ளல் குடும்பம், ராஜகோபால் வள்ளல் ஆகிய குடும்பத்தாரின் 6 பேருக்கு ஆச்சார்யா அபிஷேகம் நடைபெற்றது. கோவிலில் உள்ள முக்கிய பெரிய தீட்சிதர்கள் நடத்தினர்.
ஸ்ரீராமன்தீட்சிதர், பிரசன்னா தீட்சிதர், செல்லப்பா தீட்சிதர், பத்ரி தீட்சிதர், கல்யாணம் தீட்சிதர், ரவி தீட்சிதர், ஜெகன் தீட்சிதர், ரகு தீட்சிதர், ஸ்ரீ வித்யாசாகர் தீட்சிதர், முதலிய தீட்சிதர்களும் இதற்காக வெளியூரில் இருந்து ஆசீர்வாதம் வழங்க வந்திருந்த குடந்தை, நாங்கூர் அண்ணன் கோவில், திருவிளத்தூர் முதலிய தீட்சிதர்கள் கலந்து கொண்டனர்
அனைவருக்கும் கோயில் பிரசாதம் மாலை மரியாதைகள் செய்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் மற்றும் உள்துறை சிப்பந்திகள், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
முன்னதாக தம்பி தீட்சிதர் வரவேற்றார்.
- அலங்காநல்லூர் அருகே நயினார் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை நயினப்பன் அம்பலம் வகையறா மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அருகே உள்ள கீழசின்னனம்பட்டி கிராமத்தில் நயினார் சுவாமி, நொண்டிசுவாமி, ஆண்டிசுவாமி, பட்டவர் சுவாமி, அக்காயிசுவாமி, உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேக விழா நடந்தது. 3 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, புண்ணியாசனம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடந்தன. 4 கால யாக பூஜையுடன் மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி பீடத்தின் மீது அமைந்துள்ள நயினார் சுவாமி மீது சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேம் செய்தனர். சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நயினப்பன் அம்பலம் வகையறா மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
- ராஜபாளையம் கருப்பஞானியார் கோவிலில் அன்னாபிஷேக விழா நடந்தது.
- 25 கிலோ எடையிலான காய்கறிகள், பழங்கள் மற்றும் புஷ்ப அலங்காரமும் செய்யப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் சாலியர்களுக்கு பாத்தியப்பட்ட கருப்பஞானியார் சுவாமி கோவிலில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது.
கருப்பஞானியார் மற்றும் பொன்னப்பஞானியார் சுவாமிகளுக்கு மாலை 6 மணிக்கு மேல் 20 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கருப்பஞானியார் சுவாமிக்கு 15 கிலோ எடையிலான காய்கறிகள் மற்றும் பழங்களில் அலங்காரமும், பொன்னப்பஞானியார் சுவாமிக்கு 25 கிலோ எடையிலான காய்கறிகள், பழங்கள் மற்றும் புஷ்ப அலங்காரமும் செய்யப்பட்டது.
அலங்காரம் செய்த பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. 8 மணிக்கு மேல் சுவாமிகள் மீது சாத்தப்பட்ட சாதத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த சாதத்தை சாப்பிடுவதால், பல்வேறு நோய்கள் குணமாகும் என்றும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பூஜைக்கு பின்னர் 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தலைவர் வைத்தீஸ்வரன், தர்மகர்த்தா ஞானகுரு செய்திருந்தனர்.
- நல்ல மாடன் கோவில் சந்திப்பு மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் அருகே வயல் பகுதியில் உள்ளது.
- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கோவில் திருவிழா நடத்தவில்லை.
நெல்லை:
தமிழர் விடுதலை களம் நிறுவன தலைவர் குமுளி ராஜ்குமார் தலைமையில் மாவட்ட பொருளாளர் பிரசாத் மற்றும் தச்சநல்லூர் மேல ஊருடையார்புரம் பகுதி மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கலெக்டர் விஷ்ணுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தச்சநல்லூர் அருகே உள்ள ஊருடையார்புரம், ராமையன்பட்டி, சிந்துபூந்துறை, நதிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 50 குடும்பங்களுக்கு சொந்தமான குலதெய்வமான நல்ல மாடன் கோவில் சந்திப்பு மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் அருகே வயல் பகுதியில் உள்ளது. பல தலைமுறைகளாக நாங்கள் அங்கு ஆடு, கோழி பலியிட்டு கொடை விழா நடத்திவரும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கோவில் திருவிழா நடத்தவில்லை.
இந்த நிலையில் அந்த பகுதியை சுற்றி குடியிருப்புகளாக மாற்றியுள்ளனர். தற்போது நாங்கள் கோவிலுக்கு வழிபட சென்றால் எங்களை அப்பகுதியை சேர்ந்த சிலர் மிரட்டுகின்றனர். மேலும் எங்களிடம் அனுமதி பெறாமல் எங்கள் கோவில் இடத்திலேயே விநாயகர் சிலையையும் வைத்துள்ளனர்.எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கோவிலை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.