என் மலர்
நீங்கள் தேடியது "therottam"
- தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 6-ந்தேதி இரவு தெப்பத் திருவிழா நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள பழமைவாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் உதயமார்த்தாண்ட பூஜை நடந்தது.
கோவில் பரம்பரை தர்மகர்த்தா ப.க.சோ.த.ராதாகிருஷ்ணன் கொடிப்பட்டத்தை மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தார். தொடர்ந்து கோவில் கொடிமரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு தர்ப்பை புற்களால் அலங்காரம் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் ஓதப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து விநாயகர் வீதி உலா, உச்சிகால பூஜை நடைபெற்றது.
மாலையில் சாயரட்சை, சிறப்பு அபிஷேகம், இரவில் சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை இந்திர விமானத்தில் வீதி உலா, சேர்க்கை தீபாராதனை, பரதநாட்டியம், சமய சொற்பொழிவு உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.
விழாவில் தேர்திருப்பணி குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் தினசரி காலை சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்ட பூஜை, விநாயகர் வீதி உலா, இரவில் சுவாமி சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை கஜவாகனம், அன்னவாகனம், கைலாய பர்வதவாகனம், காமதேனு வாகனம், வெள்ளிக்குதிரை வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலா, சமய சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது
9-ம் திருநாளான வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 10-ம் திருநாளான 6-ந்தேதி (திங்கட்கிழமை) காலையில் பஞ்சமூர்த்தி வீதி உலாவும், இரவு தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்துள்ளார்.
- 4 -ந்தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது.
- 5-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 4-ம் திருநாளான 29-ந்தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
7-ம் நாளான நேற்று நம் பெருமாள் உபய நாச்சியார்களுடன் நெல் அளவு கண்டருளி உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இன்று(வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு உத்தரவீதிகளில் வலம் வந்து காலை 9 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பட்டு உத்திரவீதிகளில் வலம் வந்து நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார். பின்னர் இரவு 8.30 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை நடைபெறுகிறது. நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு 4.30 மணிக்கு வருகிறார். 4.30 மணிமுதல் 5.15 மணிவரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது. 4 -ந் தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 5-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- 5-ந்தேதி நம்பெருமாள் உத்திர வீதிகளில் வலம் வருகிறார்.
- நாளை சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் பூபதித் திருநாள் எனப்படும் தை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டிற்கான தை தேர்த்திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் உத்திர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சிறப்பு நிகழ்ச்சிகளாக கடந்த 29-ந்தேதி தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார். நேற்று மாலை நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் உத்திர வீதிகளில் உலா வந்து, தைத்தேர் அருகில் வையாளி கண்டருளினார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு 4.30 மணிக்கு தைத்தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். காலை 4.30 மணி முதல் காலை 5.15 மணி வரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளினார்.
பின்னர் காலை 6 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் தெற்கு உத்திர வீதியிலிருந்து புறப்பட்டு மேற்கு உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி மற்றும் கிழக்கு உத்திரவீதிகளில் வலம் வந்து மீண்டும் காலை 10.00 மணிக்கு நிலையை அடைந்தது. வழிநெடுகிலும் தேரின் முன்பாக பக்தர்கள் தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றியும் வழிபட்டனர்.
நாளை சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. தைத்தேர் திருவிழாவின் நிறைவு நாளான வருகிற 5-ந்தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி உத்திர வீதிகளில் வலம் வருகிறார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- 10-ந்தேதி தெப்ப உற்சவம் பரிவேட்டை நடக்கிறது.
- 12-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 30-ந்தேதி காலை 6 மணிக்கு வீரகாளியம்மன் மலைக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் சிறப்பு பூஜையும், மயில் வாகன அபிஷேகமும் நடைபெற்றது. 11 மணியளவில் விநாயகர் வழிபாடும் தொடர்ந்து முருகன் கோவில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் மதியம் 12 மணியளவில் கொடி ஏற்றப்பட்டது. இதனை கட்டளைதாரர் 24 நாட்டு கொங்கு நாவிதர்கள் செய்திருந்தனர்.
பின்னர் சாமி சப்பரத்தில் மலையை வலம் வந்தார். 1 மணிக்கு சாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளல் பூஜையும் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தினசரி காலை 9 மணிக்கு காலசாந்தி கோவில் மற்றும் பல்வேறு சமூக மக்களின் சார்பில் மண்டபக்கட்டளை நடைபெறும். நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மைசூர் பல்லக்கில் சாமி மலையை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து காலை 6 மணிக்கு சாமி ரதத்திற்கு எழுந்தருளுகிறார். அதன் பின்னர் மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையில் தேர் வடம் பிடித்து பக்தர்களால் பிடிக்கப்பட்டு இழுத்து செல்லப்படும்.
வருகிற 6-ந் தேதி (திங்கட்கிழமை) 2-வது நாளாக மீண்டும் பக்தர்களால் தேர் இழுக்கப்பட்டு மலையை சுற்றி வலம் வரும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச்செல்வார்கள்.வருகிற 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை திருத்தேர் நிலையை அடைகிறது.
வருகிற 10-ந்தேதி தெப்ப உற்சவம் பரிவேட்டை நடக்கிறது. 11-ந் தேதி பகல் 12 மணிக்கு மகா தரிசனம் நடக்கிறது. 12-ந்தேதி மதியம் 12 மணிக்கு தீர்த்தவாரியும், 14-ந் தேதி மாலை 3 மணியளவில் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழாவும், திருமலைக்கு சாமி எழுந்தருளலும், மலைமீது அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. இரவு கொடி இறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.
- இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
- அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா வெகுவிமா்சையாக நடைபெறும். இந்்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவையொட்டி சுப்பிரமணியசுவாமி கோவில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு தேரோட்டம் நடைபெறுவதால் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தைப்பூச தேரோட்டத்தையொட்டி மருதமலை கோவிலில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பணிகளை பார்வையிட கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நேற்று மருதமலை கோவிலுக்கு வந்தார்.
தொடர்ந்து வாகன நிறுத்தும் இடம், பக்தர்கள் பாதுகாப்பாக பாதயாத்திரை வருவதற்கான வழிப்பாதைகள், மலைப்பாதை, மலைக்கோவில் மீது சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வழிகள், தேர் சுற்றி வரும் கோவில் வளாகம், ராஜகோபுர பகுதி ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
தைப்பூச திருவிழாவையொட்டி மலைக்கோவிலுக்கு செல்ல இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லாததால், மருதமலை அடிவாரப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து கோவில் சார்பில் மினி பஸ்கள் அங்கேயே நிறுத்தப்பட்டு பக்தர்களை மலைக் கோவிலுக்கு ஏற்றி செல்லும்படி கோவில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் பாதுகாப்பாக சென்று தரிசனம் செய்யும் வசதி ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன், வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.
- தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- விழாவில் 11 நாட்களும் அன்னதர்மம் நடைபெறும்.
அம்பை வாகைக்குளம் வாகைபதியில் தை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கருடன், தண்டிகை, சிங்கம், அன்னம், சூரியன், நாகம், பூ பல்லக்கு, குதிரை, அனுமன், இந்திரன், ரிஷப வாகனத்தில் பவனி நடைபெறும். விழாவில் 11 நாட்களும் தினமும் மதியம் உச்சிப்படிப்பு மற்றும் உச்சிப்பால் தர்மமும், இரவு 7 மணிக்கு அன்னதர்மமும் நடைபெறும். சிறப்பு நிகழ்ச்சியாக 8-ம் திருநாளான 10-ந் தேதி காலை 11 மணிக்கு வாகைபதி பால் கிணற்றில் இருந்து பால் குடம் எடுத்தல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு அன்னதர்மமும் நடைபெறும். பின்னர் 3 மணிக்கு அய்யா ஆதிநாராயண வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
12-ந் தேதி காலை 11 மணிக்கு வாகைபதி பால் கிணற்றில் இருந்து கிணற்று பால் குடம் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் சந்தனக்குடம் எடுத்தல் மற்றும் கும்பிடு நமஸ்கார நிகழ்ச்சி, அதிகாலை 3 மணிக்கு அய்யா ஆதிநாராயண வைகுண்டர் இந்திரன் வாகனத்தில் பவனி வருதல் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 13-ந் தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை வாகைகுளம் வாகைப்பதி அய்யாவழி தொண்டர்களும், அன்பு கொடி மக்களும் செய்து வருகின்றனர்.
- மதியம் 12 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
- தேரோட்டம் இன்று மாலை ரதவீதியில் நடைபெறுகிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா கடந்த ஜனவரி 29-ந்தேதி பெரியநாயகி அம்மன்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைதொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்தவண்ணம் உள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதயாத்திரை பக்தர்கள் பழனிக்கு சென்றனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் மலைக்கோவில், அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் திரண்டுள்ளதால் கோவிலில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்றிரவு 7 மணிக்குமேல் 8 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இதனைதொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளிரதத்தில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமிவீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் உச்சபட்ச நிகழ்வான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு ரதவீதியில் நடைபெறுகிறது.
இன்று அதிகாலை வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி சண்முகாநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதனைதொடர்ந்து பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனைகாண அலைகடலென பழனியை நோக்கி பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
பழனி கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்றது. அதில் குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். இதனால் தைப்பூச திருவிழாவின்போது ஏராளமான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமும் வந்தவண்ணம் உள்ளனர்.
பக்தர்கள் பாதுகாப்புக்காக டி.ஐ.ஜி தலைமையில் 3 எஸ்.பிக்கள், 24 டி.எஸ்.பிக்கள் கொண்ட 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த தற்காலிக பஸ்நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து பக்தர்களை அழைத்துவர 30 வாகனங்கள் ஏற்படுத்தப்பட்டு மலைகோவில் வரை இயக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இடைவிடாத சாரல்மழை மற்றும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் பாதயாத்திரை பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இருந்தபோதும் தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் கொட்டும் மழையிலும் பழனியை நோக்கி நடந்து சென்றனர். இன்று காலையிலும் பழனி மற்றும் சுற்றுப்புற பகுதியில் விட்டுவிட்டு சாரல்மழை பெய்து வந்தபோதிலும் அதனையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
- உப்பில்லா பலகாரம் எதுவானாலும் உண்ணலாம்.
- கந்தகுரு கவசமோ அல்லது கந்த சஷ்டி கவசமோ சொல்லலாம்.
தைப்பூச நாளான இன்று கட்டுப்பாடுகள் இல்லாத எளிய விரதத்தை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி, ஆரோக்கியம், செல்வம் ஆகிய மூன்றும் தடையில்லாமல் கிடைக்கும் என்று கந்தபுராணம் சொல்கிறது. இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி நெற்றியில் திருநீறிட்டு ஓம் சரவணபவ என்ற முருகனின் மூல மந்திரத்தை குறைந்தது 12 முறை மனதார உச்சரிக்க வேண்டும். உப்பில்லா பலகாரம் எதுவானாலும் உண்ணலாம்.
கூடுமானவரையில் பால், பழங்கள், மோர், பழச்சாறு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். மாலையில் பணியிடத்தில் இருந்து திரும்பியதும் அன்னை பார்வதி, முருகனுக்கு வேல் அளித்த கதையை படித்து நேரமிருப்பவர்கள் கந்தகுரு கவசமோ அல்லது கந்த சஷ்டி கவசமோ சொல்லலாம்.
அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று முருகனை வணங்கிவிட்டு இயன்ற அளவு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். இரவு சிறிது பால்சோறு சாப்பிடலாம். மறுநாள் காலை நீராடி, திருநீறு இட்டு முருகனின் மூல மந்திரத்தை ஆறுமுறை உச்சரித்து மனதார வணங்கி விரதத்தை நிறைவு செய்துவிட்டு வழக்கம்போல் உண்ணலாம்.
- ஆண்களும் பெண்களும் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- நாளை ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாக தோஷம் தீர்க்கும் புண்ணிய ஸ்தலங்களில் நாகராஜா கோவிலும் ஒன்றாகும். இங்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து நாகர் சிலைகளுக்கு பாலூற்றி வழிபட்டு வருகிறார்கள். நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் தைமாதம் 10-நாட்கள் திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் காலை மாலை நேரங்களில் வாகன பவனி சிறப்பு அபிஷேகம் சிறப்பு வழிபாடு ஆன்மீக சொற்பொழிவு பரதநாட்டியம் இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
9-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதையடுத்து காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.
இதைத் தொடர்ந்து சுவாமி அனந்த கிருஷ்ணன், பாமா, ருக்மணியுடன் தேரில் எழுந்தருளினார்கள்.இதைத் தொடர்ந்து தேருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தேர் சக்கரத்திற்கு தேங்காய் உடைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆண்களும் பெண்களும் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேரோட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், இணை ஆணையர் ஞானசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேர் 4 ரத வீதிகளிலும் இழுத்து வரப்பட்டது.
இதைத் தொடர்ந்து தேர் திருநிலைக்கு வந்தது. தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலை மோதியது. கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்டத்தையொட்டி கோவிலில் அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நடைபெறும். 10-ம் திருவிழாவான நாளை 6-ந் தேதி காலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மாலை 5 மணிக்கு நாகராஜா கோவில் திருக்கோவில் திருக்குளத்தில் வைத்து ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருள் நிகழ்ச்சி நடைபெறும்.
- தைப்பூச திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் இரவு சுவாமி சந்திரசேகரர்-மனோன் மணி அம்பிகை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி முக்கிய ரதவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
விழாவை யொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழாவின் 9-ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு தேரின் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், கோவில் ராஜகோபுர கமிட்டி தலைவர் முருகேசன், துணைத்தலைவர் கனக லிங்கம், நிர்வாகிகள் ராஜாமணி, சுடலைமூர்த்தி, செண்பகவேல், தேர் திருப்பணி குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ராதா கிருஷ்ணன் செய்திருந்தார்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில் தைப்பூச திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. வெள்ளி மயில், குதிரை வாகனத்திலும், புஷ்ப பல்லக்கிலும், சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் வீதி உலாவும் நடைபெற்றது. அதன் பின்னர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.திருவிழாவின் முக்கிய வைபவமான தேரோட்டம் நேற்று நடந்தது.இதனை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளான ஏகாம்பேரஸ்வரர், சோமா ஸ்கந்தர் அலங்காரத்தில் பிரியாவிடை அம்மனுடன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகள் ஒரு தேரிலும், மற்றொரு தேரில் காமாட்சி அம்மனும் எழுந்தருளினர்.இதையடுத்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேரோட்டத்தில் கோவில் செயல் அலுவலர் ஹேமாவதி, எழுத்தர் தண்டபாணி தேசிங்கன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சசிக்குமார், செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் கலா தங்கராசு, ஒன்றிய கவுன்சிலர் திருநாவுக்கரசு, செட்டிகுளம், பாடாலூர், இரூர், கூத்தனூர்,பொம்ம னப்பாடி, சத்திர மனை, குரூர், சிறுவயலூர், ஆலத்தூர் கேட், நாட்டா ர்மங்கலம், பெரகம்பி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெ க்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார்கள், பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையினர், மின் ஊழியர்கள் ஆகியோர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.முக்கிய வீதிகளின் வழியாக சென்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு தேர்கள் நிலைக்கு வந்தடைகின்றன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
- உப்பு, மிளகை தேர் சக்கரத்தின் மீது கொட்டி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
- தேரானது அசைந்தாடியபடி 4 வீதிகளில் வலம் வந்தது.
திருவள்ளூர் அருகே உள்ள திருமழிசை ஜெகந்நாத பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் கோவிலில் திரு அவதார மகோற்சவ திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழா கடந்த 29-ந் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் உச்சவர் ஜெகந்நாத பெருமாள் காலை, மாலை என இருவேளைகளில் சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
மகோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் பூந்தமல்லி, திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், ஆவடி போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தின் மீது கொட்டி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி கோவிந்தா! கோவிந்தா! என கோஷமிட்டபடி பயபக்தியுடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். இந்த தேரானது அசைந்தாடியபடி 4 வீதிகளில் வலம் வந்தது. விழாவில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டனர்.