என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Therpavani"
- திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- இன்று காலை பிஷப் ஸ்டீபன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தின் 442-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந்தேதி தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலியுடன் பேராலயம் முன்பு உள்ள அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட கொடி மரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
பின்னர் முன்னாள் பங்கு தந்தை குமார் ராஜா தலைமையில் பனிமய அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தூய பனிமய மாதா பேராலய தேர்பவனி இன்று மாலை நடைபெறுகிறது.இதனை முன்னிட்டு தூத்துக் குடி மாநகர பகுதிகள் ஒளி விளக்குகளால் அலங் கரிக்கப்பட்டு, பொருட் காட்சிகள் அமைக்கப்பட்டு, வரவேற்பு பதாகைகளுடன், விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30 மணிக்கு 2-ம் திருப்பலியும், 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பேராலய பங்குத் தந்தை ஸ்டார்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பெருவிழா கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடை பெற்றது.
தொடர்ந்து 9 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்காக மாவட்ட முதன்மை குரு ரவி பாலன் தலைமையிலும், 10 மணிக்கு முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்காக திருப்பலி யும், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு நன்றித் திருப்பலி நகரின் அனைத்து மண்ணின் மைந்தர் குருக்கள் துறவியர், அருட் சகோதர சகோதரி களுக்காக நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி பாளையங்கோட்டை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் நடைபெறுகிறது.
இதன் பின்னர் இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் தூய பணிமய மாதா அன்னையின் திருஉருவ பவனி நடைபெறுகிறது, தொடர்ந்து இரவு 10 மணிக்கு தூய பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல், நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருவிழாவில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவில் இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
- தினமும் இரவில் நவநாள் திருப்பலி நடைபெற்றது.
- திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
மணிகண்டம்:
மணிகண்டம் ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் உள்ள அருள்நிறை அடைக்கல அன்னை ஆலய திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் இரவில் நவநாள் திருப்பலி நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு நற்கருணை பவனியும், இயேசுவின் திருப்பாடுகள் காட்சி எனப்படும் பாஸ்கா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி மாலையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.
நள்ளிரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 4 சப்பரங்களில் அருள்நிறை அடைக்கல அன்னை, செபஸ்தியார், அந்தோணியார் மற்றும் ஆவூர் தேர் என்று அழைக்கப்படும் சப்பரத்தில் உயிர் நீத்த ஆண்டவர் ஆகிய சொரூபங்கள் வைக்கப்பட்டு முக்கிய வீதிகளில் தேர்பவனி நடைபெற்றது.
முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் நேற்று அதிகாலை நிலையை அடைந்தது. விழாவில் நவலூர் குட்டப்பட்டு, ராம்ஜிநகர், சோமரசம்பேட்டை, புங்கனூர், மணிகண்டம், திருச்சி, அம்மாபேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று காலை தேரடி திருப்பலி, புது நன்மை ஆடம்பர கூட்டு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவில் உபய தேர்பவனியும், கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து பட்டிமன்றம் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக மணியக்காரர்கள் சேவியர், ஜெரின் ராஜதுரை, கொத்து மணியக்காரர்கள், கத்தோலிக்க இளைஞர் மன்றத்தினர் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.
- அன்னையின் பிறப்பு நாளான நேற்று மாலை சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
- பேராலயத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
பூதலூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் அன்னையின் பிறப்பு பெருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்ற த்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து நவநாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறுசப்பரபவனியும் , பல்வேறு அருட்தந்தை யர்களால் திருப்பலியும் தினம் ஒரு தலைப்புகளில் நிறைவே ற்றப்பட்டது. அன்னையின் பிறப்பு நாளான நேற்று மாலை சிறப்பு திருப்பலி கும்பகோணம் மதுரை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி தலைமையில் நிறைவேற்றப்பட்டது.
இத்திருப்பலியில் பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன், துணைஅதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், மறை வட்ட முதன்மை குரு இன்னசென்ட், உதவி பங்கு தந்தையர் அமலவில்லியம், அன்புராஜ், ஆன்மீக தந்தையர் அருளானந்தம், ஜோசப் மற்றும் பல்வேறு அருட்தந்தை யர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பலி நிறைவ டைந்ததும் பூண்டி மாதா பேராலயத்தின் முகப்பில் வண்ண வண்ண மின்விளக்கு களாலும், மல்லிகை மலர்க ளாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சுரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி புறப்பட்டது. இந்த தேர் பவனியை கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.
தேர்பவனி தொடங்கியதும் வாணவேடி க்கை நடந்தது.
தேர் பவனி நிறைவடைந்ததும் இன்று காலை திருவிழா நன்றி திருப்பலியுடன் கொடி இறக்கப்பட்டு, பூண்டி மாதா பேராலயத்தின் அன்னையின் பிறப்பு பெருவிழா நிறைவு பெற்றது.
அன்னையின் பிறப்பு பெருவிழா தேர் பவனியை ஒட்டி பூண்டி மாதா பேராலயம், பேரால யத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. விழா ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன் தலைமையி லான குழுவினர் செய்திருந்தனர்.
- 29-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
- அன்னையின் பிறப்பு பெருவிழாவாக இன்று நடைபெறும்.
சென்னை பெசன்ட்நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலையத்தின் பொன் விழா மற்றும் ஆண்டு பெருவிழா, கடந்த மாதம் 29-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் உழைப்பாளர் தின விழா, நலம் பெறும் விழா, இளையோர் விழா, பக்தசபை விழா, நற்கருணை பெருவிழா, இறையழைத்தல் தினம், ஆசிரியர்கள் தினம், குடும்ப விழா என்று மாலை 5.30 மணிக்கு சிறப்பு கூட்டுத் திருப்பலி மற்றும் ஆராதனையும், நவநாள் ஜெபமும் நடத்தப்பட்டது. இதில் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.
தேர்பவனி
இதன் தொடர்ச்சியாக ஆடம்பர தேர் பவனி நேற்று மாலை நடந்தது. முன்னதாக காலை முதல் பிற்பகல் வரை திருப்பலிகள் நடந்தன. அதன் பின்னர், மாலை 5.30 மணிக்கு மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஆடம்பர திருப்பலியை நடத்தி அதன் பின்னர் தேர்பவனியையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பக்தர்கள், பொது மக்கள் திரளாக பங்கேற்றனர். தேர்பவனி ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு, பெசன்ட்நகர் கடற்கரை சாலை, 4-வது பிரதான சாலை மற்றும் 2 மற்றும் 7-வது அவென்யூ வழியாக சென்று மீண்டும் ஆலயத்துக்கு வந்தடைந்தது.
கொடி இறக்க நிகழ்வு
இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) அன்னையின் பிறப்பு பெருவிழாவாக, நடைபெற உள்ளது. இதையொட்டி, மாலை 5.30 மணிக்கு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் அன்னைக்கு முடிசூட்டு விழாவும், அதோடு கொடி இறக்க நிகழ்வும் நடத்தப்பட இருக்கிறது.
- ஆடம்பர தேர்பவனியை ஆயர் பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார்.
- இன்று மாலை 6 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் உள்ள புனித அலங்கார அன்னை பேராலய ஆண்டு பெருவிழா கடந்த 6-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் மாலை 6 மணிக்கு திருப்பலியும், சிறிய தேர்பவனியும், பல்வேறு தலைப்புகளில் அருட்தந்தையர்களால் மறையுரையும் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று நடைபெற்றது.முன்னதாக ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
திருப்பலியில் ஆயர் மறையுரை ஆற்றினார்.தொடர்ந்து, புனித அலங்கார அன்னை ஆடம்பர தேர்பவனியை ஆயர் பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார்.
தேர்பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேராலயத்தை வந்தடைந்தது.
இன்று காலை ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது.தொடர்ந்து, மாலை 6 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை அலங்கார அன்னை பேராலய பங்குத்தந்தை பிலோமின்தாஸ், உதவி பங்குத்தந்தை எட்மண்ட் லூயிஸ் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள், அன்பியங்கள், பிரண்ட்ஸ் ஆப் ஜீசஸ் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
- ஆண்டு பெருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- மாதா மற்றும் அந்தோனியார் சொரூபம் தேரில் ஏற்றப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப்பொய்கைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி பேரா லயத்தின் உபகோவிலான பழைமை வாய்ந்த புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான் அந்தோ னியாரின் பெரியதிருத்தேர் பவனி நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ஆலயத்தில், வேளாங்கண்ணி பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்புத்திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து, மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட சப்ப ரத்தில், மாதா மற்றும் அந்தோனியாரின் சொரூபம் தேரில் ஏற்றப்பட்டு,புனிதம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று தரிசனம் செய்த னர்.
இதனை தொடர்ந்து வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
- தேர்பவனி விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- உப்பு, மிளகு ஆகியவற்றை தேரின் மீது தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அடுத்த பெரும்பாண்டியில் உள்ள புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் 103-வது ஆண்டு தேர்பவனி விழா கடந்த 8-ந்தேதி மறைமாவட்ட முதன்மை குரு மரியதாஸ் தலைமையில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, தினமும் அருட்தந்தையர்களால் ஜெபமாலை, நவநாள் செபம், கூட்டு திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
முன்னதாக அருள் தந்தை ஆரோக்கியாதாஸ் காலை திருப்பலி, மறையுரை அருள் செபஸ்தியார் மற்றும் மாலை ஜெபமாலை நவநாள் திருப்பலி, மறையுரை பங்கு தந்தைகள் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டி ருந்த தேரில் புனித பெரிய நாயகி அன்னை எழுந்தருளி தேர்பவனி நடைபெற்றது.
அப்போது, ஒவ்வொ ருவரும் உப்பு, மிளகு ஆகியவற்றை தேரின் மீது தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டாமைகள், குடந்தை அரசன், ஸ்டீபன், சகாயராஜ், ஜான் பீட்டர் ராஜ் மற்றும் நிர்வாகிகள், பொறுப்பா ளர்கள் செய்திருந்தனர்.
- நேற்று 9-ம் திருவிழா மாலை ஆராதனை அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
- 10-ம் திருவிழாவான இன்று காலை 5.30 மணிக்கு அருட்தந்தை அருள் பிரபாகர் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே உள்ள பண்டாரகுளம் புனித தோமையார் ஆலயம் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் ஆண்டும்தோறும் புனிதருக்கு திருவிழா கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு 1-ம் திருவிழா கடந்த 24-ந் தேதி மாலை அருட்தந்தை லூர்துசாமி கொடியை அர்ச்சித்து கொடியேற்றினார். பின்னர் மறையுறை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருயாத்திரை திருப்பலி, மாலை மறையுறை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
நேற்று 9-ம் திருவிழா மாலை ஆராதனை அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இரவு தேர்பவனி நடைறெ்றது. தேரில் புனித தோமையார் ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பக்தர்கள் நேர்ச்சையாக உப்பு, மிளகு தூவியும், பாடல்கள் பாடியும், வான வேடிக்கைகள் நிகழ்த்தியும் தேரை இழுத்துச் சென்றனர்.
தேர்திருவிழாவில் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். 10-ம் திருவிழாவான இன்று காலை 5.30 மணிக்கு அருட்தந்தை அருள் பிரபாகர் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. இன்று மாலை 5.30 மணிக்கு கொடி இறக்கமும், நற்கருணை ஆசிரும் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை லூர்துசாமி அடிகளார் மற்றும் பண்டாரகுளம் பங்கு இறை மக்கள், இளைஞர்கள் செய்து இருந்தனர்.
- கொடி புனிதம் செய்யப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
- மின் அலங்கார பெரிய தேர்பவனி வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த கோகூரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக, கொடி ஊர்வலம் ஆலயத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
தொடர்ந்து, தஞ்சை மறை மாவட்ட பரிபாலர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர், கொடி புனிதம் செய்யப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான மின் அலங்கார பெரிய தேர்பவனி வருகிற 17ந் தேதி நடைபெற உள்ளது.
- தொண்டி சிந்தாத்திரை அன்னை ஆலய தேர்பவனி நடந்தது.
- பங்கு இறைமக்கள் கலந்துகொண்டனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை எதிரே உள்ள புனித சிந்தாத்திரை அன்னை ஆலய திருவிழா பங்குத்தந்தை சவரிமுத்து தலைமையில் நடந்தது. சிவகங்கை வட்டார அதிபர் ஜேசுராஜ் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
மேத்தா, முத்துமாலை, மரிய அந்தோணி, ஸ்டீபன், ஜான்பால், ஜோசப் ராஜா, குழந்தை யேசு, அன்பரசு, ஜோசப் லூர்துராஜா ஆகியோர் நவ நாள் திருப்பலி நடத்தினர்.
விழா நிறைவில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் திருப்பலி நடத்தி குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர்பவனி நடந்தது. முகிழ்தகம், ஆர்.சி.நகர், வட்டாணம் தெற்கு தோப்பு, வெள்ளாளக் கோட்டை, வேலங்குடி, நரிக்குடி, கோடி வயல், சின்னத்தொண்டி காந்தி நகர், சவேரியார்பட்டினம், விளக்கனேந்தல், புடனவயல், புதுக்குடி, தண்டலக்குடி, தொண்டி, செங்காலன் வயல் ஆகிய பங்கு இறைமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
- சோழவந்தான் அருகே புனித ஜெர்மேனம்மாள் தேர்பவனி நடந்தது.
- வாடிப்பட்டி, மதுரை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள ராயபுரம் கிராமத்தில் புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 110-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கொடி பவனி, ஜெபமாலை, திருப்பலி நடைபெற்றது. நேற்று இரவு திருவிழா திருப்பலி, தேர் பவனி, நற்கருணை ஆசீர் நடந்தது. மதுரை, கரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ராயபுரம் திருவிழா இரவு முழுவதும் விழாக்கோலமாக காட்சி அளித்தது. இன்று (ஞாயிறு) புதுநன்மை விழா, தேர் பவனியும், நாளை (திங்கட்கிழமை) காலை நன்றி திருப்பலி, கொடியிறக்கமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். சமயநல்லூர் டி.எஸ்.பி. பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர். சோழவந்தான், வாடிப்பட்டி, மதுரை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுகாதாரம், குடிநீர் வசதிகளை ரிஷபம் ஊராட்சி மன்ற தலைவர் சிறுமணி மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- திருவிழிப்பு சடங்குகளான புதுநெருப்பு, புனித தீர்த்தம் புனிதம் செய்யும் சடங்குகள் நடைபெற்றது.
- தொடர்ந்து உயிர்த்த ஆண்டவரின் தேர்பவனி நடைபெற்றது.
தஞ்சாவூர்:
இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்தெழுந்த நிகழ்வை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி இன்று ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு நள்ளிரவு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு பிரார்த்தனை திருப்பலி நடைபெற்றது.
அதன்படி தஞ்சை திரு இருதய பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை நள்ளிரவு வழிபாடு மறைமாவட்ட பரிபாலகரும், ஆயருமான (பொறுப்பு) சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பாஸ்கார் திருவிழிப்பு சடங்குகளான புதுநெருப்பு, புனித தீர்த்தம் புனிதம் செய்யும் சடங்குகள் நடைபெற்றது. தொடர்ந்து கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் பேராலய பங்குத்தந்தை பிரபாகர், உதவி பங்குத்தந்தை பிரவீன், ஆயரின் செயலாளர் ஆன்ட்ரூ செல்வகுமார், திருத்தொண்டர் அரவிந்த் மற்றும் குருக்கள் கலந்து கொண்டனர். திருப்பலி முடிந்தவுடன் வியாகுல அன்னை ஆலய முகப்பில் இயேசுவின் உயிர்த்த காட்சி நடைபெற்றது. தொடர்ந்து உயிர்த்த ஆண்டவரின் தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் எரியும் மெழுகுவர்த்தியுடன் கலந்து கொண்டனர்.முடிவில் ஈஸ்டர் பாண்டிகை வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.
இதேப்போல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்க ளிலும் நள்ளிரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்