என் மலர்
நீங்கள் தேடியது "threatened"
- மாணிக்க கவுண்டரின் மருமகள் வாசுகி கணவரை விட்டு பிரிந்து இருவருக்கும் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
பாகூர் கிழக்கு வீதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது58). இவர் அரங்கனூரை சேர்ந்த மாணிக்க கவுண்டருடன் குடும்ப நண்பராக பழகி வந்தார்.
இதற்கிடையேமாணிக்க கவுண்டரின் மருமகள் வாசுகி கணவரை விட்டு பிரிந்து இருவருக்கும் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் மணிவண்ணனிடம் மாணிக்க கவுண்டர் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க சொன்னார்.
அதன் அடிப்படையில் மணிவண்ணன் இந்த வழக்கு குறித்து விசாரித்து மாணிக்க கவுண்டரிடம் தெரிவித்தார்.
இதனையறிந்த வாசுகி சம்பவத்தன்று மணிவண்ணன் அங்குள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்த போது அவரது செல்போனில் ேபசிய வாசுகி நீ யாருடா என் குடும்ப விஷயத்தில் தலையிட, இனி உன்னை விடமாட்டேன், உன்னை ஆள் வைத்து தீர்த்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனஉளைச்சல் அடைந்த மணிவண்ணன் இதுகுறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சொத்துக்களை அபகரிப்பதற்காக மெக்கானிக் மிரட்டுவதாக குற்றச்சாட்டு
- ஆசிரியையை மிரட்டியவர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு
கோவை,
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள பெரிய நகரை சேர்ந்தவர் டேவிட் ராஜன். இவரது மனைவி அம்பிகாபதி (வயது 50).
இவர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறி யிருப்பதாவது:-
நான் சிக்கலாம்பா ளையத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். எனது கணவர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இந்தநி லையில் எனது மாமனார் ஐசக் அவருக்கு பாத்தியப்பட்ட சொத்தினை அவரது மனைவி பெயருக்கு எழுதி கொடுத்தார். இதனை எனது மாமியார் என் கணவரின் பெயருக்கு மாற்றினார். எனது கணவர் இறந்த பின்னர் இந்ந சொத்தினை நான் அனுபவித்து வருகிறேன்.
இந்தநிலையில் எனது மாமனாரின் முதல் மனைவியின் மகன் ஜோசப் என்பவரது மகன் சொலவம்பாளையத்தை சேர்ந்த மெக்கானிக் சாலமோன் ஜான்சன் (43) என்பவர் எனது கணவரின் சொத்தை அபகரிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் அவர் நான் வேலை பார்க்கும் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் என்னை தகாத வார்த்தைகளால் பேசி வருகிறார். மேலும் எனது செல்போனுக்கு வாய்ஸ் ரெக்காடர் மூலமாக இழிவு படுத்தும் தகாத வார்த்தைகளை பேசி அனுப்புகிறார்.
கடந்த ஜூலை மாதம் சாலமன் ஜான்சன் எனக்கு சொந்தமான கட்டடித்தில் வாடகைக்கு இருப்பவர்களை மிரட்டி காலி செய்யுபடி மிரட்டி உள்ளார். பின்னர் கடைக்கு தீ வைத்து சேதத்தை ஏற்படுத்தினார். இது குறித்து கடையில் உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.சம்பவத்தன்று நான் பள்ளியில் இருந்த போது அங்கு சாலமன் ஜான்சன் கையில் பெட்ரோல் கேனுடன் வந்தார். பின்னர் அவர் உனது கடையை எரித்த எனக்கு உன்னை எரிக்க எவ்வளவு நேரம் ஆகும் என கூறி பெட்ரோல் கேனை காட்டி எரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
மேலும் அந்த சொத்தை உன்னை அனுபவிக்க விடமாட்டேன். உன்னை இல்லாமல் பண்ணிருவேன் என மிரட்டி அச்சுறுத்துகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் ஆசிரியையை மிரட்டிய சாலமன் ஜான்சன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வீட்டின் கதவை சாத்திவிட்டு நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.
- பயந்து போன மூதாட்டி பீரோவை காட்டியுள்ளார்.
பல்லடம் :
பல்லடம்,மங்கலம் ரோடு காமராஜர் நகரை சேர்ந்த சண்முகசுந்தரத்தின் மனைவி வாணி (வயது 56). இவர் தனது மகன் மணிக்குமாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில்நேற்று மணிக்குமார் வேலைக்கு சென்று விட்டார் .அப்போது வீட்டில் வாணி மட்டும் தனியாக இருந்துள்ளார். வீட்டின் கதவை சாத்திவிட்டு நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த 30 வயது மதிக்கதக்க மர்ம நபர் வாணியை கத்தியை காட்டி மிரட்டி பணம் எங்கே வைத்துள்ளாய் என்று மிரட்டி கேட்டுள்ளார். இதனால் பயந்து போன வாணி பீரோவை காட்டியுள்ளார்.
பீரோவை திறந்து அதில் இருந்த ரூ. 90 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு அந்த மர்மநபர் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார். இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த வாணி மயக்கம் அடைந்து விட்டார். மாலை வீடு திரும்பிய மணிக்குமாரிடம் சம்பவம் பற்றி வாணி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பல்லடம் போலீசில் வாணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். பல்லடம் அருகே உள்ள க. அய்யம்பாளையத்தில் வேளாங்கண்ணியை சேர்ந்த மாரியப்பன் (வயது 46) என்பவர் குடும்பத்துடன் வசித்துக்கொண்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.இந்த நிலையில் அவரது உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள கடந்த 4 நாட்களுக்கு முன் குடும்பத்துடன் வேளாங்கண்ணி சென்று உள்ளார்.திருமண நிகழ்ச்சி முடிந்து அவர்கள் நேற்று வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டில் உள்ளே சென்று பீரோவை பார்த்தபோது அதில் வைத்து இருந்த ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் 7 கிராம் தங்ககம்மல் திருட்டுப் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பல்லடம் போலீசில் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
- செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்றார்
கரூர்:
கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே செம்பியநத்தம் ஊராட்சியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (43). விவசாயி. இவர்கள் 2 பேருக்கும் தோட்ட நிலங்கள் அருகருகே உள்ளது. இந்தநிலையில் ரமேஷ் தனது வீட்டின் அருகே சேகரித்து வைத்திருந்த குப்பைகளுக்கு தீ வைத்துள்ளார். இந்த தீ லோகநாதன் வீட்டில் உள்ள வாழைமரம் மற்றும் மற்ற மரங்களில் பட்டு தீப்பிடித்துள்ளது. இதுகுறித்து லோகநாதன் பாலவிடுதி போலீஸ் நிலையத்தில் ரமேஷ் மீது புகார் அளித்தார்.இதனால் விசாரணைக்காக ரமேசை போலீசார் அழைத்துள்ளனர். இதனால் போலீஸ் விசாரணைக்கு பயந்த ரமேஷ் செம்பியநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள 200 அடி உயரம் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடவூர் வட்டாட்சியர் ராஜாமணி, பாலவிடுதி இன்ஸ்பெக்டர் யசோதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரமேசிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து குஜிலியம்பாறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, செல்போன் கோபுரத்தில் ஏறி ரமேசை பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர். பின்னர் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
- வாலிபரிடம் கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சி:
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது24). இவர் திருச்சியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் உள்ள கிராப்பட்டி என்ற இடத்தில் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு முத்து, காவலர் பயிற்சி பட்டாலியன் -1 அமைந்துள்ள கிராப்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கருமண்டபம் பகுதியை சேர்ந்த பாபு, புதுக்கோட்டை மணல்மேல் குடி பகுதியை சேர்ந்த தாமோதரன் ஆகிய இருவரும் கத்தியை காட்டி மிரட்டி அவரை கல்லால் அடித்து அவரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். இந்நிலையில் முத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுக்குறித்து அவர் எடமலைபட்டிபுதூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள பாபு மீது 24 வழக்குகளும், தாமோதரன் மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- திருக்கனூர் அருகே தந்தையை தாக்கி கொலை மிரட்டல்
- 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வருகிறீர்கள் என கேட்டார்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே காட்டேரிக்குப்பம் அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலி தொழிலாளி. இவருக்கு சங்கர், பாஸ்கர் மற்றும் பிரபு ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
இவர்களில் சங்கர், பாஸ்கர் ஆகியோர் தனது தந்தை சுப்பிரமணியிடமும் , தாயிடமும் பேசுவதில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் சங்கரும், பாஸ்கரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்தனர். இதனை பார்த்த சுப்பிரமணி அவர்களை பார்த்து என்ன 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வருகிறீர்கள் என கேட்டார்.
அப்போது சங்கரும், பாஸ்கரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி சுப்பிரமணியை தாக்கினர். இதனால் வலி தாங்காமல் சுப்பிரமணி பக்கத்து வீட்டை சேர்ந்த சிங்காரம் என்பவரின் வீட்டில் தஞ்சம் புக முயன்றார்.
அப்போது பாஸ்கர் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வந்து சுப்பிரமணியை பார்த்து இரவோடு நீயும், உனது மனைவியும் வீட்டை காலி செய்து சென்று விடுங்கள். இல்லையென்றால் வெட்டி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு சங்கரும், பாஸ்கரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்த தகவல் அறிந்த இளைய மகன் பிரபு விரைந்து வந்து தாக்குதலில் காயமடைந்த சுப்பிரமணியை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தார்.
பின்னர் இதுகுறித்து சுப்பிரமணி காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காட்டேரிக்குப்பம் அருகே சந்தைபுதுக்குப்பம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன்(46). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தமிழ் என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கண்ணன் தனது நண்பர் பாலமுருகனை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த தமிழ் ஏற்கனவே இருந்த முன் விரோதத்தை வைத்து கண்ணனை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கு கிடந்த தடியாலும், கல்லாலும் தாக்கினார்.
மேலும் இதனை போலீசில் புகார் செய்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.
இதுகுறித்து கண்ணன் காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் ஆற்றில் மணல் கொள்ளை அதிக அளவில் நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் வெள்ளவேடு போலீசார் கூவம் ஆற்றுப்படுகையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது புதுச்சத்திரம் அருகே ஆற்றுப் படுகையில் மணல் அள்ளிக் கொண்டிருந்த மினி லாரியை சுற்றி வளைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த லாரி டிரைவர் கூடப்பாக்கத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் வெள்ளவேடு சப்-இன்ஸ்பெக்டர் வினோத் குமாரை தரக்குறைவாக பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் அசோக்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவைச் சேர்ந்தவர் கவுசல்யா (வயது 26). இவருக்கும், ராஜபாளையம் அருகேயுள்ள முகவூரைச் சேர்ந்த காஞ்சித்தலைவன் (33) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது 40 பவுன் நகை, ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. காஞ்சித்தலைவன் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் காஞ்சித்தலைவன், அவரது தாயார் முனியம்மாள், சகோதரி தமிழ்செல்வி ஆகியோர் கவுசல்யாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.
இது குறித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் கவுசல்யா புகார் செய்தார். அதன் பின்னர் தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.
போலீசார் சமரசம் செய்த பின்னரும் காஞ்சித் தலைவன் தனது வீட்டுக்கு மனைவியை அழைத்து வரவில்லை.
இந்த நிலையில் காஞ்சித்தலைவன் தனது மனைவியின் வீட்டுக்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இது குறித்து ராஜபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரனிடம் கவுசல்யா புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா விசாரணை நடத்தி பேராசிரியரை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.
புதுச்சேரி:
புதுவை வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் காரர் வெங்கடேஷ் (வயது 33). இவர், ஈ.சி.ஆர். சாலை கொக்கு பார்க் சிக்னலில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது சாரம் அன்னை தெரசா நகரை சேர்ந்த சார்லஸ் (44). கொக்கு பார்க் சாலை ஒருவழிப்பாதையில் வந்தார். அவரை வெங்கடேஷ் மறித்து இது ஒரு வழிபாதை, இந்த வழியாக வரக்கூடாது என்று கூறினார்.
ஆனால், சார்லஸ் அப்படித்தான் வருவேன் என்றார். உடனே வெங்கடேஷ் சாவியை எடுத்துக்கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் பிரபுவிடம் அழைத்து சென்றார்.
அவர் இது குறித்து விசாரணை நடத்தி அவருக்கு ரூ.100 அபராதம் விதித்தார். சார்லஸ் சாவியையும், அபராதத்துக்கான ரசீதையும் வாங்கிக்கொண்டு மறுபடியும் ஒருவழிப்பாதையில் சென்றார்.
இதை வெங்கடேஷ் தடுத்தார். இதனால் தகாத வார்த்தையால் சார்லஸ் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் வெங்கடேஷ் காலில் சார்லஸ் மோட்டார் சைக்கிளை ஏற்றியதில் அவர் காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து வெங்கடேஷ் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வடிவழகன் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சார்லசை தேடி வருகிறார்கள்.
இதேபோல் வில்லியனூர் போலீசாருக்கு புதுவை கண்ட்ரோல் அறையில் இருந்து ஒரு தகவல் வந்தது.
அதில், ஒதியம்பட்டு ரோடு கணுவாப்பேட்டை பகுதியில் வாலிபர்கள் ஒரு கும்பலாக கூடி இருப்பதாக தகவல் கொடுத்தனர். உடனடியாக வில்லியனூர் போலீஸ்காரர் புருஷோத்தமன் அப்பகுதிக்கு சென்று வாலிபர்களை கலைந்து செல்லும்படி கூறினார்.
அதில், செங்கதிர் செல்வன் என்பவர் புருஷோத்தமனை தகாத வார்த்தையால் திட்டி சட்டையை கிழித்து விடுவதாக கூறினார்.
இதுகுறித்து அவர் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை நைனார்மண்டபத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது43), இவர் நைனார்மண்டபம்- கடலூர் மெயின் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது ஓட்டலுக்கு முதலியார்பேட்டையை சேர்ந்த வாலிபர் சுத்திமணி என்பவர் சாப்பிட வந்தார். அப்போது அவர் ஓட்டலின் சமையல் கூடத்துக்கு சென்றார். இதற்கு புஷ்பராஜ் எதிர்ப்பு தெரிவித்து சுத்திமணியை சமையல் கூடத்துக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் இருதரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
அப்போது சுத்திமணி செல்பானில் பேசி நைனார்மண்டபத்தை சேர்ந்த தனது நண்பர்களான ஆனந்து, எழில், எலி ஆகியோரை வரவழைத்தார். பின்னர் அவர்களுடன் சேர்ந்து ஓட்டலில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். மேலும் புஷ்பராஜை கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு அவர்கள் 4 பேரும் சென்று விட்டனர்.
இதையடுத்து புஷ்பராஜ் இது குறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவிசப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து சுத்திமணி உள்ளிட்ட 4 பேரையும் தேடி வருகிறார்கள். ஓட்டலை சூறையாடிய சுத்திமணி மீது முதலியார்பேட்டை போலீசில் ஏற்கனவே பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராணிப்பேட்டையில் பெல் நிறுவனம் தொடங்க நிலம் கொடுத்த பலருக்கு அந்த நிறுவனம் வேலை வழங்கியது. சிலருக்கு அந்த நிறுவனம் வேலை வழங்காததால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி வேலை வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
இதன் பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெல் நிறுவனம் நிலம் கொடுத்தவர்களில் 109 பேருக்கு வேலை கொடுத்தது. மற்ற 15 பேர் குறைந்தபட்ச கல்வித்தகுதியான 8-ம் வகுப்பு படிக்கவில்லை என கூறி அவர்களுக்கு பெல் நிறுவனம் வேலை தரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிப்காட் பகுதியை சேர்ந்த பாலு (வயது 40), லாலாப்பேட்டையை சேர்ந்த பாஸ்கர் (48), சம்பத் (40), புளியந்தாங்கலை சேர்ந்த முனிசாமி (44) ஆகிய 4 பேரும் நேற்று காலை சுமார் 8 மணிஅளவில் ராணிப்பேட்டை பெல் நிறுவனம் அருகே உள்ள செல்போன் டவரின் மீது ஏறி, மண்எண்ணெய் மற்றும் விஷ பாட்டிலுடன், கழுத்தில் பச்சை துண்டு அணிந்து கொண்டு தற்கொலை செய்யப்போவதாக கூச்சலிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் வந்த மற்றவர்கள் கீழே நின்று கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செல்போன் டவரின் மீது ஏறியவர்களை கீழே இறங்கி வருமாறு ஒலிபெருக்கியில் பேசி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு போராட்டக்காரர்கள் உடன்படவில்லை.
இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் சிதம்பரம் தலைமையில் தீயணைப்பு வீரர்களும், தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தகவல் அறிந்த ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வேணுசேகரன், வாலாஜா தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் வைத்திருந்த செல்போன் மூலம் பேசி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.
பி.ஏ.பி. இ.ஜி.டி.யூ. ஐ.என். டி.யூ.சி.சங்க பொதுச்செயலாளர் கணேஷ், துணைத்தலைவர் தண்டபாணி, பி.ஏ.பி.எம்ப்ளாயிஸ் யூனியன் பொதுச் செயலாளர் சிவகுமார் உள்பட தொழிற்சங்க நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி கீழே இறங்கி வர வேண்டு கோள் விடுத்தனர்.
இதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களை கீழே இறங்கி வரக் கூறி தொடர்ந்து வற்புறுத்தினால் தாங்கள் எடுத்து வந்துள்ள மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டோ, விஷம் குடித்தோ தற்கொலை செய்து கொள்வோம் என தெரிவித்தனர்.
பின்னர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தினர், நிலம் கொடுத்து வேலை கிடைக்காதோர் அமைப்பை சேர்ந்த முரளி உள்பட மற்றவர்களும் சேர்ந்து கண்ணீர் மல்க கீழே வருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
அப்போது உதவி கலெக்டர், தாசில்தார், போலீசார், தொழிற்சங்க தலைவர்கள், ஊழியர்கள் ஆகிய அனைவரும் விடுத்த வேண்டுகோளை ஏற்று சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சுமார் 12 மணி அளவில் செல்போன் டவரில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரும் கீழே இறங்கி வந்தனர்.
அவர்களில் முனிசாமி கூறுகையில், “நாங்கள் நிலம் கொடுத்து விட்டு வேலை வழங்கக்கோரி பல வருடங்களாக போராடி வருகிறோம். கல்வித்தகுதியை காரணம் காட்டி எங்களுக்கு வேலை கொடுக்க நிர்வாகம் மறுக்கிறது. நாங்கள் குறைந்த பட்ச கல்வித்தகுதியை பாஸ் செய்து விட்டோம். எங்களுக்கு வேலை வேண்டும் அல்லது எங்களது நிலத்தை திருப்பி தர வேண்டும். வேலை தராவிட்டால் நாங்கள் உயிரை விடுவதை தவிர வேறு வழியில்லை” என்றார்.
பின்னர் செல்போன் டவரின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும், வேலை கிடைக்காத மற்றவர்களிடமும் உதவி கலெக்டர் வேணுசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிற்பகலில் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள், நிர்வாகம், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆகிய அனைவரையும் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உதவி கலெக்டர் கூறியதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 4 மணி நேரமாக நீடித்த இந்த தற்கொலை மிரட்டல் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டக்காரர்கள் ஏறிய செல்போன் டவர் தற்போது உபயோகத்தில் இல்லை என கூறப்படுகிறது.